Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத் தீர்வுக்கு கிழக்கு வழிகோலுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-அருஸ் (வேல்ஸ்)-

'இராணுவத் தீர்வு", 'அரசியல் தீர்வு" இவை இரண்டும் தற்போது பிரபல்யமான சொற்கள். போர்நிறுத்த காலத்தில் அழுத்தம் கூடியிருந்த அரசியல் தீர்வு என்னும் சொற்பதம் தற்போது அழுத்தம் குறைந்ததாகவும். அன்று அழுத்தம் குறைந்திருந்த இராணுவத் தீர்வு என்ற சொல் அழுத்தம் கூடியதாகவும் தற்போது மாறியுள்ளது.

சிறிலங்கா அரச தலைவர் தொடக்கம் அடிமட்ட சிங்கள மக்கள் வரை இராணுவத்தீர்வின் கனவில் மிதக்கும் போது, அனைத்துலக சமூகம் அடிக்கடி அரசியல் தீர்வை வலியுறுத்துகின்றன. இந்த எதிரும் புதிருமான கருத்துக்களுக்கு காரணம் என்ன?

http://www.tamilnaatham.com/articles/2007/mar/arush/16.htm

தாம் உலகில் கற்ற பாடங்களில் இருந்து கூறும் கருத்துக்களாக அனைத்துலக சமூகத்தின் கருத்தும். தமது குறுகிய கால அரசியல் நலன் கொண்டதாகவும், இராணுவ ரீதியான அறிவின் வெற்றிடமாகவும் சிங்கள தேசத்தின் கருத்துக்களும் கொள்ளப்படலாம்.

30,000 படையினரை கொண்டு 300 போராளிகளுடன் பல பத்து வருடங்கள் போராடிக் களைத்துப்போன பிரித்தானியா, 560,000 படையினரையும் தனது கணிசமான ஆயுத வளங்களையும் வியட்னாமில் குவித்தும் புறமுதுகிட்ட அமெரிக்கா, கைவிட்டுப் போன தென்னாபிரிக்கா, வெல்ல முடியாத பலஸ்த்தீனம், பிரிந்து போன பல்கன் குடியரசுகள் என அனைத்துலகம் கற்றுத் தேர்ந்த களங்கள் மிகப்பல. எனவே அவர்களின் கருத்துக்களுக்கு அது காரணமாகலாம்.

சிறீலங்கா அரசை பொறுத்தவரை தீவிர இனவாத சிந்தனையில் வளர்க்கப்பட்ட மக்கள், பலவீனமான அரசியல் பின்னணி, பேரினவாத துணைக்கட்சிகள், சில மேற்குலக மற்றும் ஆசிய நாடுகளின் மறைமுக ஆதரவு, ஆறிப்போன பழைய காயங்கள், அரச நிர்வாக முறைகேடுகளை போருக்குள் மறைக்கும் தந்திரம் என்பன தான் தீவிரவாதப் போக்குடைய அரசு இராணுவத் தீர்வில் கொண்டுள்ள நாட்டத்திற்கான காரணங்கள்.

அரசின் இந்த போர் முனைப்புக்கள் கிழக்கிலேயே மையம் கொண்டுள்ளன. அதாவது விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக கிழக்கில் இருந்து வெளியேற்றப்போவதாக கூறிக்கொண்டு அரசினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளும், கிழக்கை விடுதலைப் புலிகள் கைவிடப்போகிறார்கள் என்ற சில ஆய்வாளர்களின் கூற்றுக்களும் போராடும் மக்களின் உளவியலை சிதறடிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சியாகவே கொள்ளப்படலாம்.

ஈழ விடுதலைப் போரியல் வரலாற்றை புரட்டினால், அதன் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை எந்த ஒரு தாயகப் பிரதேசங்களையும் விடுதலைப் புலிகள் கைவிட்டதில்லை. அப்படி விடவும் முடியாது. போரியல் தந்திரங்களில் நகர்வுகள், விலகிச் செல்லுதல், எதிரியை உள்வாங்குதல், மீளக் கைப்பற்றுதல் என்பன மாறலாம் ஆனால் போராட்டத்தின் இலக்கு மாறுவதில்லை.

