Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மினத்தின் தலைமீது நாமே மண் வாரிப்போடுகிறோமா?

Featured Replies

  • எம்மினத்தின் தலைமீது நாமே மண் வாரிப்போடுகிறோமா?
Capture-72-750x430.jpg

எம்மினத்தின் தலைமீது நாமே மண் வாரிப்போடுகிறோமா?

 

சமீப காலத்­துக் குடா­நாட்­டுச் செய்­தி­க­ளைத் தொடர்ந்து நோக்­கு­வோர் ஒரு அள­வுக்கு மன­நிலைப் பாதிப்­புக்­கு உள்­ளா­னா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. அந்த அள­வுக்­குக் கொலை, கொள்ளை பாலி­யல் துர்நடத்தை போதைப் பொ­ருள் பாவனை மற்­றும் விபத்து இறப்­புக்­கள் என்­ப­வற்­றோடு வாள்­வெட்டு, அடி­தடி என்று மனதை உறை­ய­வைக்­கும் சம்­ப­வங்­க­ளும் குடா­ நாட்­டில் கட்­டுக்­க­டங்­கா­மல் தொடர்­கின்­றன.

வாக­னங்­களை அதி­வே­க­மாக ஓட்­டு­வதே பெரும்­பா­லான
விபத்­து­க­ளுக்­கு  கார­ண­மா­கின்­றது

வாக­னங்­களை அதி­வே­க­மாக ஓட்­டி­ய­தன் கார­ண­மாக கடந்த ஓரிரு மாதங்­க­ளில் மட்­டும் யாழ்.குடா­நாட்­டில் பத்­துக்­கும் மேற்­பட்ட இளம் உயிர்­கள் அநி­யா­ய­மாக சாவடைந்துள்ளமை, சாதா­ர­ண­மா­க எ­டுத்­துக் கொள்­ள­ முடி­யா­த­தொன்று. குடா­நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் மோட்­டார் சைக்கிள்– அதி­வேக ஓட்­டம் கார­ண­மாக ஐந்து இளை­ஞர்­கள் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழக்க நேரிட்­டது. அதி­லும் குறிப்­பாக ஒரு இளை­ஞர் எரிந்த நிலை­யில் மோட்­டார் சைக்­கி­ளில் அமர்ந்த நிலை­யி­லேயே சாவடைந்தனர்.

நீர்­வே­லி­யில் பச்­சி­ளம் பாலகி பள்­ளி­சென்ற முதல் நாளி­லேயே பரி­தா­ப­மாக உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்­கி­யது. முன்னே சென்ற வாக­னம் ஒன்றை அதி­வே­கத்­து­டன் முந்­திச் செல்ல முற்­பட்ட ‘ஹைஏஸ்’ வாக­னம், எதிரே வந்த ஆட்­டோவை மோதித் தள்­ளி­ய­தில்­கு­றித்த விபத்து இடம் பெற்­றி­ருந்­தது. ஆட்­டோவை ஓட்டி வந்­த­வர் மீது தவறுகள் இருந்­தி­ருக்க வாய்ப்புக்குறைவு.

 

முன்­னால் சென்ற வாக­னத்தை தவ­றான முறை­யில் முந்­திச் சென்ற ஹைஏஸ் சாரதி– சற்று வேகத் தைக் குறைத்து அவதானம் பேணியிருப்பின் காயங்­க­ளு­டன் இன்­றும் எம்­மு­டன் உயி­ரு­டன் இருந்­தி­ருப்­பார்.

