Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் எதிர் இலங்கை டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு
Cover-10-1.jpg

இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு

 
 

கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க அணியுடனான தொடரையடுத்து பல அதிர்ச்சியான முடிவுகளையும் சந்திக்க நேரிட்டது. இதில் அவ்வணியின் வெற்றிக்காக அரும் பணியாற்றி வந்த தலைமைப் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் திடீர் பதவி விலகலானது அவ்வணியை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியது.

எனினும், 2018ஆம் ஆண்டில் அவ்வணி பங்கேற்ற முதல் தொடராக இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற்று வருவதுடன், நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்நிலையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் இன்று (26) அறிவிக்கப்பட்டது.

இதில் 4 முதல் தரப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள 17 வயதான வலதுகை சுழல் பந்துவீச்சாளரான நயீம் ஹசன் முதற்தடவையாக பங்களாதேஷ் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது நியூசிலாந்தில் நடைபெற்றுவருகின்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர் பங்களாதேஷ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இந்திய இளையோர் அணிக்கெதிராக இன்று நடைபெற்ற தீர்மானமிக்க உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் அவர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

 

முன்னதாக கடந்த வருட இறுதியில் மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடியிருந்த நயீம் ஹசன், மலேஷியாவுடனான போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hassan-nayim-200x300.jpgஇந்நிலையில், டெஸ்ட் குழாமுக்கு முதற்தடவையாக இளம் வீரர் நயீம் ஹசன் அழைக்கப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு தெரிவுக்குழுவின் தலைவர் மின்ஹாஜுல் ஆப்டீன் கருத்து வெளியிடுகையில், ”தற்போது நடைபெற்றுவருகின்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் விளையாடி வருகின்ற நயீம் ஹசனை மேலதிக சுழல் பந்துவீச்சாளராக டெஸ்ட் அணிக்கு அழைத்துள்ளோம். அவருடைய அண்மைக்கால திறமைகளை நாம் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம். எனவே பங்களாதேஷ் அணிக்கு அவருடைய பங்களிப்பு உதவியாக இருக்கும் என நாம் நம்புகிறோம். எனவே இந்திய அணியுடனான காலிறுதிப் போட்டிக்குப் பிறகு அவர் நாடு திரும்பவுள்ளார்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அவ்வணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் மேற்பார்வையின் கீழ் பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் அண்மைக்காலமாக தொடர்ந்து விளையாடி வந்த அனுபவமிக்க ஒரு சில வீரர்களுக்கு டெஸ்ட் குழாமில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணியில் இடம்பெற்றிருந்த சுபாசில் ரோய், சௌமியா சர்கார், சபிர் ரஹ்மான், சபியுல் இஸ்லாம் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகியோரை பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இருந்து நீக்குவதற்கு அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீரர்களில் சுபாசில் ரோய் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகியோர் கடந்த வருடம் நடைபெற்ற இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் போது சிறப்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தற்போது நடைபெற்றுவருகின்ற பங்களாதேஷ் உள்ளுர் போட்டிகளில் விளையாடி வருகின்ற சகலதுறை ஆட்டக்காரரான மொசாதிக் ஹொசைன் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். முன்னதாக அவர் பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸ் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும், தற்போது நடைபெற்று வருகின்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் உபாதை காரணமாக விளையாடாமல் இருந்த இம்ருல் கைஸ், முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இலங்கை அணியுடன் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கான பங்களாதேஷ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை அணிக்கெதிராக இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் அணித்தலைவராக சகலதுறை வீரர் சகிப் அல் ஹசனை மீண்டும் நியமிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த மாதம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி பங்களாதேஷ் அணியின் 9ஆவது தலைவராக சகீப் அல் ஹசன் செயற்படவுள்ளார்.

 

முன்னதாக, கடந்தவருட முற்பகுதியில் இலங்கை அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தின் போது பங்களாதேஷ் டி20 அணியின் தலைவராகச் செயற்பட்ட மஷ்ரபி முர்தசா, டி20 அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து சகீப் அல் ஹசனை டி20 அணித் தலைவராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

சகலதுறை வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கின்ற 30 வயதான சகீப் அல் ஹசன், இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3594 ஓட்டங்களையும், 188 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2009 முதல் 2011 வரையான காலப்பகுதியில் பங்களாதேஷ் அணியின் தலைவராகக் கடமையாற்றிய சகிப் அல் ஹசன், குறித்த காலப்பகுதியில் 9 போட்டிகளுக்கு மாத்திரம் தலைமை தாங்கிய அவர், மேற்கிந்திய தீவுகளுடனான போட்டித் தொடரை மாத்திரம் வெற்றிகொண்டார். எனினும், 2011இல் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பெற்றுக்கொண்ட தோல்வியினை அடுத்து அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதேவேளை பங்களாதேஷ் அணியின் உபதலைவர் பதவியிலிருந்த தமீம் இக்பால் நீக்கப்பட்டு, அவரின் இடத்துக்கு மஹமதுல்லா ரியாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் டெஸ்ட் குழாம்

சகிப் அல் ஹசன் (தலைவர்), மஹ்முதுல்லா ரியாத் (உபதலைவர்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், மொஸாதிக் ஹொசைன், தஜிஉல் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான், கம்ருல் இஸ்லாம் ரப்பி, மெஹிதி ஹசன் மீராஸ், ருபெல் ஹொசைன், நயீம் ஹசன்

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் 4 வருடங்களின் பின் இணையும் நட்சத்திர வீரர்

razzak-696x419.jpg
 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரசாக் சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷ் டெஸ்ட் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 3ஆவது தடவையாகவும் மாற்றியமைக்கப்பட்ட டெஸ்ட் அணிக் குழாமை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நேற்று(28) அறிவித்துள்ளது.

 

அவ்வணியின் நட்சத்திர வீரரும், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் முதல் புதிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டவருமான சகிப் அல் ஹசன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முற்பட்ட வேளையிலே மைதானத்தில் விழுந்து உபாதைக்குள்ளானார்.    

கைவிரலில் ஏற்பட்ட திடீர் உபாதை காரணமாக உடனே அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவருக்கு எதிர்வரும் 3 வாரங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து சகிப் அல் ஹசன் விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக அனுபவமிக்க வீரரான 35 வயதுடைய அப்துர் ரசாக்கை அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அப்துர் ரசாக் கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இறுதியாக விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து சுமார் 4 வருடங்களாக அவர் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்களாதேஷ் அணிக்காக விளையாடவில்லை.

