Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியமும் கோடம்பாக்க மாயையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது அஜீவன் நான் என்ன சொல்ல வாறணெண்டால் :wacko: :wacko: :wacko:

அருமையான தெளிவான விளக்கம் சாஸ்த்... :angry: :angry:

  • Replies 67
  • Views 11k
  • Created
  • Last Reply

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்....!

ஐயா! அப்படி ஒரு பாடத்திட்டத்தை நீங்கள் உருவாக்கி ஒரு மீடியா கல்வி நிறுவனத்தை தொடங்கினால் நான் நேரடியாகவோ அன்றி தபால் மூலமாகவோ படித்து பட்டம்பெற தயாராக இருக்கிறேன். என்னைப்போல இன்னும் பலர் இருப்பார்கள். :lol: :lol: :lol:

ஆனால் ஒன்று, பாடத்திட்டம் உருவாக்குவதும் ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவதும் நீங்கள் நினைப்பது போல ஈசியான விடயம் அல்ல. ஒரு பலசரக்குக் கடை வைப்பது போன்றதல்ல ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவது. ஒரு நாலு எழுத்து எழுதிப்போட்டு வைரமுத்துவுக்கே சவுண்டு விடுறது இப்ப வாடிக்கையாப்போச்சு.

யாரை வைரமுத்து எண்டுறீர்....? உம்மையா..?? நாங்கள் சவுண்டு பாட்டி என்டு எப்பிடி கண்டு பிடித்தீர்...? உம்மை வைத்துக்கொண்டு மற்றவரையும் எடை போடுகிறீர் போல.!

மேல சொன்ன நீர்சொன்ன விடயங்கள் எனக்கோ யாழுகோ புதுசு எண்டு நினைக்கிறன்... எனக்கு இப்பதான் அது பற்றி தெரிந்து கொன்டேன்..! உங்களுக்கு தற்பெருமை எண்டது கூட பிறந்தது போல

யாரையும் கேவலப்படுத்துவது எனது நோக்கமல்ல. முக்கியமாக சாத்திரியாரை இதுக்குள்ள ஏன் இழுக்கிறியள் எண்டு எனக்கு விளங்கவில்ல. இங்கு தனிநபர்களை பற்றி விவாதம் நடக்கவில்லை. தமிழர் ஊடகத் துறை நண்பர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களின் கல்வி மற்றும் அறிவியல் தரத்தை உலகத் தரத்துக்கு பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்பது எனது வாதம். இல்லை அவர்கள் ஏற்கனவே பெரும் கல்வி மற்றும் அறிவியல் தரத்தில் மிளிர்கிறார்கள். உலகத் தரத்தில் இருக்கிறார்கள். வேண்டுமானால் கல்வி நிறுவனம் தொடங்கி (அதிலயும் ஏதாவது காசு பாக்கலாமா என்ற அங்கலாய்ப்பில்) மற்றவர்களுக்கு படிப்பிக்கத் தயாரே தவிர தாங்கள் கல்வியறிவு பெறுவது தேவையில்லை என்பது உங்களின் வாதம். அந்த வகையில் "நீங்கள்" என நான் குறிப்பது உங்கள் கட்சிக்காரரை ஆகும்.

"நீங்கள் எண்டு சொல்லின" நான் வக்காலத்து வாங்கின ஆள் சாத்திரியார்தான்

அடுத்தவன்ரை பொட்டுக்கேடுகளை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு ஏதாவது உருப்படியாக நீங்கள் செய்திருந்தால் அதைப் பற்றியும் படித்துப் பயனடைய ஆவலாயுள்ளேன் :P :P :P

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை வைரமுத்து எண்டுறீர்....? உம்மையா..?? நாங்கள் சவுண்டு பாட்டி என்டு எப்பிடி கண்டு பிடித்தீர்...? உம்மை வைத்துக்கொண்டு மற்றவரையும் எடை போடுகிறீர் போல.!