இதே­போல் – ஏ9 வீதி­யின் அரு கில் கொக்­கா­வில் பகு­தி­யில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த லொறி மீது கொழும்­பில் இருந்து யாழ்.நோக்கி வந்த ‘ஹைஏஸ்’ வாக­னம் அதி­வே­கத்­து­டன் மோதி­ய­தில் அதில் பய­ணித்த நான்கு இளை­ஞர்­கள் உயிரி ழந்தனர். இவர்­கள் 20,28 வய­து­க­ளை­ய­டைய இளை­ஞர்­கள். பொரு­ளா­தார ரீதி­யில் வாழ்வை வளப்­ப­டுத்த புைடவை வியா­பா­ரம் செய்­யும் ஆர்­வத்­தோடு கொழும்­பில் உடை­கள் கொள்­வ­னவு செய்து கொண்டு திரும்­பிய முயற்­சி­யா­ளர்­கள் பய ணித்த நே­ர­மும் நள்­ளி­ரவு நேர­மல்ல. முன்­னி­ரவு 8.30 மணி­ய­ள­வில் மழை, பனி­மூட்­டம் என பல கார­ணங்­கள் கூறப்பட்டாலும் சற்று நிதா­ன­மாக மித வேகத்­தில் வாக­னத்தை செலுத்­தி­யி­ருந்­தால் குறித்த இடர் ஏற்­ப­டாது தவிர்த்­தி­ருக்­க­லாம்.

தர­மற்ற வாக­னங்­க­ளை பயன்­ப­டுத்­து­வ­தா­லும் விபத்­துக்­க­ளை
தவிர்க்க இய­லா­துள்­ளது

ஒரு வாக­னம் திடீ­ரென பழு­த­டைந்­த­தால் அல்­லது மூடு பனி, அதிக மழை போன்­ற­வற்­றால் ஏற்­ப­டும் விபத்­துக்­களை கனத்த மன­தோடு ஏற்­றுக் கொண்­டா­லும், இவ்­வா­றான அதி­வே­கம் மற்­றும் வீதி ஒழுங்கு முறை­மை­களை அலட்­சி­யம் செய்து, அலைபேசியில் உரை­யா­டி­ய­படி சாரத்­தி­யம் செய்து, வீதி­க­ளில் வாக­னங்­களை உரிய பாது­காப்பு முறை­களை பின்­பற்­றாது நிறுத்தி வைப்­பது, வீதி­யில் வாக­னக் கதவை சடு­தி­யாக திறப்­பது, வீதி­யோர விற்­ப­னை­கள், வீதிக்கு நெருக்­க­மாக கட்­ட­டங்­கள், பாவ­னைக்கு நல்ல நிலை­யில்­லாத வாக­னங்­க­ளைச் சேவை­யில் இடு­ப­டுத்­து­வது என தவிர்க்­கக் கூடி­ய­தும் ஏற்­றுக் கொள்ள இய­லா­த­து­மான செயற்­பா­டு­கள் விபத்துச் சாவுக­ளுக்­குக் கார­ண­மா­கின்­றன.

போக்­கு­வ­ரத்­தில்  அவ­தா­னம் பேணு­தல் சிறப்­பு­டையது

ஒரு­பு­றம், சட்டங்களால் இவற் றைப் பார­பட்­ச­மின்றி கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரும் அதே­வேளை, மறுபுறத்தில் தனி­ம­னித பாவ­புண்­ணி­யங்­களை, சார­தி­க­ளும், உரிய அதி­கா­ரத் தரப்­பு­க­ளும் மன­தில் கொண்டு செயற்­பட முன்­வ­ர­வேண்­டும். ஒரு உயிர் இழப்பு என்­பது அந்த நப­ரோடு முடிந்­து­வி­டக் கூடிய ஒன்­றல்ல.

விபத்­தி­னால் சாவு அடை­ப­வ­ரது தாய், மனைவி, பிள்­ளை­கள், சகோ­த­ரி­கள் எனப் பல­ரது வாழ்வை அது நடுத்­தெ­ரு­வில் நிறுத்­தி­விடும் பேர­வ­லம் உண­ரப்­பட வேண்­டும். பொது­நோக்­கி­லும் வீழ்ச்­சி­ய­டைந்து வரும் தமிழ் மக்­கள் தொகை வளர்ச்­சி­யும் இந்த இறப்­புக்­க­ளால் பாதிப்பை எதிர்­கொள்­கின்­றது.

