Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர்த்தம் அனர்த்தமல்ல தர்க்கம் குதர்க்கமல்ல

Featured Replies

அர்த்தம் அனர்த்தமல்ல தர்க்கம் குதர்க்கமல்ல

sdsss-a672b798307cd10e03526f54430c982125892970.jpg

 

10.02.2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தன்­னிடம் மைத்­திரி – ரணில் அரசு படு­தோல்­வி­யுற்­றதைத் தொடர்ந்து அரசு பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்­தலை நடத்­தி­னால்தான் ஸ்திரப்­பாடு நிலைக்கும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ பக் ஷ கூறு­கி­றாரே? உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மக்­க­ளாணை ஆட்சி மாற்­றத்­துக்­கா­கவா வழங்­கப்­பட்­டது? மற்ற கட்­சி­யிடம் பல சபைகள் இருப்­பது பாரா­ளு­மன்ற ஸ்திரப்­பாட்­டுக்கு இடை­யூறை ஏற்­ப­டுத்­துமா? அர­சிடம் குறைந்த அளவு உள்­ளூ­ராட்சி சபைகள் இருப்­பது ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­ன­தல்ல, அது ஆட்சி மாற்­றத்­துக்கும் கார­ண­மல்ல. கட்சி ரீதி­யிலும், தேசிய அர­சியல் கண்­ணோட்­டத்­திலும், உள்ளூர் நிர்­வா­கத்­தேர்தல் நிகழ்ந்­ததன் வினைதான் இது­வாகும். உள்­ளூ­ராட்சி கட்­சிக்கு அப்­பாலும் தொகுதி நல­னுக்­குள்ளும் இருக்க வேண்டும். எனினும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை தேசிய கருத்­துக்­க­ணிப்பு எனவும் மக்­க­ள­பிப்­பி­ராய வாக்­கெ­டுப்பு எனவும் மஹிந்த கூறி­யுள்ளார். இது நாட்டைத் துண்­டா­டு­வ­தற்கு எதி­ரா­னது. வெளி­நா­டு­க­ளுக்கு உள்­நாட்டு வளங்கள் விற்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரா­னது. வரிச்­சுமை, மானி­ய­மின்மை ஆகி­ய­வற்­றுக்கும் எதி­ரா­னது எனவும் அவர் குறிப்­பி­டு­கிறார்.  

உள்­ளூ­ராட்­சிக்­கு­ரிய பிர­தி­நி­திகள் இவற்­றுக்­கா­கவா தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள்? தத்­த­மது எல்­லை­க­ளுக்­குட்­பட்ட உள்ளூர் அபி­வி­ருத்­தி­களைச் செய்­வ­தற்­கா­கத்­தானே? கட்சிக் கண்­ணோட்­டமோ மத்­திய அர­சோடு கொள்கை முரண்­பாடோ இருக்­கக்­கூ­டாது.

இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பெரு­வாரி சபை­களை மஹிந்த­விடம் மைத்­தி­ரியும் ரணிலும் இழந்­த­தற்­காக மஹிந்த சார்பில் பேசும் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் மைத்­தி­ரிக்கும், ரணி­லுக்கும் ஆட்­சியை முன்­னெ­டுக்கும் சட்ட ரீதி­யான உரிமை இல்லை என்­கிறார். காரணம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பாகக் கரு­தப்­பட்டே வாக்­க­ளிப்பு நிகழ்ந்­த தா­கவும் அரசின் கொள்­கை­களை ஏற்­பதா இல்­லையா எனும் கேள்­வியே தீர்­வாக கிடைத்­த­தா­கவும் குறிப்­பி­டு­கிறார். எனவே தேர்தல் முடி­வுற்­றதும் நல்­லாட்சி அர­சுக்கு நாட்டை ஆளும் சட்ட அதி­கா­ரமோ தார்­மீக உரி­மையோ இல்­லையாம்.

