-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஒரு காட்டில் வயசாகி போன🐱 புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு🐜 வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்மூர்ல பணம் படைச்சவனுக்கு தோணுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோணுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுச்சு. புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவு நாளா இது தோணலையேன்னு ஒரு முயலை🐰 செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவணையாவும் கொடுக்கனும்"னுச்சு. "ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னுச்சு, அப்படியே வாங்கிகிச்சு... ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை 🐱ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு. இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு🐒 அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி. 'எதைத் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஒரு ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்" "யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பை தானென்று" அதிரடியாக சொன்னது ஆந்தை.🦉 இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே "படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான்". வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்...! Latha Babu 😂 🤣 -
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்சிரியா: அதிபர் அசாத் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தது எப்படி? - விரிவான விளக்கம் Getty Images டேவிட் கிரிட்டன் பிபிசி செய்தி சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளது. அதிபர் அசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிபர் அசாத்திற்கு ஆதரவளித்த ரஷ்யா அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளது. இதற்கிடையே சிரியாவில் இப்போது என்ன நடக்கிறது? உள்நாட்டுப் போர் முதல் தற்போது வரை அங்கு என்ன நடந்தது? முழு விவரங்களையும் இங்கு தெரிந்துகொள்வோம். சிரியாவில் என்ன நடந்தது? பஷார் அல் அசாத் குடும்பம் சிரியாவை இரும்புக்கரம் கொண்டு 53 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டது. அதிபர் பஷார் அல்-அசாத் 2000ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன்னதாக அவரின் தந்தை ஏறக்குறைய 30 ஆண்டுகள் சிரியாவை ஆட்சி செய்தார். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நாட்டின் அமைதியான, ஜனநாயக சார்பு எழுச்சியைக் குலைத்தார். அது பேரழிவு தரும் உள்நாட்டுப் போராக மாறியது. இதில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் கடந்த புதன் கிழமை, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் எனப்படும் இஸ்லாமியவாத அரசாங்க எதிர்ப்புக் குழு வடமேற்கில் ஒரு பெரிய தாக்குதலை வெற்றிகரமாக வழிநடத்தியது. கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினர். பின்னர் சிரிய ராணுவம் வீழ்ச்சி அடைந்ததால், தலைநகர் டமாஸ்கஸுக்கு கிளர்ச்சிப் படை முன்னேறியது. பல சிரியர்கள் தாங்கள் ஒரு புதிய சுதந்திர உணர்வை உணர்வதாகக் கூறுகிறார்கள். சிலர் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். சிரியா யார் கட்டுப்பாட்டில் இருந்தது? AFP கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றினர் ரஷ்யா, இரான் மற்றும் இரானிய ஆதரவு ஆயுதக்குழுவின் உதவியுடன் அதிபர் அசாத் தலைமையிலான அரசு நாட்டின் பெரும்பாலான நகரங்களின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்த பிறகு, சிரியாவில் நீண்டகாலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உணரப்பட்டது. உள்நாட்டுப் போரின் மையமாக இருந்த பகுதிகள் பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், அமெரிக்கா மற்றும் சிரிய ஜனநாயகப் படையின் ஆதரவு பெற்ற குர்திஷ் இனக்குழு தலைமையிலான கூட்டணியால் கட்டுப்படுத்தப்பட்ட வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் உள்பட நாட்டின் பல பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அலெப்போ, இட்லிப் ஆகியவையே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதிகளாக இருந்தன. இவை, துருக்கி எல்லையில் அமைந்துள்ளன. அங்கு வசித்து வந்த 40 லட்சம் மக்களில் பலரும் இடம்பெயர்ந்தனர். இந்தப் பகுதிகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆயுதக்குழுவின் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தன. ஆனால் பிற கிளர்ச்சிப் பிரிவுகளும் ஜிஹாதி குழுக்களும் அங்கு செயல்பட்டன. சிரிய தேசிய ராணுவம் (SNA) என அறியப்படும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சிப் பிரிவுகளும், அங்குள்ள சில பகுதிகளை துருக்கிய படைகளின் ஆதரவுடன் கட்டுப்படுத்தியது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் யார் ? ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்: யார் இவர்கள்? பின்னணி என்ன? கடந்த 2011இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக 'ஜபத் அல்-நுஸ்ரா' (Jabhat al-Nusra) என்ற வேறொரு பெயரில் 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' அமைக்கப்பட்டது. இஸ்லாமிய அரசு (IS) எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ரா குழுவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார். சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குழுவாக இது கருதப்பட்டது. ஆனால் அதன் புரட்சிகர கொள்கையைவிட, 'ஜிஹாதி சித்தாந்தம்' அக்குழுவின் உந்து சக்தியாகக் கருதப்படுகிறது. மேலும் அந்த நேரத்தில், "சுதந்திர சிரியா" எனும் பெயரில் இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் கூட்டணியுடன் இந்தக் குழு முரண்படுவதாகவும் அறியப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பை பகிரங்கமாகப் பிரித்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார். Getty Images ஓராண்டு கழித்து, இதேபோன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற பெயரை இந்தக் குழு பெற்றது. இருப்பினும், ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பை அல்-கொய்தாவின் துணை அமைப்பாகக் கருதி, அல்-நுஸ்ரா முன்னணி என்று அடிக்கடி குறிப்பிடுகின்றன. இதன் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானியை, பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்தது. அதோடு அவரைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. அல்-கொய்தா, ஐஎஸ் அமைப்பு உள்பட அதன் எதிராளிகளை நசுக்குவதன் மூலம் இட்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தனது அதிகாரத்தைப் பலப்படுத்தியது. இது இஸ்லாமிய சட்டத்தின்படி பிரதேசத்தை நிர்வகிப்பதற்கு `சிரிய இரட்சிப்பு அரசாங்கத்தை' அமைத்தது. ஜவ்லானி வெள்ளிக்கிழமை சிஎன்என் நேர்காணலில், "புரட்சியின் இலக்கு அசாத் ஆட்சியை அகற்றுவதே" என்றும், "அரசு நிறுவனங்கள் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சில்" அடிப்படையிலான ஓர் அரசாங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். கிளர்ச்சியாளர்கள் ஏன் தாக்குதல் நடத்தினர்? சிரியா: தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்தது எப்படி? பல ஆண்டுகளாக, சிரிய அரசாங்கப் படைகள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றதால், இட்லிப் போர்க்களமாகவே இருந்தது. ஆனால் 2020இல், இட்லிப் நகரத்தை மீட்பதற்கான அரசின் உந்துதலை நிறுத்துவதற்காக துருக்கியும் ரஷ்யாவும் மத்தியஸ்தம் செய்து போர்நிறுத்தம் கொண்டு வந்தன. ஆங்காங்கே சண்டைகள் நடந்தாலும் போர்நிறுத்தம் பெரும்பாலும் நீடித்தது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்கள் நவம்பர் 27ஆம் தேதியன்று "ஆக்கிரமிப்பைத் தடுக்க" ஒரு தாக்குதலைத் தொடங்கியதாகக் கூறினர். அரசாங்கமும், அதன் நட்பு நாடான இரான் ஆதரவு ஆயுதப் படைகளும் வடமேற்கில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், பல வருடகால யுத்தம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஊழலால் அரசாங்கம் பலவீனமடைந்து, அதன் ஆதரவாளர்கள் மற்ற மோதல்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இரான் ஆதரவு பெற்ற லெபனான் குழுவான ஹெஸ்பொலா, போரின் ஆரம்ப ஆண்டுகளில் கிளர்ச்சியாளர்களை பின்னுக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், சமீபத்தில் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலால் ஹெஸ்பொலா பாதிக்கப்பட்டது. இஸ்ரேலிய தாக்குதல்கள் சிரியாவில் இரானிய ராணுவ தளபதிகளை அகற்றியது மட்டுமின்றி அங்குள்ள அரசாங்க சார்பு ஆயுதக்குழுவினரின் விநியோக வழிகளைச் சிதைத்தது. யுக்ரேனில் நடந்த போரால் ரஷ்யாவும் திசைதிருப்பப்பட்டது. அவர்கள் இல்லாமல், அசாத்தின் படைகள் பலவீனமடைந்தன. கிளர்ச்சிக் குழுக்கள் அதிபர் அசாத்தை வீழ்த்தியது எப்படி? Reuters அலெப்போ நகரை நோக்கி முன்னேறிய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆயுதக்குழுவினர் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் பெரும்பகுதியை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் நவம்பர் 30 அன்று கைப்பற்றினர். தங்களது முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கிய