Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்ஆப்பிரிக்கா எதிர் இந்தியா ஒருநாள் போட்டி செய்திகள்

Featured Replies

      தென்ஆப்பிரிக்கா எதிர் இந்தியா ஒருநாள் போட்டி செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: தெ. ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

 

NGIDI

படம். | ராய்ட்டர்ஸ்.

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி, பேட்ஸ்மன் காயா ஜோன்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரைக் கைபற்றிவிட்டது

இந்நிலையில், ஒருநாள் தொடர் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம், பிப்ரவரி 1-ம் தேதி டர்பன் நகரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பட்டியலை அந்நாட்டு வாரியம் இன்று வெளியிட்டது.

அதில் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி இடம் பெற்றுள்ளார். பிரிடோரியாவில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீப காலமாக காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்த இங்கிடி இப்போது அதில் இருந்து மீண்டு போட்டியில் பங்கேற்று வருகிறார்.

அதேபோல, கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்ற பேட்ஸ்மென் காயா ஜோன்டா இந்த முறை வாய்ப்பு பெற்றார். இந்தியாவுக்கு எதிரான அணியில் இடம் பெற்று இருந்தும், அப்போது ஒரு போட்டியில்கூட அவர் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வேகப்பந்துவீச்சாளற் மோர்ன் மோர்கல், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரீஸ், சுழற்பந்துவீச்சாளர் தப்ரெய்ஸ் ஷாம்ஸி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் விவரம்:

பா டூ பிளசிஸ்(கேப்டன்), ஹசிம் அம்லா, குயின்டன் டீ காக், டிவில்லியர்ஸ், ஜே.பி. டுமினி, இம்ரான் தாஹிர், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், மோர்ன் மோர்கல், கிறிஸ் மோரிஸ், லுங்கி இங்கிடி, அன்டில் பெலுக்வேயோ,  ரபாடா, டப்ரெய்ஸ் ஷாம்சி, காயா ஜோன்டோ

http://tamil.thehindu.com/sports/article22522729.ece

  • தொடங்கியவர்

டி வில்லியர்ஸ் விலகல்

05isbs-abd-quot05ISBSABDQUOTEjpjpg

கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் விலகி உள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையே 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் டி வில்லியர்ஸ் இடம் பெற்றிருந்தார். முதல் ஒருநாள் போட்டி டர்பனில் நாளை தொடங்க உள்ள நிலையில் வலது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டிவில்லியர்ஸ் விலகி உள்ளார். சுமார் 2 வார காலம் ஓய்வில் இருக்குமாறு அவருக்கு, மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article22603850.ece

  • தொடங்கியவர்

நம்பர் 1 தெ.ஆ., நம்பர் 2 இந்தியா: சவாலான ஒருநாள் தொடர் டர்பனில் தொடங்குகிறது!

 

 

 

kohli

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில், சதம் அடித்த மகிழ்ச்சியில் பேட்டை உயர்த்திக் காட்டும் இந்திய வீரர் வீராட் கோஹ்லி.   -  கோப்புப் படம். | ம.பிரபு.

டர்பனில் நாளை (வியாழனன்று) இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி (மொத்தம் 6 ஒருநாள் போட்டிகள்) பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

சர்ச்சைகளும், அணித்தேர்வு குளறுபடிகளும் மலிந்த டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியை வென்று இந்திய அணி இழந்த மதிப்பை மீண்டும் பெற்றதையடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது, டெஸ்ட் போட்டித் தொடரில் நம்பர் 1 இந்திய அணியுடன் மோதிய தென் ஆப்பிரிக்கா, தற்போது தன் நம்பர் 1 நிலையுடன் 2-ம் இடத்தில் உள்ள இந்திய அணியை எதிர்கொள்கிறது.

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் பலம் வேறு விதமானது, ரோஹித், தவண், கோலி என்ற முதல் 3 வீரர்கள் பெரும்பாலான போட்டிகளை சமீபகாலமாக வெற்றி பெற்று கொடுத்துள்ளனர். ஒரு வீரர் இல்லாவிட்டாலும் இன்னொரு வீரர் என்ற ரீதியில் அணியில் சேர்க்கை வலுவாக உள்ளது. முதல் 3 வீரர்களுடன் கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்டியா என்று வலுவான பேட்டிங் லைன் அப் உள்ளது, பந்து வீச்சில் அதே போல் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி அல்லது உமேஷ் யாதவ், குல்தீப், சாஹல் என்று ஒரு வெற்றிக்கூட்டணியாக உள்ளது.

பவுன்ஸ் பிட்சாக இருந்தாலும் வறண்ட பிட்சாக இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் சமீபகாலங்களில் அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டிகளாக அமைகிறது. புதிய பந்து கொஞ்சம் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகும், அதனால் முதல் 10-15 ஓவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இல்லையெனில் அன்று இங்கிலாந்து அடிலெய்ட் பவுன்ஸ், ஸ்விங் பிட்சில் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது போல் ஆகிவிடும் அபாயம் உள்ளது.

2019 உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தென் ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் நிச்சயம் கடும் சவாலை அளிக்கும் என்பது உறுதி, இந்தியா தரப்பில் கொஞ்சம் சவுகரியமான விஷயம் டிவில்லியர்ஸ் முதல் 3 போட்டிகளுக்கு ஆட முடியாமல் போனது. இது காரண காரியத் தொடர்புள்ளதா அல்லது இடுகுறிமை உள்ளதா என்பது தெரியவில்லை.

2015-ல் தென் ஆப்பிரிக்கா இங்கு வந்து ஒருநாள் தொடரில் வென்றது தீராக்காயமாக இந்திய அணிக்கு இருக்கும், அதனால் அதற்குப் பழிக்குப்பழி தொடர் வெற்றி என்ற குறிக்கோளில் கோலி படை இறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புள்ளி விவரங்கள் அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அங்கு இந்தியா 28 ஒருநாள் போட்டிகளில் 5-ல் மட்டுமே வென்றுள்ளது, டர்பனில் வென்றதில்லை.

102 ரன்கள் எடுத்தால் மகேந்திர சிங் தோனி ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் எடுக்கும் 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

ஆட்டம் நாளை மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்திய அணி (உத்தேசமாக): ரோஹித் ஷர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ரஹானே அல்லது பாண்டே, தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி அல்லது உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல்

தென் ஆப்பிரிக்கா அணி (உத்தேசமாக): ஆம்லா, டுபிளெசிஸ், டி காக், அய்டன் மார்க்ரம், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆண்டில் பெலுக்வயோ, ரபாடா, மோர்கெல், இம்ரான் தாஹிர்

http://tamil.thehindu.com/sports/article22611751.ece

 

  • தொடங்கியவர்

சவாலை எதிர்பார்க்கிறோம்: தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபெலிசிஸ்

 
அ-அ+

இந்தியா தரமான அணி எனவும் ஒரு நாள் தொடரில் சவாலையும், வேகத்தையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் எனவும் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டுபெலிசிஸ் கூறியுள்ளார்.#SAvIND INDvSa #FafduPlessis

 
 
 
 
சவாலை எதிர்பார்க்கிறோம்: தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபெலிசிஸ்
 

இந்தியா தரமான அணி என்பதை டெஸ்ட் தொடரில் நிரூபித்து காட்டியது. அதனால் ஒரு நாள் தொடரில் அதே போன்ற சவாலையும், வேகத்தையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். இந்திய அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

யுஸ்வேந்திர சாஹல், குல்தீவ் யாதவுக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட்டியில் ஆடியிருக்கிறேன். சமீப காலமாக இந்தியாவின் வெற்றிகரமான பவுலர்களாக வலம் வருகிறார்கள். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்குள்ள ஆடுகளங்களில் பந்து பெரிய அளவில் சுழன்று திரும்பாது. அதே சமயம் அவர்கள் கட்டுக்கோப்புடன் பந்து வீசக்கூடியவர்கள். விக்கெட் வீழ்த்த எப்போதும் முனைப்பு காட்டும் அவர்கள் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாகும்.

http://www.maalaimalar.com/News/Sports/2018/02/01092630/1143356/SAvIND-INDvSa-Faf-du-Plessis-says-Expect-India-to.vpf

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாட முடிவு

 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாட முடிவு


இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்தியா அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, 2 ற்கு 1 என்ற கணக்கில தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றியுள்ளன.