எனவே, எல்லா மக்­களும் ஏகோ­பித்து அரசின் கொள்­கை­களை நிரா­க­ரித்­தி­ருப்­பதால் மைத்­திரி, ரணில் அரசு ஜன­நா­ய­கத்தை மதிப்­ப­தாயின் பதவி விலக வேண்­டு­மெ­னவும் கூறு­கிறார். உள்­ளூ­ராட்சித் தேர்தல் மூலம் மைத்­தி­ரியின் தலை­மையை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் நிரா­க­ரித்­து­விட்­டார்­களாம். மஹிந்த­வுக்கும் அவ­ரது குடும்­பத்­துக்கும் எதி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளுக்­குக்­கூட மக்கள் தீர்ப்பு வழங்­கி­விட்­டார்­களாம். முதலில் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான மக்­க­ளாணை பற்றி ஜீ.ஏல்.பீரிஸ் தெரிந்து கொள்­ள­வேண்டும். உள்­ளூ­ராட்சித் தேர்தல் நிர்­வா­கத்­துக்­கான நிய­ம­னமே தவிர தீர்ப்பு கூறும் நீதி­மன்றம் அல்ல. குற்­ற­வாளி தேர்­தலில் வென்­று­விட்டால் சுற்ற­வா­ளி­யா­கி­வி­டு­வானா- என்ன?

ஜனா­தி­பதித் தேர்­தலில் வழங்­கப்­படும் மக்­க­ளா­ணைக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வழங்­கப்­படும் மக்­க­ளா­ணைக்கும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வழங்­கப்­படும் மக்­க­ளா­ணைக்கும் வித்­தி­யா­சங்கள் இருக்­கின்­றன.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்போ கொள்­கையை மதிப்­பிடும் தேர்­தலோ அல்ல. இந்­நி­லையில் மைத்­திரி, ரணில் அர­சுக்கு ஆளு­வ­தற்­கான சட்ட அதி­கா­ரமோ தார்­மீக உரி­மையோ இல்லை என ஜீ.எல்.பீரிஸால் கூற­மு­டி­யுமா?

உண்­மையில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் கொள்கைத் தேர்தல் அல்ல, எனவே கொள்­கையின் பெயரால் அரசை வில­கு­மா­று­கோ­ரு­வ­தற்­கான சட்ட வலுவோ தார்­மீக உரி­மையோ ஜீ.எல்.பீரி­ஸுக்கு இல்லை. மக்­களின் சுய­வி­ருப்­புக்கு தாரா­ள­மாக இட­ம­ளித்த அரசின் ஜன­நா­யக தேர்தல் முறையே பாராட்­டப்­ப­ட­வேண்டும். அரசின் கொள்­கை­க­ளுக்கு முர­ணான சபை­களும் மாற்­றாந்தாய் மனப்­போக்­கின்றி சம­ம­திப்­போடு நடத்­தப்­ப­டு­வதும் கூட ஜன­நா­ய­க­மே­யாகும். எனவே, உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அரசு குறைந்த அளவு சபை­களைப் பெற்­றி­ருப்­பதைக் காரணம் காட்டி ஆட்சி மாற்­றத்தைக் கோரு­வது ஜன­நா­ய­க­மல்ல. அர­சோடு எல்லா சபை­களும் ஒத்­து­ழைத்து செயற்­ப­டு­வதே ஜன­நா­ய­க­மாகும். எனவே குறைந்த அளவு சபை­களைப் பெற்­றுள்ள அரசு ஜன­நா­ய­கத்தை மதிப்­ப­தாயின் பதவி விலக வேண்டும் எனப் பேரா­சி­ரியர் கூறி­யி­ருப்­பது தவ­றான அவ­ரது அரச எதிர்ப்பு நிலைப்­பாட்டின் வெளிப்­பா­டே­யாகும்.