 

எனினும், தற்போது நடைபெற்று வருகின்ற பங்களாதேஷ் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகின்ற அப்துர் ரசாக், பங்களாதேஷ் அணி சார்பில் முதற்தர போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையையும் கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

அத்துடன், கடந்த பருவகாலத்தில் 9 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 40 விக்கெட்டுக்களையும் அவர் கைப்பற்றியிருந்தார். 2006ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அப்துர் ரசாக், இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

எனினும், பங்களாதேஷ் உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களைக்(244) கைப்பற்றிய வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற அப்துர் ரசாக், எந்தவொரு உடற்தகுதி பரிசோதனைகளுக்கும் முகங்கொடுக்காமல் நேரடியாக டெஸ்ட் குழாமுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம் பங்களாதேஷ் உள்ளூர் போட்டிகளில் 94 விக்கெட்டுக்களை வீழ்த்தி 2ஆவது இடத்தில் உள்ள மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான சுன்சமுல் இஸ்லாம் மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான தன்பிர் ஹைதர் ஆகியோரையும் முதற்தடவையாக டெஸ்ட் அணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

முன்னதாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் கடந்த 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

 

இதில் 4 முதல்தரப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள, தற்போது நியூசிலாந்தில் நடைபெற்றுவருகின்ற, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடிய 17 வயதான வலதுகை சுழற்பந்து வீச்சாளரான நயீம் ஹசன் முதற்தடவையாக பங்களாதேஷ் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  

இதேநேரம், தற்போது நடைபெற்றுவருகின்ற பங்களாதேஷ் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்ற சகலதுறை ஆட்டக்காரரான மொசாதிக் ஹொசைன் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த வருடம் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸ் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  

இதேவேளை சகிப் அல் ஹசன் உபாதைக்குள்ளாகியுள்ளதால் பங்களாதேஷ் அணியை மஹமதுல்லா ரியாத் வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான பங்களாதேஷ் குழாம்

மஹ்முதுல்லா ரியாத்(தலைவர்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், மொஸாதிக் ஹொசைன், தஜிஉல் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான், கம்ருல் இஸ்லாம் ரப்பி, மெஹிதி ஹசன் மீராஸ், ருபெல் ஹொசைன், சுன்சமுல் இஸ்லாம், தன்பிர் ஹைதர், நயீம் ஹசன்

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் முதலில் துடுப்பாட்டம்

பங்களாதேஷ் முதலில் துடுப்பாட்டம்

 

 
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி பங்களாதேஷின் சிட்டகொங் நகரில் இடம்பெறுகின்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=99652

  • தொடங்கியவர்

பங்களாதேஷுக்காக மொமினுல், ரஹீம் முதல் நாளில் சாதனை இணைப்பாட்டம்

Sri Lanka vs Bangladesh
 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் அபார இணைப்பாட்டத்துடன் (236) பங்களாதேஷ் அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

 

பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அங்கு நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அடுத்து பங்களாதேஷ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. தொடரின் முதல் போட்டி சிட்டகொங்  நகரின் ஷாஹூர் அஹ்மட் செளத்ரி மைதானத்தில் இன்று (31)  ஆரம்பமாகியிருந்தது.

நடைபெற்று முடிந்த முக்கோண ஒரு நாள் தொடரில் பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் சகீப் அல் ஹஸன் காயமுற்றிருந்ததை தொடர்ந்து இப்போட்டியில் பங்களாதேஷை வழிநடாத்த நியமிக்கப்பட்டிருந்த மஹ்மதுல்லா இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

இலங்கையின் இறுதி இரண்டு டெஸ்ட் சுற்றுப்பயணங்களிலும் அணிக்குள் உள்வாங்கப்பட்டிராத  வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவிற்கு இன்றைய போட்டிக்கான இலங்கை குழாத்தில்  வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை, பங்களாதேஷ் அணி சுழல் வீரரான சுன்சமுல் இஸ்லாமை இந்த ஆட்டம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்திருந்தது.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு ஏற்ப பங்களாதேஷ் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்ப வீரர்களான தமிம் இக்பால் மற்றும் இம்ருல் கைஸ் ஆகியோருடன் தொடங்கியிருந்தது.

ஒரு நாள் போட்டிகள் போன்று ஓட்டங்கள் சேர்த்து பங்களாதேஷ் அணிக்கு சிறந்த துவக்கம்  ஒன்றினை தந்த ஆரம்ப வீரர்களில் ஒருவரான தமிம் இக்பாலினை, சுழல் வீரரான தில்ருவான் பெரேரா எதிரணியின் முதல் விக்கெட்டாக போல்ட் செய்தார். ஆட்டமிழக்கும் போது தமிம் 53 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இதனையடுத்து ஏனைய ஆரம்ப வீரர் இம்ருல் கைஸ் மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த மொமினுல் ஹக்குடன் சேர்ந்து பெறுமதியான இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டம் (48) ஓன்றுடன் 40 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில் சந்தகனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் அணியின் இரண்டாம் விக்கெட்டோடு போட்டியின் மதிய போசண இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது.

மதிய போசணத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் புதிய துடுப்பாட்ட வீரராக முஷ்பிகுர் ரஹீம் மற்றும் களத்தில் நின்ற மொமினுல் ஹக் ஆகியோர் அதிரடி கலந்த நிதானத்தோடு மூன்றாம் விக்கெட்டுக்காக வலுவான இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்ப தொடங்கினர்.

இந்த இணைப்பாட்டத்துக்கு மொமினுல் ஹக் தனது 5ஆவது டெஸ்ட் சதத்தின் மூலம் நங்கூரம் போட முதல் நாளின் தேநீர் இடைவேளையை வெற்றிகரமாக பங்களாதேஷ் அணி எடுத்துக் கொண்டது.  

தேநீர் இடைவேளையின் பின்னர் ரஹீமும்,மொமினுல் ஹக்கும் தொடர்ச்சியாக பெறப்பட்ட ஓட்டங்கள் மூலம் பங்களாதேஷ் அணிக்காக மூன்றாம் விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டத்தினை (157) தாண்டி புதிய மைல்கல் ஒன்றினை நிலைநாட்டினர். இந்த இணைப்பாட்டத்தின் போது பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளரான ரஹீம் தனது 29 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பலமான முறையில் கட்டியெழுப்பட்டிருந்த இவர்களின் இணைப்பாட்டத்தினை தகர்ப்பது இலங்கை அணிக்கு மிகவும் சிரமமாக அமைந்திருந்தது. இரண்டு வீரர்களும் தொடர்ந்து இரட்டைச்சத இணைப்பாட்டத்தினை தாண்டினர். இதன்போது, தனிநபராக மொமினுல் ஹக் 150 ஓட்டங்களினை கடந்திருந்தார்.