இதனடிப்படையில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி தென்னாபிரிக்கா டர்பன் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமான போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியுள்ளது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அணி டெஸ்ட் தொடர் தோல்விக்கு பழிதீர்க்குமா என எண்ணப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/india-vs-south-africa-first-odi

 

3.png&h=42&w=42

166/5 * (34.6/50 ov)
 
  • தொடங்கியவர்
இந்திய அணிக்கு 270 ரன்கள் இலக்கு
  • தொடங்கியவர்

முதல் ஒருநாள்: டு பிளிசிஸ் சதத்தால் இந்தியாவிற்கு 270 ரன்கள் வெற்றி இலக்கு

டர்பனில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டு பிளிசிஸ் சதத்தால் இந்தியாவின் வெற்றிக்கு 270 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. #SAvIND #DuPlessis

 
முதல் ஒருநாள்: டு பிளிசிஸ் சதத்தால் இந்தியாவிற்கு 270 ரன்கள் வெற்றி இலக்கு
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ்க்குப் பதிலாக ஏய்டன் மார்கிராம் இடம்பிடித்தார்.

டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 16 ரன்கள் எடுத்த நிலையில் அம்லா பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து கேப்டன் டு பிளிசிஸ் களம் இறங்கினார்கள். டி காக் 34 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பந்து ஸ்டம்பை தாக்காமல் வெளியே சென்றது. டி காக் ரிவியூ கேட்காததால் அவுட் ஆனார்.

201802012029120678_1_amla001-s._L_styvpf.jpg

அதன்பின் வந்த மார்கிராம் (9), டுமினி (12), மில்லர் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் டு பிளிசிஸ் சிறப்பாக விளையாடினார்கள். அவருக்கு கிறிஸ் மோரிஸ் (37) துணை நின்றார்.

சிறப்பாக விளையாடிய டு பிளிசிஸ் 47-வது ஓவரின் 2-வது ஒரு ரன் அடித்து 101 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். அவரது சதத்தில் 11 பவுண்டரி அடங்கும். சதம் அடித்த பின்னர் டு பிளிசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஸ்வர் குமார் வீசிய 48-வது ஓவரில் ஒரு சிக்சரும், பும்ரா வீசிய 49-வது ஓவரில் ஒரு சிக்சரும் விளாசினார்.

201802012029120678_2_kuldeep-s._L_styvpf.jpg

கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் டு பிளிசிஸ் ஆட்டமிழந்தார். அவர் 112 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 120 ரன்கள் சேர்த்தார். டு பிளிசிஸ் அவுட்டான பிறகு பவுண்டரி ஏதும் செல்லாததால் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 45 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள்தான் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவரில் 46 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. #SAvIND #DuPlessis

http://www.maalaimalar.com/News/TopNews/2018/02/01202913/1143502/SAvIND-du-plessis-century-270-runs-target-to-india.vpf

  • தொடங்கியவர்

 

6.png&h=42&w=42

256/2 * (42.2/50 ov, target 270)
 
  • தொடங்கியவர்
கோஹ்லி, ரகானே அபாரம்; இந்தியா வெற்றி (6 விக்கெட்)

சதம் விளசினார் கோஹ்லி; இந்தியா அசத்தல் வெற்றி

 
 
 
 
India,இந்தியா,சதம்,கோஹ்லி,வெற்றி

 

 

டர்பன் : தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 33வது சதம் விளாசி அசத்தினார்.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி, நேற்று டர்பனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி, பேட்டிங் தேர்வு செய்தார். ஜோகனஸ்பர்க் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ரகானேவுக்கு, ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. தவிர, குல்தீப் யாதவ், சகால் என, இரு 'சுழல்' வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
 

 

குல்தீப் குதுாகலம்:

தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன் டி காக் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பும்ரா 'வேகத்தில்' ஆம்லா, 16 ரன்னுக்கு அவுட்டானார். இந்நிலையில் பந்தை சுழற்றிய சகால், குயின்டன் (34), மார்க்ரம்மை (9) அவுட்டாக்கினார். தன் பங்கிற்கு பந்தை சுழற்றிய குல்தீப், முதலில் டுமினி (12), அடுத்து, அபாயகரமான மில்லரை (7), வெளியேற்றினார். மீண்டும் மிரட்டிய குல்தீப், இம்முறை கிறிஸ் மோரிசை (37), போல்டாக்கி, குதுாகலம் அடைந்தார்.
 

 

டுபிளசி சதம்:

பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த டுபிளசி, ஒருநாள் அரங்கில் 9வது, இந்தியாவுக்கு எதிராக 2வது சதம் கடந்தார். இவர், 120 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரபாடா (1) ரன் அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. பெலுக்வாயோ (27), மார்கல் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சம் குல்தீப் யாதவ் 3, சகால் 2 விக்கெட் வீழ்த்தினர்.
 

 

ரோகித் 'அவுட்'

 

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மார்கல் பந்தில் சிக்சர் அடித்த ரோகித், 20 ரன்கள் எடுத்தார். 29 பந்தில் 35 ரன்கள் எடுத்து நம்பிக்கை தந்த தவான், வீணாக ரன் அவுட்டானார்.
 

 

சூப்பர் ஜோடி:

 

பின் கேப்டன் கோஹ்லி, ரகானே இணைந்தனர். மோரிஸ் ஓவரில், கோஹ்லி மூன்று பவுண்டரி அடித்தார். சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த ரகானே, கிடைத்த வாய்ப்பை சரியான பயன்படுத்தினார். 24 வது அரைசதம் அடித்த இவர், இம்ரான் தாகிர், மோரிஸ் பந்துகளில், சிக்சர் அடித்தார்.
 

 

அசத்தல் சதம்:

 

இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, வெற்றி இலக்கை இந்திய அணி, ஜோராக நெருங்கியது. பெலுக்வாயோ ஓவரில் இரு பவுண்டரி அடித்த கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 33வது சதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்த நிலையில், 79 ரன்கள் எடுத்த ரகானே அவுட்டானார். அடுத்து கோஹ்லியும் (112) கிளம்பினார்.

