Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் பிரச்சினைகள் தீரும்; மனைவியுடன் எப்போதும் போல் இருப்பேன்: மொகமது ஷமி

Featured Replies

விரைவில் பிரச்சினைகள் தீரும்; மனைவியுடன் எப்போதும் போல் இருப்பேன்: மொகமது ஷமி

 

 
AVDSHAMI

மொகமது ஷமி மற்றும் மனைவி ஜஹான்.   -  கோப்புப் படம். | பிடிஐ.

பல பெண்களுடன் தொடர்பு உள்ளது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கிரிக்கெட் வீர்ர் மொகமது ஷமி மீது அவரது மனைவி தொடுக்க, இதன் பின்னணியில் ஏதோ சதி நடக்கிறது, விரைவில் பிரச்சினைகள் தீரும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைபடுத்துக்கின்றனர். அவரது தாயார், சகோதரர் என அனைவரும் என்னை தவறாக பேசுகின்றனர். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா வந்தபிறகும் ஷமி என்னை தாக்கினார். அவரது குடும்பம் என்னை கொல்ல முயற்சிக்கிறது. நான் ஷமியின் தவறை திருத்திக் கொள்ள நிறைய நேரம் அளித்துவிட்டேன். நான் எனது குடும்பத்துக்காகவும், குழந்தைகாகவும் பொறுத்துக் கொண்டேன். ஆனால் அவர் என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார். என்னால் இனியும் அவரை பொறுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக சட்டரீதியாக புகார் அளிக்க இருக்கிறேன்” என்று ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் நேற்று புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் ஷமியின் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் மெசெஞர் உரையாடல்களையும் அவர் வெளியிட்டார், இதில் ஷமி பல பெண்களுடன் உரையாடியிருப்பது பதிவாகியுள்ளது. மேலும் அந்தப் பெண்களின் புகைப்படம், தொலைபேசி எண்களையும் ஹசின் ஜஹான் வெளியிட்டிருந்தார்.

ஆனாலும் சட்ட நடவடிக்கைக்கு முன்னதாக ஷமி தன்னிடம் மீண்டும் திருந்தி வருவார் என்று மனைவி ஜஹான் நம்புவதாக இவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஷமி கூறியதாவது:

என் சொந்த வாழ்க்கை பற்றி எழுந்த அவதூறுகளை நான் மறுக்கிறேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது, என்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை கெடுக்க சில வேலைகள் நடந்து வருவதாகவே கருதுகிறேன்.

அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றது. அதற்கு அர்த்தம் இல்லை. இதன் பின்னணி என்னவென்பது தெரியாமல் நான் இது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. இதன் பின்னணியில் சதி உள்ளது, என் ஆட்டத்தை கெடுக்கும் முயற்சியும் சதியும் தெரிகிறது.

நான் என் மனைவி ஹசினை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் அவர் என் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. விரைவில் அவரை நேரில் சந்திப்பேன். நான் இதுவரை எப்படி அவருடன் இருந்தேனோ அப்படித்தான் இனியும் இருப்பேன், அவருடன் தான் என் வாழ்க்கை. என் மாமனாரிடம் பேசினேன், அவர் என்னிடம் நல்ல முறையில்தான் பேசினார். விரைவில் அனைத்தும் சரியாகி விடும்.

இவ்வாறு கூறினார் ஷமி.

http://tamil.thehindu.com/sports/article22979936.ece

 

 

பல பெண்களுடன் தொடர்பு; என்னை ஓயாது கொடுமைப்படுத்துகிறார்: கிரிக்கெட் வீரர் ஷமி மீது மனைவி புகார்!

 

 
shami_new23

 

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் குடும்ப வாழ்க்கையில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மனைவி ஹசின் ஜஹான், ஷமி மீது பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

ஷமிக்குப் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் தன்னை ஓயாது துன்புறுத்துவதாகவும் சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ள ஹசின் ஜஹான், தன் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஷமி, பல பெண்களுடன் நடத்திய உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் இணைத்துள்ளார். மேலும் ஷமியின் காரில் கருத்தடைப் பொருள்களும் இருந்ததாகவும் அவர்  கூறியுள்ளார். 

இதுகுறித்து ஷமியின் மனைவி ஹசின் ஒரு பேட்டியில் கூறியதாவது: நான் வெளியிட்ட ஆதாரங்கள் கொஞ்சம்தான். மேலும் மோசமான செயல்களை அவர் செய்துள்ளார். அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு உண்டு. ஷமியின் குடும்பம் என்னைக் கடந்த மூன்று வருடங்களாகக் கொடுமைப்படுத்தி வருகிறது. ஷமியின் தாயும் அவரது சகோதரரும் என்னை மோசமாகத் திட்டுவார்கள். அவர்களுடைய கொடுமை காலை 3 மணி வரை கூட நீளும். என்னைக் கொல்லவும் அவர்கள் விரும்பினார்கள். 

shami_901.jpg

தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியவுடன் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார். சிலகாலமாக இப்படித்தான் செய்துவருகிறார். இதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. என் வாழ்க்கைக்காகவும் என் மகளுக்காகவும் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார். பல பெண்களுடன் நடத்திய உரையாடல்களை அவருடைய செல்பேசி மூலமாக அறிந்தபிறகு என்னால் பொறுமையாக இருக்கமுடியவில்லை. ஷமியின் காரில் கருத்தடைப் பொருள்கள் இருந்துள்ளன. என்னிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் கொண்டு ஷமி மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். இதற்குப் பிறகும் தன் தவறை அவர் உணராமல் என் மீது கோபத்தை வெளிப்படுத்தி என் நலனுக்காக அமைதியாக இருக்கும்படி மிரட்டினார். ஷமியின் கள்ளத் தொடர்புகளையும் என் மீதான கொடுமைகளையும் ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் சொல்லியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் கூறியதாவது: ஷமி திருந்துவார் என நினைக்கிறோம். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார். 

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: என் சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளை நான் மறுக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்க சதி உருவாக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஷமி - ஹசின் ஆகிய இருவரும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

shami_wife21.jpg

 

shami_new7171.jpg

shami_wife1.jpeg

shami_wife11.jpg

shami8711.jpg

shami89890.jpg

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/07/wife-accuses-cricketer-mohammed-shami-of-assault-and-extramarital-affair-shami-calls-it-conspiracy-2876231--2.html

  • தொடங்கியவர்

மனைவி புகார் எதிரொலி: கிரிக்கெட் வீரர் ஷமி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு!

 

 
shami_new1xx

 

பிரபல கிரிக்கெட் வீரர் ஷமி மீது கொல்கத்தா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஷமிக்குப் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் தன்னை ஓயாது துன்புறுத்துவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு வருகிறார் அவருடைய மனைவி ஹசின் ஜஹான். அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு உண்டு. ஷமியின் குடும்பம் என்னைக் கடந்த மூன்று வருடங்களாகக் கொடுமைப்படுத்தி வருகிறது. என்னிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் கொண்டு ஷமி மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். ஷமியின் கள்ளத் தொடர்புகளையும் என் மீதான கொடுமைகளையும் ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சில நாள்களுக்கு முன்பு புகார் கூறினார். இதன் விளைவாக, புகாரில் சிக்கியுள்ள முகமது ஷமி பிசிசிஐ-யின் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் ஹசின் அளித்த புகாரின் பேரில் ஷமி மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீதும் கொல்கத்தா காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. மனைவியைக் கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி செய்தது, காயப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஷமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/09/mohammed-shami-four-others-booked-after-wife-lodges-complaint-in-kolkata-2877522.html

  • தொடங்கியவர்

5 கோடி ரூபாய் சம்பளம் தரும் ஏ கிரேடை மிஸ் செய்த ஷமி... காரணமான ஸ்க்ரீன்ஷாட்ஸ்!

 
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.கடந்த நான்கு வருடங்களாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற சிறப்பாக பந்து வீசினார்.

அடிக்கடி தோள்பட்டை, கால்முட்டிகளில் காயத்தால் அவதிப்பட்டாலும் அணிக்கு திரும்பும் போதெல்லாம் ஸ்விங்,யார்க்கர்,பவுன்சர்,டெத் ஓவர் என எல்லா விதமான பந்துகளிலும் எதிரணியை மிரட்டி வந்தவர்ஷமி. இதுவரை 30 டெஸ்ட்,50 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

shami

பெங்களூருவில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்,டெல்லிக்கு இடையிலான இழுபறியால் 3 கோடிக்கு RTM கார்டை பயன்படுத்தி முந்தைய சீசனில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார்

களத்தில் தனது திறமையால் கெத்து காட்டினாலும் பொது வாழ்வில் அவ்வப்போது புகைச்சல்கள் வந்து கொண்டே இருக்கிறது. முகமது ஷமிக்கு ஹசின் ஜகான் என்கிற மனைவியும், அய்ரா என்கிற மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் முகமது ஷமி பல பெண்களுடன் ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப்பில் தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி அடுக்கடுக்கான புகாரை கூறியுள்ளார்.

