Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறை

Featured Replies

பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறை – பி.மாணிக்கவாசகம்

violence-against-women.jpg?resize=227%2C

உள்ளுராட்சித் தேர்தலுக்கான திகதி நெருங்கி வருகின்ற சூழலில் தேர்தல் வன்முறைகள், தேர்தல் நடைமுறை சட்டமீறல்கள் பற்றிய செய்திகளும் தகவல்களும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. எந்தவொரு தேர்தலாக இருந்தாலும், தேர்தல் கால வன்முறைகள், தேர்தல் சட்டமீறல்கள் போன்றவற்றிற்குக் குறைவிருப்பதில்லை. குறிப்பாக விகிதாசாரத் தேர்தலில், விருப்பு வாக்கு முறைமை தேர்தல் வன்முறைகளுக்கு அதிக வாய்ப்பளித்திருந்தமை வரலாற்று அனுபவமாகப் பதிவாகியிருக்கின்றது.

ஆனால், தொகுதி முறை, விகிதாசார முறை என்ற இரண்டும் கலந்த ஒரு தேர்தலாக அமைந்துள்ள 2018 ஆம் ஆண்டின் உள்ளுராட்சித் தேர்தலில் விருப்பு வாக்குக்கான வன்முறைகள் இல்லாதிருப்பது பலருக்கும் ஆறுதலளிப்பதாக உள்ளது. இருப்பினும் இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாகிய பெண்களுக்கான 25 வீது இட ஒதுக்கீடு வழமையான தேர்தல் வன்முறைகளை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு வாய்ப்பளித்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

நாட்டு சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாவர். ஆணும் பெண்ணும் இணைந்ததே வாழ்க்கை என்பது இயற்கையின் நீதி;. ஆனால், ஆண் ஆதிக்கம்பெற்று, பெண்களை அடக்கி ஆள்கின்ற நிலைமையே, நடைமுறை வாழ்க்கை நிலைமையாக உள்ளது. ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள சமூகத்தில் பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்த உரிமை மறுப்பானது மறைமுகமான செயற்பாடுகளின் மூலம் இயல்பாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சமூகத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிலும், கல்வி அறிவு குறைந்த மட்டத்தில் உள்ள குடும்பங்களிலும் பெண்களின் உரிமை மறுக்கப்பட்ட நிலைமையே சாதாரண வாழ்க்கை நியமமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. கலாசார விழுமியங்களில் ஊறியுள்ள குடும்பங்கள், கல்வி அறிவில் மேம்பட்ட குடும்பங்கள், செல்வ செழிப்புள்ள குடும்பங்களிலும்கூட, இது ஆழமாக வேரூன்றியிருக்கின்றது என்பது சமூகவியலாளர்களின் கருத்து.

சனத்தொகையில் 52 வீதமாக இருந்த போதிலும், நாட்டின் உழைக்கும் சக்தியாக பெண்களின் வகிபாகம் 35 வீதம் மட்டுமே. அதேநேரம் நாடளாவிய ரீதியில் 23.4 வீதம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகக் காணப்படுகின்றன. ஆயினும், நாட்டுக்கு வெளிநாட்டு செலவாணியை ஈட்டித் தரும் புலம்பெயர் தொழிலாளர்களில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றார்கள். ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டத்துறை என்பவற்றின் தொழிலாளர் சக்தியில் பெண்கள் அதிகமாகக் காணப்படுகின்றார்கள்.

இருந்தபோதிலும். நாட்டில் சட்டங்களை இயற்றுகின்ற அதியுயர் பீடமாகிய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. நாட்டின் ஆட்சித்துறையிலும். முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்கின்ற பொறுப்பிலும் ஒப்பீட்டளவில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அரசியலில் பெண்களுக்குள்ள சமத்துவமின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். பால்நிலை சமத்துவமின்மை அட்டவணையில் இலங்கை 75 ஆவது இடத்தில் இருப்பதாக ஐநாவின் அபிவிருத்தித் திட்டத்தின் கணிப்பீடு கூறுகின்றது.

உலகில் முதலாவது பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றிருக்கின்றது. அதேபோன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியைப் பெண் ஒருவர் வகித்திருந்தார் என்ற பெருமைiயும் கொண்டிருக்கின்ற போதிலும், அரசியலில் பால் நிலை சமத்துவத்தில் நாடு முன்னேற்றம் காணவில்லை. இந்த நிலையில் பெண்களுக்கு அரசியலில் குறிப்பிட்ட இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாக உள்ளுராட்சி தேர்தலில் 25 வீத இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது.

பால்நிலை சமத்துவம்

பால்நிலை சமத்துவம் என்பது ஒரு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு மேம்பாட்டிற்கு அவசியமானது. அடித்தளமானதும்கூட. ஆண்களோடு பெண்களும் இணைந்து செயலாற்றுவதன் ஊடாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் என்பது சர்வதேச நிலைப்பாடாகும். இதற்கு, அனைத்துத் துறைகளிலும் பால்நிலை சமத்துவம் பேணப்பட வேண்டும். வளர்முக நாடுகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள காரணிகளில் பால்நிலை சமத்துவமின்மை முக்கியமாகக் கருதப்படுகின்றது.

ஆணாதிக்கம் மிகுந்த சமூகங்களில் மாற்றங்களை நோக்கி, பெண்கள் பால்நிலை சமத்துவத்திற்காகப் போராடுகின்ற போக்கு தலையெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, தொழில்வாய்ப்பு என்பவற்றில் பெண்களின் பங்களிப்பு முன்னேற்றமடைந்து வருகின்ற போதிலும், தீர்மானங்களை மேற்கொள்ளும் முக்கிய பதவிகளிலும், தேசிய மட்டத்தில் கொள்கைகளை வகுக்கும் பதவி நிலைகளிலும், நாட்டின் ஆட்சிப் போக்கிற்கு அடித்தளமாக உள்ள சட்டமியற்றுகின்ற நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திலும் பெண்களுக்கு உரிய இடமளிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இந்த நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்கான முயற்சிகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

பால்நிலை சமத்துவமற்ற அட்டவணையில், ஆண் பெண் சமத்துவம் மூன்று பரிமாணங்களில் கணிக்கப்படுகின்றது. இனவிருத்திச் சுகாதாரம், வலுவூட்டல், தொழிலாளர் சந்தைப் பங்களிப்பு ஆகிய மூன்று நிலைகளில் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்று அந்த அட்டவணை வலியுறுத்துகின்றது. இலங்கையைப் பொறுத்தளவில் இந்த மூன்று நிலைகளிலும் பெண் சமத்துவ நிலைமை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

குடும்ப, சமூக, கலாசாரப் பண்பாட்டு, அரசியல் ரீதியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்கு இந்த பால்நிலை சமத்துவமின்மை முக்கிய காரணியாகக் கண்டறியப்பட்டிருக்கின்றது. இலங்கையில் பரவலாகக் காணப்படுகின்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் சமத்துவமின்மையின் முக்கிய குறியீடாகக் கருதப்படுகின்றது. அதேவேளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆயினும் குடும்ப வன்முறை தொடக்கம் சமூக, வேலைத்தள வன்முறைகள், பாரபட்சம், அரசியல் ரீதியான சமத்துவமின்மை என்பன இதுவரையில் மனித உரிமை மீறலாகவோ அடிப்படை மனித உரிமை மீறலாகவோ – முக்கிய பிரச்சினையாக மேலெழவில்லை.

இருப்பினும் பால்நிலை சமத்துவமின்மை என்பது தேசிய கொள்கை மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரையில் வியாபித்திருக்கின்றது. குற்றவியல் சட்டக் கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தில் பாலியல் வல்லுறவு, தகாத பாலியல் உறவு, பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் ரீதியான சுரண்டல் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சட்ட விதிகள் மற்றம் பெண்கள் தொடர்பிலான 1993 ஆம் ஆண்டு சாசனம் என்பவற்றின் உள்ளடக்கங்கள் அல்லது அவற்றின் அம்சங்கள் தேசிய சட்ட விதிகளில் இலங்கையில் உள்ளடக்கப்படவில்லை. இதன் காரணமாக பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், பால்நிலை சமத்துவத்தைப் பேணுவதிலும் இலங்கை பின்னடைந்திருக்கின்றது என்பதே சர்வதேச கணிப்பாகும்.

.இந்த நிலையில் 25 வீத இட ஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள அல்லது களமிறக்கப்பட்டுள்ள பெண்கள் பல்வேறு தேர்தல் வன்முறைகளுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். இந்தத் தேர்தல் வன்முறைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புக்கள் குரல் கொடுத்திருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறைகள்

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெண்களின் உரிமைக்காகச் செயற்பட்டு வருகின்ற எட்டு அமைப்புக்களை உள்ளடக்கிய பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற அமைப்பு பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கண்டனக் குரல் எழுப்பியிருக்கின்றது. அத்துடன் இத்தகைய தேர்தல் வன்முறைகளுக்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும் என்றும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியிருக்கின்றது.

தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் குறித்து ஊடக செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அந்த அறிக்கை நடைபெற்றுள்ள சம்பவங்கள் பற்றிய விபரத்தைக் குறிப்பிட்டிருக்கின்றது.

மொனராகல மாவட்டம், வெல்லவாய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பெண் வேட்பாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டதில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். கிழக்கு மாகாணம், ஆரையம்பதி செல்வாநகர் பெண் வேட்பாளர் ஒருவரின் வீடு தாக்கப்பட்டு, வீட்டினுள்ளிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் பெண் வேட்பாளர் ஒருவர் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டதுடன் வீடொன்றில் கட்டிவைத்து மிரட்டப்பட்டு அவர் பொலிசாரிடம் மேற்கொண்ட முறையீட்டை மீளப்பெறுமளவுக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் புத்தளம் உள்ளிட்ட வேறு மாவட்டங்களில் முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் எதிர்கொண்ட வன்முறைகள் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

புத்தளம் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் பெண் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள பெண்கள் மதத் தலைவர்களின் அருவறுப்பான பேச்சுகளுக்கு ஆளாகியுள்ளதுடன் அவர்களின் குடும்பங்களும் இழிவான பேச்சுகளுக்கு ஆளாகியுள்ளன. மேலும் பெண் வேட்பாளர்கள் தொடர்பான ஆபாசமான கருத்துக்களும், அவர்களது இனம், மதம் சார்ந்து துவேசம் மிக்க இழிவான கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதையும் துண்டுப்பிரசுரங்களாக அனுப்பப்படுவதையும் பரவலாகக் காணக் கூடியதாகவுள்ளது என்று பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதையும்விட நல்லூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த பெண் வேட்பாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். கணவர் இருக்கின்றாரா, வீட்டில் பெண்கள் இருக்கின்றார்களா, வீடு எங்கே இருக்கின்றது அங்கே வருகின்றோம் என்று தொலைபேசி மூலமாக அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் வேட்பாளர்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைகள் இடம்பெற்றுள்ளதுடன், பாலியல் ரீதியாக வாய்மொழி மூலமான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரவில்லை என கூறப்படுகின்றது. சுயமரியாதையைக் கருத்திற்கொண்டு, தமக்கு இழைக்கப்படுகின்ற தேர்தல் வன்முறைகள் அச்சுறுத்தல்கள் குறித்து முறையிடுவதற்குத் தயங்குவதாகப் பல வேட்பாளர்கள் கூறியுள்ளனர். அரசியலில் குதித்துள்ள போதிலும், தேர்தல் போட்டி நிலைமை காரணமாக பெண்கள் என்ற காரணத்திற்காக தங்களுடைய கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற சம்பவங்கள் வெளியில் வருவதன் மூலம் தமது குடும்ப கௌரவமும் பாதிக்கப்படும் என்ற அச்சமும் அவர்களுடைய மௌனத்திற்கு முக்கிய கரணம் என அவர்கள் தெரிவி;த்திருக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறைகள்

சாதாரணமாக தேர்தல் பரப்புரை காலத்தில் தேர்தல் வன்முறைகள் பரவலாகவும் பல வடிவங்களிலும் இடம்பெறுவது சாதாரண நிகழ்வாகக் கருதப்படுகின்றது. ஆயினும் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள பெண்களுக்கு, பெண்கள் என்ற காரணத்தினால் பல்வேறு வடிவங்களில் வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன. இதனால் தேர்தல் கால வன்முறைகள் அச்சுறுத்தல்கள் என்பவற்றில் இருந்து பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள் விசேட கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அத்தகைய தேர்தல் வன்முறைகள் என்ன என்பது விரிவாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தேர்தல் செயன்முறையில் ஜனநாயக ரீதியான பெண்களின் சுதந்திரத்திலும், பெண்களின் சம பங்களிப்பிலும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் வகையில், தேர்தல் காலங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற தீங்குகளும் தீங்குகளுக்கான அச்சுறுத்தல்களும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

பெண் லேட்பாளர்களுக்கு தீங்கு விளைவிப்பதும், அத்தகைய தீங்குக்கான அச்சுறுத்தல் விடுத்தலும் குறிப்பிடத்தக்கது. இதில் பெண் வேட்பாளர்களைத் தொந்தரவு செய்தல், மிரட்டுதல், உடலியல் ரீதியாகத் தீங்குத் தீங்கு விளைவித்தல் அல்லது அவர்களைப் பலவந்தப்படுத்துதல் அச்சுறுத்துதல், நிதி வடிவ ரீதியில் அழுத்தங்களைப் பிரயோகித்தல் என்பன உள்ளடங்குகின்றன. இந்த சம்பவங்கள் பெண் வேட்பாளர்களுடைய வீடுகளில், தனிப்பட்ட இடங்கள் அல்லது பொது இடங்களில் மேற்கொள்ளப்படலாம்.