வாகரையையும், சம்பூரையும் கைப்பற்றிவிட்டால் விடுதலைப் புலிகளின் வழங்கல் வழிகள் அடைபட்டுவிடும் என்றும், வடக்கிற்கும் கிழக்கிற்குமான தொடர்புகள் அற்றுவிடும் எனவும் சிங்கள தேசமும், அதன் ஆய்வாளர்களும் கருதுவார்களாக இருந்தால் அவர்களின் போரியல் அறிவுகள் தான் எத்தகையது?

1995 இன் பிற்பாடு சமர்கள் இன்றி விடுதலைப் புலிகளின் கைகளில் வீழ்ந்தவை தான் வாகரை, சம்பூர், மாவிலாறு, என்பன. ஆனால் அதற்கு முன்னர் கிழக்கில் விடுதலைப் புலிகள் இயங்கவில்லையா? பெரும் படையணிகளை அங்கு கொண்டிருக்கவில்லையா? அப்படிக் கொண்டிருந்தால் அவர்களுக்கான வழங்கல் வழிகள் எவை? தமது படையணிகளையும் தளபதிகளையும் எவ்வாறு வன்னிக்கும் கிழக்கிற்கும் அன்று நகர்த்தினார்கள்?

இவை தான் இன்று உதித்துள்ள முக்கிய வினாக்கள். வாகரை மட்டும் தான் விடுதலைப் புலிகளுக்கு வழங்கல் வழியென்றால் 1997 இற்கு பின்னர் தான் விடுதலைப் புலிகள் கிழக்கில் இயங்கியிருக்க வேண்டும்.

வாகரையின் ஆக்கிரமிப்பும், ஏனைய கிழக்கிலங்கையின் ஆக்கிரமிப்புக்களும் விடுதலைப் புலிகளக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பது உண்மை. உதாரணமாக வடக்கில் ஜெயசுக்குறு நடவடிக்கையின் போது ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளைப் போல. ஆனால் அது போராட்டத்திற்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தப்போவதில்லை.

ஏனெனில் விடுதலைப் புலிகளால் தந்திரமாக பின்வாங்கப்படும் பிரதேசங்களில் சிறீலங்கா அரசின் படைகள் முடக்கப்படுகின்றன என்பதே அதன் பொருள். மாவிலாறு, சம்பூர், வாகரை என கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பாதுகாக்க சிறீலங்கா அரசிற்கு தேவையான படையினரின் எண்ணிக்கை மிக அதிகம்.

முன்னரைப் போல நூறு படையினர் ஒரு முகாம் என்ற கணக்கில் தற்போது கிழக்கை பாதுகாக்க முடியாது.

இதனை வேறு விதமாக கூறினால் போர்க்களங்களில் இரு வகையான களங்களை காணலாம் சமச்சீரான களம், சமச்சீரற்ற களம். சமச்சீரான களங்களில் கைப்பற்றுதல் கடினமானது, ஆனால் தக்கவைத்தல் சுலபமானது. சமச்சீரற்ற களங்களில் கைப்பற்றுதல் சுலபமானது, ஆனால் தக்கவைத்தல் மிகவும் கடினமானது.

இது தான் உலகில் பெரும் படைகொண்ட நாடுகளே சமச்சீரற்ற களங்களில் தோற்றுப் போவதற்கான காரணங்கள். சிறீலங்கா படைகள் ஜெயசுக்குறு சமரில் தோற்றுப் போனதும், யாழ். குடாவை காப்பாற்ற ஆனையிறவை பறிகொடுத்ததும் அதனால் தான்.

மேலும் சிறீலங்கா அரசின் இராணுவத்தை பொறுத்தவரை முன்னைய ஈழப் போர்களில் கிழக்கை படையினரின் ஒரு பின்னிருக்கை தளமாகத் தான் பயன்படுத்தியதுண்டு. அதாவது வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்;கைகளுக்கும், தெற்கில் படையினர் தேவைப்படும் போதும் கிழக்கில் இருந்து தான் படையினரை நகர்த்துவதண்டு.

