Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வவுனியாவில் வெளியீடு: இரா.சம்மந்தனும் பங்கேற்பு

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வவுனியாவில் வெளியீடு: இரா.சம்மந்தனும் பங்கேற்பு

 

 
 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வவுனியாவில் வெளியீடு: இரா.சம்மந்தனும் பங்கேற்பு

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல்வேறு கொள்கைப்பிரகடனங்களை உள்ளடக்கிய 15 பக்கங்களை கொண்ட விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

மாவை சேனாதிராஜா எம்.பியினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிடம் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இரா. சம்பந்தனினால் கட்சித்தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், டெலோ அமைப்பின் செயலாளர் க. சிறிகாந்தா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், விந்தன் கனகரட்னம் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_4631

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசியக்-கூட்டமைப்-12/

  • தொடங்கியவர்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி அதிகார சபைக்கான தேர்தல் அறிக்கை

 
TNA-_0563.jpg?resize=800%2C534
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (தமிழ்த்தேசிய கூட்டமைப்பு) உள்ளுராட்சி அதிகார சபைக்கான தேர்தல் அறிக்கை ஞாயிறன்று வவுனியாவில் உள்ள அந்தக் கட்சியின் தாயகம் செயலகத்தில் வெளியிடப்பட்டது. தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா இந்தத் தேர்தல் அறிக்கையை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனிடம் வைபவரீதியாகக் கையளித்து வெளியிட்டு வைத்தார்.
 
இவ்வைபவத்தில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளகிய தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பில் அந்தக் கட்சியியின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய த.சித்தார்;த்தன் ஆகியோருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய சுமந்திரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
இந்தத் தேர்தல் அறிக்கையை தமிரசுக்கட்சியின் செயலாளர் கி.துiராஜசிங்கம் வாசித்தளித்தார். அதற்கு முன்னதாக அந்த அறிக்கை குறித்த அறிமுக உரையை கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆற்றினார்.
 
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி
(தமிழ்த்தேசிய கூட்டமைப்பு)
உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் 10.02.2018
தேர்தல் அறிக்கை (ஆயnகைநளவழ)
 
 
TNA_0561.jpg?resize=800%2C534
அன்பான வாக்காளப் பெருமக்களே!
 
2018.02.10 ஆம் நாள் இலலங்கை முழுவதும் உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலானது, ஒவ்வோர் உள்ளுராட்சி மன்றத்திலும் அவ்வவ்வூர் மக்கள் தலைமை தாங்கும் தலைமைத்துத்தைக் கட்டியெழுப்பும் ஜனநாயக வாய்ப்பாகும்.
 
இத்தேர்தலில் பெண்களும் இளைஞர்களும் இன விடுதலைக்கத் தம்மை அர்ப்பணித்த போராளிகளும் தலைமைத்துவத்தைப் பெறும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளனர்.
 
பாராளுமன்றத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியமைப்பின் மூலம் அதிகாரங்கள் பகிர்நதளிக்கப்படும் பொழுது, மத்திய அரசு, மாகாண அரசு, என்பவற்றோடு உள்ளுராட்சி மன்றங்களும் அதிகாரங்களைக் கொண்டனவாக இருக்கும்.
 
தெரிவு செய்யப்படுவோர் இவற்றை நிறைவேற்றுவதில் தலைமைத்துவம் வழங்குபவராகவும், ஆளுமை மிக்கவராகவும் வினைத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை உiடையராகவும் ஊழல் மற்றும் ஊதாரித்தனமற்ற உறுப்பினராகவும் மக்களிடம் நன்மதிப்பைப் பெறும் செயல்வீரராகவும் விளங்குவர்.
 
மேலும், தாம் சார்ந்த அரசியல் கட்சியின் தீர்மானங்களுக்கமைய நடப்பராகவும் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று அரசியல் தீர்வை வெற்றி பெறச் செய்யவும் அதனை நிறைவு செய்யவும் கடப்பாடு உடையவராகவும் விளங்குவர்.
 
