Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு

Featured Replies

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு

 

airportகட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

“சுரேஸ்நாத் இரத்தினபாலன் என்ற 48 வயதுடையவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக நேற்று முன்தினம் மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

குடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் சோதனையிடப்பட்ட போது, சுரேஸ்நாத் இரத்தினபாலனின் பெயர் கறுப்புப்பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டது.

அவரது குடும்பத்தினரை சிறிலங்காவுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட போதும், அவர்கள், அவருடனேயே இருக்க முடிவு செய்துள்ளனர்.

திருப்பி அனுப்பப்படுவதற்காக அவர்கள் விமான நிலைய இடைத்தங்கல் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இவர்களை நாடு கடத்தும் உத்தரவை ரத்துச் செய்து, சிறிலங்காவுக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஸ்நாத் இரத்தினபாலன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் என்றும், முன்னைய அரசாங்கத்தினால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக குடிவரவுக் கட்டுப்பாட்டாளரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், நாட கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரது பதிலுக்கு காத்திருப்பதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2018/01/13/news/28443

  • தொடங்கியவர்

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்

 

deportedநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நேற்றுக்காலை நாடு கடத்தப்பட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை பிற்பகல் அபுதாபியில் இருந்து எதிஹாட் விமான மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், நேற்றுக்காலை சிறிலங்கன் விமானசேவை மூலம், பாங்கொக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கனடாவின் ரொரன்டோ நகரில் இருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் அரசவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சுரேஸ்நாத் இரத்தினபாலன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீவிரமான கருத்துக்களை வெளியிட்டு வந்தவர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இவரை சிறிலங்காவுக்குள் நுழைய குடிவரவு அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்த நிலையில், பாங்கொக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இவர்களைத் திருப்பி அனுப்பும் உத்தரவை ரத்துச் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சர்கள் சிலர் முயற்சி செய்ததாகவும், ஆனால் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளின் இறுக்கமான போக்கினால் அது சாத்தியமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

நாடுகடத்தும் உத்தரவை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர்களிடம், அதனை எழுத்துமூலம் தருமாறு குடிவரவுத் திணைக்களம், கோரியதாகவும் அவர்கள் அதற்கு இணங்காத நிலையில், சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் விமான நிலையத்துக்குள் உள்ள  நட்சத்திர விடுதி ஒன்றிலேயே முக்கிய பிரமுகர்களுக்குரிய வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், நாடு கடத்தப்படும் ஏனையவர்களைப் போன்று நடத்தப்படவில்லை என்றும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/01/14/news/28462

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.