இன்றைய போட்டியின் 80ஆவது ஓவருக்கு பின்னர் எடுக்கப்பட்ட புதிய பந்தின் மூலம் சுரங்க லக்மால் இலங்கை அணிக்கு நெருக்கடியாக அமைந்த இந்த இணைப்பாட்டத்தினை இறுதியில் முஷ்பிகுர் ரஹீமின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த ரஹீமுக்கு துரதிஷ்டவசமாக சதத்தினை பூர்த்தி செய்ய முடியாமல் போயிருந்தது.  

236 ஓட்டங்கள் வரையில் நீடித்த பங்களாதேஷின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டத்தினை நிறைவு செய்த லக்மால், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த லிடன் தாசினையும் எந்தவித ஓட்டமும் பெறவிடாது அடுத்த பந்தில் போல்ட் செய்திருந்தார். முதல் நாளின் இறுதி நேரத்தில் துரிதகதியில் பறிபோயிருந்த இந்த இரண்டு விக்கெட்டுக்களுமே இலங்கை அணிக்கு ஆறுதல் தந்திருந்தது.

இந்த விக்கெட்டுக்களை பறிகொடுத்த காரணத்தினால் ஒரு சிறிய தடுமாற்றத்தை பங்களாதேஷ் உணர்ந்தது. இதன் காரணமாக புதிய துடுப்பாட்ட வீரரான அணித்தலைவர் மஹ்மதுல்லா, மொமினுல் ஹக் ஆகியோர் தொடர்ந்து பொறுமையான முறையில் ஓட்டங்கள் சேர்க்க தொடங்கினர்.

இவர்களின் சிறிய இணைப்பாட்டத்தோடு போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவை எட்டிக் கொண்டது. போட்டியின் முதல் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி 90 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 370 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சில்  சிறந்த நிலையில் காணப்பட்டிருந்தது.

களத்தில் மொமினுல் ஹக் 175 ஓட்டங்களுடனும், மஹ்மதுல்லா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

இலங்கை அணியின் இன்றைய நாள் பந்துவீச்சில் சுரங்க லக்மால் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், லக்ஷான் சந்தகன் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

 

ban-bat-test.png

sl-bowl-test.png

 

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 513

 

 

சிட்டகொங்கில், இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 513 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தது.

2_Cricket.JPG

நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் அவ்வணி நான்கு விக்கட்கள் இழப்புக்கு 374 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சிறப்பாக விளையாடிய இளம் வீரர் மொமினுல் ஹக் 176 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்திருந்தார்.

முஷ்ஃபிக்குர் ரஹீம் சதத்தைத் தொட எட்டு ஓட்டங்கள் எஞ்சியிருந்த நிலையில் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் திக்வெல்லயிடம் பிடி கொடுத்து பரிதாபமாக ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் சீரான இடைவெளியில் விக்கட்கள் விழுந்தவண்ணமிருந்தன.

எனினும் பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹ்முதுல்லா நேர்த்தியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் ரங்கன ஹேரத், சுரங்க லக்மால் தலா மூன்று விக்கட்களை வீழ்த்தினர்.

தனது முதலாவது இனிங்ஸைத் தற்போது ஆட ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

ஆரம்ப ஆட்டக்காரரான திமுத் கருணாரத்ன ஒன்பது பந்துகளை எதிர்கொண்டு ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார்.

தற்போது, குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்கின்றனர்.

http://www.virakesari.lk/article/30172

  • தொடங்கியவர்

2 ஆம் நாள் ஆட்ட முடிவில் நிதானமாக ஆடும் இலங்கை அணி

 

2 ஆம் நாள் ஆட்ட முடிவில் நிதானமாக ஆடும் இலங்கை அணி


பங்களாதேஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 187 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பங்களாதேஸில் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முன் இலங்கை, ஜிம்பாபே மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதிய முத்தொடர் போட்டியின் இறுதி போட்டியில், இலங்கை அணி பங்களாதேஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்நிலையில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்று மற்றும் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஸ் அணி 129.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதலாவது இனிங்சில் களமிறங்கிய இலங்கை அணி 2 ஆம் நாள் ஆட்ட நேரம் முடியும் வரை 48 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பங்களாதேஸ் அணியின் 513 ஓட்டங்கள் குவிப்புக்கு எதிராக இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 127 பந்துகளில் 104 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார். தொடர்ந்து நாளை 3 ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி துடுப்பாடவுள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/srilanka-vs-bangladesh-first-test-2nd-day

8.png&h=42&w=42

187/1 * (48 ov)
  • தொடங்கியவர்

தனன்ஞய, குசலின் சிறப்பாட்டத்தால் இரண்டாம் நாளில் இலங்கை ஆதிக்கம்

AP-4-696x464.jpg Photo - Associated Press
 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், பங்களாதேஷின் இமாலய முதல் இன்னிங்சினை (513) அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி தனன்ஜய டி சில்வா, குசல் மெண்டிஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தோடு உறுதியான நிலையில் காணப்படுகின்றது. 

 

நேற்று சிட்டகொங்கில் தொடங்கிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடியிருந்த பங்களாதேஷ் அணி, போட்டியின் முதல் நாள் நிறைவில் 374 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. பங்களாதேஷ் அணியின் ஸ்திர நிலைக்கு காரணமான மொமினுல் ஹக் 175 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் மஹ்மதுல்லா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த பங்களாதேஷ் அணிக்கு இன்றைய நாள் ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்துக்குள்ளேயே ரங்கன ஹேரத் மொமினுல் ஹக்கின் விக்கெட்டினை சாய்த்து பேரிழப்பு ஒன்றினை ஏற்படுத்தினார். மொமினுல் ஹக் ஆட்டமிழக்கும் போது 214 பந்துகளுக்கு 16 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 176 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தும் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்களை சரிக்கத் தொடங்கியிருந்தனர். எனினும், அவர்களுக்கு அணித்தலைவர் மஹ்மதுல்லாவினை ஓய்வறை அனுப்புவது சிரமமாகவே இருந்தது, மஹ்மதுல்லாவின் ஆட்டத்தோடு பங்களாதேஷ் அணி 500 ஓட்டங்களினை நெருங்கிக் கொண்டது.

மஹ்மதுல்லாவுக்கு சரியான துடுப்பாட்ட ஜோடி ஒருவர் கிடைக்காத நிலையில், பங்களாதேஷ் அணியின் அனைத்து விக்கெட்டுக்களும் இன்றைய நாளுக்கான மதிய உணவு இடைவேளையின் பின்னர் வீழ்த்தப்பட்டிருந்தன. முடிவில், பங்களாதேஷ் 129.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்சில் 513 ஓட்டங்களினை குவித்தது.

இதில் இறுதி வரை ஆட்டமிழக்காது நின்ற மஹ்மதுல்லா 134 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக தனது 15 ஆவது டெஸ்ட் அரைச் சதத்துடன் 83  ஓட்டங்களினை குவித்திருந்தார்.