பெண் வேட்பாளர்கள் மட்டுமல்ல ஏனைய பெண்களுக்கும் தேர்தல் காலத்தில் வன்முறைகள் பிரயோகிக்கப்படலாம் என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. தேர்தலில் ஒரு வேட்பாளராக, ஒரு வாக்காளராக அல்லது தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக அலி;லது தேர்தல் செயற்பாடுகளில் ஒரு பெண் வகிக்கின்ற பாகத்தை நோக்கியதாகவும், தேர்தல் சூழமைவுடன் தொடர்புடையதாகவும் இருக்கும் நிலையில் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புகள் பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறைகளாகக் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.

இந்த வன்முறைகள் அனைத்தும் பால்நிலை அடிப்படை வன்முறை மற்றும் அரசியல் வன்முறை என்னும் இரண்டு வகைகளுக்குள் அடங்குவதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு குறித்துக் காட்டியிருக்கின்றது. அதேவேளை, தனிநபருக்குத் தீங்கு ஏற்படுத்தல் மற்றும் இலங்கையின் சமாதானமான ஜனநாயகத்துக்குப் பங்கம் விளைவித்தல் ஆகிய இரட்டைத் தாக்கங்களையும் இந்தத் தேர்தல் கால வன்முறைகள் ஏற்படுத்துகின்றன. பெண்கள் தொடர்ச்சியாக சத்தமின்றிய மறைந்த வடிவ வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்ற வகையில், இவ்வன்முறைகள் அவர்களது உரிமைகளை மீறுவதோடு தேர்தலின் நம்பகத்தன்மையை எதிர்மறையாகப் பாதிக்கின்றன என்றும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வரையறை செய்திருக்கின்றது.

பொதுவாகவே அரசியல் என்பது ஆண்களின் ஏகபோக ஆளுமையைக் கொண்ட களமாகவும், அங்கு பெண்களுக்கு இடமில்லை என்ற ரீதியில் ஆணாதிக்கம் மேலோங்கிய நிலையிலுமே காணப்படுகின்றது. பெயரளவிலேயே பெண்கள் அரசியலுக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

அதேநேரம், பாரம்பரிய அரசியல் செயற்பாட்டைக் கொண்ட குடும்பங்களில் உதித்த பெண்கள், அரசியல்வாதியான கணவன் இறந்த பின்னர் அல்லது அரசியல்வாதியாகிய தந்தை இறந்த பின்னர், வாரிசு அடிப்படையில் (அது வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை) அரசியலுக்குள் உள்ளீர்க்கப்படுகின்றார்கள். இவ்வாறு அரசியலுக்குள் வருகின்ற பெண்கள் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு போக்கையே காண முடிகின்றது. சுயமாக அடிமட்டத்தில் சமூக சேவைகளில் ஆரம்பித்து, படிப்படியாக அரசியலில் பிரவேசம் செய்து தலைமை நிலைமைக்கு வளர்ச்சியடைந்த பெண்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு ஆணாதிக்கம் மிக்க அரசியல் களத்தில் இடமளிக்கப்படுவதுமில்லை.

அரசியல் என்பது ஆண்களுக்கே உரித்தானது. பெண்களுக்கு அது பொருத்தமற்றது என்ற ஆணாதிக்கம் மேலோங்கிய அரசியல் சிந்தனைப் போக்கு கொண்ட அரசியல் செல்நெறியில் பெண்கள் விகிதாசார உரிமை அடிப்படையில் சுயமாக தேர்தலில் போட்டியிடுவதும், அரசியல் செய்வதும் இலகுவான காரியமல்ல. அந்த அரசியல் பயணம் என்பது கரடு முரடானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ,

இருப்பினும், சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் நாட்டை முன்னேற்றுவதற்காகவே பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. ஆண்களோடு பெண்களும் இணைந்து அரசியலில் ஈடுபடும்போது, நாட்டின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறை அமைவதற்கும் நாடு முன்னோக்கிச் செல்வதற்கும் வழியேற்படும் என்பது பால்நிலை சம உரிமைவாதிகளின் நம்பிக்கை. அந்த வகையில் பெண்களுக்கு அரசியலில் இடமளிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு, ஆண்களும் பெண்களும் இணைந்து செயற்பட முன்வரவேண்டியது அவசியமாகும்.

http://globaltamilnews.net/2018/63127/

  • தொடங்கியவர்

பெண் வேட்பாளர்கள் மீது தொடரும் வன்முறைகள்

 

வடக்கு கிழக்கு உட்­பட நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் பெண் வேட்­பா­ளர்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருப்­பதைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பு என்ற பெண்கள் நலன் சார்ந்த அமைப்பு அந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கு எதி­ராகக் கண்­டனக் குரல் எழுப்­பி­யுள்­ளது.

