Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதமடிப்பதில் கங்குலி சாதனையை விஞ்சிய கோலி

Featured Replies

159 பந்துகளில் 160 நாட் அவுட்: நிறுத்த முடியாத கோலி சதம் எண் 34; இந்தியா 303 ரன்கள் குவிப்பு

 

 
kohlijpg

3-வது ஓருநாள் போட்டியில் 34-வது சதம் எடுத்த விராட் கோலி.   -  படம். | கெட்டி இமேஜஸ்

கேப்டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 160 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் என்று தன் 50 ஓவர்களை முடித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் 303 ரன்களில் பாதிக்கும் மேல் ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார்.

ரோஹித் சர்மா மட்டையின் உள்விளிம்பில் பட்டு ரபாடா பந்தில் விக்கெட் கீப்பர் கிளாசன் கேட்சுக்கு வெளியேறினார், முன்னேயும் வராமல் பின்னேயும் செல்லாமல் பந்தின் லெந்த்தைப் பார்த்து ஒரே இடத்தில் தேங்கினார் ரோஹித் சர்மா. ஸ்கோரரைத் தொந்தரவு செய்யாமல் வெளியேறினார்.

ஷிகர் தவண் (76), கோலி இணைந்து ஸ்கோரை 140 ரன்களுக்கு உயர்த்தினர். ஷிகர் தவணுக்கு தொடக்கத்தில் அறிமுக வீச்சாளர் லுங்கி இங்கிடி சில எளிதான பவுண்டரி பந்துகளை வீசினார். இதனால் 6 ஓவர்களில் 47 ரன்கள் என்று மோசமான அறிமுக ஒருநாள் போட்டியானது லுங்கி இங்கிடிக்கு.

கோலி சரியான பார்மில் இருப்பது அவர் வெளியே சென்ற பந்துகளை ஆடாமல் விட்டதும் எல்.பி.க்காக உள்ளே செலுத்திய பந்துகளை சிறப்பாக ஆடியதிலும் வெளிப்பட்டது, பந்துகளை அவர் அருமையாகக் கணித்த விதம் அவரது தலை சிறந்த பார்மை பறைசாற்றியது.

கோலி இறங்கியவுடன் 0-வில் இருந்த போது ரபாடா பந்துக்கு நகர்ந்து பிளிக் ஆட முயன்றார், பந்து கால்காப்பில் மட்டும் பட்டதாக முறையீடு எழ நடுவர் அவுட் கொடுத்தார், உடனேயே கோலி ரிவியூ கேட்டார். இதில் மட்டையில் பந்து பட்டது உறுதியானது. அதே ஓவரில் ரபாடா ஒரு இலவச லெக் திசைப் பந்தை வீச கோலி அதனை முறையாகப் பவுண்டரிக்கு அனுப்பினார்.

அடுத்த ஓவரில் தவண் இரண்டு இங்கிடி பவுண்டரி பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். கோலி ரபாடாவின் ஷார்ட் பிட்ச் பந்தை மிகத்துல்லியமாக மிட்விக்கெட் பவுண்டரிக்கு புல் செய்து பவுண்டரி அடிக்க, இங்கிடி தொடர்து இலவச பவுண்டரி பந்துகளை வீச 10 ஓவர்களில் இந்திய அணி 50/1 என்று வந்தது. அடுத்த 6 ஓவர்களில் ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேலான விகிதத்தில் அடிக்க 16 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 87/1 என்று இருந்தது.

