Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலிய ஓப்பன் பதக்கம் யாருக்கு?

Featured Replies

ஆஸ்திரேலிய ஓப்பன் பதக்கம் யாருக்கு? - கலக்கத் தயாராகும் புதுமுகங்கள்

 

வருடம் தொடங்கினாலே, டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு வருடத்தின் டென்னிஸ் போட்டிகளை பிள்ளையார்சுழி போட்டு தொடங்கிவைப்பது ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர்.

Federar_11536.jpg

 


கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர் இன்று தொடங்கி (ஜனவரி 15), ஜனவரி 28-ம் தேதி வரை நடக்கிறது. அழகிய மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் 49 நாடுகளிலிருந்து 256 வீரர்கள் பங்கேற்கின்றனர். 50 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசுத்தொகையாகக்கொண்ட வருடத்தின் மாபெரும் முதல் கிராண்ட்ஸ்லாம்,  வீரர்களின் அந்த வருடத்துக்கான டென்னிஸ் பயணத்தைக் கணிப்பதாகவே அமையும். இந்த ஆண்டும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் களம் இறங்கும் வீரர்களில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது கணிக்க இயலாத ஒன்றே. நட்சத்திர ஆட்டக்காரரான ஆண்டி முர்ரே, இடுப்புப் பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாகக் கலந்துகொள்ளவில்லை. அதேபோல, தொடரில் கலந்துகொள்ளும் மற்ற நட்சத்திர வீரர்களில் பலரும், காயங்களிலிருந்து மீண்டே களம் காண்கின்றனர். ஆதலால், புதுமுகங்களுக்கான வாய்ப்பு இந்தாண்டில் பிரகாசமாகியுள்ளது. 


சர்வதேச டென்னிஸ் தர வரிசையில், முதல் இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால், கடந்த ஆண்டு  இறுதிப் போட்டி வரை முன்னேறினார். நீண்டநாள் ஓய்வுக்குப் பின் களமிறங்கிய நடால், இறுதிப் போட்டி வரை முன்னேறியது, சென்ற ஆண்டின் ஸ்வீட் சர்ப்ரைஸ். ஆஸ்திரேலிய ஓப்பனுக்குப் பின்னர், ஃப்ரெஞ்ச் ஓப்பன் மற்றும் அமெரிக்க ஓப்பன் பட்டங்களை வென்று, தான் இன்னும் டென்னிஸ் ஆட்டத்தில் முன்னணி வீரர்தான் என்பதை நடால் உரக்கச் சொன்னார். அந்த வகையில், நடாலின் கடந்த ஆண்டு செயல்பாடுகளுக்கு அடித்தளமிட்டது, ஆஸ்திரேலியன் ஓப்பன். 

தர வரிசையில் இரண்டாம் நிலை வீரரும், சென்ற ஆண்டு பட்டம் வென்றவருமான ரோஜர் ஃபெடெரர், இந்த ஆண்டும் பட்டம் வெல்வார் என்று, அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். டென்னிஸ் விமர்சகர்களும் இந்தக் கணிப்புக்கு ஆதரவுகொடுக்கின்றனர். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் ஆக்ரோஷமாக விளையாட இயலாமல் இருந்த ஃபெடெரெர், 'பேக் டு ஃபார்ம்' என்று கூறியது கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் மூலமாகத்தான். அதைத் தொடர்ந்து, அவர் தொடர்ந்து 2 கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் பட்டம் வென்றார். இருந்தாலும், அவர் அமெரிக்க ஒப்பனில் காலிறுதியில் வெளியேறியது இங்கும் தொடர வாய்ப்புள்ளது.    


கடந்த ஆண்டில், பெரும் சறுக்கல்களைச் சந்தித்த ஜோகோவிச், இந்த ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் விளையாட உள்ளார். சென்ற ஆண்டில் 12-ம் நிலைக்குத் தள்ளப்பட்ட ஜோகோவிச், வலது தோள்பட்டை வலியால் கடந்த ஆண்டு விம்பிள்டன்  காலிறுதியில் வெளியேறினார். அதன்பின்னர், சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகியே இருந்தார். தோள்பட்டை வலியைச் சமாளிக்க புதிய சர்வீஸ் முறையை அவர் பயன்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. எனினும், அவருக்கு இந்த கிராண்ட்ஸ்லாம் தொடர் சாதகமாக அமையுமா என்பது சந்தேகமே.