சந்­தி­ரி­காவின் அரசில் பிராந்­தி­யங்­களின் ஒன்­றி­யத்தை இயற்றிக் கொடுத்த இவர் தான் மஹிந்த அரசில் சமஷ்­டி­யையும் ஈழம் எனக் கூறி­யி­ருந்தார். ஜன­நா­ய­கத்தைப் பற்றி இப்­போது பேசும் அவர்தான் முழு சர்­வா­தி­கா­ரமும் பொருந்­திய 18 ஆம் ஷரத்தை மஹிந்த உரு­வாக்­கி­ய­போது அதற்கு ஒத்­து­ழைத்தார். இன்­றைய அரசு 19ஆம் ஷரத்து மூலம் அதனை முறி­ய­டித்த போதும் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்கு எதி­ரான பெரும்­பான்மை சமூ­கக்­கட்சி தலைமை வகிக்­கின்றார்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் மூலம் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை மாறும் என அக்­கட்­சியின் எந்த ஷரத்தில் உள்­ளது. இது மைத்­திரி தற்­போது வகித்துக் கொண்­டி­ருக்கும் அத்­த­லை­மையை மஹிந்த­வுக்குச் சேர்க்கும் அவ­ரது சுய விருப்­ப­மாகும். மஹிந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் வெற்­றியின் மூலம் தனக்கும் தனது குடும்­பத்­துக்கும் எதி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் பழி வாங்­கல்­க­ளி­லி­ருந்தும் நிர­ப­ரா­தி­யாகி விட்­டாரா? உள்­ளூ­ராட்சி தேர்தல் மூலம் மஹிந்த பெற்ற அப­ரிமித வெற்றி மற்­ற­வரால் என்ன பழி வாங்­கப்­பட்­ட­தையும் நிரூ­பிக்­கி­றதா? இவை தாம் அமெ­ரிக்­காவில் சட்டம் பயின்ற பேரா­சி­ரி­யரின் விளக்கம் என்­பதை நினைக்­கையில் ஆச்­சரிய­மாவே இருக்­கின்­றது.

இந்த உள்­ள­ூராட்சித் தேர்­தலின் முடிவு எதிர்­பார்க்­கப்­பட்­ட­துதான். புதி­தாக எதுவும் நிகழ்ந்து விட­வில்லை. நாட்டின் 80 வீத சிங்­கள சபைகள் மஹிந்த சார்­பி­ன­ரையே தெரிவு செய்­தி­ருக்­கின்­றன. 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் காணப்­பட்ட நிலையும் இது­தானே? அப்­போது ஓர­ளவு சிங்­கள மக்­க­ளோடு முழுக்­க­முழுக்க சிறு­பான்­மை­களின் வாக்­கு­க­ளா­லேயே சிறிய வித்­தி­யா­சத்தில் மைத்­திரி வெற்றி பெற்­றி­ருந்தார்.

இந்­நி­லைப்­பாட்டை மூன்று வரு­டங்கள் கழிந்த பிறகும் கூட மைத்­தி­ரியும் ரணிலும் மாற்­றி­ய­மைத்து தேசிய இணக்­கப்­பாட்டை உரு­வாக்கிப் பாரிய இன உறவை வளர்த்­தெ­டுக்­க­வில்லை. இதனால் அப்­ப­கு­தி­களில் அப்­போது 80 வீத­மாகக் காணப்­பட்ட பேரின வாதம் இப்­போது 100 வீத­மாக ஆகி­யி­ருக்­கி­றது. இவ்­வாறு அப்­ப­கு­தி­களில் 20 வீதம் அதி­க­ரித்­த­துக்குப் பின்­வரும் கார­ணங்களைக் கூறலாம்.

*மைத்­திரி பத­விக்­காகக் கட்­சியைக் காட்டிக் கொடுத்தே மஹிந்தவை தோற்­க­டித்தார்.

* மைத்­திரி வடக்கு, கிழக்கு தமி­ழ­ருக்கு நாட்­டைப்­பி­ரித்துக் கொடுக்கும் வகையில் ரணி­லுக்குத் துணை போகிறார்.

* மைத்­தி­ரி பௌத்த மதத்­தையும் பெளத்த சாச­னத்­தையும் முன்­னிலைப் படுத்தும் யாப்பை மாற்றப் போகிறார்.

* மைத்­திரி தமிழில் தேசிய கீதத்­தைப்­பாட வைத்தார்.