இம்ரான் தாஹிர் வர தவண் ஸ்வீப், மற்றும் மிட்விக்கெட் பவுண்டரிகளை அடித்தார் இதில் முதல் பவுண்டரி தவணின் அரைசதமானது. 22வது ஓவரில் கோலி, டுமினி பந்தை லாங் ஆனில் தள்ளி விட்டு தனது 46வது அரைசதத்தை எடுத்தார். 63 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த தவண் கடைசியில் டுமினி  பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

25 ஓவர்களில் 150/2 என்ற நிலையில் கோலி 63 ரன்களில் இருந்தார். ரஹானே 11 ரன்கள் எடுத்து மார்க்ரமின் சாதுரிய கேப்டன்சிக்கு டுமினி பந்தை லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பாண்டியா இறங்கினார் சரியாகவே ஆடவில்லை, டுமினியை ஒரு சிக்ஸ் அடித்தார் பாண்டியா. மற்றபடி தடவல் இன்னிங்ஸை ஆடினார். கடைசியில் கிறிஸ் மோரிஸ் பந்தை காலை நகர்த்தாமல் ஸ்லாஷ் செய்ய எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. இந்திய அணி 33 ஓவர்களில் 188/4 என்று இருந்தது, கோலி 100 பந்துகளில் 82 என்று இருந்தார்.

தோனி இறங்கி ஷாட் ஆடத் திணறினார், 22 பந்துகளில் 10 ரன்கள் என்று ஆமையாகியதால் எதிர்முனையில் கோலியின் ‘ரிதம்’ கெட்டுப்போனது, 19 பந்துகளில் 7 ரன்களில் தோனி தடவிக்கொண்டிருந்த போது, டுமினி பந்தை ஷார்ட் பைன் லெக்கில் தட்டி விட்டு 2 ரன்களை வேகமாக எடுத்து கோலி தனது 34வது சதத்தை எடுத்தார். பிறகு அதனைக் கொண்டாடும் விதமாக மிக அருமையாக இடைவெளியைக் கண்டுபிடித்து அதே ஓவரில் மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசினார். 42வது ஓவரில் 22 பந்துகளில் 10 ரன்கள் தட்டுத்தடவல் இன்னிங்ஸுக்குப் பிறகு தோனி இம்ரான் தாஹிர் பந்தில் லாங் ஆனில் படுமோசமான ஷாட்டில் அவுட் ஆகி வெளியேறினார்.

தென் ஆப்பிரிக்கா 20வது ஓவரிலிருந்து 40வது ஓவர் வரை 105 ரன்களையே விட்டு கொடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் 83 ரன்களை எடுக்க கோலியின் அபார இன்னிங்ஸும் புவனேஷ்வர் குமாரின் 16 ரன்களும் உதவின, மற்றபடி தன்னந்தனியாக இந்த பெரிய ஸ்கோருக்கு விராட் கோலி காரணமாக இருந்துள்ளார், ஜாதவ் 1 ரன்னில் பெலுக்வயோ பந்தை மிக அசிங்கமாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி ஓவரை ரபாடா வீச கோலி மிட்விக்கெட்டில் ஒரு திகைப்பூட்டும் சிக்ஸ் மற்றும் மிட் ஆஃபைத் தாண்டி ஒரு கிளாசிக் ட்ரைவ் பவுண்டரி என்று முடித்தார், இந்திய அணியும் ஒரு நேரத்தில் எட்டாக்கனியாக இருந்த 300 ரன்களைக் கடந்து 303/6 என்று முடிந்தது.

போராளி விராட் கோலி 159 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 160 நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

டாஸ் ரிப்போர்ட்:

மோர்கெல் இல்லை; லுங்கி இங்கிடி அணியில்: இந்தியா பேட்டிங்!

கேப்டவுன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

இந்திய அணியில் மாற்றமில்லை, ஆனால் தென் ஆப்பிரிக்க அணியில் டிகாக்குக்குப் பதில் கிளாசன் களமிறங்குகிறார், மோர்கெல் இல்லை, லுங்கி இங்கிடி முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார். ஆண்டில் பெலுக்வயோ மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

விராட் கோலி டாஸ் பற்றி கூறும்போது, “நாங்களும் முதலில் பேட் செய்யவே முடிவெடுத்திருப்போம். இரவில் பந்துகள் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் பேட்டிங் ஒரு குறிப்பிட்ட இலக்கை துரத்த வேண்டும் என்று விரும்புகிறோம், ஏனெனில் அவர்களின் நடுவரிசை வலுவானதாக இல்லை. பிட்ச் போகப்போக ‘ட்ரை’ ஆகும்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article22678242.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சதமடிப்பதில் கங்குலி சாதனையை விஞ்சிய கோலி - புள்ளிவிவர தகவல்கள்

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார். இது அவருக்கு 34-வது சதமாகும்.