மூன்று நாட்களில் இது நடந்தது. அரசாங்கம் தனது துருப்புகள் மற்றும் பாதுகாப்புப் படைகளை விரைவாகத் திரும்பப் பெற்ற பின்னர் அவர்கள் அங்கு சிறியளவிலான எதிர்ப்பை மட்டுமே எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர். அசாத் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை "நசுக்க" சபதம் செய்தார். ரஷ்ய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. இரான் ஆதரவு ஆயுதக்குழுவினர் அலெப்போ-டமாஸ்கஸ் நெடுஞ்சாலையில் தெற்கே உள்ள அடுத்த நகரமான ஹமாவை சுற்றி ராணுவத்தின் தற்காப்புக் கோடுகளை வலுப்படுத்த படைகளை அனுப்பியது. இருப்பினும், ஹமா வியாழக்கிழமை அன்று கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. Getty Images சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸை கைப்பற்றுவதே தங்களது அடுத்த இலக்கு என்று கிளர்ச்சியாளர்கள் உடனடியாக அறிவித்தனர். மேலும் ஒருநாள் மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு அதைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். அதேநேரத்தில், சிரியாவின் தென்மேற்கில், ஜோர்டான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மற்ற கிளர்ச்சிப் பிரிவுகள், 24 மணிநேரத்திற்குள் டெரா, சுவைடா நகரங்களைக் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை அவர்கள் அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸுக்குள் நுழைந்து, நாட்டின் மிகவும் மோசமான ராணுவ சிறை என்று கூறப்படும் சைட்னாயாவில் இருந்த கைதிகளை விடுவித்ததாக அறிவித்தனர். இரண்டு மணிநேரத்திற்குள், அவர்கள்: "கொடுங்கோல் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத் தப்பி ஓடிவிட்டார்" என்று அறிவித்தனர். Getty Images "அவர் ஆட்சியின் கீழ் 50 வருட அடக்குமுறை, 13 வருட குற்றங்கள், கொடுங்கோன்மை மற்றும் கட்டாய இடப்பெயர்வுக்குப் பிறகு, இருண்ட காலத்தின் முடிவையும் சிரியாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் நாங்கள் இன்று அறிவிக்கிறோம்," என்று அவர்கள் கூறினர். கிளர்ச்சியாளர்கள் வருவதற்கு சற்று முன்னர் அதிபர் தலைநகரில் இருந்து விமானம் மூலம் எங்கோ ரகசிய இடத்திற்குச் சென்றதாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அசாத்தின் பிரதமர் முகமது அல்-ஜலாலி, "சிரிய மக்களால் தேர்வு செய்யப்பட்ட "எந்தவொரு தலைமையுடனும் ஒத்துழைக்கத் தயார்" என்று ஒரு வீடியோவில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சிரியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் சிரிய குடிமக்கள், அதிபர் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடி வருகின்றனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமையாத் சதுக்கம் அப்பகுதி மக்களின் கொண்டாட்டத்திற்கான மையமாக இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cyv343mrzm0o?at_campaign=ws_whatsapp
-
By யாயினி · பதியப்பட்டது
வாடகை வாகன சாரதிகளிடம் கொள்ளையிடும் கொள்ளையர்கள் கைது! வாடகைக்கு பயணிப்பதாக தெரிவித்து, வாடகை வாகன சாரதிகளிடம் உள்ள தங்க நகைகளை சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் நேற்று (08.11.24) கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் ஏறி சாரதிக்கு போதைப்பொருளை குடிக்கக் கொடுத்து இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அதிலிருந்து 41 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை செட்டியார் தெருவில் உள்ள தங்க விற்பனை நிலையத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் சுமார் 15 பொலிஸ் பிரிவுகளில் அடிக்கடி இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. https://globaltamilnews.net/2024/209088/ -
By தமிழ் சிறி · Posted
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடந்த தமிழரசு கட்சித் தலைவருக்கான போட்டியில்... அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களாலேயே தோற்கடிக்கப் பட்டார். பின்... சென்ற மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்களால் தோற்கடிக்கப் பட்டார். ஆக.... சுமந்திரனுக்கு இந்த ஆண்டு, "கனதியான" இரண்டு தோல்விகளை கொடுத்துள்ளது. முன்னாள் பா. உ. சுமந்திரன்... இந்த இரண்டு தோல்விகளையும் ஏற்றுக் கொண்டு, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே.. நல்லது. அவர், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவாரேயானால்.. தமிழ் மக்கள், வடக்கு மாகாண சபைக்கு... அனுரவின் சிங்கள கட்சியை தெரிவு செய்வார்கள் என்பது 100 வீதம் உண்மை.
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts