Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் யதார்த்­த­பூர்­வ­மான கோரிக்கை

Featured Replies

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் யதார்த்­த­பூர்­வ­மான கோரிக்கை

 

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வு­காணும் நட­வ­டிக்கை உள்­ளூ­ராட்சித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதை அடுத்து பாரா­ளு­மன்றம் அர­சி­யல்­யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு வழி­ந­டத்தல் குழு மற்றும் உப­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையில் மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வது, தேர்தல் முறை­யினை மாற்­றி­ய­மைப்­பது, இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு ஆகிய மூன்று விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட்டு அது­தொ­டர்­பான இடைக்­கால அறிக்­கையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­திக்­கப்­பட்­டது.

இடைக்­கால அறிக்கை தொடர்பில் இனி கட்­சிகள் ஆராய்ந்து இறுதி அறிக்­கை­யினை தயா­ரிப்­பது குறித்து கலந்­து­ரை­யா­ட­வேண்­டிய நிலை உள்­ளது. ஆனாலும் உள்­ளூ­ராட்சி தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந்த நட­வ­டிக்­கைகள் அனைத்தும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இடைக்­கால அறிக்­கையில் ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரத்தைப் பகிர்­வ­தற்­கான யோச­னைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. மத்­தி­யிலும் மாகா­ணத்­திலும் அதி­கா­ரங்­களை பகிரும் வகை­யி­லான யோச­னைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இணைந்த வடக்கு, கிழக்கில் சுய­நிர்­ணய உரி­மையை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான சமஷ்டித் தீர்வே தமக்கு வேண்­டு­மென்று தமிழ் மக்கள் கோரி­வ­ரு­கின்­றனர். ஆனால் இடைக்­கால அறிக்­கையில் வடக்கு,கிழக்கு இணைப்பு தொடர்பில் மூன்று யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதே­போன்று சமஷ்டி என்ற வார்த்­தைப்­பி­ர­யோகம் அறிக்­கையில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மத்­தி­யிலும் மாகா­ணத்­திலும் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வ­துடன் அந்த அதி­கா­ரங்கள் மீளப்­பெ­றப்­பட முடி­யா­த­வ­கையில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை தெரி­வித்து வரு­கின்­றது. சமஷ்டி என்ற வார்த்தைப் பிர­யோகம் இல்­லா­விட்­டாலும் சமஷ்­டியை ஒத்த அதி­காரப் பர­வ­லாக்கல் யோச­னைகள் இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக கூட்­ட­மைப்பு தெரி­வித்து வரு­கின்­றது.

ஆனால் இந்த இடைக்­கால அறிக்­கையில் வடக்கு, கிழக்கு இணைப்பு அல்­லது சமஷ்டித் தீர்வோ இடம்­பெ­ற­வில்லை என்றும் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய யோச­னைகள் இதில் இல்லை எனவும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி. வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான அணி­யினர் கோரி­வ­ரு­கின்­றனர். அதே­போன்று கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி, சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி. ஆர். எல். எவ். ஆகிய கட்­சி­களும் இடைக்­கால அறிக்­கை­யி­லுள்ள அதி­கா­ரப்­ப­கிர்வு யோச­னைகள் தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் அரை­குறை தீர்வைக் கூட கொண்­டி­ருக்­க­வில்லை என்று குற்­றம்­சாட்­டி­வ­ரு­கின்­றனர்.

இதே­போன்று தென்­ப­கு­தியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் உட்­பட இன­வாத சக்­தி­யினர் இடைக்­கால அறிக்­கையில் சமஷ்டி உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதனால் நாடு எதிர்­கா­லத்தில் பிள­வு­படும் நிலைமை ஏற்­படும் என்றும் குற்­றம்­சாட்­டி­வ­ரு­கின்­றனர். நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது ஈழத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தா­கவும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

இவ்­வாறு அதி­கா­ரப்­ப­கிர்வின் ஊடான அர­சியல் தீர்வு விட­யத்தில் வடக்கு, கிழக்­கிலும் தெற்­கிலும் வெவ்­வேறு வித­மான கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. சமஷ்டி என்ற சொற்­பி­ர­யோ­கத்தை புதிய அர­சியல் யாப்பில் பயன்­ப­டுத்­தினால் சிங்­கள மக்கள் மத்­தியில் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்­படும் என்று அர­சாங்கத் தரப்பு அச்­சப்­ப­டு­கின்­றது.

உண்­மை­யி­லேயே சமஷ்டி என்றால் சிங்­கள மக்கள் நாடு பிள­வ­டைந்­து­விடும் என்று அஞ்சும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இதேபோல் ஒற்­றை­யாட்சி என்றால் தமிழ் மக்­க­ளுக்கு வெறுப்­பான சொல்­லாக காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு இரு தரப்­பு­களும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க வகையில் நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாக உள்­ளது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு தனி­யாக சமஷ்­டியை தர­வேண்டாம். சகல மாகா­ணங்­க­ளுக்கும் அந்த அதி­கா­ரத்தை தாருங்கள். தமி­ழர்­க­ளுக்கு சமஷ்­டியைப் பெற்றுத் தரு­வ­தற்கு இந்­தியா உதவ வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

 இந்­திய குடி­ய­ரசு தினத்தை முன்­னிட்டு யாழ்ப்­பா­ணத்தில் இந்­திய உதவித் தூது­வ­ரா­ல­யத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே முத­ல­மைச்சர் இந்­தக்­கோ­ரிக்­கையை விடுத்­தி­ருக்­கின்றார்.

