Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அறிவித்தது நீதிமன்றம்

Featured Replies

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அறிவித்தது நீதிமன்றம்

 

 

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

maithriii.jpg

 

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தில் வினவியதன் அடிப்படையில் அதுபற்றி ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/29398

  • தொடங்கியவர்

ஜனா­தி­பதி 5 வரு­டங்­களே பதவியில் இருக்க முடியும்

p1-1212547e20e498151386bdf7cf9a28c5b0cbfe02.jpg

 

(ரொபட் அன்­டனி)
உயர் நீதி­மன்றம் அறி­விப்பு; 2019 நவம்­பரில் அடுத்த தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யாகும்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐந்து வரு­டங்­களே ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடியும் என ஐந்து நீதிய­ர­சர்­களைக் கொண்ட உயர் நீதி­மன்ற குழாம் ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­தி­ருக்­கி­றது.   

தன்னால் ஆறு­வ­ரு­டங்கள் ஜனா­தி­பதி பத­வியை வகிக்க முடி­யுமா என  உயர் நீதி­மன்­றத்­திடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சட்ட அபிப்­பி­ரா­யத்தை கோரி­யி­ருந்த நிலையில் அவர் ஐந்து வரு­டங்­களே பதவி வகிக்க முடியும் என தற்­போது உயர் நீதி­மன்றம் வியாக்­கி­யானம் வழங்­கி­யி­ருக்­கி­றது.   

அந்த வகையில் அடுத்த ஜனா­தி ­பதி தேர்தல் தொடர்­பான அறி­விப்பு எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு நவம் பர் மாதம் அளவில் வெளி­யி­டப்­ப­ட­வேண்டும்.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்னால் ஆறு­வ­ரு­டங்கள் (2021 வரை) ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடி­யுமா என்­பது குறித்த சட்ட அபிப்­பி­ரா­யத்தை வழங்­கு­மாறு இம்­மாதம் 9ஆம்­தி­கதி உயர் நீதி­மன்­றத்­திடம் வின­வி­யி­ருந்தார். அதன்­படி உயர் நீதி­மன்றம் இது தொடர்பில் பிர­தம நீதி­ய­ரசர் தலை­மையில் ஐந்து நீதி­ய­ரசர் கொண்ட குழாமை நிய­மித்­த­துடன் கடந்த வியா­ழக்­கி­ழமை பகி­ரங்க விவா­தத்தை நடத்­தி­யது.

பிர­தம நீதி­யர்சர் பிரி­யசாத் டெப், நீதி­ய­ரசர் ஈவா வண­சுந்­தர, நீதி­ய­ரசர் புவ­னேக அளு­வி­ஹார, நீதி­ய­ரசர் கே.ரி.சித்­ர­சிறி, நீதி­ய­ரசர் சிசிர டி ஆப்றூ ஆகியோர் முன்­னி­லையில் குறித்த விவ­காரம் திறந்த மன்றில் இந்த விவாதம் நடை­பெற்­றது.

இதில் சட்­டமா அதிபர் உட்­பட பல்­வேறு துறைசார் சட்­டத்­த­ர­ணிகள் தமது வாதங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். குறிப்­பாக சட்­டமா அதிபர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பதவிக் காலத்தை ஆறு ஆண்­டுகள் வகிக்க முடியும் எனவும் அவ­ரது பதவிக் காலம் 6 வரு­டங்கள் என்­பதே தனது அபிப்­பி­ராயம் எனவும் அறி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை எழுத்­து­மூல சமர்ப்­ப­ணங்­களை உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் குழாம் பெற்­றுக்­கொண்­டது. இந்த நிலையில் நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை உயர் நீதி­மன்­றத்தின் சட்­ட­வி­யாக்­கி­யானம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பப்­பட்­டது.

அதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­காலம் ஐந்து வரு­டங்கள் என உயர் நீதி­மன்­றத்­தினால் அறி­விக்­கப்­பட்­டது. இது தொடர்பில் அறிக்­கை­யொன்றை விடுத்­துள்ள ஜனா­தி­பதி செய­லகம், ஜனா­தி­பதி தனது பத­விக்­காலம் தொடர்பில் சட்­ட­வி­ளக்­க­மொன்றை உயர்­நீ­தி­மன்­றத்­திடம் வின­வி­யதன் அடிப்­ப­டையில் அது­பற்றி ஆராய்ந்த உயர் நீதி­மன்றம் ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் ஐந்து வரு­டங்கள் என அறி­வித்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

அதன்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2020 ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி வரை ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடியும் என்­ப­துடன் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாத­ம­ளவில் அடுத்த தேர்­த­லுக்­கான அறி­விப்பை வெளி­யி­டவும் வேண்டும்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம்­தி­கதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார். எனினும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்த சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் ஐந்து வரு­டங்­க­ளாக வரை­ய­றுக்­கப்­பட்­டது.

எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 19ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்­னரே ஜனா­தி­ப­தி­யாக பதவியேற்றதால் அவருடைய பதவிக்காலத்திற்கு சட்டம் உட்படுமா? என அரசியல் களத்தில் கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டன.

இதனையடுத்தே ஜனாதிபதி தன்னால் ஆறுவருடங்கள் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியுமா என உயர் நீதிமன்றத்திடம் வினவியிருந்தார். அதன்படியே தற்போது ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.