Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் அடையாளத்தை அழிக்கும் முயற்சி

Featured Replies

தமிழர் அடையாளத்தை அழிக்கும் முயற்சி

 

திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தில் தமிழ் மக்­க­ளு­டைய அடை­யா­ளங்­க­ளையும் இந்து பூர்­வீ­கங்­க­ளையும் அழிப்­ப­திலும் இல்­லாமல் ஆக்­கு­வ­திலும் தொல்­பொருள் திணைக்­க­ளமும் பௌத்த விஹா­ரா­தி­பதிகளும் காட்­டி­வ­ரு­கின்ற அட்­டூ­ழி­யங்­களின் ஒரு­வெளிப்­பா­டுதான் அண்­மையில் மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட சூடைக்­குடா (மத்­த­ள­மலை) திருக்­கு­மரன் ஆல­யத்தில் இடம்­பெற்ற சம்­ப­வ­மாகும்.

போர் மற்றும் சுனாமி கார­ண­மா­க சூடைக்­குடா கிரா­மத்தை விட்டு வெளியே­றிய மக்கள் மீள் குடி­யே­றிய நிலையில் தங்கள் வர­லாற்­றுப்­புகழ் கொண்ட ஆல­யத்தை புன­ர­மைக்­கவும் அருகில் குடி­நீர்­கி­ கி­ண­

றொன்றை நிர்மாணிக்­கவும் ஆலய பரி­பா­லன சபை­யும் ­தொண்­டர்­க­ளும் ­மு­யற்­சி­களை மேற்­கொண்­ட­போது பௌத்த சின்­னங்­களை பாழாக்­கு­கி­றார்கள். தொன்­மை­களை இல்­லாது ஆக்­கப்­பார்க்­கி­றார்கள் என்­ற ­பெ­யரில் அவ்­வா­ல­யத்­தைச் ­சேர்ந்த ஆலய பரி­பா­ல­ன­ச­பைத் ­த­லைவர், செய­லாளர் பொரு­ளாளர் மற்றும் இயந்­திர இயக்­கு­நர்கள் தொழி­லாளர் உட்­பட ஏழுபேர் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

சூடைக்­குடா மத்­த­ள­ம­லையில் அமைந்­தி­ருக்கும் முருகன் ஆல­யத்தின் கும்­பா­பி­ஷேகம் அண்­மையில் இடம்­பெற்­ற­தன்பின் இவ்­வா­ல­யத்தில் பரி­வார மூர்த்­தி­களை பிதிஷ்டை செய்யும் முயற்­சி­களின் முதற்­கட்­ட­மாக அண்­மையில் ஆலய வளா­கத்­துக்குள் பிள்­ளையார் சிலை­யொன்றை அமைப்­ப­தற்கு ஆலய நிர்­வாகம் ஆல­யத்தை துப்­பு­ரவு செய்­ததும் மறு­புறம் உப்­புநீர் மண்­டிக்­கி­டக்கும் இக்­கோ­யி­லுக்கு நந்­நீர்க்­கி­ண­றொன்றை மலை அடி­வா­ரத்தில் தோண்டி நிர்­மா­ணிக்க முயன்­ற­வே­ளை­யில்தான் சேரு­வில பௌத்த விஹா­ரா­தி­பதி பொலிஸில் செய்த முறைப்­பாட்டை அடுத்து தொல்­பொருள் திணைக்­களம் மேற்­படி ஆலய அபி­வி­ருத்­திப்­ப­ணி­க­ளுக்கு தடை விதித்­துள்­ளது.