மேல சொன்ன நீர்சொன்ன விடயங்கள் எனக்கோ யாழுகோ புதுசு எண்டு நினைக்கிறன்... எனக்கு இப்பதான் அது பற்றி தெரிந்து கொன்டேன்..! உங்களுக்கு தற்பெருமை எண்டது கூட பிறந்தது போல

"நீங்கள் எண்டு சொல்லின" நான் வக்காலத்து வாங்கின ஆள் சாத்திரியார்தான்

எங்களின் விவாதக் கருத்தை விட்டு என்னைத் தாக்குவதைப் பார்த்தால் விவாதம் தொடர்பான உங்களின் சரக்கு தீர்ந்து விட்டது போல கிடக்குது. நானும் விரைவில் இந்த விவாதம் தொடர்பான எனது முடிவுரையை இங்கு வைக்கிறேன். இந்த விவாதத்தில் பங்கு கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை விறுவிறுப்பாக தந்தமைக்கு களநண்பர் தயா எனப்படும் தலயிற்கு எனது நன்றிகள்.

நாளைக்கு இண்டைக்கு ஆயுதம் தூக்கி ஈழ திரு நாட்டுக்காக போராடுற பெடியள் பிள்ல்ளையள்தான் நாட்டை ஆளப்போகினம்.. நீங்கள் எதிர்ப்பார்த்த கல்வி தகமை அவர்களிட்டை இருக்காது.. ஆனாலும் அவையள்தான் ஆளுவினம்... மனதை இப்பவே திடப்படுத்தி கொள்ளுங்கோ...

நான் சொன்ன கருத்துக்கு என்னை பற்றியோ இல்லை நான் ஆதரிப்பதாக சொன்னவரையோ பற்றி கேவலப்படுத்தின உங்களுக்கும் நண்றி... சரி சரக்கு எண்டது என்ன...??? அதை வச்சுத்தான் இங்கை கருத்து எழுதுறீங்களோ..???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைக்கு இண்டைக்கு ஆயுதம் தூக்கி ஈழ திரு நாட்டுக்காக போராடுற பெடியள் பிள்ல்ளையள்தான் நாட்டை ஆளப்போகினம்.. நீங்கள் எதிர்ப்பார்த்த கல்வி தகமை அவர்களிட்டை இருக்காது.. ஆனாலும் அவையள்தான் ஆளுவினம்... மனதை இப்பவே திடப்படுத்தி கொள்ளுங்கோ...

எங்கட ஆக்கள் தங்கட சொந்த பிழைப்புக்கு புலியின்ரை பேரை இழுத்துவிடுவது இதுதான் முதல்தடவை என்று இல்லை. இது அதுக்கு ஒரு உதாரணம் அவ்வளவே.

Edited by பண்டிதர்

எங்கட ஆக்கள் தங்கட சொந்த பிழைப்புக்கு புலியின்ரை பேரை இழுத்துவிடுவது இதுதான் முதல்தடவை என்று இல்லை. இது அதுக்கு ஒரு உதாரணம் அவ்வளவே.

உமது வாசிப்பு திரண் நண்றாக வெளிப்படுகிறது... இல்லை மறதி நோயால் அவதிப்படுகின்றீரோ தெரியவில்லை... ஆரம்ப கட்டத்திலேயே தலைவர் படித்த பின் போராட வரவில்லை என்பதை அடித்து சொன்னது மறந்து இருக்கலாம்...! இப்போ அதை திரும்ப படிப்பதன் மூலம் உமக்குள் எதுவும் மாற்றம் ஏற்படாது...!

படிப்பதை பாதியில் விட்டு போராடும் ஒரு இனத்தின் பக்கதுணையாக பேசுவது போல பாசாங்கு செய்யும் நீங்கள்... அந்த இனத்தின் நிலையை கவனத்தில் எடுக்க மாட்டீர்கள்...! அந்த இளைஞர்களின் எதிர்காலம் என்ன என்பதையும் சிந்திக்கும் நிலைமை உங்காளுக்கு வராது ஏன் எண்டால் அதன் பாதிப்பை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்பது சந்தேகம்தான்... !

அப்படி வெளியில். வருபவர்களால் என்ன எல்லாம் சாதிக்க முடியும் என்பதை என்னால் சரியாக சொல்ல முடியும்.. எனக்கு அதற்கான அனுபவம் போதிய அளவு இருக்கிறது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:o

Edited by பண்டிதர்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகத்துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தேவையை எடுத்தியம்பியபோது "பூப்பூ" வென ஊதித்தள்ளியவர்ர்களுக்கு.

