Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்யும் புரட்டும் கலந்த பரப்புரைகள் இலங்கைத் தேர்தல்களில் வழக்கமானவையே

Featured Replies

  • பொய்யும் புரட்டும் கலந்த பரப்புரைகள் இலங்கைத் தேர்தல்களில் வழக்கமானவையே
mahinda-mithri-e1436025911802.jpg

பொய்யும் புரட்டும் கலந்த பரப்புரைகள் இலங்கைத் தேர்தல்களில் வழக்கமானவையே

அர­சி­யல் பொய் வாக்­கு­று­தி­க­ளும், பொய்­யான பரப்­பு­ரை­க­ளும் இலங்­கை­யைப் பொறுத்­த­வரை புதிய விட­யங்­க­ளல்ல. ஆனால் கடந்த அரச தலை­வர் தேர்­தல் சம­யத்­தில் இந்த வழக்­கம் பெரிய அள­வில் தலை­யெ­டுத்­தி­ருந்­த­தா­கக் கரு­தப்­பட்­டது. பொய்­யான வாக்­கு­று­தி­கள், பொய்­யான வாய­டிப்­புக்­கள், பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­கள் போன்றே பொய்­யான விசா­ர­ணை­க­ளும் கூட முன்­னெ­டுக் கப்­பட்­டமை குறித்த அனு­ப­வங்­கள் வாக்­கா­ளர்­க­ளுக்­குக் கிட்­டி­யிருந்­தன.

இவற்­றால் எந்த அள­வுக்கு நாட்­டுக்கு பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­பி­னும், கடை­சி­யில் இவற்­றின் மூலம் நாட்டு மக்­கள் பாடம் கற்­றுக் கொண்­டி­ருந்­தி­ருப்­பார்­க­ளா­னால் எதிர்­கா­லத்­தி­லா­வது இத்­த­கைய பொய்­க­ளால் ஏமா­றா­தி­ருக்க அவர்­க­ளுக்கு வாய்ப்பு அமை­யக்­கூ­டும்.

அந்த வகை­யில் கடந்த 2015 ஆம் ஆண்­டின் அரச தலைவர் தேர்­தல் மற்­றும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வேளை­க­ளில் நாம் கேட்க நேர்ந்த கதை­கள் சில­வற்றை ஞாப­கப்­ப­டுத்­திப் பார்ப்­போமே!

முன்னைய ராஜபக்ச  அரசு மீது, மைத்திரி தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள்

 

வெளிநாட்டு வங்­கி­க­ளில் பெருந்­தொ­கைப்­ப­ணம் அரச தரப்­பி­ன­ரால் வைப்­பில் இடப்­பட்­டுள்­ள­தா­கத் தலை­யில் அடித்­துச் சத்­தி­யம் செய்­யாத குறை­யாக விமர்­ச­னம் முன்­வைத்­த­ வர்­க­ளது குற்­றச்­சாட்­டுக் குறித்து ஏதா­வது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதா? யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து தப்­பித்த நகை­கள் அடங்­கிய வாக­னம் குறித்து கதை கட்­டப்­பட்­டதே. அது குறித்து ஏதா­ வது கண்டு பிடிக்­கப்­பட்டதா? லம்­போ­கினி கார் கொண்டு வரப்­பட்­ட­தாக பக்­கிங்­கா­மி­லி­ருந்து குதிரை கொண்டு வரப்­பட்­ட­தென்ற கதை­ய­ளத்­தல் குறித்து எதா­வது கண்டு பிடிக்­கப்­பட் டதா? தாஜுதீன், லசந்த மற்­றும் என்­னொ­லி­கொட படு­கொலை கள் குறித்து ஏதா­வது தக­வல் கள் வௌிப்­ப­டுத்­தப்­பட்­டனவா?

நெடுஞ்­சா­லை­கள் புன­ர­மைப்பு, அனல்­மின் நிலை­யம், துறை­மு­கம், விமான நிலை­யங்­கள் போன்ற மிகப்­பெ­ரும் திட்­டங்­கள் தொடர்­பான கையாள்­கை­யில் தர­குப்­ப­ணம் பெறப்பட்ட­தாக வழக்­கே­தும் தொடுக்­கப்­பட்­ட­துண்டா? பொது மக்­க­ளது அத்­தி­யா­வ­சிய பாவ­னைப் பொருள்­க­ளின் விலை­கள் உண்­மை­யில் குறைக்­கப் பட்­டுள்­ள­னவா? தனி­யார் துறை ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளங்­கள் உயர்த்­தப்­பட்­டுள்­ள­னவா? கல்­வித்­து­றைக்கு, அர­சின் தேசிய உற்­பத்­தி­யில் ஆறு­வீ­தம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளமை உண்­மை­தானா? இளை­ஞர் யுவ­தி­க­ளுக்கு இல­வச ‘வைபை’ வழங்­கப்­பட்­ட­னவா? ‘கசினோ’ சூதாட்ட நடை­முறை முடக்­கப்­பட் டுள்­ளதா?

பவு­ணால் செய்­யப்­பட்­டதா எனக் கேள்வி எழுப்­பட்ட அதி­வேக நெடுஞ்­சாலை அமைப்­புக்­கான செல­வி­னங்­கள் குறை­வ­டைந்­த­னவா? தேயிலை, இறப்­பர் உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு அவற்­றின் விலை­கள் உறுதிப்­ப­டுத்­தப்­பட்­ட­னவா?

விவ­சா­யி­க­ளுக்­கான உர மானி­யம் தொடர்ச்­சி­யா­கக் கிட்­டி­னவா?
க.பொ.த. உயர்­தர வகுப்பு மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக கணி­னி­கள், டப் வச­தி­கள் வழங்­கப்­பட்­ட­னவா? நாட்­டில் போதைப்­பொ­ருள் பாவனை கட்­டுப்­ப­டுத்­தப்­பட் டதா?

இவற்­றைப் போன்ற ஏரா­ள­மாகக் கேள்­வி­களை எழுப்ப வேண்டி நேர்ந்­த­மைக்­கான கார­ணம், அந்த அள­வுக்கு இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள், தாம் பத­வி­யேற்ற நாளி­லி­ருந்து நாட்டு மக்­க­ளுக்கு வழங்கி வந்த வாக்­கு­று­தி­கள் மற்­றும் கூறி­வந்த நம்­பிக்­கை­யூட்­டும் கதை­கள் அத்­த­னை­யும் பச்­சைப்­பொய்­களே என்­றா­கி­யுள்ள கார­ணத்­தி­னா­லா­கும்.

அந்த அள­வுக்கு ஆட்­சி­யா­ளர்­கள் இந்த நாட்டு மக்­களை ஏமாற்றி வந்­துள்­ள­னர் என்­பது இன்று கண்­முன்­னா­லேயே நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக வாக்­க­ளர்­க­ளது வாக்­க­ளிக்­கும் உரி­மையை தேர்­தல்­கள் நடத்­து­வ­தைப் பிற்­போட்டு ஒத்­தி­வைத்து வந்­த­தன் மூலம் மீறி, நாட்டு மக்­களை மடை­யர்­க­ளாக்­கி­வந்த இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள், கடை­சி­யில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை எதிர்­வ­ரும் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திக­தி­யன்று நடத்த ஒழுங்கு செய்­த­தை­ய­டுத்து, மீண்­டும் நாட்­டில் அர­சி­யல் பொய் வாக்­கு­று­தி­க­ளும் பொய்­யான பரப்­பு­ரை­க­ளும், தலை­தூக்­கி­யுள்­ள­மை­யைத் தெட்­டத்­தௌி­வாக உண­ர­மு­டி­கி­றது.

அது சரி, இந்­தத்­த­டவை இந்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கெல்­லாம் நாட்டு மக்­கள் எந்த விதத்­தில் தமது பலத்தை தமது வாக்­கு­க­ளின் மூலம் வௌிப்­ப­டுத்­தப் போகின்­ற­னர் என ஒரு கணம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. கடந்த சில நாள்­க­ளின் முன்­னர் இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விட­யம் தொடர்­பாக தாம் நிய­மித்த விசா­ர­ணைக்­கு­ழு­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில்,அத்­த­கைய ஊழல் இடம் பெற்­ற­மையை அரச தலை­வர் அதி­கா­ர­பூர்­வ­மாக ஒப்­புக் கொண்­டமை அர­சிய­ல­ரங்­கில் முக்­கிய சம்­ப­வ­மொன்­றா­கக் கரு­தப்­பட்­டது.அத்­த­கைய ஊழல் கார­ண­மான நட்­டம் தவ­றி­ழைத்­தோ­ரி­ட­மி­ருந்து அற­வி­டப்­ப­டு­மென அர­ச­த­லை­வர் தெரி­வித்­த­மை­யை­ய­டுத்து, சில தரப்­பி­னர் அத்­த­கைய தவறை மூடி மறைக்க மற்­ற­வர்­களை நோக்கி விரல் நீட்­டிக் குற்­றம் சாட்­டி­ய­மை­யை­யும் எம்­மால் உணர முடிந்­தது.

பிணைமுறி ஊழல் காரணமான நட்டம் எவரிடமிருந்து அறவிடப்படவுள்ளது  என்பதில் தெளிவில்லை

மத்திய வங்கி பிணை முறி வழங்கலில் ஊழல் இடம்­பெற்­ற­தாக அரச தலை­வரே ஒப்­புக்­கொண்­டமை பாராட்­டத்­தக்க தொன்றேயாயினும், இந்த விட­யத்­தில் வேறு சில அம்­சங்­க­ளும் குறை­பா­டு ­க­ளா­கக் கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யி­ருக்­கின்­றன.
குறித்த ஊழல் மோசடி கார­ண­மாக மொத்­த­நட்­டம் என்ற வகை­யில் கோடிக்­க­ணக்­கான ரூபா நிதி மோசடி இடம்­பெற்­றுள்­ள­தா­கத் தெரி­கி­றது. இத்­த­கைய பெருந்­தொகை நிதி மோசடி நாட்டு மக்­க­ளைப் பெரு­ம­ள­வில் பாதிக்குமொன்று.

அத்­த­கைய பெருந்­தொகை எவ­ரி­ட­மி­ருந்து எந்த விதத்­தில் அற­வி­டப்­ப­டும் என்­பது குறித்­துத் தௌிவு­ப­டுத்­தப்­ப­டாமை நாட்டு மக்­கள் மன­தில் பெரும் சந்­தே­கங்­க­ளையே தோற்­று­வித்­துள்­ளது.
உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­த­லுக்­கான தினம் தீர்­மா­னிக்­கப்­பட்ட சம­யத்­தி­லேயே அர­ச­த­லை­வர் மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் தொடர்­பான விசா­ரணை அறிக்கை குறித்த தமது கருத்தை வௌியிட்­டி­ருந்­தார். இது தேர்­த­லுக்கு எந்த வகை­யில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்­பது குழப்­பத்தைத் தரு­மொன்றே. ஏனெ­னில் இந்­தத் தேர்­தல் அர­சின் இரு முக்­கிய தரப்­புக்­க­ளுக்­கும், கூட்டு எதி­ரணித் த­ரப்­புக்­கும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தொன்று என்­ப­த­னா­லா­கும்.

கடந்த அர­ச­த­லை­வர் தேர்­த­லில் பொது வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றக்­கப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன அன்­னப்­பட்­சிச் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டார். அந்­தக் கூட்­டணியில் ஜ.தே.க, தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி, முஸ்­லிம் காங்­கி­ரஸ், ஜன­நா­ய­கக் கட்சி உட்­பட்ட பல கட்­சி­க­ளுக்கு ஆத­ர­வான வாக்­கு­க­ளும், மைத்­தி­ரி­பா­ல­வுக்­குத் தனிப்­பட்ட மறை­யி­லான ஆத­ரவு வாக்­கு­க­ளும் அடங்­கி­யி­ருந்­தன.

அந்த அர­ச­த­லை­வ­ருக்­கான தேர்­த­லில் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு 62 லட்சத்து 17,162 வாக்­கு­க­ளும், மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு 57 லட்சத்து 68,090 வாக்­கு­க­ளும் பதி­வா­கி­யி­ருந்­தன. 4 லட்சத்து 49,072 மேல­திக வாக்­கு­கள் பெற்று மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­ச­த­லை­வ­ரா­கத் தேர்­வா­னார்.

ஆனால் 2015 நாட­ளு­மன்­றத்­தேர்­த­லில் மைத்­தி­ரி­பால தரப்­பும், மகிந்த தரப்­பும் ஐ.ம.சு. கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்­ட­தால், மைத்­தி­ரி­பா­ல­வுக்கு தனிப்­பட்ட ஆத­ரவு வாக்­கு­கள் இருந்­தி­ருப்­பின் அது அந்­தக் கூட்­ட­ணிக்­கான ஆத­ரவு வாக்­கு­களை உயர்த்­தி­யி­ருந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் நடந்­த­தென்ன? ஐ.ம.சு.கூட்­ட­ணி­யால் 47லட்சத்து 32,664 வாக்­குகளையே அந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பெற முடிந்தது.

ஐ.தே.க, தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­ மைப்பு, ஜே.வி.பி, முஸ்­லீம் காங்­கி­ரஸ், ஜன­நா­ய­கக்­கட்சி ஆகி­யவை தனித்­த­னியே பெற வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்து 31, 653 ஆகும். அந்த வகை­யில் அரச தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு தனிப்­பட்ட ஆத­ரவு வாக்­கு­கள் என்று சொல்­லிக் கொள்­ளு­ம­ள­வுக்­குப் வாக்­கு­கள் கிட்­டி­யி­ருக்­க­ வில்லை என்­பது இதன்­மூ­லம் நிரூ­ப­ண­மா­கி­றது.

2015 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஐ.ம.சு.கூட்­டணி மைத்­தி­ரி­பா­ல­வின் தலை­மை­யின் கீழ் போட்­டி­யிட்­ட­தன் மூலம் மகிந்­த­வின் ஆத­ர­வா­ளர்­க­ளது தைரி­யம் வீழ்ச்சி கண்­ட­மையே கண்ட பல­னா­கும். அந்­தத் தேர்­தல் தொடர்­பாக மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­ய­வற்­றை­யும், மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளை­யும் நினைவு படுத்­திப் பார்ப்­பது இவ்­வே­ளை­யில் பொருத்­த­மாக அமை­யும்.

ஐ.ம.சு.கூட்­ட­ணி­யின் தலை­வ­ரென்ற வகை­யில் ஆரம்­பத்­தில் மகிந்­த­வுக்கு தேர்­தல் வேட்­பா­ளர் நிய­ம­னம் வழங்க மைத்­தி­ரி­பால மறுத்­தார். பின்­னர் மகிந்­த­வுக்கு வேட்பா­ளர் நிய­ம­னம் வழங்­கிய போதி­லும், மகிந்­த­வைத் தவிர்த்து வேறொ­ரு­வரைத் தலைமை அமைச்­சர் பத­விக்­குப் பெயர் குறித்­தொ­துக்­கு­மாறு தெரி­வித்­தார். ஐ.ம.சு.கூட்­டணி பொதுத் தேர்­த­லில் வெற்றி பெறு­மா­னால் மகிந்­த­வுக்கு தலைமை அமைச்­சர் பதவி வழங்­கப்­போ­வ­தில்­லை­யெ­னப் பகி­ரங்­க­மாக அறி­வித்­தார்.

இவை­யா­வும் அரச தலை­வர் என்ற ரீதி­யி­லும் , ஐ.ம.சு.கூட்­ட­ணி­யின் தலை­வர் என்ற ரீதி­யி­லும் மகிந்­த­ரா­ஜ­பக்­சவை திட்­ட­மிட்­டுப் புற­மொ­துக்­கும் விதத்­தில் மைத்­தி­ரி­பால செயற்­பட்­டி­ருந்­தார் என்­பதை நிரூ­பிக்­கப் போது­மான சான்­று­க­ளா­கும்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கும் ஏனைய தேர்தல்களுக்கும் மக்கள் ஆதரவில் நிறையவே வேறுபாடு உண்டு

தற்­போது நாம் மீண்­டும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் குறித்து கவ­னம் செலுத்­தி­னால் மகிந்­த­வின் பெருந்­தொ­கை­யான ஆத­ர­வா­ளர்­கள் தமது வாக்­கு­க­ளால் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு வாய்ப்­புக்­கிட்­டு­வதை விரும்­பாது அந்­தப் பொதுத்­தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தையே தவிர்த்­தி­ருந்­த­னர் என்­ப­தைப் புரிந்து கொள்ள முடி­யும்.

அந்த வகை­யில் நாடா­ளு­மன்­றத் தேர்­த­ல் வேளையில் மகிந்­த­வுக்­கான வாக்கு ஆத­ரவு 58 இலட்­ச­மா­க­வும் அவ­ருக்கு எதி­ரான வாக்­கு­கள் 62இலட்­ச­மா­க­வும் அமைந்­த­தா­கக் கொள்ள இய­லும். இதன் அடிப்­ப­டை­யி­லேயே நாம் எதிர்­வ­ரும் தேர்­த­லை­யும் நோக்க வேண்­டி­யுள்­ளது. எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில் புதி­தாக வாக்­க­ளிக்­கத் தகு­தி­பெற்ற இளம்­ப­ரம்­ப­ரை­யி­ன­ரது வாக்­குக்­கள் பெரும்­பா­லும் அரச தரப்­புக்கு ஆத­ர­வாக அளிக்­கப்­ப­டப் போவ­தில்லை. ஏனெ­னில் அந்த இளம்­ப­ரம்­ப­ரை­யி­னர் அர­சுக்கு எதி­ரான மன­நி­லை­யையே கொண்­டுள்­ள­னர்.

