Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியும் பிரதமர் பதவி வகிப்பது வெட்கப்படவேண்டிய விடயம்... நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் சம்பந்தன் எந்தப்பக்கம் என ஜே.வி.பி. கேள்வி

Featured Replies

இனியும் பிரதமர் பதவி வகிப்பது வெட்கப்படவேண்டிய விடயம்

3-7dbc104f2ce2d46be3828887d6fb7a52fcc1e0d2.jpg

 

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் சம்பந்தன் எந்தப்பக்கம் என ஜே.வி.பி. கேள்வி 

(ஆர்.யசி)

மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பிரத மர் ரணில் மற்றும் அவரது கூட்டணியுமே பிர தான சூத்திரதாரிகள் என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரி வித்துள்ளது.  

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா  பிரேரணை கொண்டுவந்தால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் என்ன தீர்மானம் எடுப்பார் எனவும் ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது.  மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அக்கட்சியின் எம்.பி. சுனில் ஹெந்துன்நெத்தி ் இதனைக் குறிப்பிட்டார்.  

அவர் மேலும் கூறுகையில், ஊழல் குற்றவாளிகளை நரகத்திற்கு அனுப்பிய பின்னரே தனது பதவியை துறப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அப்படியாயின் அவர் ஆயுளுக்கும் தனது ஜனாதிபதி பதவியை துறக்கப்போவதில்லை. அவர் எமதர்மரின் கடமையினை ஏற்றுகொள்ள முன்னர் தனது ஜனாதிபதி கடமையினை ஏற்றுகொள்ள வேண்டும். ஜனாதிபதி அதிகாரத்தின் மூலமாக குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். வாளை வைத்துள்ளேன் வீசப்போகின்றேன் என்று கூறினார், ஆனால் வாள்வீச்சி நடைபெறவே இல்லை.  

முதலில் அவர் மிஷன் ஒன்றை முடிக்க வேண்டும். அதன் பின்னரே மிஷன் 2 ஆரம்பிக்கப்படவேண்டும். மிஷன்களை ஆரம்பித்து குற்றவாளிகள் சுகமாக வாழ்கின்றனர் என்றால் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் அர்ஜுன மகேந்திரன் இந்த நாட்டு பிரஜை இல்லை, அவரை நியமித்தமை சட்டத்தின் மூலம் தவறானதாக இல்லாத போதிலும் வலுவான தீர்வா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது? சரியானாதா பிழையானதா என்பதற்கு அப்பால் தகுதியான தெரிவா என ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

ஆகவே அவரை நியமிக்க யார் தீர்மானம் எடுத்தனரோ அவர்கள் குறித்து ஆணைக்குழு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. இது நிதி அமைச்சரின் தேவைக்காக, பிரதமரின் அழுத்தத்தினால் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார். அவர் முதலில் அறிக்கையின் நடவடிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒபரேஷன் ஒன்றோ இரண்டோ அவசியம் இல்லை. மக்களை ஏமாற்ற வேண்டாம். மேடைகளில் கதைகள் கூறி வாக்குப்பெற வேண்டாம்.

முழு நாடுமே தெரிந்துகொண்ட ஒரு நிதி மோசடியை அனைவரும் மூடிமறைக்க முயற்சிக்கின்றனர். இப்போது திலக் மாரப்பன மூலமாக குழு ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது. இது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். அவன்கார்ட் ஊழலில் பதவி துறந்த திலக்மாரப்பன இப்போது ஊழல் குறித்து விசாரிக்கும் குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் திலக் மாரப்பனவின் சகோதரரே அர்ஜுன் அலோசியசுக்காக வாதாடும் சட்டத்தரணியாவார். ஆகவே இவர்களின் கூட்டணி அனைத்துமே ஊழலில் மறைக்கும் கூட்டணியாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாத பாராளுமன்ற கூட்டத்தில் தான் முன்வைத்த உரைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வாசிதுப்பார்க்க வேண்டும். எமது களவுகள் வெளிவருகின்றன, ஆனால் ஏனையவர்களின் களவுகள் வெளிவரவில்லை என கூறியுள்ளார். அப்படியாயின் அவர்களும் கள்ளர்கள் என்பதை பிரதமரே தெரிவித்துள்ளார். இப்போது யார் கள்ளர்கள் என அவரே கேட்கின்றார். ஆகவே இவர்கள் அனைவரும் கள்ளர்கள் என்பது அவரவர் வாய் மூலமே வெளிவருகின்றது.