இவ்­வா­ல­யத்­தி­லுள்ள பௌத்த தொன்மை சான்று அடை­யா­ளங்­களை ஆலய நிர்­வா­கமும் அங்­குள்ள தமிழ் குடி­மக்­களும் அழிக்க முற்­ப­டு­கி­றார்கள். அநு­ரா­த­புர தொன்­மைசார் அடை­யா­ளங்கள் இங்­குள்­ளன. பௌத்த விஹா­ரை­யொன்று இங்­கி­ருந்­த­மைக்­கான அடை­யா­ளங்கள் உள்­ளன. எனவே முருகன் ஆலய அபி­வி­ருத்­திப்­ப­ணிகளை தடுத்து நிறுத்­தப்­ப­ட­வேண்­டு­மென தொல் பொருள் திணைக்­க­ளத்­துக்கு விஹா­ரா­தி­பதி செய்த முறைப்­பாட்­டைத்­தொ­டர்ந்தே ஆலய அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் தடுத்து நிறுத்தப்­பட்­ட­துடன் கடந்த 19 . 12. 2017 இல் மூதூர் நீதி­மன்­றினால் தடை­யுத்­த­ரவும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதுவொரு­ பு­ற­மி­ருக்க வருடம் பிறந்த முதல் நாள் 1.1.2018 மூதூர் ­பொ­லிஸார் சூடைக்­குடா திருக்­கு­மரன் ஆலய தலைவர் சி. ஜெக­தீஸ்­வ­ரன், ­செ­ய­லாளர் தெ.நிஜந்தன் பொரு­ளாளர் இ. சந்­தி­ர­மோகன் உட்­பட ஏழு பேர் கைது செய்­யப்­பட்டு ஜன­வரி 11 ஆம் ­தி­கதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டிருந்தனர். இவர்கள் பௌத்த தொன்­மை­க­ளுக்கு சேதம் விளை­விக்க முயன்­றார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­க­ளுக்கு பிணை ­வ­ழங்­க­ மு­டி­யாத அள­வுக்கு குற்­றங்கள் சுமத்­தப்­பட்ட­ன என்ற கவ­லையை ஆலய அடி­ய­வர்களும் பரி­பா­லன சபை­யி­னரும் தெரி­வித்­தனர்.

இவ்­வா­ல­யத்தை பௌத்­த­ம­ய­மாக்­கு­வ­தற்கும் விஹ­ாரை­யொன்றை அமைப்­ப­தற்­கு­மான முயற்­சிகள் 2014 ஆம் ஆண்­டி­லி­ருந்தே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­ற­போதும் மக்­களின் கடு­மை­யான எதிர்ப்­பின்­கா­ர­ண­மாக அது கைவி­டப்­பட்­டி­ருந்­போதும் தற்­போது அது வேறு ஒரு ரூபத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டதன் மாற்று வடி­வமே இந்த தொல்­பொருள் நாட­க­மாகும். இந்த நாட­கத்­துக்கு தலைமை தாங்கும் சேரு­வில பௌத்த பீட­மா­னது இன்று நேற்­றல்ல காலா ­கா­ல­மாக திரு­கோ­ண­ம­லைப்­பி­ர­தே­சத்தின் இந்து பூர்­வீ­கங்­களை இல்­லாது ஆக்­க­ ப­ல­வி­த­மான இடைஞ்­சல்­களை செய்து வரு­கி­ற­தென்­பது பல­சம்­ப­வங்­களின் மூலம் நிரூ­பிக்­கப்­பட்ட உண்­மை­யாகும்.

உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரா­க­வி­ருந்த எம். திருச்­செல்வம் புகழ்­பெற்ற திருக்­கோ­ணேசர் ஆல­யத்தை புனி­த­பி­ர­தே­ச­மாக பிர­க­டனம் செய்­வ­தற்­காக 1968 ஆம் ஆண்டு மூவர் அடங்­கிய குழுவை நிய­மித்தார்.இக்­கு­ழுவின் தலை­வ­ராக உச்ச நீதி­மன்ற நீதி­பதி பி.சிறி­ஸ்காந்­த­ராஜா நிய­மிக்­கப்­பட்டார். இலங்கை வர்த்­த­மா­னி­அ­றி­வித்தல் மூலம் 23. 8. 1968 இல் இது தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. இவ்­வ­றி­வித்­த­லா­னது.பேரி­ன­வா­தி­களின் கடும் கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யது.அன்­றைய சேரு­வில பௌத்­த­வி­ஹா­ரா­தி­பதி கோணேசர் ஆல­ய புனி­த­ நகர் குழு நிய­ம­னத்­துக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்தார். இதனால் அமைச்சர் திருச்­செல்­வத்துடன் கலந்­தா­லோ­சிக்­கா­மலே பிர­தமர் டட்­லி­சே­ன­நா­யக்கா திருச்­செ­ல­்வத்­தால் ­நி­ய­மிக்­கப்­பட்ட குழுவை ரத்­துச் ­செய்தார். இதற்­கு­ முழு­மு­தற் ­கா­ர­ண­மா­க­வி­ருந்­தவர் அன்­றைய சேரு­வில விஹா­ரா­தி­பதி. இன்று வரை கோணேசர் ஆலயம் புனித நக­ராக ஆக்­கப்­ப­ட­வில்­லை­யென்­பது உலக இந்­துப்­பெ­ரு­மக்­களால் அறி­யப்­பட்ட விட­ய­மாகும்.

