Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

70 ஆவது சுதந்திர தினம் ; உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து

Featured Replies

70 ஆவது சுதந்திர தினம் ; உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு  வாழ்த்து

 

 

இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

maithripala-sirisena--queen-elizabeth.jp

சுதந்திர தேசமாக ஏழு தசாப்தங்களை கடந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானிய எலிசபெத் மகாராணி விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் சிறந்த நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மகாராணி, எதிர்வரும் காலங்களில் இரு நாட்டு மக்களுக்கு மத்தியில் இருந்துவரும் உறவுகள் மேலும் பலமடையும் என தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று நிகழ்வில் தனிப்பட்ட முறையில் பங்குபற்றக்கிடைக்காததையிட்டு கவலையடைவதாக குறிப்பிட்டுள்ள மகாராணியார், இந்த நிகழ்வுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினரான இளவரசர் எட்வேட் தம்பதியினரை பங்குபற்றச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இலங்கை நல்லிணக்கம், பொறுப்புகூறல் மற்றும் நீதியான ஆட்சி என்பவற்றை சிறப்பாக முன்னெடுத்துவரும் இச்சந்தர்ப்பத்தில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனப்பூர்வமாக வாழத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இலங்கை நல்லிணக்கத்தினதும் சுபீட்சத்தினதும் நோக்கங்களை உறுதியாக அடைந்துகொள்ளும் என்றும் அமெரிக்கா ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த தான் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங்கும் விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை எதிர்காலங்களில் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள சீன ஜனாதிபதி, 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் பேரரசர் அக்கினோ, ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகான், இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கும் துருக்கிக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் மிக விரைவில் தான் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/30257

இது சுதந்திரமாக திட்டமிட்ட தமிழின படுகொலைகள், தமிழின அழிப்புக்கள் செய்யப்பட சந்தர்ப்பங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்ட   70 ஆவது சுதந்திர தினம்.

இது சிங்கள-பௌத்த கொலைகாரகளின், சிங்கள-பௌத்த கொள்ளைக்காரர்களின், சிங்கள-பௌத்த கடத்தல்காரர்களின், சிங்கள-பௌத்த பாலியல் வன்முறையாளர்களின், சிங்கள-பௌத்த கப்பக்காரர்களின் 70 ஆவது சுதந்திர தினம்.

சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் சுதந்திரம் மிக மோசமான போர்க்குற்றங்கள்ச் செய்வதற்கான , மிக மோசமான சமூகவிரோத செயல்களைச் செய்வதற்கான, இனப்படுகொலைகளைச் செய்வதற்கான  சுதந்திரம்.

இதில் மானமுள்ள, நீதி நேர்மைக்கு மனித உரிமைகளுக்கு உண்மையாக மதிப்பு கொடுக்கும் நாடுகளின் ராஜதந்திரிகள் கலந்து கொள்ளமாட்டார்கள்!

  • தொடங்கியவர்

70வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் செய்தி

 

 

எழுபதாவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தினார்.

4_Prez.JPG

“கடந்த முப்பதாண்டு காலப் பகுதியானது இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்கு மிக முக்கியமானது. எதிர்பாராத விதமாக எல்.டி.டி.ஈ. பயங்கரவாதிகளின் எழுச்சி, நாட்டின் அபிவிருத்தியை முப்பதாண்டு காலம் பின்னோக்கி இழுத்திருக்கிறது. எனவே, நாட்டை முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு, நாட்டின் அனைத்துத் தரப்பினரும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.

“கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் உலகின் ஏனைய நாடுகளுக்கு இணையான சாதனைகளை நாம் புரிய முடியும்.

“நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சவால்களில் முக்கியமானது பொருளாதாரம். நாம் இன்று பொருளாதாரச் சீர்கேட்டுக்கு முகங்கொடுத்திருக்கிறோம். இதற்கு முன் அமைந்த ஆட்சிகள் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிச் செயற்பட்டிருந்தாலும் அதில் எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.

“ஜனாதிபதி பதவி முதல் கடை நிலை உத்தியோகத்தர் வரை, அரசின் அனைத்து உறுப்பினர்களும் அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி நாட்டின் அபிவிருத்தியை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

“அரசியல் தூய்மையானதாக, பேதங்கள் அற்றதாக, ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். இதன் மூலமே நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை அடைய முடியும்.”

ஜனாதிபதி தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/30263

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.