கடைசியில் வழக்கம் போல தோனி வந்து ஒரு பவுண்டரி அடித்து, இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 45.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்தது. தோனி (4), பாண்ட்யா (3) அவுட்டாகாமல் இருந்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் 1-0 என, முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும், இரண்டாவது போட்டி, வரும் 4ம் தேதி, செஞ்சூரியனில் நடக்கவுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1950398

  • தொடங்கியவர்

கடல் மட்டத்துக்கும் கீழே குனிவார் போலிருக்கிறதே: கேதார் ஜாதவ் பவுலிங் ஆக்‌ஷன் குறித்து கவாஸ்கர் ருசிகரம்

 

 
jadhav

கேதார் ஜாதவ்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

டர்பன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஸ்பின்னர்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் சோதனைகளைக் கொடுத்து வருகின்றனர்.

அந்த அணி சற்று முன் வரை 32 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. ஓவருக்கு 5 ரன்களுக்கும் மேல் இருந்த ரன் விகிதம் ஓவருக்கு 4.41 ஆகக் குறைந்து விட்டது. நன்றி, இந்திய ஸ்பின்னர்கள் குல்தீப், சாஹல், ஜாதவ். கேதார் ஜாதவ் 3 ஓவர்களில் 19 ரன்களைக் கொடுத்தார், இவரை தென் ஆப்பிரிக்கா நினைக்கும் அளவுக்கு அடித்து ஆட முடியவில்லை.

அவர் வலது கையை நன்றாக தன்னிலிருந்து விலகி ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு விதமாக வீசுகிறார், நன்றாக நிமிர்ந்து வீசுகிறார், சாதாரண நிலையில் விசுகிறார், சில பந்துகளை நன்றாகக் குனிந்து வீசுகிறார்.

இதை வர்ணனை அறையில் இருந்த சுனில் கவாஸ்கர், ‘ஸ்ட்ரீட் ஸ்மார்ட் கிரிக்கெட் வீரர் ஜாதவ்’ என்று வர்ணித்ததோடு,  அவரது பந்து வீச்சு பாணி குறித்து "Below sea level?" அதாவது எவ்வளவு குனிவார் அவர், கடல் மட்டத்துக்கும் கீழா என்று சுனில் கவாஸ்கர் சிரித்தபடியே வர்ணித்தது ருசிகரமாக அமைந்தது.

கேப்டன் டுபிளெசிஸ் 64 ரன்களுடனும் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணியில் சாஹல், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பும்ரா ஆம்லாவை எல்.பி.ஆக்கினார்.

http://tamil.thehindu.com/sports/article22623505.ece?homepage=true

  • தொடங்கியவர்

கோலி சதத்தை 'இன்ஸ்டாகிராமில்' கொண்டாடிய அனுஷ்கா சர்மா

 

 
anushka-sharma-insta-story

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தவுடன், அவரின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு தனது பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

"ரொமான்டிக் ஜோடி"யாக விராட் கோலி, அனுஷ்கா சர்மா வலம்வந்து கொண்டு இருக்கிறார்கள். இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவர்களின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டர்பன் நகரில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி அபாரமாக சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

விராட் கோலி வெற்றி சதம் அடித்தவுடன், தன்னுடைய கணவரை புகழ்ந்து அனுஷ்கா சர்மா 3 விதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

விராட் கோலி பேட் செய்வது போலவும், சதம் அடித்தபின் அவரின் மகிழ்ச்சியையும், இந்தியா வெற்றி பெற்ற காட்சியையும் அனுஷ்கா பதிவிட்டார். அத்துடன், ஆங்கிலத்தில் "வாட் ஏ கை" (What a guy!) என்று அனுஷ்கா கோலியைப் புகழந்து, அன்பின் வெளிப்பாடாக "ஹாட்டின்" குறியீட்டை பதித்து புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் அடித்த 33-வது சதமாகும். தென் ஆப்பிரிக்காவில் அடித்த முதல் ஒருநாள் போட்டி சதமாகும்.

விராட் கோலியும் சதம் அடித்தபோது, அனுஷ்காவை நினைக்க மறக்கவில்லை. செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, விராட் கோலி 150 ரன்களை எட்டினார். அப்போது, தனது ஹெல்மட்டை கழற்றி, தனது கழுத்தில் இருந்த சங்கிலியையும், கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தையும் முத்தமிட்டு அனுஷ்காவுக்கு தனது அன்பை கோலி வெளிப்படுத்தினார். இந்த புகைப்படமும் ரசிகர்களால் பகிரப்பட்டது

http://tamil.thehindu.com/sports/article22631124.ece

  • தொடங்கியவர்

300 ரன்கள் தேவை, பவுலர்களைக் குறை கூறுவது நியாயமல்ல: தெ.ஆ. கேப்டன் டுபிளெசிஸ்

 

 
duplessis

தெ. ஆ. கேப்டன் ஃபா டுபிளெசிஸ்   -  படம். | கெட்டி இமேஜஸ்.

டர்பன் ஒருநாள் போட்டி தோல்வி குறித்து சதமெடுத்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ், கூடிய மட்டும் இந்தியா இலக்கை எட்டுவதை கடினமாக்கினோம் என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, ரஹானேயின் அபார கூட்டணியில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் சற்று எளிதாகவே வென்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் தோல்விக்கு பவுலர்களைக் குறைகூறுவது நியாயமாகாது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:

ஒரு பேட்டிங் அணியாக 2-வது அதிகபட்ச ஸ்கோர் 30-40 என்றிருப்பது கூட்டணி ரன் சேர்ப்பு அதிகம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டின் அடிப்படையே கூட்டணியாக ரன்கள் சேர்ப்பதே.

இந்திய ஸ்பின்னர்கள் நன்றாக வீசினர், இருப்பினும் நாம் இன்னும் சிறப்பாக அவர்களை ஆடியிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

நிச்சயம் 300 ரன்கள் தேவை. இந்தப் பிட்சில் 269 ரன்கள் போதாது. இங்கு ஆடிய கடந்த 2 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தே வெற்றி பெற்றோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 370 ரன்களை வெற்றிகரமாக துரத்தினோம். எனவே பவுலர்கள் மீது குறைகூறுவது நியாயமாகாது.

பிட்ச்சின் தன்மை, பவுலர்கள் இந்திய பேட்ஸ்மென்களை வீழ்த்த எடுத்துக் கொண்ட முயற்சி அவர்களுக்கு சற்று கடினப்பாட்டை அளித்தது. களவியூகத்தை எப்படியும் மாற்றிப்பார்த்தேன், ஆனால் கோலி, ரஹானே மிகச்சிறப்பாக ஆடினர். 60-70 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் பவுலர்களுக்கு எளிதாக அமைந்திருக்கும்.

இந்த அணியில் குல்தீப் யாதவ், சாஹலை அதிகம் பேர் எதிர்கொண்டதில்லை, ஐபிஎல் போட்டிகளில் சிலர் எதிர்கொண்டிருக்கலாம், புதிர் ஸ்பின்னோ, ரிஸ்ட் ஸ்பின்னோ ஒன்றிரண்டு போட்டிகள் ஆடினால்தான் அவர்கள் கையின் நிலை, பந்தின் தையல் நிலை ஆகியவற்றுக்கு பழக முடியும்.

இந்தத் தோல்விக்குப் பிறகு நிறைய ஆலோசனைகளை மேற்கொண்டோம். 2-வது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மேலும் சிறப்பாக ஆடுவோம்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்

 

 

கோலி, ரஹானே, குல்தீப் யாதவ், சாஹல்: டர்பன் ஒருநாள் போட்டி சாதனைத் துளிகள்

 

 
kuldeep

சாஹல், குல்தீப் யாதவ்.   -  படம். | விவேக் பெந்த்ரே.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பன் மைதானத்தில் நேற்று ஸ்பின்னர்கள் மற்றும் விராட் கோலி சதம், ரஹானே அரைசதம் ஆகியவற்றினால் இந்தியா அபாரமான ஒரு வெற்றியை ஈட்டியது.