அதற்கான காரணம் கிழக்கின் பூகோள அமைப்புக்கள் மற்றும் அன்று விடுதலைப் புலிகளின் கனரக ஆயுத பலம் என்பனவாகும். அன்று விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்களின் மட்டுப்படுத்தப்பட்ட பாவனை அல்லது பற்றாக்குறை. பாதகமான பூகோள சூழ்நிலைகளையும் இராணுவத்திற்கு சாதகமாக்கியிருந்தது.

ஆனால் இன்று அது எதிர்மறையாகியுள்ளது. அதாவது சாதகமான பூகோள அமைப்பையும் படையினருக்கு கடினமாக்கியுள்ளது. அதனால் தான் முன்னர் சாதாரணமாக பின்னிருக்கை தளமாக பயன்படுத்திய பகுதிகளில் இன்று சிங்களப் படைகள் பெரும் படை கொண்டு மோதுகின்றன.

மேலும் கிழக்கு மாகாணச் சமர்களில் ஒரே வகையான போரியல் தந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் தினமும் ஆயிரம் எறிகணைகள், பல்குழல் எறிகணைகள், விமானக்குண்டு வீச்சுக்கள் என ஒரு செறிவான சூடுகளை வழங்குவதன் மூலம் அப்பகுதி மக்களை கொல்லுதல் மற்றும் அச்சமுறச் செய்தல், பின்னர் அவர்களுக்கான போக்குவரத்துப் பாதைகளை மூடி, உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வழங்கல்களை நிறுத்தி ஒட்டு மொத்த மக்களையும் ஒன்றும் இல்லாதவர்களாக்கி வெளியேற்றுதல். அதனையடுத்து பலமுனைகளில் படையினரை நகர்த்துதல். இது தான் மாவிலாறு, சம்பூர், வாகரை என தொடரும் போரியல் உத்திகள்.

தற்போது மட்டக்களப்பின் மேற்குப் பகுதியான குடும்பிமலை பிரதேசத்தை நோக்கி நடைபெற உள்ள நடவடிக்கையும் இதே உத்தியை கொண்டது தான். இந்த நடவடிக்கைகளின் போது சிறியளவிலான விசேட படையினரும் காடுகளினூடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு.

எனினும் மட்டக்களப்பு மேற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மிகவும் பரந்த பிரதேசம் என்பதுடன், அடர்ந்த காடுகள், மேடுகள் நிறைந்த பகுதி. அதாவது அதனை பாதுகாக்க வேண்டுமானால் இரு முழுமையான படைப்பிரிவுகளை (னுiஎளைழைn) விட அதிகமான துருப்புக்கள் தேவை. மேலும் படையினரின் பாதுகாப்பு வியூகங்களுக்கு நடுவே விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படுமாக இருந்தால் நிiமை மேலும் மோசமாகும்.

சிறீலங்கா இராணுவத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று பிரிகேட்டுக்களை கொண்ட 57 ஆவது படையணி எல்லாம் அதற்கு போதுமானவை அல்ல. ஏனெனில் ஈழப் போர்களில் பூதாகரமாக வளர்ந்து வந்த சிறீலங்கா படைகளால் 25 வருட கால போராட்ட களத்தில் சாதித்தவை என்ன என்பதும், விடுதலைப் புலிகளின் பலத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள்.