* மைத்­திரி தமி­ழரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக ஆக்­கினார். மைத்­திரி ஐ.நா.வின் விசா­ர­ணைக்குப் போர் வீரர்களை உட்­படுத்தி தண்­டனை பெற்றுக் கொடுப்பார் எனும் எண்­ணங்கள் உருப்­பெற சார்பு நிலைப்­பா­டுகள் தோன்­றின. ஏற்­க­னவே சிறு­பான்­மை­க­ளுக்குச் சார்­பான கட்சி என ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை அவர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்­ததால் மைத்­திரி மீதும் வெறுப்­புற்­ற­தா­லேயே மஹிந்த மீதான 80 வீத அபி­மா­னத்தை 100 வீத­மாக்­கி­யி­ருக்­கி­றார்கள். ஆக, இப்­போது சிங்­களப் பகு­தி­களில் மஹிந்த அமோக வெற்றி பெற இவை­களே கார­ணங்­க­ளாக அமைந்து விட்­டன. அத­னால்தான் இதை எதிர்­பார்த்தேன்; இதில் ஆச்­சரியம் இல்லை என நான் குறிப்­பிட்டேன்.

உண்­மையில் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­திரி வென்ற பின் சர்­வ­தேசப் பிடி­யி­லி­ருந்த கழ­ரவும் சிறு­பான்­மை­களின் வாக்­கு­க­ளுக்கு நன்­றி­ய­றிதல் கூறவும் சிங்­கள மக்­க­ளிடம் பல்­லின உணர்வை வளர்த்­தெ­டுத்­தி­ருக்­கவும் வேண்டும். இத்­த­கைய எதை­யுமே செய்­யாமல் இம்­முறை மட்­டு­மல்­லாமல் எம்­முறை தேர்தல் நிகழ்ந்­தாலும் சிங்­களப் பெரும்­பான்மைப் பகு­தி­களில் மட்­டு­மன்றி சிறு­பான்­மைப்­ப­கு­தி­க­ளிலும் கூட பின்­ன­டைவு ஏற்­ப­டவே செய்யும்.

இதற்­காக பல்­லின மக்­களும் வாக்­க­ளித்த தேசிய அரசு பேரி­ன­வா­தி­க­ளிடம் தாரை வார்க்­கப்­ப­டு­மாயின் போர்க்­குற்­றத்­தையும் ஏற்­றுக்­கொண்டு பொறுப்புக் கூற­லையும் ஒப்­புக்­கொண்டு ஐ.நா.விடம் இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றுள்ள நிலையில் இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தவே முடி­யாது. நாடு பிளவுபடு­வ­தையும் தவிர்க்க முடி­யாது போய்­விடும்.

ஏனெனில் இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போர்க்­குற்­றத்தை ஏற்­காத பொறுப்­புக்­கூ­றலை மறுக்­கின்ற இணை அனு­ச­ர­ணையைப் பெறாத மஹிந்தவே அபார வெற்­றி­பெற்­றி­ருக்­கிறார். இது மக்­க­ளபிப்­பி­ராய வாக்­கெ­டுப்பு போன்­றது எனக் கூறப்­பட்­டதால் சிங்­கள மக்கள் வடக்கு, கிழக்கு தமி­ழர்­க­ளுக்கு எதையும் வழங்கப் போவ­தில்லை எனும் செய்­தியே ஐ.நா.வுக்குத் தெளி­வாக வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இத்­த­கைய முடிவு வட–­கி­ழக்கு தமிழ் மக்­க­ளுக்­கு கி­டைத்­தி­ருக்கும் அரிய வாய்ப்­பாகும். இம்­மாதம் 26ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 23ஆம் திகதி வரை நிக­ழ­வி­ருக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்­டத்­துக்கு முன் கிடைத்­துள்ள அரி­ய­தொரு அனு­கூ­ல­மா­கவும் ஆகும்.