"How terrorist groups such as the Tamil Tigers use the internet for political campaigns" என்ற தலைப்பில் அதாவது ""விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாதிகள் இணையத்தை எவ்வாறு தமது அரசியல் பிரச்சாரத்திற்க்கு பயன்ன்படுத்துகிறார்கள்" என்ற விட்டயத்தில் PhD செய்கிறார் ஒரு சிங்களவர்.

அண்மையில் புலிகளின் விமானத்தாக்குதல் தொடர்பில் இவர் எழுதிய கட்டுரையை தமிழ் கனேடியனும் போட்டிருந்தது. இவர் ஆரம்பத்தில் தமிழர் net work இனுள் ஊடுருவ தமிழர் சார்பு போல எழுதலாம்.

அண்மையில் விடுதலைப்புலிகளின் மீது கொண்டுவரப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தடையின் பின்னால் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினரான Niranjan Joseph Deva-Aditya என்ற சிங்களவர் தான் முக்கியமாக செயற்பட்டதாக தகவல்.

அதே போல இந்த குட்டிச் சிங்கமும் வளர்ந்து என்னவெல்லாம் பண்ணுமோ ஆருக்குத் தெரியும். சிலவேளை இப்படி கருத்துக்களங்களுக்குக் கூட ஆப்பு வைக்கப்படலாம்.

முயற்சியும் ஆர்வமும் கொண்ட எங்கட ஊடகவியலாளர்கள் அப்பவும் கவனயீர்ப்புப் போராட்டத்திலதான் காலங்களிப்பினம்.

:blink:

Edited by பண்டிதர்

ஐயா ரிரிஎன் தொலைக்காட்சியை வான் அலைகளுக்கு அனுப்புவதற்கு குளாப் காஸ்ட் நிறுவனம் மறுத்ததற்கும் பிரான்சின் ஊடக அதிகார சபை ரிரிஎன் தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்க மறுத்ததற்கும் காரணம் நமது தரப்பில் ஊடகத்துறை தொடர்பான தொழில் சார் அறிவு இல்லாமல் குறிப்பாக சர்வதேச ஊடகச் சட்டங்கள் பற்றி அறிவு இல்லாமல் அதை கையாண்ட சில தனிப்பட்ட நபர்களின் தவறான அனுகுமுறையே காரணமாகும்.

ஊடகத்துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தேவையை எடுத்தியம்பியபோது "பூப்பூ" வென ஊதித்தள்ளியவர்ர்களுக்கு.

...

அதே போல இந்த குட்டிச் சிங்கமும் வளர்ந்து என்னவெல்லாம் பண்ணுமோ ஆருக்குத் தெரியும். சிலவேளை இப்படி கருத்துக்களங்களுக்குக் கூட ஆப்பு வைக்கப்படலாம்.

முயற்சியும் ஆர்வமும் கொண்ட எங்கட ஊடகவியலாளர்கள் அப்பவும் கவனயீர்ப்புப் போராட்டத்திலதான் காலங்களிப்பினம்.

:D

மற்றவயை நேரடியாக சுட்டி காட்டி பேச முடியாத கருத்து வங்குரோத்து நிலையிலை இருக்கிறீயள்...! :(

நீங்கள், கல்வி அறிவு இல்லாத ஊடகர்கள்...., ஊடகம்... எண்டு இணையங்களை வைத்து இருப்பவர்களை சொல்பவர்களாக இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்... ! கலை அறிவு இல்லாமல் வலை ஏற்றுவது எப்படி , வலை பக்கங்களை வடிவமைப்பதும், கோப்புக்களை கோர்வையாக்கி ஏற்றும் மேதைகள் அறிவை எப்படி வரவளைத்தார்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை....??? <_<:lol::lol:

குட்டி சிங்கம் பற்றிய கவலையை விடுங்கள்... மற்றவன் போய் பூனைக்கு மணி கட்டுறது இருக்கட்டும்...! நீங்கள் எப்போது மணியை எடுத்து கட்டப்போகிறீர்கள்...??? வேணும் எண்டால் எனக்கு தேவையான பொருளாதார உதவி செய்வீர்களாக இருந்தால் நான் அந்த கடமையை உங்களுக்காக செய்ய தயாராக இருக்கின்றேன்...! :P

பிரித்தானிய( இங்கிலாந்து) பாராளுமண்றத்தில் இலங்கை விவகாரம் எழுப்பப்பட்டு 3 மணிநேரவிவாதம் நடை பெற்றதுக்கு பின்புலத்தில் வேலை செய்தவர்கள் பற்றி ஏதாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா...?? இல்லை எண்றால் மகிழ்ச்சி... காரணம் சிங்களத்திற்கு ஏதுவான செயற்பாட்டாளர்கள் அம்பலத்துக்கு வந்து எல்லாரின் உற்று நோக்கலுக்குள் இருக்கும் போது... எங்களுக்கு ஆதவானவர்கள் வெளிச்சத்துக்கு வராத்து... ( சிங்களவரை தமிழரின் கண்களின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை விளிப்புணர்வு பிரச்சாரம் எண்றும் சொல்லாம்)

Edited by தயா

ஐயா ரிரிஎன் தொலைக்காட்சியை வான் அலைகளுக்கு அனுப்புவதற்கு குளாப் காஸ்ட் நிறுவனம் மறுத்ததற்கும் பிரான்சின் ஊடக அதிகார சபை ரிரிஎன் தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்க மறுத்ததற்கும் காரணம் நமது தரப்பில் ஊடகத்துறை தொடர்பான தொழில் சார் அறிவு இல்லாமல் குறிப்பாக சர்வதேச ஊடகச் சட்டங்கள் பற்றி அறிவு இல்லாமல் அதை கையாண்ட சில தனிப்பட்ட நபர்களின் தவறான அனுகுமுறையே காரணமாகும்.

கேகலிய ரம்புக்வெலவும் கூட சிலசமயங்களிலை சர்வதேச சட்டங்களை மதிக்க தெரியாமல் ஊடகங்களுக்கு கருத்து வளங்குகிறார்...! அவருக்கும் ஒருக்கா எங்கை படிச்சு பட்டம் வாங்கலாம் எண்டு ஒரு குறிப்பை அனுப்பி வையுங்கோ...!

மாவீரர் நாள் நிகள்வுகளில் போராளிகளை சீருடைகளோடை காட்டுவது தவறு எண்டால்,புலிக்கொடியை காட்டுவது தவறு எண்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எண்றால்.... அதை சொய்யாமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா..??? அப்பிடி எண்டால் புலிகளை படம்போட்டு காட்டும் ரோய்ட்டரையும், பிபிசியையும் கூட ஒடுக்க வேணும்...! என்ன அவர்கள் தமிழர் பிரச்சினைகளை மட்டும் படம்போட்டு காட்டுவது இல்லை...!

இருக்கட்டும் விரைவில் புதிய தமிழ் தொலைக்காட்ச்சி "மதுரம்" ஆதரவில் வரவிருகிறது....! சட்டம் தெரியாத யாரோ தொடங்க போகினம்... அது சம்பந்தமாய் ( கோலா பிள்ளையார் போண்ற) கட்டுரைகளை எழுத ஆயத்தமாக இருங்கள்...!

இருக்கட்டும் விரைவில் புதிய தமிழ் தொலைக்காட்ச்சி "மதுரம்" ஆதரவில் வரவிருகிறது....! சட்டம் தெரியாத யாரோ தொடங்க போகினம்... அது சம்பந்தமாய் ( கோலா பிள்ளையார் போண்ற) கட்டுரைகளை எழுத ஆயத்தமாக இருங்கள்...!

ஐயா தயா ரிரி என் தொலைக்காட்சி தேசியத்தலைவரை காட்டியது போராளிகளை சீருடையுடன் காட்டியது மாவீரர் தினத்தை காட்டியது என்பதற்காகத் தான் தடை செய்யப்பட்டது அல்லது அந்தத் தொலைக்காட்சிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்காகத்தான் தடை செய்யப்பட்டது என்று தேசத்துரோக கும்பல்களும் அவற்றின் இணையத் தளங்களும் சொல்வதை நம்பித்தான் இந்தக்கருத்தை எழுதியிருக்கிறீர் என்று நினைக்கிறேன்.பிரான்ஸ் அரசாங்கமோ அல்லது சிஎஸ்ஏ எனப்படும் அதன் ஊடக அதிகாரசபையோ இதுவரை அப்படி எதுவும் அறிவிக்கவில்லை.பிரான்சினுடை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிறந்த சினிமா படைப்பாளர் கோவிந்த் நிஹ்லானி...

