Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணத்தில் இராணுவத்தினர் சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார்கள் - முதலமைச்சர்

Featured Replies

வட மாகாணத்தில் இராணுவத்தினர் சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார்கள் - முதலமைச்சர்

 

வட மாகாணத்தில் தொடர்ந்தும் நிலை கொண்டிப்பதற்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சமர்த்தியமாக காய்களை நகர்த்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஈடுபடுத்தப்படுவதன் ஊடாக, இராணுவத்தின் பிரசன்னத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 சர்வதேச ஊடகம் ஒன்றுக் வழங்கிய விசேட செவ்வியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

 வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொடூரமாக கொன்று குவித்தும், கற்பழித்தும் மற்றும் சித்திரவதை செய்தும் அரக்கர்களாக மக்கள் மனதில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் தற்போது, மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் பதிய அவதாரத்தை எடுத்துள்ளதாகவும், இதனால் அவர்கள் நிரந்தரமாக வடமாகாணத்தில் நிலை கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தற்போது, புதிய யோசனைகளுடன் களமிறங்கியுள்ளனர். அதாவது மக்களுக்கு வீடுகள் மற்றும் கழிவறைகள் அமைப்பதற்கு உதவிகளை செய்து கொடுப்பதன் மூலம் நன் மதிப்பை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் இராணுவத்தினர் வெகு சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை.  எனினும்  தமிழ் மக்களுக்குரிய தேவைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர்கள் காணிகள் இதுவரை  விடுவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய வடமாகாண முதலமைச்சர், இவ்வாறு கையகப்படுத்தியிருக்கும் காணிகளிலிருந்து மரங்கள் வெட்டப்படுவதை தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் எனினும் அது யார் தலைமையில் நடைபெறுகிறது என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினைகள், காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் அரசியல் கைதிகள் பிரச்சினைகள் போன்றவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், வடமாகாணத்திற்கு போதியளவு நிதி ஒதக்கப்படவில்லை எனவும், கனிசமான பொறுப்புக்களை வடமாகாண சபை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம்  மாற்றியமைக்கப்படாதமை குறித்து விசனத்தையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் இராணுவத்தினர் சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார்கள் - முதலமைச்சர்

https://news.ibctamil.com/ta/internal-affairs/army-continues-to-stay-in-jaffna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.