இத்­த­கைய சூழ்­நி­லை­யில்தான் சூடைக்­குடா சம்­ப­வத்தை கடந்த 22. 12. 2017 நேரில் பார்­வை­யி­டச்­சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்­லா­கம குழு­வினர் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­விட்டு இவ்­வா­ல­யத்தில் மத­வ­ழி­பாடு செய்­வ­தற்கு எவ்­வித தடை­யு­மில்லை. ஆனால் புனர்­நிர்­மா­ணப்­ப­ணி­களை மேற்­கொள்­ள­வேண்­டா­மென கூறி­ய­துடன் ஆல­யத்­துக்­க­ருகில் தொல்­பொருள் தட­யங்கள் இருக்­க­லா­மென தொல்­பொருள் திணைக்­களம் ஆராய்ந்து வரு­கி­றது.

அவர்­க­ளது பணி முடி­வ­டை­யு­ம் மட்டும் மற்றும் நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி குறித்த இடத்தில் நீங்கள் எவ்­வித நட­வ­டிக்­கையும் செய்­ய­வேண்­டா­மென ஆலோ­சனை நல்­கிய அதே­வேளை அவ­ருடன் உடன் வந்­த­வாகள் சில வேண்­டாத வேலை­களை செய்­தி­ருப்­பது சமூக வலைத்­த­ளங்­களில் வெளி வந்­துள்­ளது. இதே ஆளுநர் திருக்­கோ­ணேஸ்­வ­ரத்­துக்கு கடந்த 2 ஆம் திகதி தரி­சிக்க சென்­ற­ அவர், கோணேஸ்­வ­ரத்தை ஆசி­யாவின் கேந்­திர நிலை­ய­மா­க­மாற்­றுவேன். சர்வ­தேச நாடு­க­ளி­லி­ருந்து வரும் வெளிநாட்­ட­வர்களின் வசதி கருதி மத அனுஷ்­டா­னங்கள் விசேட­வ­ழி­பா­டுகள் போன்­ற­வற்­றுக்கு ஒழுங்­குகள் செய்­யப்­ப­ட­வேண்­டு­மென கூறி­யுள்ளார். இதில்­க­வ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய விடயம் என்­ன­வெனில் 1968 ஆம் ஆண்டு முதல் ­கோ­ணேஸ்­வரம் புனித நகராக ஆக்­கப்­ப­ட­வேண்­டு­மென உலக இந்­துக்கள் மற்றும் இந்து அமைப்­புக்கள் கோரிக்கை விட்­டு­வ­ரு­கி­ற­போதும் அது கவ­னிக்­கப்­ப­ட­வில்­லை­யென்­பது இந்­துக்கள் அறிந்து கொள்­ள­வேண்­டிய விடயம்.

சூடைக்­குடா மிகப்­ப­ழமை வாய்ந்த தமிழ்க்­கி­ராமம். மூதூ­ருக்­கு­ கி­ழக்கே அமைந்­தி­ருக்கும் ஒரு கடற்­க­ரைக்­கி­ராமம்.இங்கு கெவு­ளியா கலங்­கரை விளக்­கம் (1860) காணப்­ப­டு­கிறது. ஆங்­கி­லேயர் இதற்கு பவுல் பொயின்ற் என்ற பெய­ரைச்­சூட்டி அழைத்து வந்­தி­ருக்­கி­றார்கள். வர­லாற்­றுக்கு முந்­திய காலந்­தொ­டக்கம் கடல் வாணி­பத்­துக்கு பொருத்­த­மான துறை­யாக இது பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வந்­தி­ருக்­கி­றது. கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த குடா­வாக இது இருந்­த­த­னாலோ என்­னவோ போர்த்­துக்­கீசர், ஒல்­லாந்தர் அதன்பின் ஆங்­கி­லேயர் திரு­கோ­ண­ம­லை­யை கைப்­பற்­றிய வேளை­க­ளி­லெல்லாம் இந்த முனை முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­பட்­டி­ருக்­கி­றது.