தேர்தல் செயன்­மு­றையில் பெண்­களின் சுதந்­தி­ர­மான மற்றும் சம பங்­க­ளிப்பில் குழப்பம் அல்­லது பாதிப்பை ஏற்­ப­டுத்தும் நோக்கில் தேர்தல் காலங்­களில் பெண்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­படும் தீங்கு அல்­லது தீங்­குக்­கான அச்­சு­றுத்­தல்­க­ளையே பெண் வேட்­பா­ளர்கள் மீதான தாக்­கு­தல்­க­ளாக அந்த அமைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

இதில் பெண் வேட்­பா­ளர்­க­ளுக்­கான தொந்­த­ர­வுகள், மிரட்­டுதல், உட­லியல் தீங்கு அல்­லது பல­வந்­தப்­ப­டுத்தல், அச்­சு­றுத்தல் மற்றும் நிதி வடிவ அழுத்­தங்கள் என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன என்றும் அந்த வன்­மு­றை­களை அது விப­ரித்­தி­ருக்­கின்­றது. 

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் செயற்­ப­டு­கின்ற எட்டு  பெண்கள் அமைப்­புக்­களை உள்­ள­டக்­கிய பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்பு இது தொடர்பில் விடுத்­துள்ள நீண்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

மொன­ரா­கல மாவட்டம், வெல்­ல­வாய பிர­தே­சத்தில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த பெண் வேட்­பாளர் ஒருவர் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்­டதில் கவ­லைக்­கி­ட­மான நிலையில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். 

கிழக்கு மாகாணம், ஆரை­யம்­பதி செல்­வா­நகர் பெண் வேட்­பாளர் ஒரு­வரின் வீடு சேத­மாக்­கப்­பட்­ட­துடன் வீட்­டி­னுள்­ளி­ருந்த பொருட்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது.

 முல்­லைத்­தீவு மாவட்டம், புதுக்­கு­டி­யி­ருப்பில் பெண் வேட்­பாளர் ஒருவர் உடல்­ரீ­தி­யாகத் தாக்­கப்­பட்­ட­துடன் வீடொன்றில் கட்­டி­வைத்து மிரட்­டப்­பட்டு அவர் பொலி­சா­ரிடம் மேற்­கொண்ட முறை­யீட்டை மீளப்­பெ­று­ம­ள­வுக்கு அச்­சு­றுத்­தப்­பட்­டுள்ளார். 

புத்­தளம் மாவட்­டத்­திலும் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் பெண் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ள பெண்கள் மதத் தலை­வர்­களின் அரு­வ­ருப்­பான பேச்­சு­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் அவர்­களின் குடும்­பங்­களும் இழி­வான பேச்­சு­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ளார்கள். மேலும் பெண் வேட்­பா­ளர்கள் தொடர்­பான ஆபா­ச­மான கருத்­துக்­களும், அவர்­க­ளது இனம், மதம் சார்ந்து துவேசம் மிக்க இழி­வான கருத்­துக்­களும் சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­ப­டு­வ­தையும் துண்­டுப்­பி­ர­சு­ரங்­க­ளாக அனுப்­பப்­ப­டு­வ­தையும் பர­வ­லாகக் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது. 

மேற்­கூ­றப்­பட்­டவை அனைத்தும் அண்­மையில் செய்­தி­களில் வந்த தேர்­தலில் ஈடு­படும் பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறைச் சம்­ப­வங்­க­ளாகும். 

இவை தவிர பயம் மற்றும் அச்­சு­றுத்தல் கார­ண­மாக பொலி­ஸிலோ அல்­லது தேர்தல் ஆணை­ய­கத்­துக்கோ அறி­விக்­கப்­ப­டாத பெண் வேட்­பா­ளர்கள் மீதான உடல் உள வன்­மு­றைகள் பெண்கள் அமைப்­புகள் மற்றும் செயல்­வா­தி­க­ளூ­டாக வந்த வண்­ண­மே­யுள்­ளன. 

தேர்­தல்­களின் போது பெண்கள் ஆண்­களை விட பரந்து பட்ட வகை­களில் குற்­ற­வியல் சம்­ப­வங்­களை எதி­ர்நோக்­கு­கின்­றனர். இவை அனைத்தும் தேர்­தல்­களில் பெண்­க­ளுக்கு எதி­ராக நிகழும் வன்­மு­றைகள் எனக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. 