இலங்­கையில் இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் 13 ஆவது திருத்த சட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை வழங்கும் நோக்­கி­லேயே இந்த திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இருந்­த­போதும் சிங்­கள மக்­களை சமா­தானம் செய்ய அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் அது விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது. தமி­ழர்­க­ளுக்கு என பிரத்­தி­யே­க­மாக எதையும் வழங்­க­வில்லை என்று சிங்­கள மக்­க­ளுக்கு காட்­டு­வ­தற்­காக அப்­போ­தி­ருந்த ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­தன கையாண்ட தந்­தி­ரமே அது­வாகும். அதே அடிப்­ப­டையில் ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் சமஷ்­டியை வழங்க இன்­றைய அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும். இரு அல்­லது அதற்கு மேற்­பட்ட மாகா­ணங்கள் ஒன்­றி­ணை­யவும் வழி­வ­குக்­க­வேண்டும். ஏனெனில் என்ன நோக்­கத்­திற்­காக 13ஆவது திருத்த சட்டம் உரு­வாக்­கப்­பட்­டதோ அந்த விட­யங்கள் அனைத்தும் உரு­ம­றைப்பு செய்­யப்­பட்டு தமிழ் மக்­க­ளுக்கு தரப்­ப­ட­வேண்­டிய உரி­மைகள் அனைத்தும் மறைக்­கப்­பட்ட நிலை­மையில் நாம் இன்று வாழ்­கின்றோம் என்றும் முத­ல­மைச்சர் இந்த நிகழ்வில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

சமஷ்­டியை உள்­ள­டக்­கிய தீர்வு வழங்­கப்­ப­டு­வ­தற்கு தென்­ப­கு­தியில் சிங்­களத் தலை­வர்கள் மத்­தியில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. சமஷ்டி என்ற வார்த்­தையே நாட்டைப் பிள­வு­ப­டுத்த வழி­வ­குக்கும் என்ற தவ­றான அபிப்­பி­ரா­யத்தை சிங்­கள மக்கள் மத்­தியில் இந்தத் தலை­வர்கள் பரப்­பி­வ­ரு­கின்­றனர்.

இத­னால்தான் வடக்கு, கிழக்­கிற்கு மட்­டு­மன்றி இல்­லாது சகல மாகா­ணங்­க­ளுக்கும் சமஷ்டித் தீர்வை வழங்­க­வேண்டும் என்றும் இதற்கு இந்­தியா துணை நிற்­க­வேண்­டு­மென்றும் முத­ல­மைச்சர் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார். 1987 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை, இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழேயே மாகா­ண­ச­பைகள் உரு­வாக்­கப்­பட்­டன. உண்­மை­யி­லேயே தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்­வா­கவே இந்த ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இலங்கை அர­சாங்­கத்­திற்கு உரிய அழுத்­தங்­களை வழங்­கி­யதன் மூலமே மாகா­ண­சபை முறை­மை­யினை கொண்­டு­வ­ரு­வ­தற்கு அன்­றைய ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜய­வர்த்­தன இணங்­கி­யி­ருந்தார்.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் மாகாண நிர்­வாகம் உரு­வாக்­கப்­பட்­டது. வடக்கு, கிழக்­கிற்கு மட்டும் ஒரு தீர்வை வழங்­கினால் தென்­ப­கு­தியில் எதிர்ப்பு ஏற்­படும் என்­ப­தற்­கா­கவே நாடு முழு­வ­திலும் மாகா­ண­சபை முறைமை கொண்­டு­வ­ரப்­பட்­டது. இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் தீர்­வொன்றை காண வேண்டும் என்ற அக்­க­றை­யுடன் இந்­தியா செயற்­பட்­டி­ருந்­தது. ஆனால் அன்­றைய நிலையில் அந்த சந்­தர்ப்­பத்தை தமிழ் தரப்­பினர் உரிய வகையில் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. அதன்­பின்னர் யுத்தம் ஆரம்­பித்து அழி­வு­களே மிஞ்­சி­யது.

இருந்­த­போ­திலும் இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் இந்­தியா தொடர்ச்­சி­யான பங்­க­ளிப்­பினை செய்து வந்­தி­ருக்­கின்­றது. ஆனால் ரஜீவ் காந்­தியின் படு­கொ­லைக்குப் பின்னர் அந்த நிலைமை மாறி­யி­ருந்­தது. ஆனாலும் இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெறுவதற்கு இந்தியாவும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது. இந்த ஒத்துழைப்புக்கள் குறித்து அன்றைய அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஆகியோர் பகிரங்கமாகவே கருத்து தெரிவித்திருந்தனர்.

எனவே யுத்தம் முடிவடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் அக்கறைகாட்டவேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்கவேண்டும். இதனைத்தான் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தனது உரையின்போது வலியுறுத்தி இருக்கின்றார். முதலமைச்சரின் நிலைப்பாட்டிலேயே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் தீர்வை எதிர்பார்த்துள்ளனர். எனவே இதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்கவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-29#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.