மத்­தள மலைக்கு ஏன் இப்­பெயர் வந்­தது என்­ப­தற்கு அக்­கி­ராம மக்கள் ஆச்­ச­ரி­ய­மான விளக்­கமொன்றை அளித்­தார்கள். மத்­த­ளம்­போன்ற வடிவில் இம்­மலை அமைந்து. காணப்­ப­டு­வதால் இதற்­கு முன்­னோர்கள் இப் பெயரை சூட்­டி­யுள்­ளனர். இர­வு­ வே­ளை­ களில் இம்­ம­லை­யி­லி­ருந்த மத்­தள ஒலி ­கேட்­ப­தா­கவும் கூறு­கி­றார்கள். இப்­ பி­ரதே­ச த்தை சுற்­றிய பிர­தே­சங்­களில் கோணேசர் ஆல­யத்­துக்கு உரித்­து­டைய திர­வி­யங்கள் பல இடங்­களில் புதைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கல்­வெட்­டுக்­களும் ஏடு­களும் சொல்­கி­ற­தென நம் முன்­னோர்கள் குறிப்­பி­டு­வார்கள் என அக்­கி­ராம மக்கள் சில ஐதீ­கங்­க­ளைத்­தெ­ரி­வித்­தார்கள்.

இக்­கி­ரா­மத்தில் கொடுக்கன் குளம், கொல்­லன்­குளம், மது­ர­வட்­டவன் குளம், பொக்­கையா குளம், பெரிய குளம், புலி­குத்­திய குளம் என பல குளங்கள் இருப்­ப­துடன் ஸ்ரீ விநா­யகர் ஆலயம், புலி­குத்­திய அம்மன் ஆலயம், திருக்­கு­மரன் ஆலயம் என பல ஆல­யங்கள் இருந்­துள்ளன. இதில் மத்­தள மலையில் அமைந்­தி­ருக்கும் திருக்­கு­மரன் ஆல­யத்தின் சிறப்­பென்­ன­வெனில் இக்­குன்­றி­லி­ருந்து கோணேசர் ஆல­யத்தை தரி­சிக்­கக்­கூ­டிய விதத்தில் கொட்­டி­யா­ரக்­கு­டாக்­கடல் பரந்து ரம்­மி­ய­மாக காட்­சி­ய­ளிக்­கி­றது.

கோணேசர் ஆல­யத்தை புனருத்­தா­ரணம் செய்த குளக்­கோட்ட மன்னன் ஆல­யத்­துக்கு வரு­மா­னங்­களை உண்­டாக்­க­ மூதூர் தம்­ப­ல­கமம், திரி­யாய், குச்­சவெளி ஆகிய இடங்­களில் வயல் நிலங்­களை உரு­வாக்கி கந்­த­ளாய்க்­குளம், அல்­லைக்­கு­ளம், வில்­லுக்­குளம் தொடக்கம் சூடைக்­கு­டா­வரை பெரிய சிறிய குளங்­களை உரு­வாக்கி குடி­யி­ருப்­புக்­களை அமைத்து ஒவ்­வொரு இடத்­தி­லி­ருந்தும் விளை­விக்­கப்­ப­டு­கிற தானி­யங்கள், திர­வி­யங்கள், பூஜைப்­பொ­ருட்கள் என்­ப­வற்றை ஆல­யத்­துக்கு சேக­ரிப்­பது வழக்­க­மென்றும். இதில் மூதூர் பிர­தே­சத்தில் விளை­விக்­கப்­படும் தானி­யங்கள் மற்றும் சேக­ரிக்­கப்­படும் திர­வி­யங்­களை இம்­ம­த்­தள மலையில் களஞ்­சி­யப்­ப­டுத்தி இத்­து­றை­யி­னூ­டாக கொண்டு செல்­வ­தாக ஒரு ஐதீ­க­முண்டு.