விராட் கோலி - VIRAT KOHLIபடத்தின் காப்புரிமைGALLO IMAGES

இந்திய அணி தென் ஆஃப்ரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆஃப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இதையடுத்து ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி தென் ஆஃப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் நடைபெற்று வருகிறது.

 

டாஸ் வென்ற தென் தென் ஆஃப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார். இதையடுத்து கோலி - தவான் இணை இணைந்து பொறுப்பாகவும் அதிரடியாகவும் ரன்கள் சேர்த்தது.

தவான் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி - தவான் இணை பிரிந்தபிறகு மற்ற இந்திய வீரர்கள் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி மட்டும் இறுதி வரை களத்தில் நின்று 159 பந்துகளில் 12 பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 160 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவிந்திருந்தது.

விராட் கோலி இந்த ஆட்டத்தில் சதம் கண்டதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். தென் ஆஃப்ரிக்கா மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியொன்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் கோலி.

முன்னதாக 2001-ஆம் ஆண்டு தென் ஆஃப்ரிக்கா அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஒருநாள் போட்டியில் சவுரவ் கங்குலி 127 ரன்கள் குவித்திருந்தார். அதுவே இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்சமாகும். அந்தச் சாதனையை இன்றைய தினம் கோலி முறியடித்துள்ளார்.

விராட் கோலிபடத்தின் காப்புரிமைGALLO IMAGES

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் சேர்த்து அதிக சதங்கள் விளாசியவர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் நூறு சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 71 சதங்களோடு ரிக்கி பாண்டிங் உள்ளார். மூன்றாவது இடத்தில் சங்கக்காரா 63 சதங்களுடனும், நான்காவது இடத்தில் காலிஸ் 62 சதங்களுடன் உள்ளனர். தற்போது ஐந்தாவது இடத்தில் 56 சதங்களுடன் கோலி இருக்கிறார்.

முன்னதாக ஹாஷிம் ஆம்லா, ஜெயவர்த்தனே, கோலி ஆகியோர் 55 சதங்களுடன் ஐந்தாவது இடத்தில் இருந்தனர்.

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ஐந்து முறையுடன் முதலிடத்தில் உள்ளார். மூன்றாவது முறையாக 150 ரன்களை கடந்துள்ள கோலி, பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய கேப்டன்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை விஞ்சி தற்போது கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

முகமது அசாருதீன் 162 போட்டிகளில் நான்கு சதமும், தோனி (171) டெண்டுல்கர் (70) போட்டிகளில் ஆறு சதங்களும் எடுத்து முறையே நான்காவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்

சவுரவ் கங்குலி 142 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய சமயங்களில் 11 சதங்களை விளாசியுள்ளார். விராட் கோலி கேப்டனாக விளையாடிய 43 போட்டிகளில் 12 சதங்களை விளாசி முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலி ஒருநாள் தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ளார்.

http://www.bbc.com/tamil/sport-42975937

  • தொடங்கியவர்

`பவுண்டரிகள் இல்லாமல் 100 ரன்கள்!’ - விராட் கோலியின் புது சாதனை

 
 

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான 3 வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

Virat_15394.jpg

 

