Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவாளிகளை காப்பாற்றும் பிரதமர் ரணிலின் நடவடிக்கை

Featured Replies

குற்றவாளிகளை காப்பாற்றும் பிரதமர் ரணிலின் நடவடிக்கை

Mahinda-Amaraweera-c6936333ab3914827915fde1b3d155317d35c5c9.jpg

 

ஸ்ரீல.சு.க.விசனம்;ஜனாதிபதி தண்டனை வழங்குவார் என்கிறது 

(ஆர்.யசி)

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவ காரத்தில் இப்போது பிரதமர் கையாளும் நகர் வுகள் குற்றவாளிகளை காப்பாற்றும் வகை யில் அமைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறான குழுவமைத்து விசாரணை செய்  தாலும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் முன் னெடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமர  வீர தெரிவித்தார்.  

அடுத்த வாரங்களில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் மாறுபட்டதாக அமையும், கடுமையான கட்டளைகளும் நகர்வுகளும் ஜனாதிபதியிடம் இருந்து எதிர்பார்க்கப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

பிணைமுறி ஊழல் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி புதிதாக குழுவமைத்து ஆராயவுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டினை வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையே போதுமான சாட்சியமாகும். யார் குற்றவாளிகள், யார் ஊழலில் ஈடுபட்டவர்கள் அதற்கு யார் துணை நின்றவர்கள் என்ற உண்மைகள் அனைத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.  

அவ்வாறு இருக்கையில் மீண்டும் மீண்டும் ஆணைக்குளுக்களோ அல்லது விசாரணைகள் குழுக்களோ அமைக்கத்தேவையில்லை. அவ்வாறு அமைப்பது காலத்தை கடத்தும் செயற்பாடாகும். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் என்பது நாட்டின் பிரதான தேசிய பிரச்சினையாக கருதப்படுகின்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி என்ன செய்தது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ன செய்தது என்பதை விடவும் குற்றவாளிகளை தண்டிப்பதில் அரசாங்கமாக நாம் எவ்வாறான தீர்மானம் எடுத்துள்ளோம், தீர்வுகளை பெற்றுத்தருவதில் என்ன நகர்வுகளை கையாண்டுள்ளோம் என்பதே முக்கியமானதாகும்.

அந்த வகையில் தான் ஜனாதிபதி மிகச்சரியான நகர்வுகளை கையாண்டு ஆணைக்குழுக்களை அமைத்து உண்மைகளை கண்டறியும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். ஜனாதிபதி எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படவில்லை, சகல தரப்பையும் கவனத்தில் கொண்டே நாட்டுக்காக சேவையாற்றி வருகின்றார். ஆகவே மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் அவரது செயற்பாடுகளே போதுமானவையாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி விசாரணை குழு அமைப்பதால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அடுத்தகட்ட நகர்வுகளை கையாள்வதில் உதவினால் போதுமானது. இப்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நபர்களேயாவர். மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனும் அவரது உறவினரான அர்ஜுன் ஆலோசியசும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டப்பட்ட நபர்களேயாவர். ஆகவே இவர்கள் அனைவருமே இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டிய நபர்கள்.

உண்மைகளை மூடிமறைக்கும் வகையிலோ அல்லது விசாரணை நகர்வுகளை பிற்போட்டு குற்றவாளிகளை தக்கவைக்கும் நகர்வுகளையோ எவரும் கையாளக்கூடாது. எனினும் பிரதமரின் இப்போதைய செயற்பாடுகள் குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலேயே அமைந்துள்ளன. ஆகவே நபர்கள் விரும்புவதற்காக குழுக்களை அமைத்து ஆராய ஆரம்பித்தால் இறுதியில் தீர்மானம் ஒன்று கிடைக்கப்போவதில்லை. அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சி குழுவமைத்து ஆராய்ந்தாலும் கூட ஜனாதிபதியின் நகர்வுகள் பின்வாங்கப்படபோவதுமில்லை. குற்றவாளிகளை தண்டிப்பதில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

மேலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை நாட்டுக்கு வரவழைத்து மேல்மட்ட விசாரணைகளை முன்னெடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. கடந்த தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச அதிகாரிகள் அனைவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் போதும் இந்த தீர்மானம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

ஆகவே ஜனாதிபதியின் அடுத்தகட்ட நகர்வுகள் மிகவும் மேகமாக முன்னெடுக்கப்படும். அடுத்த வாரத்தில் இருந்து மாறுபட்ட சம்பவங்கள், தீர்மானங்களை ஜனாதிபதி முன்னெடுப்பார். இதில் கட்சி, நபர்கள் என்ற பேதமின்றி குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.