இதில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இலக்கு விரட்டல் புகழ் விராட் கோலி இலக்கை துரத்தும் போது தனது 20-வது சதத்தை அடித்தார், இதில் 18 சதங்கள் வெற்றிச்சதமாகும். மொத்தம் இதுவரை 33 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்காவில் இவரது முதல் ஒருநாள் சதம்.

இதன் மூலம் கோலி ஆடிய ஒவ்வொரு நாட்டிலும் சதங்களை எடுத்துள்ளார். இந்தியா உட்பட ஐசிசி முழு உறுப்பு நாடுகள் ஒன்பதிலும் ஆடியுள்ளார். வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை, மே.இ.தீவுகள், இங்கிலாந்து, நியூஸிலாந்து தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே என்று அனைத்து நாடுகளிலும் சதம் எடுத்துள்ளார் விராட் கோலி.

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூரியா இதே சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மே.இ.தீவுகளில் சதம் எடுத்ததில்லை. ஜெயசூரியா ஜிம்பாப்வேயில் சதம் எடுத்ததில்லை. கோலியும் பாகிஸ்தானில் இன்னமும் விளையாடவில்லை.

குல்தீப் யாதவ், சாஹல்:

டர்பன் போட்டியில் குல்தீப் யாதவ் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சாஹல் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்காவில் இந்திய ஸ்பின்னர்கள் ஒருநாள் போட்டி ஒன்றில் 5 அல்லது அதற்கும் கூடுதலாக விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 2ம் முறை. இருவருமே சேர்ந்து 4 பவுண்டரிகளை மட்டுமே கொடுத்தனர், இதுதான் தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் சரிவுக்குக் காரணமானது.

அஜிங்கிய ரஹானே:

அஜிங்கிய ரஹானே நேற்று ஆக்ரோஷமாக ஆடி 79 ரன்களை எடுத்தார், இது அவருடைய தொடர்ச்சியான 5-வது அரைசதமாகும். இதற்கு முன்னர் ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் எடுத்துள்ளார். கோலி 2012, 2013-ம் ஆண்டுகளில் 5 அரைசதங்களைத் தொடர்ச்சியாக எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1994-ல் 5 அரைசதங்கள் தொடர்ந்து எடுத்துள்ளார். ராகுல் திராவிடும் இதே சாதனையைச் செய்திருக்கிறார்.

கோலியும் ரஹானேவும் நேற்று 3-வது விக்கெட்டுக்காஅக் 189 ரன்களைச் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்குமான 3வது அதிகபட்ச ரன் கூட்டணியாகும் இது. மேலும் மார்டின் கப்தில், ராஸ் டெய்லர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 180 ரன்கள் சாதனையையும் கோலி-ரஹானே கூட்டணி முறியடித்தது.

தென் ஆப்பிரிக்கா 17 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருந்தது, இது 18 ஆகாமல் கோலி படை தடுத்து நிறுத்தியது.

 

 

‘ஜிங்க்ஸ் ஒரு டாப் கிளாஸ் ப்ளேயர்’: அஜிங்கிய ரஹானேவுக்கு கோலி புகழாரம்

 

 
kohli-rahane

கோலி, ரஹனே.   -  படம். | ஏ.எஃப்.பி.

டர்பன் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் 33-வது சதத்துடனும், ரஹானேவுடன் கோலி அமைத்த கூட்டணியிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்த வெற்றியில் ரஹானேயின் ஆட்டம் பற்றி விராட் கோலி ஆட்டம் முடிந்த பிறகு விதந்தோதினார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் விராட் பேசியதாவது:

இது சிறப்பான வெற்றி, தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். டெஸ்டில் பெற்ற வெற்றி உத்வேகத்தை ஒருநாள் போட்டிகளுக்கும் கொண்டு வர விரும்பினோம்.

இந்தப் பிட்சில் தென் ஆப்பிரிக்காவை 270 ரன்களுக்கு மட்டுப்படுத்தினோம். ஜிங்க்ஸ் (ரஹானே) அபாரமாக ஆடினார், அவரது இன்னிங்ஸ் மகிழ்ச்சியளிக்கிறது. ரஹானே ஒரு டாப் கிளாஸ் பிளேயர். இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சு ஒரு பெரிய காரணியாக அமையும் என்பது தெரியும், ரஹானே வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து ஆடுகிறார்.

புவனேஷ் குமார், பும்ராவை நம்பியிருக்கிறோம், முதலில் ஓரிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பது முக்கியம். இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களும் தனித்துவமாக வீசுகின்றனர். அணிக்காக அவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக ஆடுகின்றனர்.

சாஹல், குல்தீப் யாதவ் தைரியமானவர்கள், தைரியமாக வீசுகின்றனர் இதனால்தான் விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். இரண்டு வீரர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவது ஒரு கேப்டனாக எனக்கு தனிச் சிறப்பு வாய்ந்ததாகத் தெரிகிறது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி

 

 

விராட் ஒரு 'கிரேட்டஸ்ட் சேஸர்': மைக்கேல் வான் புகழாரம்

 

 
kohli

கிரிக்கெட்டில் 2-வதாக பேட் செய்து அணியை வெற்றி பெற வைப்பதில் விராட் கோலி 'கிரேட்டஸ்ட் சேஸர்' என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இவர் தவிர ஏராளமான முன்னாள் வீரர்கள் விராட் கோலியின் சதத்தையும், பேட்டிங் திறமையையும் புகழ்ந்துள்ளனர்.

டர்பனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 270 ரன்களை துரத்திய இந்திய அணி 27 பந்துகள் மீதம் இருக்கையில் இலக்கை அடைந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முத்தாய்ப்பாக சதம் அடித்த கேப்டன் விராட் கோலிக்கு ரஹானே 79 ரன்கள் சேர்த்து உறுதுணையாக இருந்தார்.

இருவரின் கூட்டணி 189 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஒரு நாள் தொடரில் விராட் கோலிக்கு இது 33-வது சதமாகவும் அமைந்தது.

2-வது பேட்டிங் செய்து வெற்றியை விரட்டிப் பிடித்த விராட்டின் திறமையை கிரிக்கெட் வீரர்கள் பலரும் ட்விட்டரில் பாராட்டியுள்ளனர்.

மைக்கேல் வான்:

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ட்விட்டரில் பதிவிடுகையில், "விராட் கோலி மீண்டும் தான் சிறந்த சேஸர் என்பதை நிரூபித்துவிட்டார். நான் பார்த்தவரை மிகப்பெரிய சேஸர் விராட் கோலி" எனத் தெரிவித்துள்ளார்.

வி.வி.எஸ்.லட்சுமண்:

ட்விட்டரில் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் வெளியிட்டுள்ள பதிவில், "மிகச்சிறப்பான சேஸிங், அருமையான வீரர் விராட் கோலி. ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சதம் அடித்து கோலி அசத்தியுள்ளார். மிகவும் நெருக்கடியான இந்த போட்டியில் கூட சதம் அடித்துவிட்டு அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக நடந்து செல்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

முகம்மது கைப்:

ட்விட்டரில் முன்னாள் வீரர் முகம்மது கைப் கூறுகையில், "33-வது சதம், மார்டன் மாஸ்டர் விராட் கோலி. சேஸிங் செய்வதில் ராஜா விராட் கோலி" எனப் பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னா:

ட்விட்டரில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை சிறப்பாக இந்தியா தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்த அணியின் உழைப்பால் மிகப்பெரிய வெற்றியை அடைந்து இருக்கிறது. ரன் மெஷின் கோலியின் மற்றொரு ஆர்ப்பரிப்பு சதம். ரஹானேவுடன் சேர்ந்து மற்றொரு சூப்பர் இன்னிங்ஸை கோலி கொடுத்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

அணில் கபூர்:

இந்தி நடிகர் அணில் கபூர் வெளியிட்ட ட்விட்டரில் வாழ்த்துச் செய்தியில், "இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் செயல்பாடு மெருகு ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால்தான் நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். விராட் கோலியையும்கூட. இந்த சீசனை மிகச்சிறப்பாக இந்தியா தொடங்கியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

பிரக்யான் ஓஜா:

ட்விட்டரில் வீரர் பிரக்யான் ஓஜா கூறுகையில், "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி தொடரை கைப்பற்றவாய்ப்பு இருக்கிறது" எனத் தெரிவித்தார்

ஹேமங் பதானி:

ட்விட்டரில் முன்னாள் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஹேமங் பதானி பதிவிடுகையில், "கோலியின் இதுபோன்ற சதமே அவரை உலகளவில் மிகச்சிறந்த வீரராக காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

இவ்வாறு பலரும் கோலியை புகழ்ந்து வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports

  • தொடங்கியவர்

’தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்த அடி’ - காயம் காரணமாகத் தொடரிலிருந்து டு ப்ளசிஸ் விலகல்

 
 

கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு  ப்ளசிஸ் விலகியுள்ளார். 

Duplesis_08349.jpg

 

Photo Courtesy: Twitter/OfficialCSA


தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள்கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தாலும், டர்பனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, ஒருநாள் தொடரை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியின் போது, கை விரலில் காயமடைந்த தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு ப்ளசிஸ், இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். வலது ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், காயத்திலிருந்து அவர் மீண்டுவர 4 முதல் 6 வார காலம் ஆகும் என்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

அவருக்குப் பதிலாக ஃபர்ஹான் பகார்டியன் மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மாற்று விக்கெட் கீப்பராக ஹெயின்ரிச் கிளாசின் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கெதிரான தொடரில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்பதுகுறித்து இன்று (3.2.2018) அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கெனவே, காயம் காரணமாக நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ் முதல் மூன்று போட்டிகளிலிருந்து விலகிய நிலையில், டு  ப்ளசிஸுக்கு ஏற்பட்ட காயம், தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

https://www.vikatan.com/news/sports/115317-injured-du-plessis-out-of-india-series.html

  • தொடங்கியவர்

தடுமாறும் தெ.ஆப்பிரிக்கா: அடுத்தடுத்து விக்கெட் சரிவு

 

 
KULDEEPYADAVjpg

கோப்புபடம்

செஞ்சூரியனில் நடந்து வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

டர்பனில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. புதிய கேப்டன் மார்கிரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் டூப்பிளசிஸ்க்கு பதிலாக ஜான்டோ, ஷம்சி ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

ஹசிம் அம்லா, குயின்டன் டீ காக்  ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் தாங்கள் சந்தித்த முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன்வேகத்தை கூட்டினர். ஓவருக்கு 4 ரன்கள் வீதத்தில் சீராக தென் ஆப்பிரிக்கா சென்றது.

இந்நிலையில், புவனேஷ்குமார் வீசிய 9-வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அம்லா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 39 ரன்களுக்கு முதல் விக்கெட்டை தென் ஆப்பிரிக்கா இழந்தது. அடுத்ததாக கேப்டன் மார்கிரம் களமிறங்கினார்.

இந்த கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. யுவேந்திர சாஹல் பந்துவீச்சில் டீ காக் 20 ரன் சேர்த்திருந்த போது, பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்துஆட்டமிழந்தார். 51-ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது.

அதன்பின் 13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீச வந்தார். இந்த ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது தென் ஆப்பிரிக்கா. குல்தீப் வீசிய முதல் பந்தில், கேப்டன் மார்கிரம் 8 ரன்களைச் சேர்ந்திருந்த போது புவனேஷ்குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த டேவிட் மில்லர் அதே ஓவரின் 5-வது பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் முறையில் வெளியேறினார். இதனால் 51ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தெ ஆப்பிரிக்கா தடுமாறி வருகிறது. 17 ஓவர்கள் முடிவில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

http://tamil.thehindu.com/incoming/article22649427.ece?homepage=true

 

3.png&h=42&w=42

118 * (32.2/50 ov)
 
  • தொடங்கியவர்

''செஞ்சூரியனில் பட்டையைக் கிளப்பிய குல்தீப் - சஹால் ஜோடி!'' - 118 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா

 
 

இந்திய அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களில் ஆட்டமிழந்தது. 

Chahal_16182.jpg

 

Photo: Twitter/ICC

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. அண்மையில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியது. டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். முதல் போட்டியில் களம் கண்ட அதே வீரர்களுடன் இந்திய அணி களம் கண்டது. தென்னாப்பிரிக்கா அணியில் காயம் காரணமாக கேப்டன் டுபிளஸி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரர் மார்க்ரம் கேப்டனாகச் செயல்பட்டார். முதலில் பேட் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் கிடைத்தது. 51 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அடுத்ததுது ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற சூழலில் விளையாடிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்க அணி 32.2 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய சஹால் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், குலதீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சஹால் எடுக்கும் முதல் 5 விக்கெட்டுகள் இதுவாகும். அதேபோல், தென்னாப்பிரிக்க அணி, தனது சொந்த மண்ணில் எடுத்த குறைவான ஸ்கோர் இதுவே.  

https://www.vikatan.com/news/sports/115421-south-africa-sets-119-runs-target-to-india-on-2nd-odi.html

  • தொடங்கியவர்

 

6.png&h=42&w=42

117/1 * (19/50 ov, target 119)
 
  • தொடங்கியவர்

தெ.ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளியது இந்தியா : 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

 

shikhar-dhawan-afpjpg

 

சிகார் தவான்

செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

119 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இந்திய அணி ஓவர்களில் இலக்கை அடைந்தது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

டர்பனில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் பிபெல்கோயாவுக்கு  பதிலாக ஜோன்டோ, ஷம்சி சேர்க்கப்பட்டு இருந்தனர்.

புதிய கேப்டன் மார்கிரம் தலைமையில் தென் ஆப்பிரிக்கா முதல் போட்டியை சந்திப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 32.2 ஓவர்கள் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிகவும் எதி்ர்பார்க்கப்பட்ட தென் ஆப்ரிக்காவின் பேட்டிங் ஏமாற்றமளித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா(23), குயின்டன் டீ காக்(20), டுமினி(25), ஜோன்டோ(25) ஆகியோர் சேர்த்த ரன்களே அதிகபட்சமாகும் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  

தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் எட்டியபோது, அடுத்த ரன்னை எடுப்பதற்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது பரிதாபமாகும்.  

குல்தீப் யாதவ் வீசிய 13வது ஓவரின் முதல்பந்தில்  கேப்டன் மார்கிரம் (8) அதே ஓவரின் 5-வது பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து டேவிட் மில்லர் டக்அவுட் முறையில் வெளியேறினார். இதனால் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா

இதேபோல  99 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அடுத்த 19 ரன்களுக்குள் மீதிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

117 ரன்னில் இருந்து அடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா அணியில் அனுபவம் குறைந்த வீரர்களும், நெருக்கடியான நேரத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் என்ற பெயரும் இன்னும் நீங்கவில்லை என்பதையே காட்டுகிறது. ( ஆங்கிலத்தில் இதை “சோக்கர்ஸ்” என்று தென் ஆப்பிரிக்காவை வழக்கமாக அழைப்பதுண்டு).

32.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

119 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மிகவும் எளிதான இலக்கு என்பதால், ரோகித் சர்மாவும், தவானும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். ரோகித்சர்மா ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து வந்தவேகத்தில் 15 ரன்களில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு தவானுடன் கேப்டன் விராத் கோலி ஜோடி சேர்ந்தார்.

இருவரும் பதற்றம் இல்லாமல் ரன்களை நிதானமாகச் சேர்க்கத் தொடங்கினர். முதல் பவர் ப்ளே ஓவரில் இந்திய அணி 57 ரன்களைச் சேர்த்தது.

மோசமான பந்துகளை மட்டும் தேர்வு செய்து பவுண்டரிகளுக்கு விரட்டிய தவான் 49 பந்துகளில் தனது 23-வது ஒருநாள் அரைசத்தை எட்டினார். அதன்பின் விராட் கோலியும், தவானும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

20.3 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தவான் 51 ரன்களுடனும், கோலி 46 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியைடுத்து 6 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article22650388.ece?homepage=true

  • தொடங்கியவர்

வெற்றி பெற 2 ரன்கள் இருக்கும் போது ‘கேலிக்கூத்து’: உணவு இடைவேளை குறித்த கேலிகள்!

 

 
kohli

வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி, தென் ஆப்பிரிக்க வீரர்கள்   -  படம். | ஏ.எஃப்.பி.

ஞாயிறன்று நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் 118 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வெற்றி பெற ரன்களே தேவை என்ற நிலையில் திடீரென உணவு இடைவேளையை நடுவர்கள் அறிவித்தது புதிய சர்ச்சையைக் கிளப்பியது.

களநடுவர்களான அலீம்தார் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ஆட்ட நடுவர் ஆன்டி பைகிராப்ட் ஆகியோரை டிவி வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஐசிசி விதிமுறைகளின் படியே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய கேலிக்கூத்து என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

முறையான உணவு இடைவேளை நேரத்தில் இந்திய அணி 15 ஓவர்களில் 93/1 என்று வலுவான நிலையில் இருந்தது. இதனையடுத்து நடுவர்கள் 15 நிமிடங்கள் கூடுதல் நீட்டிப்பு செய்தனர், அந்த 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 117/1 என்று வெற்றிக்கு 2 ரன்களே தேவை என்ற நிலையில் இருந்தது.

அப்போதுதான் கோலியின் கடுப்பாகும் விதமாக நடுவர்கள் உணவு இடைவேளைக்குச் செல்வோம் என்று அறிவித்தனர். மைதானத்தில் ரசிகர்கள் கிளம்பத் தொடங்கினர். ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது மைதானத்தில் ரசிகர்கள் ஏறக்குறைய இல்லை எனறு கூற வேண்டும்.

வர்ணனையாளர் மைக்கேல் ஹோல்டிங் கூறும்போது, “கிரிக்கெட்டை இன்னும் விறுவிறுப்பாக்க முயன்றனர், ஆனால் இது முட்டாள்தனமானது.

சேவாக்: “இந்திய பேட்ஸ்மென்களை நடுவர்கள் பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களை நடத்துவது போல் நடத்தினர், ‘லஞ்ச் கே பாத் ஆனா’ (உணவு இடைவேளைக்குப் பிறகு வாருங்கள்).

மைக்கேல் வான்: கிரிக்கெட்டின் பைத்தியக்காரர்கள். வெற்றிக்கு 2 ரன்கள் இருக்கும் போது உணவு இடைவேளை, கொஞ்சம் அறிவுடன் செயல்பட வேண்டும்.

ஆகாஷ் சோப்ரா: ஆர் யு சீரியஸ்? வெற்றிக்கு இந்தியாவுக்கு 2 ரன்கள் இருக்கும் போது உணவு இடைவேளையா. கிரிக்கெட்டுக்கு அதுவே விரோதி.

பிர்தூஸ் மூண்டா (தெ.ஆ.) நன்றாக சாப்பிட்டு விட்டு வந்த தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் கிட்டத்தட்ட ரசிகர்களே இல்லாத நிலையில் 0-2 என்று தோற்றனர். குறைந்தது, அனைவரும் உணவாவது எடுத்துக் கொண்டனரே.

3-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/article22657933.ece?homepage=true

  • தொடங்கியவர்

`மணிக்கட்டில் காயம்’ - இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டிகாக் விலகல்!

 
 

இடது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் டிகாக், இந்திய அணிக்கெதிரான மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Decock_15414.jpg

 

Photo Courtesy: Twitter/OfficialCSA

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் டிவிலியர்ஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், கேப்டன் டு பிளசி கைவிரல் எலும்பு முறிவால் இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து, இளம் வீரர் மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். 

 

இந்தநிலையில், காயம் காரணமாக விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக்கும் காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையி, ``2 வது ஒருநாள் போட்டியின்போது, இடது கை மணிக்கட்டு பகுதியில் டிகாக் காயமடைந்தார். காயத்திலிருந்து அவர் குணமடைய 2 முதல் 4 வாரங்கள் ஆகும். மார்ச் மாதத் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடருக்குள் அவர் காயத்திலிருந்து மீண்டு விடுவார் என்று நம்புகிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது. டுபிளசிக்குப் பதிலாக ஃபர்ஹான் பகார்டியன் மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டபோதே மாற்று விக்கெட் கீப்பராக ஹெயின்ரிச் கிளாசின் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/news/sports/115508-de-kock-ruled-out-of-india-odis-and-t20s-with-wrist-injury.html

  • தொடங்கியவர்

3-ஆவது வெற்றியா ? முதல் வெற்றியா?: இந்தியா- தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

 

 
ravi

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டம் கேப் டவுனில் புதன்கிழமை நடைபெறுகிறது.
மொத்தம் 6 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. எனவே, கேப் டவுன் ஆட்டத்தில் இந்தியா தனது 3-ஆவது வெற்றியையும், தென் ஆப்பிரிக்கா தனது முதல் வெற்றியையும் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளன.
டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியதைப் போல, ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் கண்ட வெற்றியின் மூலமாக ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
கேப் டவுன் வெற்றியானது தொடரை வெல்வதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதுடன், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை புள்ளிகளில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான வித்தியாசத்தை அதிகரிக்க உதவும். மாறாக, இந்தியா இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால், மீண்டும் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்படும்.
இந்தியாவுக்கான சாதகமாக, தென் ஆப்பிரிக்க அணியின் குறிப்பிடத்தக்க வீரர்களான டி வில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிஸ், குவின்டன் டி காக் ஆகியோர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதில் டி வில்லியர்ஸ் 4-ஆவது ஆட்டத்தில் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் டி காக் தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளனர்.
இந்திய அணியை பொருத்த வரையில், டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத ரஹானே, ஒருநாள் ஆட்டத்தில் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம். தவன்-ரோஹித் கூட்டணி அருமையான தொடக்கத்தை தரும் என எதிர்பார்க்கலாம். மிடில் ஆர்டருக்கு கோலி பலம் சேர்க்கிறார். சுழற்பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க வீரர்களை திணறடிக்க யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவும், வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, புவனேஷ்வர் உள்ளிட்டோரும் தயாராக உள்ளனர்.

list.JPG

நியூலேண்ட்ஸில்...
 3-ஆவது ஆட்டம் நடைபெறும் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட் மைதானத்தில், கடந்த 1992 முதல் இதுவரை 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா, 2 வெற்றி, 2 தோல்விகளைப் பதிவு 
செய்துள்ளது.