 

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர். ஹேரத் இந்த டெஸ்ட் மூலம் சர்வதேசப் போட்டிகளில் தனது 500ஆவது விக்கெட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களோடு லக்ஷான் சந்தகனும் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.  

மைதான சொந்தக்காரர்களின் பலமான முதல் இன்னிங்சை அடுத்து இலங்கை வீரர்கள் தங்களுடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை குசல் மெண்டிஸ் மற்றும் திமுத் கருணாரத்னவோடு ஆரம்பித்திருந்தனர்.

ஆரம்ப வீரரான கருணாரத்ன எந்தவித ஓட்டங்களுமின்றி மெஹதி ஹசனின் சுழலில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கருணாரத்னவின் விக்கெட்டோடு பங்களாதேஷ் வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக் கொண்டனர்.

 

அனுபவ வீரர் ஒருவரின் விக்கெட்டினை இழந்த இலங்கை அணியினை கட்டியெழுப்பும் பொறுப்பு களத்தில் நின்ற குசல் மெண்டிசுக்கும், புதிய துடுப்பாட்ட வீரரான தனன்ஜய டி சில்வாவுக்கும் இருந்தது.

இரண்டு வீரர்களும் ஆரம்பத்தில் சிறிது தடுமாற்றத்தினை காட்டியிருந்த போதிலும் படிப்படியாக எதிரணியின் பந்துவீச்சினை சமாளிக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் மேலதிக விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 50 ஓட்டங்களுடன் இலங்கை அணி தேநீர் இடைவேளையினை அடைந்தது.

 

தேநீர் இடைவேளையின் அடுத்து தொடர்ந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின்  மூன்றாம் இடைவெளியில் சில்வா, மெண்டிஸ் இருவரும் இலங்கை அணியின் ஓட்டங்களை விரைவாக உயர்த்தத் தொடங்கியிருந்தனர். இதில் முதலாவதாக தனன்ஜய டி சில்வா அரைச்சத்தினை பூர்த்தி செய்திருந்தார். சில்வாவினை அடுத்து குசல் மெண்டிசினாலும் அவருடைய 5ஆவது டெஸ்ட் அரைச்சதம் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

பங்களாதேஷ் வீரர்களினால் எந்தவொரு விக்கெட்டினையும் தொடர்ந்து கைப்பற்ற இயலாத நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் முடிவின் போது தனன்ஜய டி சில்வா தன்னுடைய நான்காவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். தனது இறுதி டெஸ்ட் இன்னிங்சிலும் (இந்திய அணியுடனான) சில்வா சதம் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனன்ஜய பெற்றுக் கொண்ட சதத்தோடு இலங்கை அணி முதல் இன்னிங்சில் 48 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

வலுவான இணைப்பாட்டம் (187) ஒன்றினை குசல் மெண்டிசுடன் உருவாக்கியிருக்கும் தனன்ஜய டி சில்வா 104 ஓட்டங்களுடனும், மெண்டிஸ் 84 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

போட்டியின் சுருக்கம்  

Scorecard

 
 

போட்டியின் மூன்றாம் நாள் நாளை தொடரும்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

குசல் மெண்டிஸும் சதம் அடித்தார்

குசல் மெண்டிஸும் சதம் அடித்தார்

 

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் சதம் அடித்துள்ளார்.

முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை ஒரு விக்கட் இழப்புக்கு 237 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இரண்டாம் நாள் ஆட்டமான நேற்றைய தினம் இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா தனது 04வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் குசல் மெண்டிஸ் சற்று முன்னர் வரை 101 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=99705

  • தொடங்கியவர்

 

8.png&h=42&w=42

469/3 * (126.1 ov)
 
  • தொடங்கியவர்

சாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ்

 

சாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ்


பங்களாதேஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 504 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ்

இலங்கை அணி பங்களாதேஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 31 ஆம் திகதி சீட்டகொங் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ்

இப்போட்டியில் முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதலாவது இனிங்வில் பங்களாதேஸ் அணி 129.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி பயம் அடைய செய்துள்ளது. ஆனால் அதற்கு அச்சமடையாத இலங்கை அணி நேற்று இடம்பெற்ற 2 ஆம் நாள் மற்றும் இன்று இடம்பெற்ற 3 ஆம் நாள் ஆட்டத்தில் 138 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 504 ஓட்டங்களை பெற்ற நிலையில் 3 ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. நேற்று மற்றும் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 196 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 173 ஓட்டங்களையும் கூடுதலாக பெற்றுள்ளனர்.

சாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ்

https://news.ibctamil.com/ta/cricket/srilanka-vs-bangladesh-test-3rd-day

  • தொடங்கியவர்

இரட்டைச் சதத்தை தவறவிட்ட மெண்டிஸ்; மிக வலுவான நிலையில் இலங்கை

AFP-5-696x463.jpg @AFP
 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரின் அபார சதங்களின் உதவியோடு முதல் இன்னிங்சில் 500 ஓட்டங்களை எட்டியுள்ளதுடன், எதிரணியை விட வெறும் 9 ஓட்டங்களே பின்தங்கிய நிலையில் உள்ளது.

பங்களாதேஷின் சிட்டகொங் நகரில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியில் பங்களாதேஷ் வீரர்கள் முதல் இன்னிங்ஸ் (513) துடுப்பாட்டத்தினை முடித்த பின்னர், தங்களுடைய முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை அணியினர் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில்  48 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்தது. தனன்ஜய டி சில்வா 104 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 83 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

போட்டியின் இன்றைய மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணிக்கு இளம் வீரர்களான குசல், தனன்ஜய ஆகியோர் இரண்டாம் விக்கெட்டுக்காக 250 ஓட்டங்களினை பகிர்ந்து மிகவும் உறுதியான இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கியிருந்தனர். இதில் இன்று பிறந்த நாள் கொண்டாடுகின்ற குசல் மெண்டிஸ் தனது நான்காவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார். மறுமுனையில் தனன்ஜய 150 ஓட்டங்களைத் தாண்டியிருந்தார்.  

மதிய போசண இடைவேளை வரை பங்களாதேஷ் அணியினால் இலங்கையின் எந்த விக்கெட்டுக்களையும் கைப்பற்ற முடியாது போயிருந்தது. போட்டியின் மதிய போசண இடைவேளையின் போது இலங்கை அணி  300 ஓட்டங்களினை நெருங்கியிருந்தது.