இன்று ஜனாதிபதி ஆணைக்குழு மூலமாக கண்டறிந்ததாக பறைசாற்றுகின்றனர். நான் கோப் குழுவில் எமது காரியங்களை சரியாக செய்ததால் தான், உண்மைகளை வெளிக்கொண்டுவர முயற்சித்ததனால் தான் இன்று உண்மைகள் வெளிவந்துள்ளன. நாம் எமது கடமைகளை சரியாக செய்துள்ளோம். எவ்வாறு இருப்பினும் உண்மைகள் சகல வழிகளிலும் வெளிவந்துள்ளன. இப்பொது கள்ளர்களை தண்டிக்க வேண்டும், மக்களின் பணத்தை மீண்டும் கள்ளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் நிலைநாட்டப்படவேண்டும்.

யாரும் குற்றவாளிகள் இல்லை, தவறுதலாக இடம்பெற்றுள்ளது என எவரும் களவுகளை மாற்ற முயற்சித்தால் இறுதியில் அவர்கள் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். பிரதமர் தனது கடமையில் இருந்து விலகிய நபராகவே மத்திய வங்கி விவகாரத்தில் செயற்பட்டுள்ளார். இவர்களின் ஊழல் கரைகளை இனிமேல் எந்த முறையிலும் சுத்தம் செய்ய முடியாது. எத்தனை ஆணைக்குழுக்களை பிரதமர் அமைத்தாலும் நடந்த ஊழலை மறுக்க முடியாது. ஆகவே இதற்கு அவர் மற்றும் கட்சியின் முக்கிய நபர்கள் அனைவரும் பொறுப்புகூற வேண்டும்.

எடுத்த களவை நிவர்த்திசெய்ய பெர்பச்சுவல் நிறுவனத்தில் அவர்களின் சேமிப்பில் இருந்து பிடித்துக்கொள்ள முடியும் என கூறுகின்றனர். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை யார் செலுத்துவது. நாட்டின் பொருளாதாரதிற்கு ஏற்பட்ட ஊழலை யார் சரிசெய்வது. ஆகவே இதனை பாரிய தவறாக கருதி தண்டனை வழங்கப்பட வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் இவர்கள் குற்றவாளிகள் ஆகிவிட்டனர். சட்டத்தின் மூலமாக இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சரியான முறையில் சட்ட நகர்வுகளுக்கு அமைய தண்டிக்கபட்டால் போதும். அதை விடுத்து எவரும் எமதர்மரின் கடமையினை செய்ய வேண்டியதில்லை.

சட்டமா அதிபர் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை, அவரும் அரசாங்கதின் பக்கம் செயற்படுகின்றார். மேலும் பிரதமர் பெயர் அறிக்கையில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்பதற்காக அவர் குற்றவாளி இல்லை என அர்த்தம் இல்லை. முழு அறிக்கையிலும் பிரதமரது அரசாங்கமே குற்றவாளி என கூறப்பட்டுள்ளது. பொறுப்புக்கூற வேண்டிய நபர்கள் இவர்களேயாவர்.. ஏனைய நாடுகளில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் உரிய நபர் பதவி விலகுவார், இது ஒழுக்கம் சார்ந்த விடயமாகும். பிரதமர் ஒழுக்கம் தெரிந்தவராக இருந்திருந்தால் இந்த பிரச்சினை எழுந்த போதே அவர் பதவி விலகியிருக்க வேண்டும். மத்திய வங்கிக்கு பொறுப்பான நபர் யார்? பிரதமர் தான் பொறுப்புக்கூற வேண்டும். ஆகவே அவர் குற்றங்களை பொறுப்பேற்று தனது பதவியை துறக்க வேண்டும். மேலும் , பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் என்ன செய்வார்? ஹக்கீம் என்ன செய்வார்? இவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கைதூக்குவார்களா? இவர்கள் என்ன செய்வார்கள் யார் பக்கம் நின்று செயற்படுவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆகவே அனைவரும் ஒரு அணியில் இருக்கும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதில் சாத்தியம் இல்லை. எனினும் ஒழுக்கம், மனசாட்சிக்கு அமைய அவர் பதவி விலக வேண்டும். அதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.