1983 களில் போராட்;டம் முனைப்பு பெற்ற போது சிறீலங்கா இராணுவத்தின் படைத்தொகை 12,000 வீரர்களே, இது பின்னர் 1985 இல் 16,000 ஆகியது. 1987 களில் யாழ். குடாவை ஆக்கிரமிக்கும் லிபரேசன் ஒபரேசன் நடவடிக்கையை ஆரம்பித்த போது அதன் பலம் 40,000 வீரர்கள் (இன்று யாழ். குடாவை பாதுகாக்க மட்டும் தேவைப்படும் வீரர்களை விட குறைவானது). தற்போது 120,000 வீரர்கள் உள்ளபோதும் அவர்களின் கைகளில் எந்தக் களங்களும் உறுதியான பாதுகாப்பை கொண்டவையாக இல்லை.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை 300 வீரர்கள் போதும் 30,000 இராணுவத்தினரை மட்டக்களப்பை விட்டு மீளமுடியாதபடி புதையவைப்பதற்கு. அதாவது மட்டக்களப்பு மேற்கில் நடைபெறப்போகும் வருங்காலச் சமர்கள் உக்கிரமாகத் தான் இருக்கும். அதன் முன்னோடி தான் கடந்த வாரம் தோல்வியில் முடிந்த இராணுவ நடவடிக்கைகள்.

ஆனால் சிறீலங்கா படைகளின் பலம் மட்டக்களப்பில் மட்டும் முடக்கப்படவில்லை, நாடு முழுவதும் வியாபித்துப் போயுள்ள மோதல்களில் இருந்து தன்னை பாதுகாக்க பலமடங்கு படையினர் அரசிற்கு தேவைப்படும். மேலும் போர் தீவிரமடையும் போது தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

அண்மைய சமர்களில் சரணடைந்த படையினரின் எண்ணிக்கைகள் அதற்கு சான்று பகரும். தற்போதைய சிறீலங்கா இராணுவத்தின் பலம் 120,000 வீரர்கள். ஆனால் 1983 இல் இருந்து இன்று வரை தப்பியோடிய படையினரின் எண்ணிக்கை 50,000 - 60,000 வீரர்கள் என்பது அரசின் கணிப்பீடு. அப்படியானால் தப்பியோடிய வீரர்களின் விகித்தை நீங்கள் கணிப்பிட முடியும். அது மட்டுமல்லாது போர் நிறுத்த காலத்தில் கூட சில ஆயிரம் வீரர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்றால் அவர்களின் உளவியல் பாதிப்புக்கள் அதிகமானது.

அதாவது விரிவடையும் களங்களுக்கும், கைப்பற்றப்படும் பிரதேசங்களுக்கும் ஈடுகொடுக்க சிங்களப் படைகளின் படைபலம் போதுமா?

உதாரணமாக அனுராதபுரத்தின் வில்பத்து சரணாலயத்தில் விடுதலைப்புலிகளின் விசேட படையணியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நகரத்தின் தளபதி பலியாகியதும், அதன் பின்னர் சரணாலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்த அரசு முயன்றுள்ளதும் தெரிந்த விடயங்கள். ஆனால் எத்தனை வீரர்களை கொண்டு வில்பத்து காட்டை அரசு பாதுகாக்கப் போகின்றது?

சில களங்களை கைப்பற்ற சில களங்களை கைவிட வேண்டியது நிர்ப்பந்தம். இன்று கிழக்கில் திறக்கப்படும் களமுனைகளுக்கு பதிலாக சிங்கள அரசு தாரை வார்க்கப் போகும் களம் எது? அது தான் அவதானிகளின் மனங்களில் எழும் முக்கிய வினா.

இறுதியாக போரியல் மேதை சன்சூவின் (ளுரn வுணர) போரியல் தந்திரங்கள் தொடர்பான கருத்துக் கடலில் இருந்து சில துளிகள்.

'நீ தாக்குதலை நடத்தும் வலிமையுடன் இருந்தால் இயலாதவன் போல எதிரிக்கு தோற்றமளி"

'உனது படைகளை நீ தயார்படுத்தும் போது இயங்க முடியாதவனாக உன்னை எதிரிக்கு காட்டிக்கொள்"

'எதிரிக்கு அருகில் நீ உள்ள போது, தூரத்ததில் இருப்பதாக அவனை நம்பவை"

'எதிரிக்கு அதிக தொலைவில் நீ உள்ள போது, அருகில் இருப்பதாக அவனை நம்பவை"

ஒரு வலிமையான போர்க்களத்தை திறப்பதற்கு முன்னர் ஏற்படுத்தப்படும் மாயைகளில் இது சிறு பகுதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.