அவர் கருத்து "சமூகம் எப்படி இருக்கிறதோ அதைத்தான் சினிமா பிரதிபலிக்கிறது"

ஆகவே சினிமாவும் ஊடகங்களும் மக்களைக் கெடுக்கிறது என்பதற்கு பதிலாக..

மக்களின் மனமும் புத்தியும் எப்படி இருக்குதோ அதுபோலத்தான் ஊடகங்களும்...

தமிழ்நாட்டு சனங்கள் மிக மிக மோசமானவர்களாக மாறி வருகிறார்கள்...

புத்தியில்லாத சனங்கள் புத்தியில்லாத சினிமா,அரசியல்,ஊடகங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்..

அவர்கள் உண்மையான் தமிழர்களே அல்ல...

சாதி வெறி பிடித்து, சாதிக்கொரு கட்சி ஆரம்பித்து கேவலப்பட்டு போன சனங்கள்!!!!

ஐயா தயா ரிரி என் தொலைக்காட்சி தேசியத்தலைவரை காட்டியது போராளிகளை சீருடையுடன் காட்டியது மாவீரர் தினத்தை காட்டியது என்பதற்காகத் தான் தடை செய்யப்பட்டது அல்லது அந்தத் தொலைக்காட்சிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்காகத்தான் தடை செய்யப்பட்டது என்று தேசத்துரோக கும்பல்களும் அவற்றின் இணையத் தளங்களும் சொல்வதை நம்பித்தான் இந்தக்கருத்தை எழுதியிருக்கிறீர் என்று நினைக்கிறேன்.பிரான்ஸ் அரசாங்கமோ அல்லது சிஎஸ்ஏ எனப்படும் அதன் ஊடக அதிகாரசபையோ இதுவரை அப்படி எதுவும் அறிவிக்கவில்லை.பிரான்சினுடை
  • 2 weeks later...

சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும்.

தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா என்று இருங்கள். அதுவும் முடியாதவர்கள் கீழ்கண்ட சில விதிகளை பின் பற்றினால் சன் டிவியின் சகிக்காத தொடர்களை ரசிப்பதோடு, வாழ்வில் அல்சர், இரத்த கொதிப்பு போன்ற வியாதி இனி வாராது அந்த சூரிய பகவான் அருள் புரிவார்.

முக்கிய விதி:

எல்லா தொடரிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும், கீ கொடுத்தால் ஓடும் கை கடிகாரத்திற்கு எவ்வளவு மூளை உண்டோ, அவ்வளவு மூளைதான் அவர்களுக்கும்.

இனி உப விதிகள்:

1. எந்த தொடரும் இப்போது முடியும் என எப்போதும் சொல்ல முடியாது, எனவே, தொடர் இப்படி முடியுமா, அப்படி முடியுமா என மண்டை குழம்புவது ஒரு கால விரயம்.

2. எல்லா தொடரிலும் ஒரு வில்லன் (அ) வில்லி உண்டு, அவர்கள் கொஞ்சம் கோணல் சிரிப்பு சிரித்தபடி கடித்து கடித்து வசனம் பேசுவார்கள், சீனுக்கு சீன் உதார் விடுவார்கள்.

3. எல்லா தொடரிலும் ஒரு ஏழை அப்பா (அ) அம்மா நிச்சயம் உண்டு, அவர்கள் எப்போதும் அழுதபடியே இருப்பார்கள்.

4. எல்லா தொடரிலும் நன்கு படித்த, பணக்கார பெண்ணும், வாசக்கதவை மூடி, டெலிஃபோனை பிடுங்கி விட்டால், வெளியே போகத்தெரியாமல் பூனை மாதிரி வீட்டிலேயே இருப்பாள்.

5. எல்லா தொடரிலும், யாராவது ஒருவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கும்.

6. எல்லா கதாநாயகனுக்கும் ஒரு கெட்ட Flashback கட்டாயம் இருக்கும்.

7. எல்லா தொடரிலும் ஒன்று (அ) இரண்டு கதாபாத்திரங்கள் ரொம்ப நல்லவர்கள், ஆனால் எப்போதாவதுதான் வருவார்கள்.