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நிறைவேற்றவும் பொறப்புக் கூறவும் கடடைப்பட்ட்வர் எனத் தம்மை நிரூபிக்க வேண்டியவராயிருப்பர்.
 
உள்ளுரர் அதிகார சபைத் தேர்தலின் முக்கியத்துவம்:
 
1.வடக்கிலும் தெற்கிலும் மக்களின் ஆதரவும் செல்வாக்கும் தலைமைத்துவமும் யாரிடம் இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்துக்கம் எடுத்துக் காட்டுவது.
 
2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதற்கான அரசியல் அமைப்பு உருவாக்கம், நிலம், சட்டம் ஒழுங்கு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் அரசுடன் இணைந்து நிற்கும் கட்சிகளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் பொருந்தியள்ள உடன்பாடுகளும், இதற்கு வலுவூட்டும் ஐநா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களும், சர்வதேச ஈடுபாடுகளும்தொடர்வதை மக்கள் ஏற்கின்றனர் என்பதைற்கான அங்கீகாரம் பெற வைப்பதுமாகும்.
 
3. அரசியல் தீர்வு தொடர்பில் நிலைப்பாடு:
 
(அ) தமிழ் மக்கள் தனித்துவமிக்க இனம் ஆவர்.
 
(ஆ) வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களது பூர்வீக வாழ்விடங்கள் ஆகம்.
 
(இ) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரி;ததுடையவர் ஆவர்.
 
(ஈ) சமஷ்;டிக் கட்டமைப்புக்குள்ளே ஒன்றுபட்ட வடக்குக் கிழக்குஅலகைக் கொண்ட அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் பகிரப்படும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளின் மூலம் நன்மைகளைப் பெற உரித்துடையவர் ஆவர்.
(உ) பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் உருவாக்கப்படும் அதிகாரப் பகிர்வானது, நிலம், சட்டம் ஒழுங்கு, சட்ட அமுலாக்கம், தமிழ் மக்களின் பாதுகாப்பு, சமூக, பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி, விவசாயம், கைத்தொழில், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, மொழி, பண்பாடு என்பவற்றின் மீதும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திரட்டிக் கொள்ளும் வளங்கள் மற்றும் நிதி அதிகாரம் மீதான ஏனைய விடயங்கள் தொடர்பானதாகவும் இருத்தல் வேண்டும்.
 
ஒஸ்லோ உடன்பாடு:
 
2013 மாகாணசைத் தேர்தல் அறிக்கையிலும் 2015 பொதுத் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பெற்ற இக்கொள்கைத் திட்டமானது 2002 ஒஸ்லோ (நோர்வே) கொள்கைப் பிரகடனத்துக்கு ஒப்பானது ஆகும்.
 
அதாவது, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்ப்பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயுநிர்ணய உரிமைக் கொள்கைப் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்’ என்பதாகும்.
 
இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கமும் விமர்சனங்களும்:
 
உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையானது, இணக்கம் காணப்பட்ட விடயங்கள், இணக்கம் காணப்படாத விடயங்கள் மற்றும் இணக்கத்திற்காகப் பேச வேண் விடயங்கள ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. இது இறுதித் தீர்வுத் திட்டமல்ல என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்
 
அப்படி இருக்கையில், இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேணடும் என்ற கூக்குரல் அறிவுடைமையானது அல்ல. இப்பொழுது இடைக்கால அறிக்ஐ தொடர்பில் எழுப்பப்படும் வினாக்கள், விமர்சனங்கள் உண்மைக்கு மாறாக் புனையப்பட்ட ஆகும்.
 
இவை ஒரு புறமும், ‘இடைக்கால அறிக்கை நாட்டைப் பிளவுபடுத்தப் போகின்றது’ என்ற கூச்சலோடு  தென்னிலங்கையில் உள்ளுர் ஆட்சித் தேர்தல் காலப் பிரசாரங்கள் மறுபுறமும் இடம்பெறுகி;ன்றன.
 
அதேநேரத்தில் இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சனைக்கோ, பிற பிரச்சினைகளுக்கோ தீர்வு காணக்கூடிய திட்டம் எதுவும் இல்லாத சிலர், ‘தலைமையை மாற்ற வேண்டும்’ என்ற கூச்சலை முன்வைத்து வருகின்றனர். இவர்கள் தமிழர் விடுதலைக்காக அர்த்தமுள்ள செயற்பாடுகளோ திட்டங்களோ பங்களிப்போ அற்றவர்கள் என்பதை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.
 
த.தே.கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி 2015 பொதுத்  தேர்தல்மற்றும் கொள்கைப் பிரகடனங்களிலிருந்து ஒரு போதும் விலகியோ, விட்டுக் கொடுத்தோ செயற்படாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்வதோடு இக்கொள்கைத் திட்ட இலக்கை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்பதையும் தெரிவிக்கின்றோம்.
 
2011, 2013, 2015 தேர்தல் காலங்களில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளுக்கு மக்கள் ஆணை தந்திருக்கின்றனர். ‘புதிய அரசியலமைப்பு உருவாக்க வேண்டும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்’ என்பது மக்கள் ஆணையாகும். நாம் இந்த ஆணையைப் பற்றுறுதியோடு செயற்படுத்துவோம்.
 
போர் முடிந்த பின் 2011 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர தொடர்புகளும் 2015 ஆம் ஆண்டின் ஐநா மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் வரையிலும் அத்தீர்மானங்களை நறைவேற்றுவதிலும் த.தே.கூட்டமைப்பு முதன்மையான வகிபாகத்தை செலுத்தி வருகின்றது. இந்த சர்வதேச பங்களிப்பையும், சந்தர்ப்பத்தையும் நாம் பற்றி நிற்க வேண்டும்.
 TNA_0565.jpg?resize=800%2C534
த.தே.கூட்டமைப்பின் பொறுப்பும் கடமையும்:
 
ஒருமித்த நாட்டில், சமஷ்டிக் கட்;டமைப்பில் (குநனநசயட ளுவசரஉவரசந) தன்னாட்சி அலகுகள் உருவாக்கப்பட்டு, அதிகாரங்கள் போதிய அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டு, அவை எவ்வகையிலும் மிளப் பெற முடியாத பாதுகாப்போடு அரியலமைப்பில் இடம்பெறவைப்பது முதன்மையான கடமையாக இருக்கிறது.
 
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் தமிழ் மக்களுக்கான இறைமை, சுயநிர்ணய உரிமை, சமஷ்டிக் கட்டமைப்பில் மத்திய அரசால் திரும்பப் பெற முடியாத, பாதுகாப்பான அடிப்படையில் பகிரப்பட்ட அல்லது கையளிக்கப்பட்ட முழுமையான அதிகாரங்கள் (அ) காணி (ஆ) சட்டமட் ஒழுங்கு (இ) பொருளாதார, சமூக, கலாசார விடயங்கள் (ஈ) நிதி சம்பந்தமான அதிகாரங்கள், வடக்குக் கிழக்கு தமிழ்ப்பேசும் மக்களின் பிரதேசங்கள் இணைக்கப்படுதல் © சமஷ்டி கட்டமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணம் அல்லது மாநிலங்களுக்கு முழுமமயான பகிர்ந்தளிக்கப்பட்டஅதிகாரங்கள் கொண்ட தன்னாட்சி என்பன முக்கியமானவை ஆகும்.
 
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் போர் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தங்களது ஆணையை வழங்கி வந்துள்ளனர். இலங்கைத் தீவில் ஒருமித்த நாட்டுக்குள் தங்களது இறையாண்மையின் வெளிப்பாடாகவும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதே அந்த ஆணையாகும்.
 
இவ் ஆணையை நிறைவேற்றும் பணியில் நாம் நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறோம். முதலில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் பின் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பிப்ப்பதற்கான அனைத்து அழுத்தங்களையும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படுத்தினோம்.
 
இப்பொழுது வெளியாகியிருக்கும் ஏழு உப குழுக்களின் அறிக்கைகளும் வழிகாட்டிக் குழுவின் இடைக்கால அறிக்கையும் ஆட்சி முறையில் ஏற்படுத்தப்பட இருக்கும் அடிப்படையான மாற்றங்களை எடுத்து இயம்புகின்றன. இவை அனைத்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுதியான முயற்சியால் அடையப்பட்டவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
 
இம்முயற்சிகள் தொடரப்பட வேண்டும். அதற்கு தொடர்ந்தும் மக்களது ஆணையும் ஆதரவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கே இருக்கின்றன என்பது இத்தேர்தலிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.
 
த.தே கூட்டமைப்பும் மக்களின் அடிப்படைத் தேவைகளும்:
 
2009 இல் ஆயுதப் போர் முடிவுக்கு வந்த பின்பு, போரினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்கள், சீரழிக்கப்பட்ட தமிழ் பேசும் சமூகங்களின் இயல்பு வாழ்க்கை மீளக்கட்டியெழுப்பெற வேண்டியதன் அவசியத்தைத் தெளிவாகவே உணர்ந்தோம்.
 
இதன் பொருட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, 2011, 2013, 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்கள், மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல் அறிக்கைகளில் மூன்று விடயங்களை அரசுகளின் முன்னும், சர்வதேச சமூகத்தின் முன்னும் அடையாளப்படுத்தினோம்.
 
அதாவது – (1) இலங்கையில் தீர்வு காணப்படாத தமிழினத் தேசிய இனப்பிர்சசினைக்குத் தீர்வு காணுதல் (2) போரால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் பாதிப்புகளுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுதல் (3) போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும்,சிதைந்து போன மக்களது வாழ்க்கையையும் மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல் என்பனவாகும்.
 
இவற்றை அடைவதற்கான தீர்வுகள்
 
(1)காணி உரித்தை உறுதிப்படுத்தி, வீட்டுத் திட்டங்களை உருவாக்குதல் (2) மறுவாழ்வு பெற்ற போராளிகளது வாழ்வாதாரத்தை  மேம்படுத்தி அவர்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தல் (3) போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துதல் (4) அதற்கான வேலைவாய்ப்பு, வாழ்வாதார வலுவூட்டல், கல்வி வழங்கல், பயிற்சியளித்தல் அதற்கான தொழிற்துறைகளையும் வேலைத்திட்ட்ங்களையும் உருவாக்குதல் என்பனவாகும்.
 
அழிந்த நம் தேசத்தை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகள்
 
2015 பிற்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவார்;த்தையில் வடக்கில் சர்வதேச விமான நிலையம் பற்றி விவாதித்தோம். அதன் விளைவாக பலாலி சர்வதேச விமான நிலையம் பலாலிக்கு வடக்கே கடற்கரையோரத்துடன் கடற்பிரதேசத்தில் கட்டுவதற்கான திட்டம், மதிப்பீடு எம்மிடம் அரசினால் தரப்பட்டிருந்தது.
 
2016 ஜனவரியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலாலிக்கு வந்தபோது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக பொதுமக்களின் நிலங்கள் பாதிக்கப்படாது ‘பலாலி விமனா நிலையம் தரயுமுயர்த்தப்பட்டு, பிராந்திய விமான நிலையமாக்குவது’ என இந்திய அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்ததாக அறிய முடிந்தது.
 
அதனடிப்படையில் இந்தியத் தொழில்நுட்பக் குழு பலாலிக்கு வந்து இத்திட்டத்தை ஆராய்ந்தது. ‘தற்போதுள்ள விமான நிலைய நிலப்பரப்பானது, பலாலி பிராந்திய விமான நிலையம் நிறுவ போதுமானது, மேலதிக நிலங்கள் தேவையில்லை’ என்று அறிவித்துள்ளது.
 
(1)போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வீடமைக்க பணமில்லை என்று அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைவிரித்துவிட்ட நிலையில், த.தே கூட்டமைப்பானது, போரால் பாதிக்கப்பட்ட வன்னிப்பிரதேசங்களுக்குப் பயணம் செய்து அம்மக்களோடு கலந்துரையாடி, தயாரிக்கப்பட்ட 28 பக்க அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது மட்டுமன்றி, டெல்லி சென்று இந்தியப் பிரதமராக இருந்த, கலாநிதி மன்மோகன்சிங் அவர்களிடமும் 2010 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவ்வறிக்கைiயை சமர்ப்பித்திருந்தோம். பேச்சு நடத்தினோம். அதன் பெறு பேறாக, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலாவதாக ஐந்து லட்சம் பெறுமதியான 50 ஆயிரம் வீடுகள் கிடைத்தன. (2) த.தே கூட்டமைப்பு 2017 இல் இலங்கை அரசோடு நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக மேலும் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் கட்டுவதற்கு வீடமைப்பு அமைச்சும் நடவடிக்கை எடுத்து வருகிறது பாராளுமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது.
 
(3) 2018 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் வரவு செலவுத் திட்டத்தில்; 10 லட்சம் (ஒரு மில்லியன்) பெறுமதியான 50 ஆயிரும் செங்கல், சீமேந்து வீடுகள் வடக்கு கிழக்கில் கட்டுவதென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்வாதாரத்திற்காக 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. (4) 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்தபொழுது, யாழ் மாவட்ட செயலகச் சந்திப்பில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை ஒருங்கிணைந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று த,தே கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு, வடக்கிற்கு ஒருங்கிணைந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
(5) 2017 ஆம் ஆண்டு இறுதியில் பராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பில் கிழக்கை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்திலும் ஒருங்கிணைந்த திட்டக் குழு அமைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்திருக்கின்றார். (6)த.தே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரைச் சந்தித்துப் பேசியதன் விளைவாக 2018 வரவு செலவுத் திட்டத்தில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. (7) பெண்கள மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான திட்;டம், அதற்கான நிதி ஒதுக்கீடு (8) போரினால் பாதிக்கப்பட்ட ஏறத்தாள 90 ஆயிரம் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, வாழ்வதாரம், புதுவாழ்வுக்கான நிதி ஒதுக்கீடு (9) பன்னீராயிரத்து அறுநூறு முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்கு
நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட 16 நேரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 
மேற்படி திட்டங்கள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கான சிறப்பான திட்டங்களாகும். இவை யாவும் மக்கள் ஆணையின்படி. த.தே கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களாகும்.
TNA_0569.jpg?resize=800%2C534
 
2018 வரவு செலவுத் திட்ட முக்கியமான சில நிதி ஒதுக்கீடு
 
த.தே கூட்டமைப்பு அரசுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் 2018 வரவு செலவுத் திட்டத்தில் மே;றகோள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள்
 
1. 2018 வரவு செலவுத் திட்டத்தில் 10 லட்சம் பெறுமதியான 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ஆரம்ப ஒதுக்கீடு ரூபாய் 750 மில்லியன்.
 
2. ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் ரூபா 2 ஆயிரம் மில்லியன்.
 
3. வடக்கில் உள்ள மாற்றுத்திறனாளிப் பெண்கள் உட்பட பாதிக்கப்பட்ட பெண் குடும்பங்களுக்கு வாழ்வ்hதார அபிவிருத்தி, பெண்களுக்கான விசேட நிலையங்களுக்கும், சமூக உட்கட்டமைப்புக்களுக்கும் ரூபாய் 2750 மில்லியன்.
 