மைத்­திரி இம்­மு­றையும் ஐ.நா. சென்று மூன்றாம் முறையும் தவணை கோரினால் கிடைக்­குமா எனத் தெரி­ய­வில்லை. காரணம் அவர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்டு விட்டு இங்கு வந்து தனக்கும் போரில் பங்­கி­ருந்­தது என்றார். எனவே, பொறுப்­புக்­கூற அவர் கட­மைப்­பட்டும் விடு­கிறார். இணை அனு­ச­ர­ணையை ஏற்­றுக்­கொண்டு கூட அதை இவர் பொருட்­ப­டுத்திச் சில­வற்­றை­யேனும் செய்­யா­ததால் இணை அனு­ச­ர­ணையை ஐ.நா. இரத்துச் செய்து விட்டு ஐ.நா. நேர­டி­யா­கவே தலை­யீடு செய்து விடும் நிலை ஏற்­பட்டு விடலாம். போரில் எனது பங்கும் இருந்­தது. நானே மஹிந்தவைக் காப்­பாற்­றினேன். இரா­ணு­வத்தைக் தண்­டிக்க விட­மாட்டேன் என்றால் என்ன அர்த்தம் இவை ஐ.நா.வுக்குத் தெரி­யாதா? தற்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குப் பாரா­ளு­மன்­றத்தில் 106 ஆச­னங்கள் இருக்­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு 96 ஆச­னங்கள் இருக்­கின்­றன. எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் மைத்­திரி பிரிவு, மஹிந்த பிரிவு என இரு தரப்­பினர் இரு-ப்­பதால் மைத்­திரி பிரிவு ஐக்­கிய தேசிய கட்­சி­யோடு இணைந்து மிகுதி அரை ஆயுள் காலத்­தையும் ஆட்சி புரிய வேண்டும்.

2015ஆம் ஆண்டு இவர் ரணி­லோடு இணைந்து எடுத்த திட­சங்­கற்­பத்தைத் தாண்டி இடையில் விலகிச் சென்­ற­தா­லேயே மஹிந்த வலிமை பெறும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். இப்­போ­தேனும் தனக்கு சார்­பான ஸ்ரீலங்கா சுதத்­திர கட்­சி­யி­னரை இனங்­கண்டு உள்­ளே­யி­ருக்கும் இரு பக்க சார்­பா­ளர்­களை அகற்றி ரணி­லோடு உடன்­பாடு செய்­ய­வைக்க வேண்டும். சம்­பந்­தனை எதிர்­கட்சித் தலை­வ­ராக ஆக்­கி­யது போல் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தனது 106 ஆச­னங்­க­ளோடு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 16 ஆச­னங்­க­ளையும் சேர்த்துக் கொண்டு அறு­திப்­பெ­ரும்­பான்மை பெற­ மு­ய­லக்­கூ­டாது. இதனால், சிங்­கள மக்கள் மத்­தியில் மஹிந்த மேலும் வலிமை பெறும் நிலையே ஏற்­பட்டு விடும். பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸின் தலை­மை­யி­லான கட்­சிக்குப் பாரா­ளு­மன்­றத்தில் எந்த ஆச­னமும் இல்லை. எல்லா 225 ஆச­னங்­க­ளிலும் 96 ஆச­னங்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்­பா­கவே உள்­ளன. இந்­நி­லையில் அவற்றில் இருந்து கொண்டே அவற்றைப் பிரி­வுக்­குட்­ப­டுத்தி அவற்­றுக்­கெ­தி­ராக இன்­னொரு கட்­சி­யையும் உரு­வாக்கி அவற்­றோடு நேர­டி­யாகப் போட்­டி­யிட்டுத் தோற்­க­டித்­தி­ருப்­ப­தாலும் அவற்றைத் தடுக்க மைத்­திரி செயற்­ப­டா­தி­ருந்­த­தாலும் ஒப்­பந்தம் மீறப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதே உண்­மை­யாகும்.

தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் 106 ஐக்­கிய தேசியக் கட்சி எம்.­பி.க்கள் இருக்­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் 96 எம்­.பி.க்கள் இருக்­கி­றார்கள். இந்த 96 பேரும் கூட இரு பிரி­வு­க­ளா­கி­யி­ருக்­கி­றார்கள். மஹிந்த சார்­பாக 52 பேரும் மைத்­திரி சார்­பாக 44 பேரும் இருக்­கின்­றார்கள்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு அறு­திப்­பெ­ரும்­பான்மை பெற 7 ஆச­னங்கள் குறை­வான போதும் கூட இருக்கும் ஆச­னங்­களில் அதற்கே அதிகம் என்­ப­தாலும் பிர­த­மரின் கோரிக்­கை­யின்றி ஜனா­தி­ப­தியால் பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்க முடி­யாது என 19ஆம் ஷரத்து குறிப்­பிட்­டி­ருப்­ப­தாலும் ஜனா­தி­பதி ரணி­லையே பிர­த­ம­ராகத் தொட­ர­விட்­டு­விட வேண்டும்.

மைத்­திரி பிளவு பட்­டி­ருந்த 52ஐயும் 44ஐயும் இணைத்து உதி­ரிக்­கட்­சி­க­ளி­லி­ருந்து 26ஐயும் சேர்த்து ஒட்டு நிர்­வா­கத்தை உரு­வாக்கிக் கொள்­ளக்­கூ­டாது. பிர­தமர் பத­விக்கு பல­ரது பெயர்­களை வைத்து சுயம்­வ­ரத்தில் ஈடு­ப­டவும் கூடாது. மஹிந்தவின் ஆட்கள் 52 பேர் இருப்­பதால் இது அவர்கள் மஹிந்த­வுக்கு பிர­தமர் பத­வியைப் பெற்றுக் கொடுக்கும் முயற்­சி­யாகும். மைத்­தி­ரியின் ஆட்கள் 44 பேர் ரணில் பிர­த­ம­ராக இருந்தால் நாம் இணங்க மாட்டோம் என்­பதும் கூட ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிளவை ஏற்­ப­டுத்தி மஹிந்தவைப் பிர­த­ம­ராக்கும் முயற்­சியே ஆகும். பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆச­னங்கள் உள்­ள­வ­ரையே பிர­த­ம­ராக்­கலாம் எனும் சட்டம் இருப்­பதால் இதில் மஹிந்தவும் ரணிலும் இழு­ப­றி­படும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்­நிலை 2015ஆம் ஆண்டு மைத்­திரி பெற்ற மக்­க­ளா­ணைப்­படி ரணி­லு­ட­னேயே மைத்­திரி இருந்­தாக வேண்டும்.

சர்­வ­தேச உள்­நாட்டு நெருக்­க­டி­களைச் சமா­ளிக்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யோடு ஒப்­பந்தம் செய்து தனது கட்­சியை விட்டும் வில­கிய மைத்­திரி 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அபேட்­ச­க­ரான மஹிந்­தவைத் தோற்­க­டித்­தது உங்­க­ளுக்குத் தெரியும்.

பின்னர் ஏன் பொது­ஜ­னா­தி­பதி எனும் நிலைப்­பாட்டை விட்டு விட்­டுத்தான் தோற்­க­டித்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையை ஏற்­க­வேண்டும். இதன் மூலம் இவர் பொது ஜனா­தி­பதி எனும் நிலைப்­பாட்டை இழந்து கட்­சி­சார்பு ஜனா­தி­ப­தி­யாகி விட்டார். அதன் பின் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பக்­கமே சார்ந்துக் கொண்டு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை பகை கட்­சி­யாக ஆக்கிக் கொண்டார்.

எனினும் இவ­ரது கட்சி எம்­பி­யாக மஹிந்த இருந்து கொண்டு தனி­யா­கவும் ஒரு கட்­சியை ஆரம்­பித்து பாதி எம்­.பி­.மாரை வழி நடத்­து­கிறார். எனினும் மஹிந்­த­வையோ அவரால் வழி நடத்­தப்­படும் 52 பேரை­யுமோ இவரால் தனது கட்­சியை விட்டும் விலக்க முடி­ய­

வில்லை. தற்­போது நிகழ்ந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ரணி­லையும் அவ­ரது ஆட்­க­ளையும் இவர் திரு­டர்கள் என நாடு முழுக்க ஏசி­விட்டு மஹிந்­தவின் 52 எம்­.பி­.மாரும் தன்­னோடு சேர்ந்தால் நாளை

க்கே ஆட்­சியை மாற்­றுவேன் என்­றாரே இதன் அர்த்தம் என்ன?

