Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுக்கிப்பிடிக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

Featured Replies

இறுக்கிப்பிடிக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

un-0351fc635eec30b55af3786e77c3f5c2ee7ddefc.jpg

 

(ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 37 ஆவது கூட்டத் தொடரில் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர் பான விவாதம் நடைபெறவுள்ள நிலை யில் இதில் சர்வதேச மனித உரிமை  அமைப்புக்கள் கடும் அழுத்தத்தை இலங்கைக்கு பிரயோகிக்கும் என எதிர்பார்க் கப்படுகின்றது. இந்த விவாதத்தின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணை யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட  வுள்ளதுடன் அதில் அவரும் தனது அதிருப்தியை வெளியிடுவார் என்று தெரிவிக்கப் படுகின்றது.   

ஏற்கனவே தற்போது சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடும் விசனத்தை இலங்கை தொடர்பில் வெ ளியிட்டுள்ளது. குறிப்பாக ஐ. நா மனித உரிமைக் பேரவையில் இலங்கை அளித்த பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் நல்லிணக்கம் பற்றிய வாக்குறுதி ஸ்தம்பித நிலையிலேயே உள்ளது . அதே போன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச சாசனத்துக்கு இணங்க தயாரிக்கப்பட்ட சட்டம் திகதியிடப்படாமல் உள்ளமை ஏற்புடையதல்ல என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  

அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையானது விரைந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

  இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் இதுவரை சரியான முன்னேற்றம் காணப்படவில்லை என்ற சர்வதேச அமைப்புக்கள் 37 ஆவது கூட்டத் தொடரில் சுட்டிக்காட்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

செய்ட் அல் ஹுசேனின் இலங்கை குறித்த அறிக்கையை தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. இதன்போது வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் சார்பில் அறிக்கையை முன்வைப்பார் என்பதுடன் இலங்கையானது ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.

அத்துடன் இலங்கையானது பிரேரணையின் பரிந்துரைகளை அமுல்படுத்திவருவதாக கூறவுள்ள அரசாங்கம் பிரேரணையை அமுல்படுத்துவதில் காணப்படுகின்ற சவால்கள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளது.

 

  கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

 

இதில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்புகளுடன் பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

 பெப்ரவரி 26ஆம்திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் உயர் மட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் இடம்பெறுவர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.