இவ் வன்­மு­றைகள் பின்­வ­ரு­மாறு வரை­ய­றுக்­கப்­ப­டலாம். தேர்தல் செயன்­மு­றையில் பெண்­களின் சுதந்­தி­ர­மான மற்றும் சம பங்­க­ளிப்பில் குழப்பம் அல்­லது பாதிப்பை ஏற்­ப­டுத்தும் நோக்கில் தேர்தல் காலங்­களில் பெண்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­படும் தீங்கு அல்­லது தீங்­குக்­கான அச்­சு­றுத்தல். 

இதில் தொந்­த­ரவு, மிரட்­டுதல், உட­லியல் தீங்கு அல்­லது பல­வந்­தப்­ப­டுத்தல், அச்­சு­றுத்தல் மற்றும் நிதி வடிவ அழுத்­தங்கள் என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன. அத்­துடன் இவை வீடு­களில், தனிப்­பட்ட இடங்கள் அல்­லது பொது இடங்­களில் மேற்­கொள்­ளப்­ப­டலாம். 

ஒரு தேர்தல் வன்­முறை எப்­போது தேர்­தலில் பெண்­க­ளுக்­கெ­தி­ராக நிகழும் வன்­மு­றை­யா­கின்­ற­தெனில் ஒரு சம்­ப­வத்தின் இலக்கு குறித்த தேர்தல் செயன்­மு­றையில் வேட்­பா­ள­ராக, வாக்­கா­ள­ராக, தேர்தல் ஆணைக்­குழு உறுப்­பி­ன­ராக அல்­லது ஏனைய வகையில் ஒரு பெண்ணின் வகி­பா­கத்தை நோக்­கியும் அந்த சம்­ப­வத்தின் நேரம் தேர்தல் சுற்­று­வட்­டத்­துடன் தொடர்­பு­டை­ய­தா­கவும் (உதா­ரணம்: தேர்­த­லுக்­கான திட்­ட­மிடல், தேர்­த­லுக்­கான ஆயத்­தங்­களை மேற்­கொள்ளல், தேர்தல் பிர­சாரம்) இருக்கும் பட்­சத்­தி­லாகும். 

இவ்­வ­கையில் மேற்­கு­றிப்­பிட்ட சம்­ப­வங்கள் அனைத்தும் பால்­நிலை அடிப்­படை வன்­முறை மற்றும் அர­சியல் வன்­முறை ஆகிய இரு வகை­க­ளுக்­குள்ளும் உள்­ள­டங்­கு­வ­துடன் தனி­ந­ப­ருக்குத் தீங்கு ஏற்­ப­டுத்தல் மற்றும் இலங்­கையின் சமா­தா­ன­மான ஜன­நா­ய­கத்­துக்குப் பங்கம் விளை­வித்தல் ஆகிய இரட்டைத் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதனால், பெண்கள் தொடர்ச்­சி­யாக சத்­த­மின்­றிய மறைந்த வடிவ வன்­மு­றை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர் என்ற வகையில், இவ்­வன்­மு­றைகள் அவர்­க­ளது உரி­மை­களை மீறு­வ­தோடு தேர்­தலின் நம்­ப­கத்­தன்­மையை எதிர்­ம­றை­யாகப் பாதிக்­கின்­றன. 

2016 இல் இலங்­கையில் மக்கள் பிர­தி­நி­தித்­துவ சபை­களில் பெண்­க­ளுக்­கான 25 சத­வீத ஒதுக்­கீடு சட்­ட­ரீ­தி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 341 உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­லி­ருந்து ஆகக் குறைந்­தது 1991 பெண்கள் உறுப்­பி­னர்­க­ளாகத் தேர்­வாகும் வாய்ப்பு இதன்­மூலம் கிடைக்­கின்­றது. 

வட்­டாரம் மற்றும் விகி­தா­சாரம் எனக் கலப்பு முறை­யி­லான உள்­ளூ­ராட்சி அதி­கார சபைகள் தேர்தல் சட்­டத்தில் அர­சியற் கட்சி அல்­லது சுயேட்சைக் குழு­வா­னது தாக்கல் செய்யும் வேட்பு மனுக்­க­ளிலே ஆகக் குறைந்­தது வட்­டார ரீதி­யாக 10 சத­வீ­தமும், விகி­தா­சாரப் பட்­டி­யலில் 50 சத­வீ­தமும் பெண்கள் இடம்­பெற வேண்டும் எனக் கூறப்­பட்­டுள்­ளது. இல்­லை­யெனில் குறித்த வேட்பு மனு நிரா­க­ரிக்­கப்­படும். 24 மாந­கர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிர­தேச சபைகள் என 341 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்குத் தெரி­வாகும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 8356 ஆகும். 