பலமான பயிற்சியில்...
முதல் 2 ஒருநாள் ஆட்டங்களிலும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சிலேயே தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் சரிந்தன. இரு ஆட்டங்களிலுமாக யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் மொத்தம் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதை தீவிரமாக கருத்தில் கொண்ட தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், செவ்வாய்க்கிழமை வலைப் பயிற்சியின்போது 5 சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/07/3-ஆவது-வெற்றியா--முதல்-வெற்றியா-இந்தியா--தென்-ஆப்பிரிக்கா-இன்று-மோதல்-2858622.html

  • தொடங்கியவர்

3-வது ஒருநாள் போட்டி: தென்ஆப்ரிக்கா அணிக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

 
அ-அ+

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 304 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. #INDvsSA #ThirdODI

 
3-வது ஒருநாள் போட்டி: தென்ஆப்ரிக்கா அணிக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
 
 
கேப் டவுன்:
 
தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
 
201802072038165882_1_indvssa-indiabat._L_styvpf.jpg
 
இதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர்.
 
தவான் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் - கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. அதன்பின் களமிறங்கிய ரகானே 11 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து கோலியுடன், டோனி இணைந்தார். சிறப்பாக விளையாடிய கோலி 119 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரின் 34-வது சதமாகும். மேலும் இந்திய கேப்டன்களாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் 12 சதங்களுடன் கோலி முதல் இடத்திற்கு முன்னேறினார்.
 
201802072038165882_2_indvssa-kohli._L_styvpf.jpg
 
டோனி 10 ரன்களிலும், அவரை தொடர்ந்து கேதார் ஜாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணி 42.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் கோலியுடன், புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாட, கோலி அதிரடியில் இறங்கினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. கோலி 160 ரன்கள் (159 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்ஸர்), புவனேஷ்வர் குமார் 16 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
 
தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில், டுமினி 2 விக்கெட்களும், மோரிஸ், தாகிர், ரபாடா, பெஹலுக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் தென்ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 304 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. #INDvsSA #ThirdODI

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/07203817/1144647/Third-ODI-India-scored-303-for-6-against-South-Africa.vpf

  • தொடங்கியவர்
கோஹ்லி, சகால் அபாரம்; இந்தியா அசத்தல் வெற்றி
  • தொடங்கியவர்

3-வது ஒருநாள் போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

பதிவு: பிப்ரவரி 07, 2018 23:59

 
 

தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. #INDvsSA #ThirdODI

 
 
 
 
3-வது ஒருநாள் போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 
கேப் டவுன்:

தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

201802072359403210_1_8i04fqhq._L_styvpf.jpg

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர்.

தவான் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் - கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. அதன்பின் களமிறங்கிய ரகானே 11 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து கோலியுடன், டோனி இணைந்தார். சிறப்பாக விளையாடிய கோலி 119 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரின் 34-வது சதமாகும். மேலும் இந்திய கேப்டன்களாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் 12 சதங்களுடன் கோலி முதல் இடத்திற்கு முன்னேறினார்.

டோனி 10 ரன்களிலும், அவரை தொடர்ந்து கேதார் ஜாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. கோலி 160 ரன்கள் (159 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்ஸர்), புவனேஷ்வர் குமார் 16 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் டுமினி 2 விக்கெட்களும், மோரிஸ், தாகிர், ரபாடா, பெஹலுக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் தென்ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 304 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும, கேப்டன் மார்க்ராமும் களமிறங்கினர். முதலிலேயே அந்த அணியின் ஆம்லாவை அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார் பும்ரா. இதனால் ஒரு ரன்னில் ஆம்லா வெளியேறினார்.

201802072359403210_2_Untitledabu._L_styvpf.jpg

அவரை தொடர்ந்து களமிறங்கிய டுமினி மார்க்ராமுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி மார்க்ரம் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த டுமினி அரை சதமடித்தார்.

அவரை தொடர்ந்து யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. மேலும், குல்தீப் யாதவும் சஹாலும் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்ரிக்கா வீரர்களை விரைவில் அவுட்டாக்கினர். இதையடுத்து, தென் ஆப்ரிக்கா அணி 40 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக ஆடி சதமடித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் தலா 4 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியுடன் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. #INDvsSA #ThirdODI

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/07235941/1144665/india-beat-south-africa-and-won-by-124-runs-in-thrid.vpf

Bild könnte enthalten: 1 Person, machen Sport, Text und im Freien

  • தொடங்கியவர்

சாஹல், குல்தீப் ஜோடி ஒரு ரன் எடுப்பதைக் கூட சவாலாக்கி விட்டனர்: ஜே.பி.டுமினி

 

 
dumini

டுமினிக்கு எதிராக முறையீடு எழுப்பும் சாஹல், தோனி.   -  படம். | ஏ.பி.

குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் என்ன வீசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளத் திண்டாடும் தென் ஆப்பிரிக்க வீரர்கள், இவர்கள் இருவரையும் எதிர்கொள்ள வித்தியாசமான வழிமுறைகளை ஆலோசித்து வருகின்றனர்.

தொடரில் 3-0 என்று பின் தங்கியுள்ள தென் ஆப்பிரிக்கா தொடரைச் சமன் செய்ய படாதபாடு படவேண்டிய நிலையில், சாஹல், குல்தீப் யாதவ் அந்த அணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்கின்றனர்.

இது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் ஜே.பி.டுமினி கூறும்போது, “தாங்கள் என்ன செய்ய வேண்டிய தேவையுள்ளது என்பதைப் பொறுத்த அளவில் சூழ்நிலைகளை சாஹலும், குல்தீப் யாதவ்வும் அருமையாகக் கணித்தனர். அதாவது என்ன வேகத்தில் வீச வேண்டும், எந்த லெந்தில் வீச வேண்டும் என்று அருமையாகவே கணித்தனர்.

எங்களை சிங்கிள்கள் கூட எளிதாக எடுக்க இருவரும் அனுமதிக்கவில்லை. எங்களில் பலரும் அவர்களது கூக்ளியை சரிவரக் கணிக்கத் தவறினோம். நாங்கள் சரியாக ஆடவில்லை. அவர்களை எதிர்கொள்வதில் வித்தியாசமான வழிமுறைகளை பரிசீலித்து வருகிறோம். அவர்கள் எங்களை அனைத்து விதங்களிலும் முறியடித்து விட்டனர்.

இந்தத் தொடரை நாங்கள் இன்னமும் இழந்து விடவில்லை என்பதே உத்வேகமூட்டும் காரணியாக உள்ளது.

இந்தத் தொடர் முழுதும் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்தோம், அவர்கள் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திட்டமிடல் நல்ல முறையில்தான் இருந்தது, ஆனால் அதனைச் செயல்படுத்துவதில்தான் சோடை போனோம்.

பேட்டிங்கில் கூட்டணிகள் அமைக்க வேண்டும். விராட் கோலி இன்னிங்சைப் பாருங்கள் 100% ஸ்ட்ரைக் ரேட் இல்லை, ஆனால் கடைசியில் தூக்கினார்.

4-வது ஒருநாள் போட்டிக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ் திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். அவர் அணிக்கு திரும்புவது பலவிதங்களில் நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டும் அம்சமாகும்” என்றார் டுமினி.

http://tamil.thehindu.com/sports/article22703254.ece

  • தொடங்கியவர்

வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று 4-வது ஒருநாள் போட்டி: தொடரை வென்று சாதிக்குமா விராட் கோலி குழு- டி வில்லியர்ஸ் வருகையால் தென் ஆப்பிரிக்காவுக்கு பலம்

 

 
10CHPMUVIRAT2

விராட் கோலி   -  AFP

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் வீழ்த்த முடியாத வகையில் ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதன்முறையாக தென் ஆப்பிக்க மண்ணில் ஒருநாள் போட்டித் தொடரை வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேவேளையில் டி வில்லியர்ஸ் வருகையால் தென் ஆப்பிரிக்க அணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கும் இந்திய அணிக்கு, தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றுவதற்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2010-11ம் ஆண்டு தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வெல்லும் வகையில் நெருங்கிச் சென்றது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில் கடைசி இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததால் தொடரை 2-3 என இழந்தது.

இம்முறை விராட் கோலி தலைமையில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1992-93ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று நடைபெறும் 4-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதன்முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வென்று சாதனை படைக்கும். மேலும் ஐசிசி தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தை வலுவாக தக்கவைத்துக் கொள்ளும்.

3-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ஷிகர் தவண் அளித்த பேட்டி ஒன்றில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற நாங்கள் விரும்புகிறோம், 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதும், ஓய்வறையில் திருப்தி அடைந்த சூழல் நிலவவில்லை” என்றார்.

அவர் கூற்றுக்கு இணங்க, 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒரு முறை ஆதிக்க அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் விராட் கோலி தனது 34-வது சதத்தை விளாசினார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு, தொடரின் எஞ்சிய ஆட்டங்களிலும் இதே தீவிர நோக்கத்துடன் விளையாடப் போவதாக கோலி தெரிவித்திருந்தார். அவரது தன்னம்பிக்கைக்கு பின்னால் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி உந்து சக்தியாக இருப்பதும் ஒரு நிதர்சனமான உண்மை. இந்த சுழல் கூட்டணி 3 ஆட்டங்களிலும் 21 விக்கெட்களை வேட்டையாடி உள்ளது.

3-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக வலைப் பயிற்சியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள், உள்ளூரைச் சேர்ந்த 5 ரிஸ்ட் ஸ்பின்னர்களை பந்து வீச செய்து அதி தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பயிற்சிகள் போட்டியின் தினத்தில் இந்திய சுழல் கூட்டணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கவில்லை. அந்த அணியின் தடுமாற்றம் இன்றைய ஆட்டத்தில் மாறக்கூடும் என கருதப்படுகிறது. ஏனெனில் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களிலும் விளையாடாத டி வில்லியர்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். இது தென் ஆப்பிரிக்க அணிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

எனினும் டி வில்லியர்ஸ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதி செய்யவில்லை. 24 மணி நேரத்துக்கு முன்னதாக அவருக்கு உடற் தகுதி பரிசோதனை நடத்தப்படும் என்றும், இதில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதியில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் டி வில்லியர்ஸ் பேட்டிங்கில் 3-வது வீரராக களமிறங்குவார். ஜேபி டுமினி 4-வது இடத்துக்கு தள்ளப்படுவார். அதேவேளையில் டேவிட் மில்லர் அல்லது கயா ஸோண்டோ அணியில் இருந்து நீக்கப்படக்கூடும்.

டி வில்லியர்ஸ் அணிக்கு திரும்பினாலும் எய்டன் மார்க்ரம் தொடர்ந்து அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வழக்கமான பச்சை நிற சீருடைக்கு பதிலாக பிங்க் உடையில் களமிறங்குகின்றனர். மார்பக புற்று நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் போதும் ஒரே ஒரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பிங்க் உடை அணிவது வழக்கம். 2011-ம் ஆண்டு முதல் இதை தென் ஆப்பிரிக்க அணி கடை பிடித்து வருகிறது.

இந்த வகையில் இது 6-வது ‘பிங்க் ஒருநாள் கிரிக்கெட்’ போட்டியாகும். பிங்க் உடையில் விளையாடிய ஆட்டங்களில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்தது கிடையாது. இந்த உடையிலான ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் அபார சாதனை படைத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 44 பந்துகளில் 149 ரன்கள் விளாசி அனைவரையும் வியக்க வைத்திருந்தார். முன்னதாக 2013-ல் இந்தியாவுக்கு எதிராக 47 பந்துகளில் 77 ரன்கள் விளாசியிருந்தார்.

பிங்க் உடைக்கு எதிராக முதன் முறையாக விளையாடிய இந்திய அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு சாதகமான வாண்டரர்ஸ் ஆடுகளத்தில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் ஸ்டெய்ன், மோர்னே மோர்கலுக்கு எதிரான பந்து வீச்சில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா கடுமையாக திணறியிருந்தார். 43 பந்துகளை சந்தித்த அவர், 18 ரன்களே சேர்த்தார். துரதிருஷ்டவசமாக இம்முறையும் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டித் தொடரில் தடுமாறி வருகிறார்.

3 முறை இரட்டை சதங்கள் அடித்து சாதனை புரிந்துள்ள ரோஹித் சர்மா, தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை 11 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் சராசரி 12.10-ஐ மட்டுமே கொண்டுள்ளார். ஒட்டுமொத்த இந்திய அணியில், அவரது பார்ம் மட்டுமே கவலை அளிப்பதாக உள்ளது. எனினும் தொடர்ச்சியாக வெற்றிப் பாதையில் பயணிப்பதால் விளையாடும் லெவனில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கும் முடிவை இந்திய அணி நிர்வாகம் கையில் எடுக்காது என்றே கருதப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ள விராட் கோலி, அணியில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ள வாய்ப்புகள் இல்லை.

வாண்டரர்ஸ் ஆடுகளத்தில் இந்திய அணி 7 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இதில் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்வியும் அடங்கும். அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய அணி 4 ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தது.

மாறாக 3 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. ஆனால் இம்முறை நிலைமை மாறக்கூடும். இரக்கமற்ற வகையில் எதிரணியின் பந்து வீச்சுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி ரன் வேட்டையாடும் விராட் கோலி, அபாயகரமான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் கூட்டணி ஆகியவற்றால் வரலாறு திருத்தி அமைக்கப்படக்கூடும்.

 

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ்பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.

தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, ஏபி டி வில்லியர்ஸ், ஜேபி டுமினி, இம்ரன் தகிர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், லுங்கி நிகிடி, பெலுக்வயோ, ரபாடா, தபராஸ் ஷம்சி, கயா ஸோண்டோ, பெகார்தின், ஹென்ரிச் கிளாசென். - பிடிஐ

 

http://tamil.thehindu.com/sports/article22711452.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.