Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கியில் பெரு வீழ்ச்சி

Featured Replies

மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கியில் பெரு வீழ்ச்சி

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பெற்றுக்கொண்ட 5.77 மில்லியன் வாக்குகள்(47.6 %) கடந்த வாரம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளாக (44.7%) குறைவடைந்துள்ளன.

இதனால் எமக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களித்தவர்களை மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்த 6.1 மில்லியன் மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

2015 ஜனாதிபதித் தேர்தலில் 5.77 மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளையே பெற்றுள்ளார்.

நாட்டின் 51 சதவீதமான மக்கள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதியன்று எமது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதிகளுக்காக அவருக்கு வாக்களித்தனர்.

அது தான் நாட்டில் அதுவரை இருந்து வந்த சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த காலப்பகுதி. இலங்கையில் ஜனநாயகத்தை மீள கட்டியெழுப்புவதாக வாக்குறுதியளித்தவர்கள், தனி ஒரு குடும்பம் மற்றும் அவர்களது விசுவாசிகளை மட்டுமன்றி அனைத்து மக்களையும் பாதுகாக்கும் என்ற உறுதிப்பாட்டுக்கு வந்தனர்.

இலங்கையர்கள், இலங்கையின் சட்டத்தாலன்றி பயத்தால் நிருவகிக்கப்பட முடியாதென்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி,சுதந்திரக் கட்சியின் பலசாலிகள், மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட 30 அரசியல் மற்றும் சமூக அமைப்புக்கள் அன்றைய தினம், ஒன்றாக கூட்டு சேர்ந்தன.

அரச சேவையில் சுதந்திரத்தை நிலைநாட்டவும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும், எமது சட்ட முறைமையிலுள்ள சட்ட கட்டுப்பாட்டுக்கேற்ப அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பேணவும் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு நாம் வாக்குறுதி அளித்திருந்தோம்.

திறைசேரியின் கஜானாவை திருடியவர்களை நீதிக்கு முன் கொண்டு நிறுத்துவதாக நாம் வாக்குறுதியளித்தோம். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இரத்தத்திலேயே தைரியம் நிறைந்த ஊடகவியலாளர்களின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கான தாகத்தை தீர்த்து வைப்பதாக நாம் வாக்குறுதியளித்தோம். எல்லாவற்றையும் விட, எமக்கு முன்னர் இருந்த பாரிய ஊழல் நிறைந்த தசாப்தத்திலிருந்து உங்களை விடுவிப்பதாக நாங்கள் வாக்குறுதியளித்தோம்.

இன்று, நாம் செய்திருப்பது போதுமானதாக இல்லையென மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக பாழடைந்த நீதி முறைமையில் சுதந்திரம் மற்றும் விரைவுத்தன்மையை ஏற்படுத்தவும், பெருமளவில் இடம்பெற்று வரும் சிக்கல் நிறைந்த குற்றச் செயல்கள், கொலைகள் மற்றும் ஏமாற்று செயற்பாடுகள் தொடர்பில் வெற்றிகரமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சூழ்நிலையை பொலிஸாரிடம் வலுவூட்டுவதற்காகவும் நாம் ஆகக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.

இருந்த போதிலும், குற்றச் செயலொன்று இடம்பெற்றிருக்கலாம் என்ற சமிக்ஞை வெளியானவுடனேயே அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டுமென்பதையும் நீதி நிலைநாட்டப்படுவதற்கு முன்னரே சம்பந்தப்பட்டவர்களிடையே மிகவும் விறுவிறுப்புடன் குற்றச்செயல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதையும் நாட்டின் வரலாற்றில் எமது அரசாங்கமே முதற்தடவையாக ஊக்குவித்தது.

மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள இச்செய்தி ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மிகவும் ஆழமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியை மிகப் பரந்தளவில் முன்னெடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

எமது ஜனநாயக கதையின் இந்த முதல் அத்தியாயத்தை நாம் தொடங்கும்போது, கடந்த சனிக்கிழமை நாம் கண்ட இரண்டு குறிப்பிடத்தக்கச் செயற்பாடுகளுக்காக இலங்கை பெருமை கொள்ள முடியும்.

அதில் முதலாவது தான் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் சேவையின் கீழ், தேர்தலொன்றை நடத்தியமையாகும். இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் அரச மற்றும் தனியார் சொத்துக்கள், வளங்கள் மற்றும் அரச ஊடகங்களை அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தாமல் விட்டதில்லை. இந்த சுயாதீன அமைப்புக்களின் கீழ் இலங்கை, தேர்தலை குழப்பக்கூடிய வகையிலான ஆகக்குறைந்த ஊழல்,மிரட்டல் மற்றும் வன்முறையைக் கொண்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பெற்றுக்கொண்ட 5.77 மில்லியன் வாக்குகள்(47.6மூ) கடந்த வாரம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் 4.95 மில்லியன் வாக்குகளாக (44.7மூ) குறைவடைந்துள்ளமை இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

கடந்த சனிக்கிழமை எமக்கும் ஜனாதிபதி சிறிசேனவுக்குமாக சேர்த்து வாக்களித்த 46 சதவீத மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மட்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை. மாறாக ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்த்து கடந்த சனிக்கிழமை வாக்குச் சாவடிகளை நோக்கிச் சென்ற நாட்டின் 6.1 மில்லியன் பிரஜைகளையும் (55.3 %) பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது.

தாய் நாட்டை தரம் உயர்த்துவதற்காகவும் இலங்கை மீண்டும் எச்சந்தர்ப்பத்திலும் வாளால் ஆட்சி செய்யப்பட மாட்டாது என்பதனை உறுதி செய்வதற்காகவும் நம்பிக்கைக்குரிய ஜனநாயக அரசியல் சக்திகளுடன் சேர்ந்து எமது வாக்காளர்களின் நம்பிக்கையை பலப்படுத்துவதே எமது கடமையாகும்.

அது தான் எமது தேவை என்பதனுடன் அதிலிருந்து நாம் தவற மாட்டோம்.எமது ஜனநாயகமும் எமது குடியரசும் அதிலேயே தங்கியுள்ளது.மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்தனர்.

http://www.tamilwin.com/srilanka/01/174211?ref=ls_d_tamilwin

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.