மதிய இடைவேளையினை அடுத்து பங்களாதேஷுக்கு மிகவும் எதிர்பார்ப்பாக இருந்த விக்கெட் ஒன்று கிடைத்தது. இந்த இன்னிங்சின் 80ஆவது ஓவரின் பின்னர் எடுக்கப்பட்டிருந்த புதிய பந்தின் மூலம் தனன்ஜய டி சில்வாவினை முஸ்தபிசுர் ரஹ்மான் வீழ்த்தியிருந்தார். 308 ஓட்டங்களினை இரண்டாம் விக்கெட்டுக்காக மெண்டிசுடன் பகிர்ந்திருந்த தனன்ஜய 173 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். 223 பந்துகளினை எதிர்கொண்டிருந்த அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 21 பெளண்டரிகளைப் பெற்றிருந்தார்.

இந்த அபார ஆட்டம் மூலம் தனன்ஜய டி சில்வா இலங்கை அணி சார்பாக அதிகுறைந்த டெஸ்ட் இன்னிங்சுகளில் (23) 1,000 ஓட்டங்களினை கடந்த வீரர் என்கிற சாதனையினை ரோய் டயஸ் மற்றும் மைக்கல் வன்டோர்ட் ஆகிய வீரர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

தனன்ஜய டி சில்வாவின் விக்கெட் பறிபோயிருந்த போதிலும், குசல் மெண்டிஸ்  தனியொரு நபராக 150   ஓட்டங்களை தாண்டி இலங்கை அணிக்கு நங்கூரமிட்டிருந்தார்.  மெண்டிசுடன் புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ரொஷேன் சில்வாவும் கைகோர்த்து நிதானமாக ஓட்டங்கள் பெறத் தொடங்கியிருந்தார்.

மெண்டிசின் சிறப்பாட்டத்தினால் இலங்கை அணி 400 ஓட்டங்களினை இலகுவாக தாண்டியது. இந்நிலையில் இரட்டைச் சதத்தினை நெருங்கிக் கொண்டிருந்த மெண்டிசின் விக்கெட் பரிதாபகரமாக தய்ஜுல் இஸ்லாமின் சுழலில் வீழ்ந்தது. டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த துடுப்பாட்ட இன்னிங்சினை காட்டியிருந்த மெண்டிஸ் 327 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 22 பெளண்டரிகள் அடங்கலாக 196  ஓட்டங்களினை குவித்து வெறும் 4  ஓட்டங்களால் கன்னி டெஸ்ட் இரட்டைச் சதத்தினை தவறவிட்டிருந்தார்.

மெண்டிஸ் டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதத்தினை பெற முடியாமல் 190 ஐ விட அதிகமான ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தது இது இரண்டாவது தடவையாகும்.

மெண்டிசின் விக்கெட்டினை இழந்த நிலையில் தேநீர் இடைவேளையினை எடுத்துக் கொண்ட இலங்கை அணிக்கு தொடர்ந்து ரொஷேன் சில்வா தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் அரைச்சதம் மூலம் பெறுமதி சேர்த்திருந்தார்.

ரொஷேனுடன் புதிய துடுப்பாட்ட வீரராக வந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஜோடி சேர, மேலதிகமாக எந்த விக்கெட்டுக்களையும் இழக்காது பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களினை (513) நெருங்கியவாறு  இலங்கை அணி போட்டியின் மூன்றாம் நாளினை முடித்துக் கொண்டது.

மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணி 138 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 503 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. ரொஷேன் சில்வா 87 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

பங்களாதேஷ் அணி சார்பாக இலங்கை அணிக்கு சற்று அழுத்தங்கள் தரும் விதமாக செயற்பட்ட வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருக்கின்றார்.

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

ஸ்கோர் விபரம்

 
 

http://www.thepapare.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கை அணி வீரர் ரொஷான் சில்வாவும் சதமடித்தார்

இலங்கை அணி வீரர் ரொஷான் சில்வாவும் சதமடித்தார்

 

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி வீரர் ரொஷான் சில்வா சற்றுமுன்னர் சதம் அடித்துள்ளார்.

முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 03 விக்கட் இழப்புக்கு 533 ஓட்டங்களைப் பெற்று 20 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகின்றது.

இந்தப் போட்டியில் முன்னதாக இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா தனது 04வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்திருந்ததுடன், குசல் மெண்டிஸும் 04வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்திருந்தார்.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=99725

 

8.png&h=42&w=42

612/4 * (168 ov)
 
  • தொடங்கியவர்

நீண்ட நாட்களுக்குப்பின் இமாலய ஓட்டங்களைக் குவித்த இலங்கை

 

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 713 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நீண்டநாட்களுக்குப் பின் குவித்துள்ளது.

sl.jpg

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் சிட்டகொங்கில் இடம்பெற்று வருகின்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 513 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 713 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 196 ஓட்டங்களையும், டி சில்வா 173 ஓட்டங்களையும் ரொஷேன் சில்வா  109 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இப் போட்டியில் இலங்கை அணியின் ரொஷேன் சில்வா தனது கன்னி டெஸ்ட் சதத்தைப்பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியைவிட 200 ஓட்டங்களால் முன்னிலை வகிக்க, பங்களாதேஷ் அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

இன்று போட்டியின் 4 ஆவது நாள் ஆகும். பங்களாதேஷ் அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/30246

 

25.png&h=42&w=42

513 & 81/3 *
 
  • தொடங்கியவர்

இலங்கை வீரர்களிடம் தடுமாற்றம் காணும் பங்களாதேஷ்

27336201_952098098307760_827985124811253 Photo - Getty Images
 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில், இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை 713 ஓட்டங்களோடு முடித்திருப்பதுடன் பங்களாதேஷ் அணியினை விட 119 ஓட்டங்கள் முன்னிலையும் பெற்றிருக்கின்றது.

சிட்டகொங்கின் ஷாஹூர் அஹ்மத் செளத்ரி மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி 138 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 504 ஓட்டங்களினை குவித்து, மைதான சொந்தக்காரர்களை விட 9 ஓட்டங்களே பின்தங்கி காணப்பட்டிருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருந்தது. களத்தில் ரொஷேன் சில்வா 87 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தனர்.

 

 

போட்டியின் நான்காம் நாளாகிய இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த இலங்கை, பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் (513) ஓட்டங்களை விரைவாக கடந்தது. இதற்கு காரணமாக இருந்த அணித் தலைவர் சந்திமால் மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோரின் நான்காம் விக்கெட்டுக்கான இணைப்பாட்டமும் நூறு ஓட்டங்களை தாண்டியிருந்தது.

தொடர்ந்த ஆட்டத்தில், ரொஷேன் சில்வா தனது கன்னி டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார். ரொஷேனின் சதத்தோடு முன்னேறிய இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும் அவரது 16 ஆவது அரைச்சதம் மூலம் வலுச்சேர்த்தார்.