4. வடமாகாணம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக சிறிய கைத்தொழில்களை வலுவூட்டுவதற்கு ரூபாய் ஆயிரம் மில்லியன்.
 
5. மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மேம்பாட்டிற்கு ரூhhய் 150 மில்லியன். (மேலும், மயிலிட்டி மீள்குடியேற்றத்திற்கு விசேட நிதியும், திட்டங்களும் கிடைக்கவுள்ளன.)
 
6. போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான சிறு வியாபாரத்திற்கு ரூபாய் 25 மில்லியன்.
 
7. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 12 ஆயிரத்து 600 பேருக்கு நிரந்தர வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு உட்பட்ட திட்டங்களுக்கு மொத்தமாக ரூபாய் 300 மில்லியன்.
 
8. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், நடவடிக்கைகளுக்காக ரூhhய் 1400 மில்லியன். இவை நேரடியாக பயனுறுதல் திட்டங்கள். அத்துடன் பயனுறுத்த முடிந்த பல பொதுத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு
 
த.தே கூட்டமைப்பினால் 2003 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு த.தே கூட்டமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ‘காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’ என்று எமக்கு சாதகமாக 2007 இல் உச்ச நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் வலி வடக்கில் பெரும்பகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் எமது அந்த வழக்கு தொடர்கின்றது.
 
மேலும் த.தே கூட்டமைப்பின் முனைப்பில் காணிகள் விடுவிப்பது தொடர்பில் வலி வடக்கைச் சேர்ந்தவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2116 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஆராயப்படுகின்றது. இவ்வாறு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பல ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அக்காணிகள் உயர் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட காணிகளில் கணிசமான அளவில் விடுவிக்கப்பட்டுள்ளன.
 
மொத்தமாக வடக்கு கிழக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களும் விடுவிக்கப்படாத நிலங்களும் அந்தந்த மாவட்டங்களில் விபரமாக வெளியிடப்படும். இந்த விபரங்கள் பாராளுமன்றத்திலும், ஐநா மனித உரிமைப் பேரவையிலும் சமர்ப்பிக்கப்பட்டவைகளாகும்.
 
இந்த வழக்குகள் யாவையும் த.தே கூட்டமைப்பின் வழக்கறிஞர்களாலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல காணி விடயங்களில் வெற்றிகள் காணப்பட்டுள்ளன. இருப்பினும் இன்னும் கணிசமான காணிகள் விடுவிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பில் அரசுடன் பேசுவது மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தினால் அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
 
2015 ஆட்சி மாற்றத்தின் பின் திருகோணமலையில் சம்பூர் பிரதேசம் முழுமையாக விடுவிக்கப்பட்டு, மக்கள் குடியேறியுள்ளனர். சம்பூரில் சூரியசக்தி (சோலர் பவர்) மின்திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
விடுவிக்கப்பட்டபட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை, மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதைகள் திறக்கப்பட்டு, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
 
இன்னும் குறிப்பிடக் கூடிய சில முன்னேற்றங்கள்
 
கிளிநொச்சி பிரதேசத்தில் பரவிப்பாய்ஞ்சான், இரணை தீவு, மன்னாரில் முள்ளிக்குளம் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 
முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களின் கணிசமான காணிகள் விடப்பட்டுள்ளன. இன்னும் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டி உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புலம்பெயர்ந்துள்ள தமிழர் மூலம் சம்பூர், தென்னமரவாடி உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் வீடுக்ள கட்டிக்கொடுப்பதற்கும் வாழ்வாதாரத்தி;ற்கான திட்டங்களை செயற்படுத்துவதற்கும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
 
மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாகவும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் கைதிகளாக இருப்பவர்கள் சம்பந்தமாக உள்ள பிரச்சினைகளில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாம் சர்வதேசத்துடன் இணைந்து அரசின் மீது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறோம்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பிரதேசத்த்pல் வேலைவாய்பிற்காகவும், சிறுகைத்தொழில்கள், தொழில்நுட்ப வலயங்கள் ஆரம்பிப்பது பற்றி பிரதமர் வாக்குறுதி அளித்ததன் படி 2918 வரவ செலவுத் திட்டத்திலும், இவை தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
பதிலாக த.தே கூட்டமைப்பின் முயற்சிகளாலும் சீமொந்து உற்பத்திக்கும், வேலைவாய்ப்புக்காகவும் சுண்ணக்கல் பூனகரியில் இருந்து பொன்னாவெளி கிராஞ்சி பகுதி வரை ஆராயப்பட்டது  தற்போது மன்னார் எல்லையில் பரப்புக்கடந்தான் பிரதேசம் ஆராயப்பட்டு வருகின்றது.
 
அதேபோல மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் காகிதத் தொழிற்சாலை அமைப்பதற்கும் வேலைவாய்ப்புக்காக தொழில்சார் வலயங்கள் உருவாக்குவதற்கும் பிரதமரோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
 
அத்தோடு அம்பாறை, கல்முனை தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான கல்முனை தமிழர் பிரதேசத்திற்கான தனியான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளுராட்சி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
ஊராட்சித் தேர்தல்
 
சென்ற உள்ளுர் அதிகார சபைத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேடி அலைந்தோம். இந்த உள்ளுர் அதிகார சபைத் தேர்தலில் த,தே கூட்டமைப்பில் போட்டியிட வேட்பாளர்களாக வருவதற்குப் பெருமளவில் ஆண்கள், பெண்கள, இளைஞர்கள் முன்வந்திருப்பது எதிர்கால ஜனநாயக நடைமுறைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
 
உள்ளுராட்சி மன்றங்கள் வினைத்திறனோடு செயலாற்றுவதற்கும், பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்களை இனங்கண்டு அதற்கான வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்தி வெற்றிகரமாகச் செயலாற்றுவதற்கும் நிபுணத்துவம், ஆற்றல் அனுபவம் மிக்க ஆலோசனை குழுக்களை அனைத்து உள்ளுராட்சி பிரதேசங்களிலும் நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
 
போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும், பிரதேசத்தினதும் மீளக்கட்டியெழுப்பும் திட்டங்களை நிறைவேற்றுவது மட்டுமன்றி, இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்தும், அங்கங்களை இழந்தும், வாழ்வாதாரமின்றியும் அவலத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களையும், இதயதாக லட்சியத்தை நிறைவு செய்யவும், நாம் செயலற்பட கிடைத்துள்ள ஜனநாயக சந்தர்ப்பங்களைத் தொடர்ந்தும் திடசங்கற்பத்துடன் எதிர்கொண்டு வெற்றிபெறுமாறு அன்போடும், அர்ப்பணிப்போடும், ஆத்ம பலத்தோடும் வேண்டுகிறோம்.
 
இனத்தைக் கூறுபோடாமல், பினபுடுத்தாமல், அனைவரும் ஒன்றுபட்டு, தமிழர் ஒற்றுமையை, பலத்தை நிரூபிக்கும் வகையில் உங்கள் வீட்டிற்கு வாக்களித்து வெற்றி பெறுமாறு அழைக்கிறோம்.
 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இவ் உள்ளுராட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரிலும், வீட்டுச் சின்னத்திலும் எல்லோரும் ஒன்றிணைந்து 10.02.2018 அன்று வாக்களித்து வெற்றிபெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
மாவை.சோ.சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சி
அ.செல்வம் அடைக்கலநாதன் தமிழீழ விடுதலை இயக்கம்
த.சித்தார்த்தன் ஜனநாய மக்கள் விடுதலை முன்னணி

http://globaltamilnews.net/2018/63966/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.