மூதூர் கிரா­மங்­க­ளான கட்­டை­ப­றிச்சான் சந்­த­ன­வெட்டை எனும் பிர­தே­சங்­களில் விளையும் சந்­த­னக்­கட்­டைகள் மல்­லி­கைத்­தீவில் விளை­விக்­கப்­படும் மல்­லிகை மலர்கள் மற்றும் திர­வி­யங்கள் இம்­மத்­தள மலைக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு இங்­கி­ருந்தே இவை கடல் வழி­யாக வத்­தை­க­ளிலும் கட்­டு­ம­ரங்­க­ளிலும் கோணேசர் ஆல­யத்­துக்கு எடுத்துச் செல்­லப்­ப­டு­வ­தாக வாய்­வழி கதைகள் இன்றும் பேசப்­ப­டு­வது வழக்கம். மத்­தள மலைப்­பி­ர­தே­ச­மா­ன­து­கோ­ணேசர் ஆல­யத்­துக்கு அண்­மித்த இட­மாக காணப்­ப­டு­கின்ற கார­ணத்­தினால் பரந்து கிடக்கும் கொட்­டி­யா­ரக்­கு­டாக்­கடல் ஊடாக தமது முன்­னோர்கள் ஆல­யத்­துக்கு தேவை­யானவற்றை ஏற்­றிச்­செல்லும் வழக்கம் இருந்து வந்­தள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

2004 ஆம் ஆண்டு ஏற்­பட்ட சுனாமி அனர்த்தம் 2006 ஏப்ரல் மாதம் ஏற்­பட்ட இரா­ணு­வத்­தாக்­குதல் கார­ண­மாக இக்­கி­ராம மக்­கள் ­அயல் கிரா­மங்கள் மற்றும் மட்­டக்­க­ளப்பு, இந்­தியா போன்ற இடங்­க­ளுக்கு இடம் பெயர்ந்து சென்­றார்கள். யுத்தம் முடிந்து சுமார் ஐந்து வரு­டங்­க­ளுக்­குப்பின் 2014 ஆம் ஆண்டு மீள் குடி­யேற்­றப்­பட்­டார்கள். சுமார் 86 குடும்­பத்­தினர் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­ட­போதும் வள­முள்ள இவர்­களின் சொந்­தக்­கி­ரா­ம­மான சூடைக்­கு­டாவில் இவர்கள் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை. சூடைக்­கு­டாவை அண்­மிய புறச்­சூ­டாக்­கு­டாப்­பி­ர­தே­சத்தில் குடி­யே­ற­றப்­பட்­டார்கள். இவர்­களின் சொந்த நிலங்கள் படை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­ப­ட்­டி­ருந்­த மண்­வ­ள­மற்ற, நீர்­வ­ள­மற்ற கற்­பா­றைகள் நிறைந்த காடு மண்­டிய கிரா­மத்தில் இவர்கள் திட்­ட­மிட்டு குடி­யேற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்கள் பாரம்­ப­ரி­ய­மாக கடல் தொழிலை செய்து வந்த பிர­தே­சத்­துக்குள் இவர்­க­ளுக்கு தடை­வி­திக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மன்றி 400 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட குடி­யி­ருப்பு நிலங்கள் படை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­துடன் சுமார் 15 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட நிலத்தில் கெவு­ளியா முனை­யோடு அண்­டிய கட­லோரம் கடற்­படை முகாம் அமைக்­கப்­பட்டு அது இது­வரை விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

இதனால் வள­முள்ள கடல் பிர­தே­சத்­துக்­குச்­சென்று கடல் தொழிலை செய்­ய­மு­டி­ய­வில்­லை­யென அம்­மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர். வள­மற்ற பிர­தே­சத்தில் இக்­கி­ராம மக்கள் குடி­யேற்­றப்­பட்­ட­போதும் யாது­மூரே என்ற மனப்­பாங்­குடன் வளப்­ப­டுத்தி ஆல­யத்தை புனர் நிர்­மாணம் செய்ய முற்­பட்­ட­போ­துதான் தொல் பொருள் கெடு­பி­டி­களும் விஹாரை விதைப்­புக்­களும் ஏற்­பட்டு இக்­கி­ரா­மத்­திலும் அயல் கிரா­மங்­க­ளி­லும்­ பதற்ற நிலை­யொன்றை அண்­மைய சம்­பவம் உண்­டாக்­கி­யுள்­ளது.

2009 ஆம் ஆண்­டுக்­குப்பின் திரு­கோ­ண­ம­லை ­மா­வட்­டத்­தில்­ திட்ட மிட்ட முறையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரும்­கெ­டு­பி­டிகள் இப்­ பி­ர­தே­சத்தின் அமை­தி­யையும் இன­வு­ற­வு­க­ளையும் வெகு­வா­கப்­பா­தித்து வரு­கி­றது என்­பது ஒரு கவலை தரு­கின்ற விட­ய­மாகும். தமிழ் மக்­களின் அடை­யா­ளங்­க­ளாக விளங்­கு­கின்ற இடங்­களை இல்­லாது ஒழிப்­ப­தற்கும் இந்து பாரம்­ப­ரிய தட­யங்­களை துவம்ஷம் செய்­வ­தற்கும் பல்­வேறு முயற்­சிகள் தீவிரமாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­ற­தென்­ப­தற்கு அண்­மையில் நடந்த சம்­பவம் இன்­னொரு உதா­ர­ண­மாகும். மூதூ­ருக்கும் சேரு­வில பிர­தே­சத்­துக்கும் எல்­லைக்­கி­ரா­ம­மாக அமைந்­தி­ருக்கும் லிங்­க­பு­ரத்­தி­லி­ருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் காட்­டுப்­பு­றமாக திரு­மங்­க­லாய்க்­கி­ரா­மத்தில் தொன்மை வாய்ந்த சிவன் ஆல­ய­மொன்று இருந்­தி­ருக்­கி­றது. அண்­மையில் இவ்­வா­ல­யத்­தை ­பு­ன­ர­மைக்க அக்­கி­ரா­மத்­தைச் ­சேர்ந்த பூர்­வீக குடி­களின் பரம்­ப­ரை­யினர் முற்பட்டபோது கொழும்புக்கு அனுப்பப்பட்ட இரகசிய தகவலை அடுத்து தொல்பொருள் திணைக்களத்தினர் அபிவிருத்தி பணிகளை நிறுத்தியது மாத்திரமன்றி அவ்வாலய வளவை தோண்ட முற்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி சில இடங்களை எல்லைப்படுத்தி தொல்பொருள் ஆய்வு செய்யப்போவதாக எச்சரித்து கோயில் புனருத்தாரணபணிகளை இடை நிறுத்தியுள்ளனர் . இது தொடர்பில் ஆலயத்தலைவர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இவ்வாலய வளவில் கண்டெடுக்கப்பட்ட நான்கு கல்வெட்டுக்கள் தொடர்பாக ஆரய்ந்த பேராசிரியர் புஸ்பரட்ணம் இவ்வாலயம் 2000 வருடம் பழமை வாய்ந்ததென்றும் சிங்கபுர மன்னன் என்பவன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளான் என்றும் கோயிலுக்கு தானம் செய்த தகவல்கள்இக்கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோன்றே கும்புறுப்பிட்டி செம்பீஸ்வர ஆலய திருப்பணிகளும் தொல்பொருள் தடயங்கள் சிதைக்கப்படுகிறதென்ற காரணம் காட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.வரலாற்றுப்புகழ்கொண்ட கல்லடி மலைநீலியம்மன் ஆலயம் அண்மையில் சதிகாரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் வெருகல் பிரதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வெருகல் பிரதேசத்தில் அமைந்திருக்கும் மலை நீலியம்மன் பலநூற்றாண்டு காலமாக மலையின் உச்சியில் அமைந்திருந்ததாகவும் யுத்தத்தின்பின் அங்குள்ள அம்மன் ஆலயம் அகற்றப்பட்டு விஹாரையொன்று நிறுவப்பட்ட நிலையில் அந்த அம்மனின் விக்கிரகத்தை அடியார்கள் மலையடிவாரத்தில் வைத்து பூசித்து வந்த நிலையிலேயே அவ்வாலயம் தீயிட்டு அழிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இவ்வாறு தமிழர்தம் அடையாளங்களையும் இந்து பூர்வீகங்களையும் அழித்து திருகோணமலைப் பிரதேசத்தை பௌத்தமயமாக்கும் நிலைமைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் முடிவு காணவேண்டும். இல்லையாயின் மீண்டும் நம்தேசம் அமைதியை இழக்கும் சூழ்நிலையே உருவாகும்.

கோணமலையான்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-01-27#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.