இலங்­கை­யி­லுள்ள மொத்த மக்கள் தொகையில் 52 சத­வீதம் பெண்­க­ளா­க­வுள்ள போதிலும் பாராளு­மன்­றத்தில் 5.3 சத­வீ­தமும், மாகாண சபை­களில் 4 சத­வீ­தமும், உள்­ளூ­ராட்சி சபை­களில் 1.9 சத­வீ­தமும் தான் பெண்­களின் இது­வ­ரை­யான பிர­தி­நி­தித்­துவம் காணப்­ப­டு­கி­றது. 

பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களே அவர்­களின் அர­சியற் பங்­க­ளிப்பைத் தடுக்கும் முக்­கிய கார­ணி­யாக இருக்­கி­றது. 

வன்­முறைக் கலா­சாரம், துன்­பு­றுத்தல், பாலியல் லஞ்சம், உடல் ரீதி­யாகத் தாக்­கப்­ப­டுதல், குடும்ப உற­வு­க­ளுக்­கான எச்­ச­ரிக்கை, நிதி ரீதி­யான அழுத்­தங்கள், மதத் தலை­மை­களின் எச்­ச­ரிக்­கைகள், கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்ட ஊடகத் தக­வல்கள் மற்றும் சமூக வலைத் தளங்­களில் சேறு பூசுதல், ஆணா­திக்க மனோ­பாவங் கொண்­டோரின் பகி­ரங்கச் சவால்கள் என்­ப­வற்­றோடு, இன, மத, கலா­சார ரீதி­யான தடைகள் என்­ப­னவும் பெண்கள் அர­சி­யலில் பங்­கு­பற்­று­வ­தற்குத் தடை­யாக உள்­ளன. 

யுத்­தத்­திற்குப் பிற்­பட்ட இலங்­கை­யிலே குறிப்­பாக வடக்குக் கிழக்குச் சிறு­பான்மைச் சமூ­கத்­திலே பெண்கள் இத்­தேர்­தலில் மிகவும் ஆர்­வ­மாக ஈடு­ப­டு­கின்­றனர். இருப்­பினும் வழமை போலவே ஆணா­திக்க அர­சியற் சமூ­கமும் மதச் சார்­பான குழுக்­களும் பெண்­களை வன்­முறைக் கலா­சா­ரத்­துக்­குட்­ப­டுத்­து­வ­த­னூ­டாக அவர்­க­ளது அர­சியற் பங்­க­ளிப்பை மழுங்­க­டிக்கச் செய்ய விளை­கின்­றன. 

ஏனைய நாடு­களை, முக்­கி­ய­மாக போரின் பின்­னான சமூ­கங்­களை எடுத்து நோக்கும் போது பெண்­களின் அர­சியல் பங்­க­ளிப்­பா­னது பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தா­கவும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தொன்­றா­க­வுமே காணப்­பட்­ட­தையும் நாம் அவ­தா­னிக்­கிறோம். 

அதே போன்ற சூழ்­நிலை நிலவும் இந்­நாட்டில் நாங்கள் எம்மை நோக்கி வரும் தடை­களை சட்டம் மற்றும் சமூ­கத்தின் உத­வி­யுடன் எதிர் கொள்ளத் தயா­ராக இருப்­ப­துடன் பால், இனம், மதம், சாதி, மற்றும் கட்சி அடிப்­ப­டை­யி­லான பாகு­பா­டுகள் எமது முன்­னேற்­றத்­தையும் அர­சியல் பங்­க­ளிப்­பையும் மட்­டுப்­ப­டுத்த ஒரு­போதும் அனு­ம­திக்கக் கூடாது.

அண்­மையில் புத்­த­ளத்தில் முஸ்லிம் பெண் வேட்­பா­ளர்கள் பிர­சார மேடையில் பேசி­யது தொடர்பில் மௌல­விகள் நியாஸ் சித்திக் சிராஜ் மற்றும் முர்ஷித் அப்­பாஸி ஆகியோர் இப்பெண் வேட்­பா­ளர்­க­ளையும் அவர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் தாக்கி வெறுக்­கத்­தக்க விதத்தில் பேசு­வது சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லாகப் பகி­ரப்­பட்­டது. 