முன்­னர் மகிந்­த­வுக்கு ஆத­ர­வாக அரச தலை­வர் தேர்­த­லில் கிட்­டிய 58லட்­சம் வாக்­கு­க­ளில் பெரு­ம­ள­மா­னவை இம்­முறை தாமரை மொட்­டுச் சின்­னத் துக்கே கிட்ட இட­முண்டு எனக் கரு­த­வேண்­டி­யுள்­ளது. அதே­ச­ம­யம் இன்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தரப்­பி­லுள்ள அர­சி­யல்­வா­தி­க­ளில் பலர் 2015ஆம் ஆண்­டின் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்­டுத் தோல்­வி­யைத் தழு­வி­ய­வர்­கள் என்­பதை நாம் மறந்து விடக் கூடாது.

எதிர்­வ­ரும் தேர்­த­லில் வெவ்­வேறு தரப்­புக்­க­ளாக உடை­யப்­போ­வது அர­சுக்கு ஆத­ர­வா­கச் செயற்­ப­டும் தரப்­புக்­களே. அவர்­க­ளது வாக்­கு­கள் ஐ.தே.க., தமிழ்­த­தே­சி­யக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி., முஸ்­லீம் காங்­கி­ரஸ் மற்­றும் ஜன­நா­ய­கக் கட்­சி­போன்ற தரப்­புக்­க­ளுக்கு பிரி­வ­டைந்து செல்­லப்­போ­கி­றது.

மகிந்­த­வின் தலை­மை­யி­லான தாம­ரை­மொட்டு தரப்பு 58இலட்­சம் வாக்­கு­க­ளைத் தன்­வ­சம் கொண்டே போட் டியை ஆரம்­பிக்­கப்­போ­கி­றது என்ற நம்­பிக்கை சரி­யா­ன­தா­யின், ஐ.தே.கட்சி 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்து நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பெற்ற 51லட்­சம் வாக்­கு­கள் எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தாம­ரை­மொட்டுச் சின்னத் தரப்­பைத் தோற்­க­டிக்கப் போது­மா­ன­தாக அமை­யப்­போ­வ­தில்லை.

இத்­த­கைய கணிப்பு பிழை­யாக அமை­ய­வும் இட­முண்டு. ஏனெ­னில் இடம்­பெ­றப்­போ­வது உள்­ளூ­ராட்சி மன்­றங்­ளுக்­கான தேர்­த­லே­யன்றி நாடா­ளு­மன்­றத் தேர்­தல்ல. உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில் வாக்­கா­ளர்­கள் கட்­சி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கிச் செயற்­ப­டு­வ­தை­விட தமக்கு அறி­மு­க­மாக வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்கவே அதிக வாய்ப் புண்டு என்பது சக­ல­ரா­லும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தொரு விட­ய­மா­கும்.

இந்­தத் தேர்­தலை தனி­ந­பர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கப் பயன்­ப­டுத்­தாது அர­சுக்­குத் தமது எதிர்ப்பை வௌிப்ப்­ப­டுத்­தும் விதத்­தில் பயன்­டுத்­து­மா­று மகிந்­த­வின் தாம­ரை­மொட்டு தரப்பு மீண்­டும் மீண்­டும் கோரி­வ­ரு­வது மேற்­கு­றிப்­பிட்ட அடிப்­ப­டையைக் க­ருத்­தில் கொண்­டே­யா­கு­மெ­னக் கரு­த­மு­டி­யும். ஆயி­னும் அத்­த­கைய கோரிக்­கைக்கு எந்த அள­வுக்கு வாக்­கா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ஆத­ரவு கிட்­டு­மென அனு­மா­னிப்­ப­தற்கு இன்­ன­மும் காலம் கனி­ய­வில்லை என்றே கூற வேண்­டி­யுள்­ளது.

http://newuthayan.com/story/62019.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.