8. ஒரு தொடரில் வரும் நடிகர், நடிகைகள் எல்லா தொடர்களிலும் வருவார்கள், so, ஒரே தொடரை தொடர்ந்து பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒன்று என்று பார்த்தாலும் புரியும்.

9. எல்லா மாயாஜால தொடர்களிலும், சமீபத்திய எல்லா ஆங்கிலப்பட ட்ரிக் கண்டிப்பாக இருக்கும்.

10. அம்மன், முருகன் தொடர்களை பார்ப்பதை தவிர்க்கவும், பார்த்தால், கொஞ்சம் இருக்கும் கடவுள் பக்தியும் போய், நாஸ்திகராவது சர்வ நிச்சயம்.

11. நியூஸ் - நடு நடுவே வரும் கேள்வி - பதில் மட்டும் OK, so, mute செய்து விடுவது உத்தமம்.

12. Pepsi - தொடரை ரசிக்க, பாடல்காட்சி வரும் வரை mute செய்து விடுவது ரொம்ப நல்லது, செய்தால், கேட்கப்படும் அபத்த கேள்விகளை கேட்டு எதையாவது எடுத்து டிவி மேல் வீசலாம் என்ற கோபம் வராது தவிர்க்கலாம், டிவி ரிப்பேர் செலவும் மிச்சம் பிடிக்கலாம்.

13. அரட்டை அரங்கம் - தவிர்ப்பது நல்லது, கொஞ்சம் இருக்கும், மூளையும் மழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது, இந்தியா பற்றி நமக்கு இருக்கும் பொது அறிவு பெரிய கேள்விக்குறியாகிவிடும். மேலும், பார்த்த பின் ஒரு வாரம் வரை - காதில் 'ஒய்ங்க்' என்று ஒரே இரைச்சலாக இருக்கும். எதற்காக எல்லோரும் கத்தி கத்தி பேசுகிறார்கள்?

14. உங்களோடு உங்கள் குழந்தைகளும் தொடர்களை பார்க்கின்றார்களா, தினமும் பார்க்கின்ற ஒவ்வொரு தொடருக்கும், $1.00 வீதம் உண்டியலில் போட்டு வந்தால், பிற்காலத்தில் அவர்கள் பிழைக்க ஒரு பொட்டிக்கடை வைக்க பணம் தயார்.

-முரளி

http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post_17.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை எல்லாம் பெரிதாக விவாதம் செய்யத் தேவையில்லை.

புலம் பெயர் நாடுகளில் எத்தனை தமிழ் ஊடகங்கள் இருக்கின்றன?

அத்தனை ஊடகங்களிடமும் ஒரே ஒரு ளே்வி!

வேற்று நாட்டு படைப்புகளை நீங்கள் இலவசமாக பெற நிச்சயம் முடியாது.

அப்படி நீங்கள் ஒலி அல்லது ஒளிபரப்பினால் அதை திருட்டுத் தனமாக ஒலி-ஒளி பரப்பகிறீர்கள்

என்றே சொல்லலாம்.

நீங்கள் எங்கு இருந்து எதை வாங்கினாலும் பணம் கொடுக்கிறீர்கள்.

எமது நாட்டு அல்லது புலம் பெயர்ந்து வாழும் எமது கலைஞர்களுக்கு

ஒரு படைப்பை செய்ய எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கேட்டு

பதில் எழுதுங்கள்.

அது மட்டும் தெரிந்தால்

எத்தனையோ படைப்பாளிகள் படைப்புகளை தருவார்கள்.

ஒரு பாடலுக்கு எவ்வளவு?

ஒரு குறும்படத்துக்கு எவ்வளவு?

ஒரு தொடருக்கு எவ்வளவு?

ஒரு செய்தியை அனுப்பினால் எவ்வளவு?

இவற்றிற்கு பதில் சொல்லுங்கள்?

தெரியாது என யாரும் சொல்ல முடியாது

வெகு காலமாக

புலம் பெயர் நாட்டில் ஊடகங்கள் இருக்கின்றனவே...........