அந்த சொற்­படி பார்த்தால் மைத்­தி­ரிக்கு ரணில் பிர­த­ம­ராக ஆகா­த­வாறு தனது கட்­சியின் இரு பிரி­வி­ன­ரையும் இணைத்தே ஆட்­சி­ய­மைத்­தாக வேண்டும். எனினும் இது முற்­றிலும் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான காரி­ய­மல்ல. இது தன்­னோடு முரண்­பட்ட 52 எம்.பிக்­க­ளையும் இணைத்துக் கொள்ள அவர் சொன்ன வார்த்தை எனவும் கூறப்­பட்­டது.

உண்­மையில் மைத்­திரி இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ரணி­லோடு இணைந்து செயற்­பட்­டி­ருந்­தால் மஹிந்­த­வுக்கு இந்த அளவு வெற்­றியை பெற்­றுத்­தந்­தி­ருக்க மாட்டார். அவர் இரு­வ­ரையும் முடக்கும் தனி முயற்­சியில் ஈடு­பட்­ட­தா­லேயே படு­தோல்­வி­யுற்றார். தற்­போ­தைய தேசிய கூட்­ட­ரசே தொடரும். ரணிலே பிர­தமர் எனும் முடி­வுக்கு மைத்­திரி வந்­தி­ருக்­கிறார். அமெ­ரிக்­கா­வி­னதும் இங்கிலாந்தினதும் அழுத்தத்தினால் அவர் இம்முடிவை எடுத்ததாகக் கூறப்படுகின்றது. ஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருக்கும் மஹிந்தவிடம் ஆட்சிப் பொறுப்பை கையளிக்க சர்வதேசம் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. சந்திரிகாவும் மஹிந்த தலைதூக்க இடமளித்திருக்க மாட்டார். தேசிய இணக்கப்பாட்டுக்கே சம்பந்தன் ஒத்துழைப்போடு எதிர்க்கட்சித் தலைவராக ஆகியிருந்தார்.

மஹிந்தவிடம் பாராளுமன்ற நிர்வாகத்தை வழங்கினால் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்திருக்கலாம். இந்நிலையில் மைத்திரிக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு விசுவரூபம் எடுக்கலாம்.

ஆக பேரழிவுகளுக்கான இத்தனை பின் விளைவுகளும் முன் கூட்டியே கணிக்கப்பட்டுத் தவிர்க்கப்பட்டிருப்பது பெருத்த ஆறுதலையே தருகிறது. ஆட்சியின் அரை ஆயுளில் செய்தது போல் மிகுதி அரை ஆயுளிலும் செய்ய முடியாது என மைத்திரி அடிக்கடி கூறியிருக்கிறார். அதன்படி இவர் இப்போதிருந்தே பல்லின வடிவ யாப்பை இயற்ற வேண்டும். ஐ.நா.விடம் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களை நிறைவேற்றவும் வேண்டும். இன நல்லுறவை நாட்டில் ஏற்படுத்தவும் வேண்டும். ஜனநாயகம் மரபுகளையும் மனித உரிமைகளையும் பலமாக நிறுவவும் வேண்டும்.

2015 ஆம் ஆண்டு பொது ஜனாதிபதியாக இவர் ஆனது கட்சி ஜனாதிபதியாக ஆவதற்கல்ல. ஒரு கட்சியைப் பிளவு படுத்துவதற்காகவும் அல்ல. வெற்றி பெற உதவிய கட்சியை முடக்குவதற்கும் அல்ல. எல்லாக் கட்சிகளையும் முடக்கி தானே தனிச்சக்தி என முழங்குவதற்கும் அல்ல. பொது ஜனாதிபதியாக வந்தது நாட்டின் எல்லாத் தரப்பினரையும் தன்னோடு இணைத்துக் கொண்டு மக்கள் ஆணையை நிறைவேற்றுவதற்கேயாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-20#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.