Photo Credit: Twitter/ICC


இந்தப் போட்டியில் தனது 34 வது சதத்தைப் பூர்த்தி செய்த விராட் கோலி, பல்வேறு சாதனைகளைப் படைத்தார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு இது 12 வது சதமாகும். இதன்மூலம் 11 சதங்கள் அடித்திருந்த சவுரவ் கங்குலியின் சாதனையை அவர் முறியடித்தார். அதேபோல், கேப்டவுன் போட்டியில் 160 ரன்கள் குவித்திருந்த விராட் கோலி, 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசினார். இதில், சரியாக 100 ரன்களை அவர் ஓடியே எடுத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைப் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் உதவியில்லாமல் எடுத்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் 5 வது வீரர் என்ற பெருமையை அவர் இதன்மூலம் பெற்றார். இதற்கு முன்னதாக, 1999-ம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 130 ரன்கள் எடுத்த கங்குலி, அதில் 98 ரன்களைப் பவுண்டரிகள் உதவியில்லாமல் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 

 

இந்தப் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் முதலிடத்தில் இருக்கிறார். 1996-ம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 118 ரன்கள் குவித்த கிறிஸ்டன், அதில் 112 ரன்களைப் பவுண்டரிகள் இல்லாமல் எடுத்திருந்தார். இரண்டாவது இடத்தில், தென்னாப்பிரிக்க அணியின் இந்நாள் கேப்டன், டுபிளசி (2017-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள்), ஆடம் கில்கிறிஸ்ட் (2004-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 102 ரன்கள்) மற்றும் மார்டின் கப்தில் (2013-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 101 ரன்கள்). 

https://www.vikatan.com/news/sports/115844-virat-kohlis-unique-record.html

  • தொடங்கியவர்

'கோலி ஒரு ஜீனியஸ்': பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட் புகழாரம்

 

 
KOHLI

கோப்புபடம்: விராட் கோலி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 'ஜீனியஸ்' எனப் புகழ்ந்துள்ளார்.

பாக்பேசன்.நெட் (Pakpassion.net) என்ற இணையதளத்துக்கு பேட்டியளித்த அவர், "இந்திய பேட்ஸ்மேன்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமும் அவர்கள் களத்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்குக் காரணமும் அவர்களது பேட்டிங் நுட்பம் சரியாக இருப்பதே.

கோலியைப் பொறுத்தவரை அவரது பேட்டிங் முறையே அவருக்கு ரன்களை சேர்த்துத் தருகிறது. ஒருமுறை மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் அவர் களத்தில் பேட் செய்ய வரும்போதும் அந்த நுட்பம் அவருக்கு ரன்களை சேர்த்துத் தருகிறது.

ஒரு பேட்ஸ்மேனின் பேட்டிங் நுட்பம் சரியாக இல்லை என்றால் அவர் எப்போதாவது மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். சீராக ரன் எடுக்கும் வீரராக இருக்க முடியும். கோலியைப் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான அடையாளம், அவர் பவுலர்களின் திறமைகளையும் சறுக்கல்களையும் சரியாக கணித்துக் கொண்டு அதற்கேற்ப தனது பேட்டிங் முறையை மாற்றி அமைப்பதே. சர்வதேச அளவில் கோலியே சிறந்த பேட்ஸ்மேன். கோலி ஒரு ஜீனியஸ்" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, "இந்திய வீரர்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையேயான வித்தியாசம் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதில் இருந்தே வெளிப்பட்டுவிட்டது.

இருப்பினும், பாகிஸ்தான் வீரர்களை அதிகமாகக் கடிந்து கொண்வதும் நியாயமாக இருக்காது.

தொழில் உத்திகள் ரீதியாக இரு அணிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆனால் அதேவேளையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 2 போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தியதையும் மறந்துவிடக் கூடாது" என்றார்.

http://tamil.thehindu.com/sports/article22700192.ece

 

 

புதிய பாணி கேப்டன்சியை கொண்டு வந்துள்ளார் விராட் கோலி: முன்னாள் மே.இ.கேப்டன் காளிசரணிடமிருந்து ஒரு அரிய பாராட்டு

 

 
kohli

விராட் கோலி சிக்ஸ் அடிக்கும் காட்சி.   -  படம். | ஏ.எஃப்.பி

விராட் கோலி புதிய பாணி கேப்டன்சியைக் கொண்டு வந்துள்ளார் என்று 70-80-களில் கோலோச்சிய மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும் இடது கை பேட்ஸ்மெனுமான ஆல்வின் காளிச்சரண் அரியதொரு புகழாரம் சூட்டியுள்ளார்.