பின்னர் மெஹதி ஹஸன், சதம் கடந்த ரொஷேன் சில்வாவின் விக்கெட்டினை கைப்பற்றி பங்களாதேஷ் அணிக்கு ஆறுதல் தந்தார். இதனால், இலங்கை அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டம் 135 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.

தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே சதம் கடந்திருந்த ரொஷேன் 230 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 109 ஓட்டங்களினை குவித்திருந்தார்.   

ரொஷேனின் விக்கெட்டினை அடுத்து அணித் தலைவர் தினேஷ் சந்திமால், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த நிரோஷன் திக்வெல்லவுடன் இணைந்து தனது தரப்பின் ஓட்டங்களை உயர்த்தினார். இதனால் மிகவும் வலுவான நிலையில் இலங்கை மதிய உணவு இடைவேளையினை அடைந்தது.

 

மதிய உணவு இடைவேளையினை அடுத்து சதத்தினை நெருங்கிக் கொண்டிருந்த சந்திமாலின் விக்கெட்டினை இலங்கை பறிகொடுத்தது. தய்ஜூல் இஸ்லாமினால் போல்ட் செய்யப்பட்ட இலங்கை அணியின் தலைவர் 87 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

சந்திமாலின் விக்கெட்டினை அடுத்து, அதிரடியாக ஆடிய நிரோஷன் திக்வெல்ல அணியின் ஓட்ட எண்ணிக்கையினை 650 ஓட்டங்களினை தாண்ட வைத்திருந்தார். எனினும், பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட மெஹதி ஹஸன் மூலம் திக்வெல்லவின் விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தது. திக்வெல்ல 61 பந்துகளுக்கு 9 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.  

தொடர்ந்து, இலங்கை அணிக்காக பின்வரிசையில் திறமையாக துடுப்பாடக்கூடிய தில்ருவான் பெரேராவின் விக்கெட்டும் 32 ஓட்டங்களுடன் பறிபோயிருந்தது. பெரேராவின் இந்த ஓட்டங்கள் இலங்கை அணிக்கு 700 ஓட்டங்களை தேநீர் இடைவேளையின் போது எட்டுவதற்கு உதவியாக இருந்தது.

தேநீர் இடைவேளையின் பின்னர் துரிதகதியில் இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி 199.3 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 713 ஓட்டங்களோடு காணப்பட்டிருந்த போது தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறுத்திக் கொண்டது.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் ஆறாவது தடவையாக மொத்த ஓட்ட எண்ணிக்கையாக இன்னிங்ஸ் ஒன்றில் 700 இற்கு மேலான ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி, முதல் இன்னிங்சில் பங்களாதேஷை விட 200 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக் கொண்டது.   

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பாக தய்ஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுக்களையும், மெஹதி ஹஸன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

 

இன்றைய நாளுக்காக 27 ஓவர்கள் எஞ்சிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு தமிம் இக்பால் மற்றும் இம்ருல் கைஸ் ஆகியோர் உறுதியான தொடக்கத்தினை தந்திருந்தனர்.

எனினும் இன்றைய நாளின் இறுதி வேளையில் இலங்கை அணியின் சுழல் வீரர்கள் பங்களாதேஷ் அணிக்கு அச்சுறுத்தல் தந்த காரணத்தினால், போட்டியின் நான்காம் நாளினை பங்களாதேஷ் அணி தடுமாற்றத்துடன் முடித்துக் கொண்டது.  

நான்காம் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி இரண்டாம் இன்னிங்சில் 26.5 ஓவர்களில் 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் 41 ஓட்டங்களினை குவித்திருந்ததோடு, மொமினுல் ஹக் 18 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமல் நிற்கின்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழல் வீரர்களான ரங்கன ஹேரத், லக்ஷான் சந்தகன் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி போட்டியின் நான்காம் நாளினை இலங்கை அணிக்கு சாதமாக மாற்ற உதவியிருந்தனர்.

ஸ்கோர் விபரம்

 

SL-scorecard-1.jpg

 

BAN-2nd-INN.png

 
 

 

போட்டியின் இறுதி மற்றும் ஐந்தாவது நாள் நாளை தொடரும்

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பங்களாதேஸ் – இலங்கைக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

sri-ban-2.jpg?resize=400%2C300
பங்களாதேஸ் மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து 513 ஓட்டங்களைப் பெற்றது.  இதனையடுத்து முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 713 ஓட்டங்களைப் பெற்றது. 2

00 ஓட்ட வித்தியாசத்தில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பங்களாதேஸ் அணி 100 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இரு அணித் தலைவர்களும் போட்டியை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர்.  இதனால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 8ம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

bangladesh-vs-sri-lanka-759.jpg?resize=7

http://globaltamilnews.net/2018/65224/

  • தொடங்கியவர்

1533 ரன்கள், 24 விக்கெட்டுக்கள்: டிராவில் முடிந்த சிட்டகாங் டெஸ்ட்

 
அ-அ+

சிட்டகாங்கில் நடைபெற்று வந்த வங்காள தேசம் - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. #BANvSL

 
1533 ரன்கள், 24 விக்கெட்டுக்கள்: டிராவில் முடிந்த சிட்டகாங் டெஸ்ட்
 
வங்காள தேசம் - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்காள தேசம் முதல் இன்னிங்சில் மொமினுல் ஹக்யூ (176) சதத்தால் 513 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் லக்மல், ஹெராத் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி குசால் மெண்டிஸ் (196), தனஞ்ஜெயா டி சில்வா (173), ரோசன் சில்வா (109) ஆகியோரின் சதத்தால் வங்காள தேசத்திற்கு பதிலடி கொடுத்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 713 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டும், மெஹிதி ஹாசன் மிராஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

சரியாக 200 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காள தேசம் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தமிம் இக்பால் (41), இம்ருல் கெய்ஸ் (19), முஷ்பிகுர் ரஹிம் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காள தேசம் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து நெருக்கடிக்குள் உள்ளாகியிருந்தது. மொமினுல் ஹக்யூ 18 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மொமினுல் ஹக்யூடன் விக்கெட் கீப்பர் லித்தோன் தாஸ் ஜோடி சேர்நதார். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே வங்காள தேசத்திற்கு 119 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஐந்தாவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த போதிலும், அதனை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர்.

கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். வங்காள தேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக்யூ 70 ரன்னுடனும், லித்தோன் தாஸ் 47 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் லித்தோன் தாஸ் அரைசதம் அடித்தார். வங்காள தேசம் 200 ரன்னைத் தொட்டு ஸ்கோரை லெவன் செய்தது.

201802041748015714_1_bangladesh-sss._L_styvpf.jpg

சிறப்பாக விளையாடிய மொமினுல் ஹக்யூ 154 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். வங்காள தேச அணியின் ஸ்கோர் 261 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. மொமினுல் ஹக்யூ 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய லித்தோன் தாஸ் 94 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பு இழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 185 ரன்கள் குவித்தது. இதனால் வங்காள தேச அணி தோல்வியில் இருந்து தப்பியது. அத்துடன் போட்டி டிராவை நோக்கிச் சென்றது. 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் மெஹ்முதுல்லா உடன் மொசாடெக் ஹொசைன் ஜோடி சேர்ந்தார். கடைசி நாள் தேனீர் இடைவேளை வரை வங்காள தேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்திருந்தது. மெஹ்முதுல்லா 12 ரன்னுடனும், மொசாடெக் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை முடிந்த ஆட்டம் தொடங்கியது. மெஹ்முதுல்லா, மொசாடெக் விக்கெட்டை இழக்காமல் விளையாடினார்கள். வங்காள தேசம் சரியான 100 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருக்கும்போது இரு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். இதனால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

இந்த டெஸ்டில் 1533 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆனால் 24 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்ந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 8-ந்தேதி டாக்காவில் நடக்கிறது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/04174801/1143988/Banvsl-chittagong-test-draw-mominul-haque-century.vpf

  • தொடங்கியவர்

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் இணைந்த அதிரடி வீரர்

12-4-1-696x464.jpg
sl-v-ban-2018-728.gif

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்டகொங்கில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் நேற்று (04) அறிவிக்கப்பட்டது.

பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் அண்மைக்காலமாக தொடர்ந்து விளையாடி வந்த அனுபவமிக்க மத்திய வரிசை வீரரான சபிர் ரஹ்மான் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணியில் இடம்பெற்றிருந்த சபிர் ரஹ்மான், எதிர்பார்த்த அளவு திறமைகளை வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்குவதற்கு அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வரிசையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சபிர் ரஹ்மானை மீண்டும் டெஸ்ட் அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் அவ்வணிக்காக விளையாடிய சுழல் பந்துவீச்சாளரான சுன்சமுல் இஸ்லாம் மற்றும் ருபைல் ஹொசைன் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் ருபெல் ஹொசைன் முதல் போட்டியில் விளையாடாவிட்டாலும், சன்சுமுல் இஸ்லாம் குறித்த போட்டியில் 45 ஓவர்கள் பந்துவீசி 153 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் முதல் அவ்வணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட சகிப் அல் ஹசன், கைவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில், சகிப் அல் ஹசனுக்குப் பதிலாக சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷ் டெஸ்ட் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனுபவமிக்க வீரரான 35 வயதுடைய அப்துர் ரசாக், 2ஆவது டெஸ்ட் போட்டியில் இறுதி பதினொருவர் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அணிக்கு எதிரான பங்களாதேஷ் குழாம்

மஹ்முதுல்லா ரியாத் (தலைவர்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், மொஸாதிக் ஹொசைன், சபிர் ரஹ்மான், தஜிஉல் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான், கம்ருல் இஸ்லாம் ரப்பி, மெஹிதி ஹசன் மீராஸ், தன்பிர் ஹைதர், நயீம் ஹசன், அப்துர் ரசாக்

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதலாவது டெஸ்ட் போட்டி விளையாடப்பட்ட ஆடுகளம் குறித்து இலங்கை வீரர் அதிருப்தி

 

முதலாவது டெஸ்ட் போட்டி விளையாடப்பட்ட ஆடுகளம் குறித்து இலங்கை வீரர் அதிருப்தி

இலங்கை பங்களாதேஸ் அணிகளிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் இடம்பெற்ற ஆடுகளம் டெஸ்ட்போட்டிகளிற்கு ஏற்றதல்ல என தெரிவித்துள்ள இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்தின ஆடுகளம் சிறிதளவும் பந்து வீச்சாளர்களிற்கு உதவக்கூடியதாக காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது டெஸ்ட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் இல்லை 1500 ஓட்டங்களிற்கு மேல் பெறப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அவர் ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களிற்கு சாதகமான நிலையும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்
இந்திய துணைகண்ட ஆடுகளங்களில் நான்காவது ஐந்தாவது நாட்களில் பந்து சுழல தொடங்கும் ஆனால் இந்த ஆடுகளத்தில் அவ்வாறான நிலை காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
அடுத்த டெஸ்ட் போட்டி இடம்பெறும் ஆடுகளம் துடுப்பாட்டவீரர்களிற்கும் பந்துவீச்சாளர்களிற்கும் சாதகமாக காணப்படும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.samakalam.com/செய்திகள்/முதலாவது-டெஸ்ட்-போட்டி-வ/

 

  • தொடங்கியவர்

5 செஞ்சூரி, 6 அரைசதம்: பவுலரை பாடாய்படுத்திய சிட்டகாங் ஆடுகளத்திற்கு ஒரு டிமெரிட் புள்ளி

 

 
 

5 செஞ்சூரி, 6 அரைசதம் அடிக்கப்பட்டு, பவுலர்களுக்கு சோதனைக் கொடுத்த சிட்டகாங் ஆடுகளத்திற்கு ஐசிசி ஒரு டிமெரிட் புள்ளி வழங்கியுள்ளது. #BANvSL #ChittagongTest

 
5 செஞ்சூரி, 6 அரைசதம்: பவுலரை பாடாய்படுத்திய சிட்டகாங் ஆடுகளத்திற்கு ஒரு டிமெரிட் புள்ளி
இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த மொமினுல் ஹக்யூ
பொதுவாக டெஸ்ட் போட்டி என்பது பேட்ஸ்மேன்களின் திறமையை சோதிக்கும் ஒரு ஆட்டமாகும். பேட்டிற்கும், பந்திற்கும் இடையில் சமமான போட்டி இருக்க வேண்டும் என்பதுதான் டெஸ்ட் போட்டியின் கோட்பாடு.

ஆனால் தற்போது போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கு சாதகமன ஆடுகளத்தை தயார் செய்கிறது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்தது.

201802061954343703_1_desilva001-s._L_styvpf.jpg
தனஞ்ஜெயா டி சில்வா

சமீபத்தில் முடிவடைந்த இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின்போது மூன்று ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்டது. குறிப்பாக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் பந்து திடீர் திடீரென பவுன்ஸ் ஆகி வீரர்களை தாக்கியது. இதனால் மோசமான ஆடுகளம் என ஐசிசி மதிப்பிட்டது.

இந்நிலையில் வங்காள தேசம் - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற சிட்டகாங் ஆடுகளம் ஐந்து நாட்கள் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்க சொர்க்கபுரியாக இருந்தது. ஐந்து நாட்களில் 24 விக்கெட்டுக்கள் மட்டுமே விழுந்தது. 1500 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. இதில் 5 செஞ்சூரி, 6 அரைசதம் விளாசப்பட்டது.

