Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடனில் மூழ்கியுள்ள நல்லாட்சி அரசாங்கம் : 36 மாதங்களில் 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் என்கிறார் மஹிந்த

Featured Replies

கடனில் மூழ்கியுள்ள நல்லாட்சி அரசாங்கம் : 36 மாதங்களில் 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் என்கிறார் மஹிந்த

1-50721fab936bf8219d0b5330c6069e769a27fca7.jpg

 

(லியோ நிரோஷ தர்ஷன், வினோத்)

இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு காலப்பகுதி யிலும் காணப்படாத மீளமுடியாத பாரிய கடன் சுமையை நல்லாட்சி அரசாங்கம் நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ளது. உலக நிதி சந்தையின் கதவடைப்பை தவிர்க்க தேசிய சொத்துக்களை விற்றேனும் கடனை செலுத்த வேண்டிய நெருக்கடியான நிலைமையில் அரசாங்கம் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

 எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் தினமாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று வெளி யிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , 

நல்லாட்சி தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த குறுகிய காலத்திற்குள் நாட்டில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியும், அதனை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியும் முக்கிய கரு பொருளாக காணப்படுகின்றது. இதேபோன்று நல்லாட்சி அரசாங்கம் நாட்டிற்கு பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 36 மாதங்களில் நல்லாட்சி அசராங்கம் 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டு காலமாக விநியோகிக்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி பிணைமுறி ஊடான 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 2015 மற்றும் 2017 இல் விநியோகிக்கப்பட்ட சர்வதேச முறிகள் ஊடாக பெற்றுக் கொண்ட 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் பல சர்வதேச வங்கிகளின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த கடனாக 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து பெற்றுக் கொண்ட 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என நல்லாட்சி அரசாங்கத்தின் கடன்களை குறிப்பிடலாம்.

எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு குறுகிய காலப்பகுதியில் பாரியளவிலான சர்வதேச கடன்களைப பெற்றுக்கொள்ளவில்லை. தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்களில், 5 நுரைச்சோலை அனல்மின் நிலையங்கள், 5 அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் 2 அதி வேக வீதிகளையும் அமைத்து மேலும் பணத்தை சேமித்திருக்கலாம். அதே போன்று 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் திறைச்சேறி முறிகள் மற்றும் பிணையங்கள் விநியோகத்தினால் 5706 பில்லியன் ரூபாவை அரசாங்கம் கடனாகப் பெற்றுக் கொண்டது.

இவ்வாறு பெற்றுக் கொண்ட பாரிய கடனில் அரசாங்கம் ஒரு கால்வாயைக் கூட கட்டவில்லை. இவ்வாறானதொரு நிலைமையில் மூன்றாண்டை பூர்த்தி செய்துள்ள நல்லாட்சி அரசாங்கம் மொரகாகந்த திட்டம் மற்றும் ராஜகிரிய பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்து பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக மக்களுக்கு காண்பிக்க முயற்சிக்கின்றது. 2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திலேயே மொரஹாகந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கிடுகள் மேற்கொள்ளப்பட்டு 2007 ஆம் ஆண்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதே போன்று தான் ராஜகிரிய மேம்பாலத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பொல்கஹாவல மற்றும் கனேமுல்ல ஆகிய பகுதிகளிலும் மேம்பாலங்கள் அமைக்க திட்டங்களை முன்னெடுத்தோம். எமது ஆட்சி காலத்தின் திட்டங்களையே நல்லாட்சி அரசாங்கம் தற்போது உரிமை கொண்டாடுகிறது. எனது ஆட்சியில் காணப்பட்டதாக கூறப்படும் கடன் சுமைகளை காரணம் காட்டியே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

  அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இரணடாவது கட்டம் மற்றும் எரிபொருள் தாங்கி கட்டமைப்புக்காக 1300 மில்லியன் அமெரிக்க டொலர்களே செலவாகின. அதே போன்று கொழும்பு தொடக்கம் கட்டுநாயக்க வரையிலான அதி வேக வீதிக்கு 292 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின. மத்தள விமான நிலையத்துக்கு 209 மில்லியன் அமெரிக்க டொலரே செலவிடப்பட்டது. இந்த அனைத்து திட்டங்களுக்காவும் 3900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியது.

எனவே எனது அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனை செலுத்துவதற்காக சர்வதேசத்திடமிருந்து கடன்பெறுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகின்றமை உண்மைக்கு முரணானதாகும். நல்லாட்சி அரசாங்கம் இது வரையில் பெற்றுக் கொண்டுள்ள 14.6 பில்லியன் அமெரிக் டொலர்களில் எனது திட்டத்துக்கான செலவுகளை 10 மடங்கில் செலுத்தியிருக்கலாம். அரசாங்கத்தில் அன்றாட செலவீனங்களை ஈடுசெய்வதற்காகவே கடன் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் நோக்கங்களுக்காக தேசிய நிதி பயன்படுத்தப்படுகின்றமையால் அசரின் செலவீனங்கள் அதிகரித்துள்ளது. இதுவே தற்போதைய அரசாங்கத்தின் கடன் சுமைக்கும் காரணமாகின்றது.

சர்வதேச கடன்களை பெற்றுக் கொள்ளும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். 2015 தொடக்கம் 2016 ஆண்டு மத்திய வங்கி அறிக்கையின் பிரகாரம் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி நிலையை காட்டுகின்றது. இதன் காரணமாக நாட்டின் கடன் சுமை 478 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி காரணமாக நாட்டின் வட்டி வீதம் 50 வீதத்தால் அதிகரித்தது. இதன் காரணமாகவும் அரச கடன் மேலும் அதிகரிக்கப்பட்டது. எனது ஆட்சி காலத்தில் சர்வதேச கடன்களைப் பெற்றுக் கொள்ளும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட்டோம். 2008 தொடக்கம் 2014 வரை சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட கடன்களுக்கான மீள் செலுத்தலை மிகவும் குறைந்த வட்டியில் செலுத்தினோம்.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீள் செலுத்த வேண்டிய கடன் தொகையை அதிகரிக்க அரசாங்கத்தின் குறுகிய கால கடன்களே காரணமாகும். இவ்வாறானதொரு நிலைமையில் 2018 ஆம் ஆண்டிலும் 5000 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடனை செலுத்துவதற்காக அரசாங்கம் பல துறைகளில் வரிகளை அதிகரித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து மொத்த மக்களையும் வருமான வரிக்குள் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மக்கள் மீதான வரிகளில் மாத்திரம் அரச கடன்களை செலுத்த முடியாமையினால் விமான நிலையங்கள் துறைமுகங்கள் உட்பட அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதும் இதன் அடிப்படையிலாகும். நீண்டகால கடன்களை செலுத்துவதை விட பாரிய வட்டிவீதத்தில் பெற்றுக் கொண்ட குறுகிய கால கடனை செலுத்தவே அரசாங்கம் மும்முரமாக செயற்படுகின்றது.

தேசிய சொத்துக்களை விற்பனை செய்தேனும் இந்த கடன்களை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏனென்றால் இந்த கடன்களை அரசாங்கம் செலுத்தாவிடின் உலக நிதி சந்தையில் இலங்கைக்கு கதவடைப்பு ஏற்படும். இந்த மோசடியான அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்ரவரி 10 ஆம் திகதி அமைய வேண்டும் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.