பொதுவாக ஒப்பீடுகளை விரும்பாத ஆல்வின் காளிச்சரண் பிறப்பால் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது, பெங்களூருதான் இவருக்கு பூர்வீகம். இவரது காலத்தில் டெனிஸ் லில்லி மிகப்பெரிய பவுலர், அவரை உரித்தெடுத்தவர் என்ற புகழ் காளிச்சரணுக்கு உண்டு. ஒருமுறை சென்னை டெஸ்ட் போட்டி ஒன்றில் 98 ரன்களில் இருந்த போது எஸ்.வெங்கட்ராகவன் பந்தில் பவுல்டு ஆகியதில் வெறுப்படைந்து ஓய்வறை கண்ணாடியை உடைத்து சர்ச்சையில் சிக்கிய ஆக்ரோஷகர் காளிச்சரண்.

இவர் விராட் கோலியைப் பற்றி கூறும்போது, விவ் ரிச்சர்ட்ஸின் கேப்டன்சி போல் ஆக்ரோஷமாகவும், அவரைப்போலவே பேட்டிங்கில் விட்டுக் கொடுக்காத தன்மையையும் விராட் கோலி கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவுக்காக ஆல்வின் காளிச்சரண் கூறியதாவது:

விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ் இருவரிடமும் அணுகுமுறை வலுவானது, விவ் ரிச்சர்ட்ஸ் போலவே விட்டுக் கொடுக்காத விடாப்பிடி உறுதி கோலியிடம் உள்ளது. எனக்குப் பொதுவாக ஒப்பீடு பிடிக்கவே பிடிக்காது. ஆனால் கோலியைப் பார்க்கும் போது எனகு விவ் (ரிச்சர்ட்ஸ்) நினைவு வருகிறது.

விவ் ரிச்சர்ட்ஸ் போலவே கோலி ஒரு வெற்றிகரமான கேப்டன், பேட்டிங்கில் அவர் ஒரு நிகழ்வு, எப்போதும் ஒரு அவாவுடன் திகழ்கிறார், சீரான முறையில் ரன்களை எடுப்பதில் மிகச்சிறந்தவர் கோலி.

கோலி தற்போது ஒரு புதிய பாணி கேப்டன்சியைக் கொண்டு வந்துள்ளார். 5 பேட்ஸ்மென்கள் அல்லது 5 பவுலர்களுடன் ஆடுவேன் என்பார் அதிலேயே நிற்பார். விராட் கோலி வழக்கமான கேப்டன்கள் போன்றவர் அல்ல. இவரது பாணியும் வழக்கமானதல்ல.

இவ்வாறு கூறியுள்ளார் ஆல்வின் காளிச்சரண்.

http://tamil.thehindu.com/sports/article22703974.ece

  • தொடங்கியவர்

சதம் அடிப்பது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

 

 
IN13SACHIN1176208f

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 34-வது சதத்தை விளாசிய விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

கேப்டவுன் ஒருநாள் போட்டியில் கோலியின் அதி அற்புத 160 நாட் அவுட்டால் இந்தியா தெ.ஆப்பிரிக்காவை சரணடையச் செய்தது.

இப்போட்டியில், விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 34-வது சதத்தை விளாசினார். இதற்கு சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மைதானத்தில் இறங்கி சதங்களை விளாசுவது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு பாராட்டுகள். இன்னும் அதிஅதிக ரன்களை குவிக்கவும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article22687269.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.