201802061954343703_2_roshensilva-s._L_styvpf.jpg
ரோசன் சில்வா

சில அரைசதங்கள் 100 ரன்னை நெருங்கியதாகும். இவ்வளவு ரன்கள் அடிக்கப்பட்டும் ஆட்டம் டிராவில் முடிந்தது. பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. அவர்களை சோதனைக்குள்ளாக்கியது. இதனால் ஐசிசி ஆடுகளத்தை சோதனையிட்டது.

இந்நிலையில் ஐசிசி ஆடுகளத்தை சராசரி ஆடுகளத்திற்கும் கீழானது என்றும், தடைக்கான ஒரு புள்ளி (demerit point) ஒன்றும் வழங்கியுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/06195435/1144423/Chittagong-pitch-gets-one-demerit-point-after-being.vpf

  • தொடங்கியவர்

பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் ;  துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை 

 

 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

Sri-Lanka-Cricket.jpg

பங்களாதேஷுக்கு  கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகின்றது.

இரு அணிகளுக்குமிடையில் சிட்டகொங்கில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் டாக்காவில் இன்று ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/30379

  • தொடங்கியவர்

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் அகில; இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

Sri Lanka v Bangladesh - 2nd Test
 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சற்று முன்னர் டாக்காவின் ஷேரி பங்களா மைதானத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்துள்ளார்.

சிட்டகொங்கில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதனால், இன்று ஆரம்பமாகியிருக்கும் போட்டி தொடரின் வெற்றியாளர் யார் எனத் தீர்மானிக்கும் ஆட்டமாக அமைகின்றது.

இலங்கை அணி இந்த போட்டி மூலம் சுழல் வீரரான அகில தனன்ஜயவினை டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்கின்றது. தனன்ஜயவுக்கு பதிலாக கடந்த போட்டியில் இலங்கை அணியில் விளையாடிய லக்ஷான் சந்தகனுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவுக்கு பதிலாக மேலதிக துடுப்பாட்ட வீரராக தனுஷ்க குணத்திலக்க குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார். 

மறுமுனையில் பங்களாதேஷ் அணியும் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பின்னர் சுழல் வீரரான அப்துர் ரசாக் அணிக்கு திரும்பியுள்ளதோடு, சப்பீர் ரஹ்மானுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ரசாக் 2014ஆம் ஆண்டிலேயே இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் அணியில் உள்வாங்கப்பட்ட இந்த இரண்டு வீரர்களும் முதல் டெஸ்ட்டில் விளையாடிய சுன்சமுல் இஸ்லாம், மொசாதிக் ஹொசைன் ஆகியோரின் இடத்தினை எடுத்திருக்கின்றனர்.

இலங்கை அணி – திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, ரொஷேன் சில்வா, தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க, தில்ருவான் பெரேரா, அகில தனன்ஞய, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால்

பங்களாதேஷ் – தமிம் இக்பால், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், சப்பீர் ரஹ்மான், முஷ்பிகுர் ரஹீம், லிடன் தாஸ், மஹ்மதுல்லா (அணித்தலைவர்), மெஹிதி ஹசன், அப்துர் ரசாக், தய்ஜூல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான் 

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

8.png&h=42&w=42

222
 

 

25.png&h=42&w=42

12/2
 

முதலாவது இனிங்சில் 222 ஓட்டங்களுடன் சுருண்ட இலங்கை அணி!

 

முதலாவது இனிங்சில் 222 ஓட்டங்களுடன் சுருண்ட இலங்கை அணி!


இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்சில் இலங்கை அணி 222 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

முதலாவது இனிங்சில் 222 ஓட்டங்களுடன் சுருண்ட இலங்கை அணி!

இலங்கை அணி பங்களாதேஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை. ஜிம்பாபே மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதிய முத்தொடர் போட்டியில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனை தொடர்ந்து இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 31 ஆம் திகதி பங்களாதேஸில் ஆரம்பமாகியுள்ளது.

முதலாவது இனிங்சில் 222 ஓட்டங்களுடன் சுருண்ட இலங்கை அணி!

கடந்த 31 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை நடைபெற்ற முதலாவது போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று 2 ஆவது டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் களமிறங்கி 65.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 98 பந்துகளில் 68 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார்.

https://news.ibctamil.com/ta/cricket/first-innings-srilanka-222-runs-vs-bangladesh

  • தொடங்கியவர்

முதல் நாளிலேயே 14 விக்கெட்டுக்கள்: வங்காள தேசம் 4 விக்கெட்டை இழந்து திணறல்

 
 அ-அ+

டாக்கா டெஸ்டில் இலங்கை 222 ரன்களில் ஆல்அவுட் ஆன நிலையில், வங்காள தேசம் 56 ரன்னுக்குள் இழந்து 4 விக்கெட்டை இழந்துள்ளது. #BAVvSL

 
முதல் நாளிலேயே 14 விக்கெட்டுக்கள்: வங்காள தேசம் 4 விக்கெட்டை இழந்து திணறல்
 
வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் டெஸ்ட் நடைபெற்ற சிட்டகாங் ஆடகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால், டாக்கா ஆடுகளம் முதல் ஓவில் இருந்துதே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

இதனால் இலங்கை அணி 222 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் குசால் மெண்டிஸ், 6-வது வீரராக களம் இறங்கிய ரோசன் டி சில்வா ஆகியோர் அரைசதம் அடித்தனர். வங்காள தேசம் அணி சார்பில் அப்துர் ரசாக், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் 3-வது பந்திலேயே தமிம் இக்பால் ஆட்டமிழந்தார்.

201802082047090495_1_rahim001-s._L_styvpf.jpg

அடுத்து மொமினுல் ஹக்யூ களம் இறங்கினார். இவர் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் 1 ரன்னில் க்ளீன் போல்டானார்.

இதனால் 12 ரன்கள் எடுப்பதற்குள் வங்காள தேசம் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு இம்ருல் கெய்ஸ் உடன் லித்தோன் தாஸ் ஜோடி சேர்ந்தார். முதல்நாள் ஆட்டம் முடிவதற்கு சற்று முன் கெய்ஸ் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

வங்காள தேசம் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. இன்று முதல் நாளிலேயே 14 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளது. நாளைய 2-வது நாள் ஆட்டத்திலும் விக்கெட்டுக்கள் மளமளவென விழ வாய்ப்புள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/08204709/1144875/bangladesh-vs-sri-lanka-14-wickets-loss-first-day.vpf

  • தொடங்கியவர்

 

25.png&h=42&w=42

110 * (45.4 ov)
 
  • தொடங்கியவர்

110 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி

110 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதனடிப்படையில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 112 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=99847

8.png&h=42&w=42

222 & 15/0 * (5 ov)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.