கொலை, கொள்ளைச் சம்பவங்களால் அச்சத்தின் மத்தியில் வாழ்வைக் கழிக்கும் குடாநாட்டு மக்கள்

இதே­வேளை, மற்­றொ­ரு­பு­றத்­தில் அடித்­துக் கொலை, வெட்­டிக்­கொலை என திகி­லூட்­டும் சம்­ப­வங்­க­ளும் மன­தைப் பதற வைக்­கின்­றன. மிகக் கொடூ­ர­மாக அண்­மைய யாழ்.வண்­ணார்­பண்­ணைச் சம்­ப­வம்– மூன்றே வய­தான மழலை வெட்­டிக் கொல்­லப்­பட்ட கொடூ­ரம் எமது சமூ­கத்­துக்­கான எச்­ச­ரிக்கை மணி. போதைப் பொருள் கடத்­தல் மைய­மாக யாழ்.குடா­நாடு மாறி வரு­கி­றது.

இந்­திய– தமி­ழக கடல் பகு­தி­யூ­டாக யாழ். குடா­நாட்டு எல்­லைக் கடற்­ப­கு­தி­யெங்­கும் கடத்தி வரப்­பட்டு கைப்­பற்­றப்­ப­டும் போதைப்­பொ­ருள்­களே இவ்­வ­ளவு தொகை­யா­னவை என்­றால், பிடி­ப­டாது கைமா­றும் பொருள்­கள் எவ்­வ­ளவோ யார­றி­வார்? கொலை­யாளி இவ்­வ­ளவு மூர்க்­கத்­த­ன­மாக மாறி, தனது பெறா­ம­களை, சாட்சி சொல்லித் தன்­னைக் காட்டி கூட கொடுக்­கக்கூட இய­லாத பிஞ்சு மழ­லையை வெட்­டிச் சாய்த்­துள்­ளான். இதன் பின்­ன­ணி­யி­லும் போதைப்­பொ­ருள் பாவனை சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கக் கூடுமோ என­வும் எண்ண வேண்­டி­யுள்­ளது.

ஆக, போதைப் பொருள் பாவ­னை­யின் நேர­டிப் பாதிப்பை அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு சம்­ப­வங்­கள் மூலம் யாழ்.மக்­கள் அனு­ப­விக்க நேர்ந்­துள்­ளது. இதை­யொரு அபாய எச்­ச­ரிக்­கை­யா­கக் கருதி விழிப்­ப­டைய வேண்­டி­யது இன்­றி­ய­மை­யாத ஒன்­றா­கும். இதே­பான்று ஆனைக்­கோட்­டை­யில் வயா­தி­பத்­தா­யொ­ரு­வர் அடித்­துக் கொல்­லப்­பட்ட கொடூ­ர­மும் போதைப் பாவ­னைத் தொடர்­புள்ள சம்­ப­வமா என நன்கு ஆரா­யப்­பட வேண்­டும்.

இதில் சந்­தே­க­ந­பர்­க­ளாக கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் 20–25 வய­து­டைய ஐந்து இஞைர்­கள். ஆக எமது இளம் சமு­தா­யம் படு­வே­க­மாக படு­பா­தக செயல்­க­ளில் ஈடு­பாடு கொண்டு வரு­வ­தையே மேற்­படி சம்­ப­வங்­கள் குறிப்­பு­ணர்த்தி நிற்­கின்றன.

மறு­பு­றம் வாள்­வெட்டு, பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் அடி­தடி, இரண்டு வெவ்­வேறு சம் ப­வங்­க­ளில் ஆயு­த­மு­னை­யில் ஐந்து லட்­சம் ரூபா கொள்ளை என சங்­கி­லித் தொட­ராக நடை­பெ­றும் வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளால் யாழ்.மக்­கள் கலக்­கத்­து­ட­னேயே தமது நாளாந்­த வாழ்வை கழிக்க வேண்­டி­யுள்­ளது. ஊரா­ரின் துய­ரம் ஒரு புறம்; மறு­பு­றம் செய்­தித்­தாள்­கள் மூல­மாக இத்­த­கைய அவ­லச் செய்தி கேட்டு மக்­கள் மனம் பேத­லிக்­கின்­ற­னர்.

இத்­த­கைய அவ­லங்­க­ளில் இருந்து மக்­களை மீட்­கப் போவது யார்? என்­பதே இன்று மக்­க­ளின் மன­தைக் குடைந்­தெ­ டுக்­கும் பெரும் கேள்வி எவர் தான் இதற்­குப் பதி­ல­ளிக்­கப் போகி­றார்­கள்?

http://newuthayan.com/story/65746.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.