குறிப்­பிட்ட மௌல­விகள் தங்கள் பேச்­சு­களில் முஸ்­லிம்­களின் புனித நூல்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக  'ஒரு பெண் ஒரு­போதும் ஆண்­களை நிர்­வ­கிக்க முடி­யாது' என்றும் 'பெண்கள் குடும்பக் கட­மை­களை செய்­வ­தற்கும் கணவர் மற்றும் குழந்­தை­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கும் மாத்­தி­ரமே உரித்­தா­ன­வர்கள்' என்றும் தமது சுய கருத்­துக்­களைக் குறிப்­பி­ட்­டுள்­ள­துடன், இப்பெண் வேட்­பா­ளர்­களின் துணை­வர்­களும் குடும்ப உறுப்­பி­னர்­களும் இது­கு­றித்து வெட்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தான தனி­ம­னித கௌர­வத்தைப் பாதிப்­ப­தான வார்த்தைப் பிர­யோ­கங்­களை உப­யோ­கித்­தி­ருந்­தார்கள். 

இவ்­வாறு பகி­ரங்­க­மாக பெண் வேட்­பா­ளர்கள் மீது தொடுக்­கப்­படும் வெறுக்­கத்­தக்க பேச்சு குறித்தோ அல்­லது மதக்­கு­ழுக்கள் மற்றும் அர­சியற் பின்னணியில் வேறு ஆண்­களால் தொடுக்­கப்­படும் வார்த்தை மற்றும் உள­வியல் சார்ந்த வன்­மு­றைகள் தொடர்­பா­கவோ இது­வரை இப்­பெண்கள் போட்­டி­யிடும் கட்­சி­களோ, சட்­டத்தைப் பாது­காக்க வேண்­டிய பொலிஸாரோ, தேர்தல் ஆணைக்­கு­ழுவோ அல்­லது அர­சியல் கட்சித் தலை­வர்­களோ இது­வரை குரல் கொடுக்­கா­தது மிகவும் வேத­னைக்கும் பிரச்­சி­னைக்­கு­மு­ரி­ய­தாகும். 

இவ்­வ­மைதி பேணு­த­லா­னது அர­சி­யலில் பெண்­களின் பங்­க­ளிப்பு உண்­மைத்­தன்­மை­யுடன் வர­வேற்­கப்­ப­டு­கி­றதா அல்­லது பெய­ர­ள­வி­லான செயல் மட்­டும்­தானா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. 

2017 நவம்பர் மாதம் 'மாற்­றத்­துக்­கான பெண்கள்' என்ற தொனியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சி­யலில் பெண்­களின் பங்­க­ளிப்பை வலுப்­ப­டுத்தும் தேசிய பிர­சாரம் ஒன்றை ஆரம்­பித்து வைத்தார். இதன் போது பேசிய ஜனா­தி­பதி 'ஒரு மேம்­பட்ட நாடு, மேம்­பட்ட சமூகம், அன்பு மற்றும் தார்­மீக விழு­மி­யங்­களைக் கொண்ட சமூ­கத்தை உரு­வாக்க பெண்­களின் பங்களிப்பும் அவர்கள் சமூகத்தை வழிநடத்தும் வகையிலும் இருத்தல் அவசியம். 

நாம் ஆண்வழி விழுமியங்களை மட்டுமல்லாமல் பெண்வழி விழுமியங்கள், கருத்துக்கள், பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்வதே சிறந்த சமூகத்தை உருவாக்க வழிவகுக்கும்' எனத் தெரிவித்திருந்தார். 

இவ்வாறிருக்க பெண் வேட்பாளர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான வன்முறைகளுக்கு உள்ளாகியிருப்பதும், அவர்கள் குடும்பத்தினரின் கௌரவம் பாதிக்கப்படும் வகையில் மதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் நடந்து கொள்வதும் பெண்கள் அரசியலில் தமது பங்களிப்பை சுதந்திரமாகவும் சுயகௌரவத்துடனும் தன்னிறைவாகவும் வழங்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

முழுமையான தேர்தல் பாதுகாப்பென்பது உடல் ரீதியான அச்சுறுத்தல், ஆயுத மோதல் ஆகியவற்றுக்கும் மேலானதும் அனைத்து தனிநபர்களும் தமது தேர்தல் உரிமைகளை சுதந்திரமாகவும் நியாயமாகவும் பாவிக்க இயலுமான சூழலை ஏற்படுத்துதல் ஆகும். பெண்களுக்கு அரசியலில் 25 வீதம் பங்களிப்பு என்பதோடு பெயரளவில் மட்டுமன்றி அதனை நடைமுறைச் சாத்தியமாக்க வேண்டிய கடப்பாடு இவ்வரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் தேர்தல் கட்டமைப்புகளுக்கும் உள்ளது என்பதை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு மீண்டும் வலியுறுத்தி நிற்கிறது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-25#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.