Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை விடு­விப்பு!! 28 வருடங்களாக படையினரின் ஆக்கிரமிப்பில்

Featured Replies

  • மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை விடு­விப்பு!!
Capture-62-750x430.jpg

மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை விடு­விப்பு!!

28 வருடங்களாக படையினரின் ஆக்கிரமிப்பில்

1990ஆம் ஆண்­டி­லி­ருந்து படை­யி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்த மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை நேற்று உத்­தி­யோ­க ­பூர்­வ­மாக விடு­விக்­கப்­பட்­டது.

மருத்­து­வ­மனை மற்­றும் அத­னு­டன் இணைந்த 3 ஏக்­கர் நிலப் பரப்பு மாவட்­டச் செய­ல­கத்­தி­டம் படை­த்த­ரப்­பி­ன­ரால் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டது.

வலி­கா­மம் இடப்­பெ­யர்­வு­டன் மயி­லிட்­டிப் பிர­தே­சம் முழு­மை­யாக பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் கொண்டு வரப்­பட்­டது. மயி­லிட்­டித் துறை­மு­கம் உள்­ளிட்ட மயி­லிட்­டிப் பிர­தே­சம் விடு­விக்­கப்­பட முடி­யாது என்று கூறப்­பட்டு வந்த நிலை­யில், மயி­லிட்­டித் துறை­மு­கம் கடந்த ஆண்டு மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

மயி­லிட்;டி காச­நோய் மருத்­து­வ­ம­னையை பாது­காப்­புத் தரப்­பி­னர் சுற்­றுலா விடு­தி­யா­கப் பயன்­ப­டுத்தி வந்­த­னர். இத­னால் அது­வும் விடு­விக்­கப்­ப­டாது என்று கூறப்­பட்டு வந்­தது.

 

இந்த நிலை­யில், மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் நேற்று விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. விடு­விப்­புக்­கு­ரிய உத்­தி­யோ­க­பூர்­வக் கடி­தம், யாழ்ப்­பாண மாவட்ட மேல­திக மாவட்­டச் செய­லர் சு.முர­ளி­த­ர­னி­டம் படைத்­த­ரப்­பி­ன­ரால் நேற்றுக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

மாவட்­டச் செய­ல­கத்­தி­னால் உட­ன­டி­யா­கவே யாழ்ப்­பா­ணம் பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணி­ம­னை­யி­டம் அது ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/65582.html

  • தொடங்கியவர்

உல்லாச விடுதியாக பயன்படுத்திய வைத்தியசாலை 30 வருடங்களின் பின் இராணுவத்தால் விடுவிப்பு

 

 

இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. 

mayilitti.jpg

வலி வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற  இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர்  பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது.

பின்னர் குறித்த வைத்தியசாலையை இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். 

இந்த வைத்தியசாலையானது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள காரணத்தினால் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிறந்த முறையில் சிகிச்சை பெறுவதற்குரிய சரியான இடம் இந்த வைத்தியசாலை என் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில், குறித்த வைத்தியசாலை விடுவிக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியான கோரிக்கைகள் பாதுகாப்பு தரப்பிடம் முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை படையினர் கையளித்துள்ளனர்.

இந்த வைத்தியசாலை அண்மைய தினம் வரையில் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தமையினால் தற்போது உடனயடியாக அதனை வைத்தியசாலையாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. 

வைத்தியசாலைக்குரிய அமைப்புக்கள் மாற்றப்பட்டுள்ளன. எனவே வைத்தியசாலையாக புனரமைக்கப்பட்ட பின்னரே மருத்துவ சேவைகளை ஆரம்பிக்க முடியும் என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30097

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.