Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் நாடகம் மிகச்சிறப்பானது

Featured Replies

ஜனாதிபதியின் நாடகம் மிகச்சிறப்பானது

Mah2-651aa0369c53b2bed2ccd3561536f7bd17f3fd71.jpg

 

குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு மைத்திரி முயற்சி; மஹிந்த குற்றச்சாட்டு

(ஆர்.யசி)

ஜனாதிபதியின் நாடகமே இன்று மிகச் சிறப் பாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஊழல் வாதி  களை தண்டிப்பதாக மேடையில் சவால் விடுத் தாலும் அமைச்சரவையில் ஊழல் வாதிகளுடன் கைகோர்த்தே ஜனாதிபதி  செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.   கோத்தபாய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்களை இலங்கை மக்கள் எவரும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.  

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்ஙதின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பொதுமக்களின் வாழ்வாதாரம் இன்று மிகவும் கடினமான முறையில் காணப்படுகின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஒருபுறம் மக்களை நெருக்கடிக்குள் உள்ளாக்கும் நிலையில் மறுபுறம் மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நகர்வுகள் அரசாங்கத்தின் மூலமாகவே இடம்பெறுகின்றன. ஆனால் இந்த நாட்களில் ஜனாதிபதியின் நாடகமே மிகப்பெரிய விருந்தாக அனைவருக்கும் அமைந்துள்ளது.  

அவரது பொதுக் கூட்டங்களில் உரைகளை அவதானித்தால் நாட்டில் ஊழல் இல்லாத தூய்மையான நாட்டினை உருவாக்கிவிடுவார் என்ற எண்ணம் வருகின்றது. ஆனால் அமைச்சரவையில் ஊழல் வாதிகளுடன் கூட்டணி அமைத்து செயற்பட்டு வருகின்றார். ஆகவே இன்று அவரே மிகச்சிறந்த நடிகராக திகழ்கின்றார்.

மேலும் மத்திய வங்கி ஊழல் இன்று அனைவருக்கும் தெரிந்துள்ள போதிலும் ஜனாதிபதியால் உறுதியான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது. பிரதமர் ஒருபுறம் விசேட அறிவிப்புகளை விடுத்து மக்களை ஏமாற்றுகின்றார்.

அதற்கு ஏற்றால்போல் கதைகளை கூறி குற்றத்தை திசைதிருப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இந்த அரசாங்கத்தின் நகர்வுகளை கவனிக்கும் போது மத்தியவங்கி ஊழல் மோசடி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எமது ஆட்சியின் ஊழல் மோசடிகள் குறித்து தண்டிக்கவே ஆட்சியமைத்ததாக கூறும் இவர்களின் ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் செயற்பாடுகள் வெளிவந்துகொண்டுள்ளன. இந்த ஆட்சியின் ஊழல் குறித்து ஆராய அடுத்த அரசாங்கத்தில் நான்கைந்து ஆணைக்குழுக்களை அமைக்கவேண்டிய நிலைமை ஏற்படும்.

மேலும் கடந்த காலங்களில் கொழும்பு மிகவும் அழகான பராமரிக்கப்பட்டது. எமது ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் செயற்திட்டங்ககளின் கீழ் மிகச்சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கோத்தாபாய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்கள் எதையும் இலங்கை மக்கள் எவரும் மறந்துவிடக்கூடாது.

எனினும் இன்று கொழும்பின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. அபிவிருத்திகள் அனைத்துமே தடைப்பட்டுள்ளன. சரியான வழிநடத்தல் ஒன்று இல்லாமையே இதற்குக் காரணமாகும். ஆகவே இப்போது மக்கள் எடுக்கும் தீர்மானமே அடுத்த கட்டமாக நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல ஆரம்பமாக அமையும். மக்கள் விட்ட தவறை சரிசெய்யும் இன்னொரு வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. அதில் மக்களின் தீர்மானமே நாம் எமது போராட்டத்தை அரசாங்கத்திட்கு எதிராக மாற்றியமைக்கவும் அடிப்படையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.