டென்னிஸின் பெரிய தலைகள் அனைவரும் களத்தில் இருந்தாலும், இது இளைஞர்களுக்கான களமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரிகோர் டிமிட்ரோவ், அலெக்சாண்டர் ஸ்வெனர், நிக் கைர்கியோஸ் என அடுத்த தலைமுறை வீரர்கள் தலை யெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் கோப்பையை வெல்லாவிடிலும், முன்னணி வீரர்களுக்கு பெரும் சவாலாக விளங்குவார்கள். நிச்சயம் கவனம் ஈர்ப்பார்கள். சர்வதேச தர நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில், 40-ம் இடத்தில் இருந்த க்ரிகோர் டிமிட்ரோவ், 2017-ம் ஆண்டின் இறுதியில் 3-ம் இடத்துக்கு முன்னேறி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ' பேபி ஃபெடெரெர்' என அழைக்கப்படும் இவர், முன்னணி வீரர்களுக்கு போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 வயதே ஆன அலெக்சாண்டர் ஸ்வெனர், கடந்த ஆண்டில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளார். அதிலும், ஒரு போட்டியில் முன்னணி வீரர் டேவிட் ஃ பெடெரெரை இவர் தோற்கடித்தார்.  2017-ம் ஆண்டின் இறுதியில், தர வரிசைப் பட்டியலில் 4-ம் நிலைக்கு இவர் முன்னேறியிருந்தார். இந்த ஆண்டு, இவர்மீது எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. பாரிஸ் ஓப்பனை வென்று 2018-ம் ஆண்டைத் தொடங்கியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர், நிக் கைர்கியோஸ் கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவர். சொந்த நாட்டில் நடக்கும் கிராண்ட் ஸ்லாம் தொடர் என்பதால், அவரது நம்பிக்கை வேற லெவலில் இருக்கும் என்று நம்பலாம். 

முன்னணி வீரர்கள் பலரும் காயங்களினால் பின்தங்கிய நிலையில், புதுமுக வீரர்களுக்கான தடமாக இந்தத் தொடர் அமையும். ஒட்டுமொத்த டென்னிஸ் உலகின் தலைமுறை மாற்றம், வெகு தொலைவில் இல்லை. அதற்கான தொடக்கமாக இந்தத் தொடர் அமையலாம். எதிர்பாராத வெற்றிகளும், அதிர்ச்சியளிக்கும் தோல்விகளும் இத்தொடர் நிச்சயம் வழங்கும். எனினும், ரசிக்கத்தக்க விளையாட்டு விருந்துக்கும், பிரமிக்கவைக்கும் நிகழ்வுகளுக்கும் பஞ்சம் இருக்காது. இந்த ஆண்டுக்கான டென்னிஸ் பயணத்தின் தொடக்கம், ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர், ஏற்கெனவே மின்னும் டென்னிஸ் நாயகர்களின் வரலாற்றுப் பக்கங்களில் சேர்க்கப்படும் மற்றுமொரு பக்கமாக மாறுமா? அல்லது புதிதாக ஜொலிக்க முயலும்  புதுமுகங்களின் முதல் பக்கமாக மாறுமா என்பதற்கு காலமே பதில்.

https://www.vikatan.com/news/sports/113612-australian-open-begins-in-melbourne.html

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

அ-அ+

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
 
மெல்போர்ன்:

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த  தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று இன்று தொடங்கியது. இதில் உலகின் 5 ஆம் நிலை வீரரான வீனஸ் வில்லியம்சும், சுவிட்சர்லாந்தின் இளம் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கும் மோதினர்.
 
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் ஆவேசமாக விளையாடினார். இதனால் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது செட்டை கைப்பற்றும் நோக்கில் வீனஸ் வில்லியம்ஸ் போராடினார். ஆனாலும் பென்சிக்கின் நேர்த்தியான ஆட்டத்தினால் வீனஸ் வில்லியம்ஸ் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், இரண்டாவது செட்டையும் பெலிண்டா பென்சிக் 7-5 என்ற கணக்கில் வென்றார்.

இதையடுத்து, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் பெலிண்டா பென்சிக் வென்றார். வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 

 

ஆஸ்திரேலியா ஓபன்: பாம்ப்ரி ஏமாற்றம்- முதல் சுற்றோடு வெளியேறினார்

 
அ-அ+

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி முதல் சுற்றோடு வெளியேறினார். #AUSOpen #YukiBhambri

 
ஆஸ்திரேலியா ஓபன்: பாம்ப்ரி ஏமாற்றம்- முதல் சுற்றோடு வெளியேறினார்
 
2018-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. முதன்மை சுற்றுக்கான தகுதிச் சுற்றில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய வீரர் யுகி பாம்ப்ரி இன்று தனது முதல் சுற்றில் சைபிரஸ் நாட்டைச் சேர்ந்த மார்கோஸ் பாக்தாடிஸ்-ஐ எதிர்கொண்டார்.

இதில் 6-7(4), 4-6, 3-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். முதல் செட்டில் பாம்பிரி சிறப்பாக விளையாடினார். இதனால் ஆட்டம் டை-பிரேக்கர் வரை சென்றது. டை-பிரேக்கரில் 3-1 என முன்னிலையில் இருந்தார். அதன்பிறகு தொடர்ந்து தவறு செய்ததால் முதல் செட்டை இழந்தார். அதன்பின் 2-வது செட்டுகளை தொடர்ந்து இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

பாம்பிரி கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதல் சுற்றை தாண்டியதே கிடையாது. 2015-ல் ஆன்டி முர்ரேயிடமும், 2016-ல் தாமஸ் பெர்டிச் இடமும் தோல்வியடைந்தார். #AUSOpen #YukiBhambri

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா ஓபன்: முகுருசா, சரபோவா, ரட்வன்ஸ்கா ஹாலேப் முதல் சுற்றில் வெற்றி

 
அ-அ+

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீராங்கனைகள் முகுருசா, ஹாலே, சரபோவா வெற்றி பெற்றுள்ளனர்.#AUSOpen #Halep

ஆஸ்திரேலியா ஓபன்: முகுருசா, சரபோவா, ரட்வன்ஸ்கா ஹாலேப் முதல் சுற்றில் வெற்றி
 
கிராணட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நேற்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இன்று முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலேப் டெஸ்டானி அயவா-ஐ எதிர்கொண்டார். இதில் ஹாலேப் 7(7)-6(5), 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-ம் நிலை வீராங்கனையான முகுருசா பொன்செட்டை எதிர்த்து விளையாடினார். இதில் முகுருசா 6-4, 6-3 என நேர்செல் கணக்கில் வெற்றி பெற்றார்.

201801161841302840_1_7halep002-s._L_styvpf.jpg

பிளிஸ்கோவாவிற்கு எதிரான போட்டியில் ரட்வன்ஸ்கா 2-6, 6-3, 6-3 என வெற்றி பெற்றார். மரியா சரபோவா 6-1, 6-4 என டி.மரியாவை வீழ்த்தினார். 21-ம் நிலை வீரரான ஏஞ்சலிக் கெர்பர் 6-0, 6-4 என பிரைட்சம்-ஐ வீழ்த்தினார்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/16184130/1140563/AUS-Open-Muguruza-halep-won.vpf

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ரபெல் நடால் வெற்றி

 
அ-அ+

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் வெற்றி பெற்றார். #AUSOpen #AustralianOpen #RafaelNadal

 
 
 
 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ரபெல் நடால் வெற்றி
 
மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் வெற்றி பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதன் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 52-ம் நிலை வீரர் லினார்டோ மேயரை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 38 நிமிடம் நடந்தது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா) 4-6, 6-2, 6-4, 0-6, 8-6 என்ற செட் கணக்கில் அமெரிக்க தகுதி சுற்று வீரர் மெக்கன்சி மெக்டொனால்டை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 3 மணி 25 நிமிடம் நீடித்தது.

இன்னொரு ஆட்டத்தில் குரோஷியாவின் இவோ கார்லோவிச் 7-6 (7-3), 6-7(3-7), 7-5, 4-6, 12-10 என்ற செட் கணக்கில் யுய்சி சுஜிதாவை (ஜப்பான்) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 4 மணி 33 நிமிடம் வரை நீடித்தது. அடுத்த மாதம் 39-வது பிறந்த நாளை காண இருக்கும் இவோ கார்லோவிச் கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய அதிக வயதுடைய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் சோங்கா (பிரான்ஸ்), நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), மரின் சிலிச் (குரோஷியா), ஜிலெச் முல்லர் (லக்சம்பர்க்), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), பாப்லோ கார்னோ பஸ்டா (ஸ்பெயின்) ரையான் ஹாரிசன் (அமெரிக்கா), கைல் எட்முன்ட் (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15 வயதான உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்ட்யுக் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒலிவியா ரோகோவ்ஸ்காவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதன் மூலம் 1997-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய இளம் வீராங்கனை என்ற பெருமையை மார்டா கோஸ்ட்யுக் பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 3-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் ஜானா பெட்டை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ரைபரிகோவா (சுலோவக்கியா), கனேபி (எஸ்தோனியா), கார்லா ஸ்வரஸ் நவரோ (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.  #AUSOpen #AustralianOpen #RafaelNadal

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/18064037/1140775/Australian-Open-Rafael-Nadal-eases-past-Leonardo-Mayer.vpf

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் முகுருசா, வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி: பெடரர், ஜோகோவிச், ஹாலப், ஷரபோவா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

 

 
kilopng

கனடாவின் யூஜெனி பவுச்சார்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் முதல் நிலை வீராங்கணையான ருமேனியாவின் சிமோனா ஹாலப். படம்| ஏஃப்பி

மெல்பர்ன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா, 7-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின், 9-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6 முறை சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச், 46-ம் நிலை வீரரான பிரான்சின் கேல் மோன்பில்சுடன் மோதினார். 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மோன்பில்சுக்கு எதிராக ஜோகோவிச்சின் 15-வது வெற்றியாக இது அமைந்தது. ஜோகோவிச் 3-வது சுற்றில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸ் வினோலசுடன் மோத உள்ளார்.

2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 6-4, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜன் லெனார்டு ஸ்ட்ரூஃபையும், 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த பீட்டர் கோஜவ்ஸ்கியையும் வீழ்த்தினர்.

9-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா, 86-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெனிஸ் சாண்ட்கிரெனுடன் மோதினார். ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 2-6, 1-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியைடந்தார். 7-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின், 57-ம் நிலை வீரரான பிரான்சின் ஜூலியன் பென்னேட்டோவை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேவிட் கோபினை 1-6, 7-6 (7-5), 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார் ஜூலியன் பென்னேட்டோ.

13-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரே 4-6, 6-7 (6-8), 6-4, 2-6 என்ற செட் கணக்கில் 85-ம் நிலை வீரரான ஹங்கேரியின் மார்டன் புசோவிக்ஸிடம் வீழ்ந்தார். 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 6-7 (6-8), 3-6, 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 48 நிமிடங்கள்  நடைபெற்றது. 12-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல் போட்ரோ 6-4, 7-6 (7-4), 6-7 (0-7), 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கரேன் கச்னோவையும், 19-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-3, 2-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் குயிலர்மோ கார்சியா லோபஸையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால் பதித்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், 81-ம் நிலை வீராங்கனையான கனடாவின் யூஜெனி பவுச்சார்டை 6-2, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார். 3-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, 88-ம் நிலை வீராங்கனையான தைவானின் சு வேயியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முகுருசா 6-7 (1-7), 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

9-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோஹன்னா கோண்டாவும் 2-வது சுற்றுடன் வெளியேறினார். 127-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பெர்னார்டா பெரோவை எதிர்த்து விளையாடிய அவர், 4-6, 5-7 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் 14-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவையும், 26-ம் நிலை வீராங்கனையான அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் லிசாவையும் வீழ்த்தினர்.

மற்ற ஆட்டங்களில் 6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 6-1 என்ற நேர் செட்டில் பிரேசிலின் பீட்ரிஸையும், 8-ம் நிலை வீராங்கனையான பிரான்சின் கரோலின் கார்சியா, 6-7 (3-7), 6-2, 8-6 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் மார்க்கெட்டா வாண்ட்ரோசோவாவையும், 21-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் டோனா வேகிக்கையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

2-வது சுற்றில் பயஸ் ஜோடி

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், புரவ் ராஜா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் ஜார்ஜியாவின் நிக்கோலஸ், ஆஸ்திரியாவின் ஆன்ட்ரியாஸ் ஹைதர் ஜோடியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் திவிஜ் சரண், அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி 7-6, 6-4 என்ற செட்டில் ருமேனியாவின் மாரிஸ் கோபிள், செர்பியாவின் விக்டர் டிரோசிக் ஜோடியையும் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாஸலின் ஜோடி 6-2 7-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ரேயன் ஹாரிசன், கனடாவின் வசக் போஸ்பிஸில் ஜோடியையும்

http://tamil.thehindu.com/sports/article22470330.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: ஷரபோவாவை வெளியேற்றினார் கெர்பர்; பெடரர், ஜோகோவிக் முன்னேற்றம்

 

 
sharapova

ஷரபோவா.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவாவை 3-வது சுற்றோடு வெளியேற்றினார் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சிலிக் கெர்பர்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியான் ஓபன் டென்னிஸ்ப போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன.

இதில் 2016ம் ஆண்டு சாம்பியனும், தரவரிசையில் 16ம் இடத்தில் உள்ள ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார் ரஷிய வீராங்கனையும், தரவரிசையில் 47ம் இடத்தில் உள்ள மரிய ஷரபோவா.

ஊக்கமருந்து விவகாரத்தில் 15மாதங்கள் தடை முடிந்தபின் டென்னிஸ் போட்டியில் இழந்த ‘பார்மை’ ஷரபோவா மீட்கும் வகையில் விளையாடி வந்ததால் இந்த போட்டி பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே களத்தில் கெர்பரின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. கெர்பரின் முன்கை ஆட்டம், சர்வீஸ்களில் ஏஸ்கள், பந்தை திருப்பி அனுப்பதில் வேகம், துல்லியம் முன் ஷரபோவா கட்டுண்டுபோனார்.

64 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஷரபோவாவை 6-1, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக சாய்த்து 4-வது சுற்றுக்கு கெர்பர் முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்றில் பிரான்ஸ் வீரர் ஆர் காஸ்கட்டை 2-6, 5-7, 4-6 என்ற நேர்செட்களில் சுவிட்சர்லாந்து வீர்ர ரோஜர்பெடரர் வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராமோஸ் வினோலஸை 2-6, 3-6, 3-6 என்ற நேர் செட்களில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக்.

http://tamil.thehindu.com/sports/article22482076.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய ஓப்பன்: முன்னணி வீரர் ஜோகோவிச் வெளியேற்றம்!

 
 

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் தொடர் ஆண்டின் துவக்கத்தில் நடக்கும் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடராகும். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் நடைபெறும் இந்த தொடர் இந்தாண்டு கடந்த 10 -ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

ஜோகோவிச்

 

Picture: #AusOpen

இந்த தொடர் தற்பொது முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது காலிறுதிக்கு முந்தயச் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த ஒரு போட்டியில் டென்னீஸ் உலகின் முக்கிய வீரராக ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். 

காலிறுதிக்கு முந்தயச் சுற்றில் அவர் தென் கொரிய வீரர் ஹையோன் ஷங்கை எதிர்கொண்டார். 21 வயதே ஆன இளம் வீரரான ஷங்க், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். விலகிச்சென்ற பந்தை எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. ஏற்கெனவே எல்போ காயத்தில் இருந்து மீண்டு வந்து விளையாடிய ஜோகோவிச்  மேலும் வலியுடன் விளையாடினார். 

இதனை பயன்படுத்துக்கொண்டு ஷங்க், கடும் போட்டி அளித்தார். இறுதியில் ஜோகோவிச்  6-7(4-7),5-7,6-7(3-7) என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறினார். 

இந்த வெற்றிக்குறித்து பேசிய ஷங்க், “வெற்றி பெறுவது குறித்து முதலில் நான் சிந்திக்கவே இல்லை. அவரை எதிர்த்து விளையாடுவதே எனக்கு பெருமை தான்” என்றார். மற்ற முன்னணி வீரர்களான நடால், சிலிச், டிமிட்ரொவ், ஃபெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

https://www.vikatan.com/news/sports/114224-in-australian-open-tennis-djokovic-lost-in-round-of-16.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.