Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுபான வர்த்தமானி விவகாரத்தில் மங்களவுடன் ஜனாதிபதி முறுகல் : வர்த்தமானியும் ஏகமனதாக ரத்து

Featured Replies

மதுபான வர்த்தமானி விவகாரத்தில் மங்களவுடன் ஜனாதிபதி முறுகல் : வர்த்தமானியும் ஏகமனதாக ரத்து

mangala-ed1879d03e6046d440a91c434fd6097b24ca478a.jpg

 

(ஆர்.யசி)

மதுபான விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையில் நேற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகள்

பரிந்துரைக்கும் அனைத்தையும் நாட்டில் நடைமுறைபடுத்த முயற்சிக்க வேண்டாம் என இதன்போது ஜனாதிபதி கடும் தொனியில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தனது பதவிக்காலம் குறித்து நீதிமன்ற ஆலோசனை பெற்றது ஏன் என்றதையும் அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய இரண்டு நிகழ்வுகளான ஜனாதிபதி பதவிக்காலம் மற்றும் நிதி அமைச்சர் கொண்டுவந்த மதுபான நிலையங்களின் நேர மாற்றம், பெண்களை வேலைக்கு அமர்த்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் நிதிமன்ற ஆலோசனையினை பெற்றார் என்பதற்கான காரணங்களை அமைச்சரவையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அங்கு குறிப்பிடுகையில்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் அரச நிருவாகிகள், தனது செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள், இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் ஆகியோருடன் எனது அடுத்த கட்ட வேலைத்திட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாடினேன். அதன்போது அடுத்த ஆண்டுக்கான வேலைத்திட்டங்களை ஒழுங்கமைக்கும் திட்டம் குறித்து ஆராயப்பட்ட போது விவாதத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

இந்நிலையில் 19 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டு ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலத்துடன் தொடர்புபடாது எனவும், ஆகவே வேலைத்திட்டங்களை ஒழுங்கமைக்கும் போது 2020 ஆம் ஆண்டு இறுதி வரைக்கும் அதனை ஒழுங்கமைக்க வேண்டும் எனவம் தெரிவிக்கப்பட்டது. எனினும் சிலர் அதனை 2019 ஆம் ஆண்டு இறுதி வரையில் ஒழுங்கமைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என சுட்டிக்காட்டினர்

இந்நிலையில் நான் கலந்துரையாடலை நிறுத்திவிட்டு சட்டமா அதிபரை தொடர்புகொண்டு என்னை சந்திக்க வருமாறு தெரிவித்தேன். அவருடன் நான் தனிப்பட்ட ரீதியில் இந்த விடயம் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு குறிப்பிட்டேன். ஒரு சில தினங்களில் தான் பதில் கூறுவதாக கூறிய சட்டமா அதிபர் ஆராய்ந்ததன் பின்னர் என்னால் 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக செயற்பட முடியும் என தெரிவித்தார்.

எனினும் இந்த விடயம் குறித்து உறுதியாக ஒரு தீர்மானம் பெறவேண்டும் என்றால் நாம் நீதிமன்றத்தை நாட வேண்டும் என சட்டமா அதிபர் எனக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிலையிலேயே நான் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் உயர் நீதிமன்றத்தை நாடி ஆலோசனை பெற்றுக்கொண்டேன். வேறு எந்த காரணிகளும் இதன் பின்னணியில் இல்லை. எனது அடுத்த கட்ட வேலைத்திட்ட ஒழுங்குபடுத்தல் எந்த காலம் வரையில் செய்ய முடியும் என்ற அடிப்படையில் நான் இதனை செய்தேன் என ஜனாதிபதி அமைச்சரவையில் விளக்கமளித்துள்ளார்.

மேலும் கடந்த வாரம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட மதுபான சாலைகளின் நேர அட்டவணையில் முன்னெடுக்கும் மாற்றங்கள் மற்றும் பெண்கள் மதுபானசாலைகளில் பணிபுரிவது என்ற திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்தும் ஜனாதிபதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வினவியுள்ளார்.

அமைச்சராக இவ்வாறான முக்கியமான திட்டங்களை கொண்டுவரும் நிலையில் அதுகுறித்து தனக்கு அறியத்தராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, இலங்கை நாடானது கலாசார பண்பாட்டு அரசியல் பின்னணியில் இயங்கிவரும் நிலையில் மேற்கு நாடுகள் திணிக்கும் சகல கொள்கையையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை, நான் அரசாங்கத்தை நடத்துவது நாட்டினை வீணாக்கும் நோக்கத்தில் அல்ல. ஆகவே உடனடியாக இந்த திட்டங்களை நிறுத்த வேண்டும் என கடுமையான தொனியில் வலியுறுத்தியுள்ளார்.

 இந்நிலையில் இந்த விவகாரம் சூடு பறக்கும் விவாதங்களாகவும் மாற்றம் பெற்றுள்ளன. இந்நிலையில் சமத்துவம் என்ற அடிப்படையில் தான் அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்து செய்யக் கோரிய ஜனாதிபதி சில காரசார விவாதங்களை அடுத்து ஆசனத்தை விட்டு வெளியேறியதாக தெரிய வருகின்றது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.