அவை

ஏதாவது கொடுத்துத்தானே இருக்கும்? :P

வணக்கம் அஜீவன் எதனால் அவர்கள் புலத்தமிழர்களுக்கு ஆதரவளிக்கின்றார்கள் இல்லை என்பதை எப்போதாவது சிந்தித்ததுண்டா? புலத்தில உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்சி அல்லது திரைப்படத்தை அவர்கள் ஒளிபரப்பினால் எத்தனை நிறுவனங்கள் அதற்கு ஸ்பான்ஸர் செய்வார்கள்? உதாரணமாக, ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒரு புல தமிழருக்கு திறமை உள்ளவருக்கு குறிப்பிட்ட தொகை பணத்தை கொடுத்து ஒரு குறும்படத்தை தயாரிக்க வைத்து, அதை ஒளி பரப்பும் காலத்தில் எந்த நிறுவனமும் ஸ்பான்ஸர் செய்யாவிடத்து அது அவர்களுக்கு நட்டம் தானே? அதே நேரம் ரசிகர்களையும் எத்தனை வீதமான மக்கள் நமது கருவை விரும்ம்பி பார்ப்பார்கள் போன்ற விடயங்களையும் ஆராய வேண்டும். இந்திய தமிழர்கள் அதிலும் புலத்தில் வாழ்பவர்கள் எதற்காக நமது நிகழ்ச்சிகளை எல்லாம பார்க்க போகின்றார்கள்? புலத்தில் உள்ள ஈழத்தமிழர்களை மட்டும் நம்பி ஒரு நிறுவனம் வாழ முடியாது.

இதற்கு சிறந்த வழி நீங்களே ஸ்பான்ஸர்ஸ் பிடித்து பின்னர் தொலைகாட்சியை தொடர்பு கொண்டால் சாத்தியங்கள் தென்படலாம்...

Edited by chumma....

மிகவும் சரியான அணுக்கு முறை....! விடயம் ஒண்றை ஒருவர் ஏற்றுகொள்ள முன்வராவிட்டால் அதை அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதை கொண்டு செல்வது கொஞ்சம் சவாலான விடயம் எண்றாலும் செயற்படுத்த கூடியது...!

முக்கியமானது அவர்களை குறைகூறுவது எந்த பலனையும் தராது...

உதாரணமாக 100 ஸ்ரேலிங்பவுண்ஸ் சாந்தாவாக வாங்கிய TTN தொலைக்காட்ச்சி சாந்தா தாரராக வைத்து இருந்த்தது 22,000 பேர் எண்று கணக்கு சொன்னார்கள்( TTN நிறுவனத்தை சேர்ந்தவர்களின் தகவல் இது) அப்படியானால் 220,000 ஸ்ரேலிங் பவுன்ஸ்சை பணமாக பெற்று இருப்பார்கள் எண்றாலும், 18 000 பவுன்ஸ்சை வருடத்துக்கு வழங்கி 15 பேரைக்கூட நிரந்தர வேலைக்கும் வைக்குமளவுக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதே உண்மை...! இதில் நிகழ்சி தயாரிப்பு, செய்மதி கட்டணம், ஒளிபரப்பு நிலைய வாடகை, இப்படி எல்லாவகையான செலவும் விளப்பரங்களை மட்டும் நம்பி இருக்கவேண்டிய நிலையில், மற்றயோர் எல்லாரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் நிலையில் இருக்க வேணும் எண்று நினைப்பது சரியானதா...??

  • 2 weeks later...

...

எங்களது ஊடகங்களில் தாயகம் நோக்கிய பயணத்துக்கான அணி திரட்டல் 25 வீதம் நடைபெறுகின்றது என்றால் அதை மழுங்கடித்து அந்த தேசிய உணர்வை சிதைப்பதற்கான வேலைகள் 75 வீதம் நடைபெறுகின்றன.

...

சென்ற வாரம் இயக்குனர் சங்கர் பிரான்ஸுக்கு கான் சினிமா விழாவுக்கு வந்திருந்தார். பிரான்ஸில் பிரபல வர்த்தக நிறுவன உரிமையாளர், சங்கரை சிறந்த முறையில் வரவேற்று அதிக பணச்செலவுடன் கவனித்துக் கொண்டாராம்.

அதற்கான காரணம், கருணாவை மையமாக வைத்து சங்கர் மூலம் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியே என்று அறிந்தேன். (சங்கரை வரவேற்ற ஒருவர் தனது நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தபோது காதில் விழுந்தது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.