ஷமியின் பி.எம். டபுல்யூ காரில் இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வழங்கப்பட்ட மொபைல் போனை, அவரது மனைவி எதேச்சையாக எடுத்து பார்த்துள்ளார்.அதில் ஷமி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பல பெண்களுடன் இங்கிலீஷ் இந்தியில் அந்தரங்க ரீதியில் சாட் செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சாட் மெசேஜ் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு ஷமியின் லீலைகள் என்கிற தலைப்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த வருடம் சிறிய பிரச்சனை ஏற்பட்டது. ஷமி அவ்வப்போது தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் போடுவது  வழக்கம். முன்பு ஒருமுறை இவ்வாறு மனைவி படத்தை வெளியிட்டபோது, அவர் உடலை முழுக்க மூடும் வகையில் பர்தா அணியவில்லை என்ற விமர்சனங்களை, முஸ்லிம் அமைப்பினர் முன்வைத்து புகார் கூறினர். இது சமூக வலைத்தளங்களில் விவாதமாகவும் சர்ச்சையும் ஆகியிருந்தது.

முகமது ஷமி

அப்போது கூட ஷமி தனது மனைவிக்கு ஆதரவாகவே இருந்தார். இந்நிலையில் ஹசின் ஜகான் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் பல புதுப்புது அதிர்ச்சிகரமான புகார்களை கூறியுள்ளார். ஷமியை ஏற்கனவே பலமுறை எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். தனது குழந்தை அய்ராவிற்காகத்தான் இத்தனை காலம் தான் பொறுத்துப் போனதாகவும் அது மட்டுமல்லாது ஷமியின் தாயார் மற்றும் அவரது சகோதரரும் தனக்கு தொல்லை கொடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். சிலசமயம் அதிகாலை 2 மணி வரைக்கும் கூட சண்டை நீடிக்கிறதெனவும், பாகிஸ்தானைச் சேர்ந்த மோசமான பெண்ணுடனும் பழக்கம் வைத்துள்ளார் என்றும் வேறுவிதமான புகாரையும் தெரிவித்துள்ளார். 

 

இதையறிந்த ஷமி, உடனடியாக  மனைவியின் புகாரில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக பிசிசிஐ நேற்று அறிவித்த வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு அறிவிப்பில் முகமது ஷமியின் பெயர் இடம் பெறவில்லை. குடும்ப தகராறை கருத்தில் கொண்டு அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என தெரிகிறது. இல்லையெனில் முகமது ஷமி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ஊதியம் பெறும் A கிரேடு லிஸ்ட்டில் வந்திருக்கக்கூடும்.

https://www.vikatan.com/news/sports/118873-mohammad-shamis-personal-problem-drags-media-light-as-coa-with-held-his-contract.html

  • தொடங்கியவர்

மனைவியுடன் சமரசம் செய்து கொள்ள தயார்- முகமதுசமி

 

நான் எனது மனைவியுடன் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமதுசமி கூறியுள்ளார். #MohammedShami #HasinJahan

 
 
மனைவியுடன் சமரசம் செய்து கொள்ள தயார்- முகமதுசமி
 
கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமதுசமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர், கொலை செய்யக்கூட முயற்சிக்கிறார்கள் என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். இதையடுத்து சமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் முகமது சமி, மனைவிக்கு சமாதான தூது அனுப்பி இருக்கிறார். அவர் கூறுகையில், ‘எனது மனைவியுடன் நான் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். மனைவி, மகளுடன் என்னால் சேர்ந்து வாழ முடியும். நான் ஒரு அப்பாவி, எனக்கு எதிராக சதி நடக்கிறது. எனது மனைவியை யாரோ ஒருவர் தவறாக வழிநடத்துகிறார். இந்த சர்ச்சையால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் அது பயிற்சியையும் பாதித்துள்ளது’ என்றார்.

ஆனால் முகமது சமியின் சமரசத்தை ஏற்க மறுத்துள்ள ஹசின் ஜஹன், ‘கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு ஏற்ற மாதிரி என்னை மாற்றிக்கொண்டேன். ஆனால் அவரோ தொடர்ந்து தவறுகள் செய்தாரே தவிர திருந்தவில்லை. இந்த பிரச்சினையில் இப்போது போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். எனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நான் செயல்படுகிறேன். மற்ற பெண்களுடன் சமிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ள செல்போன் என்னிடம் இருக்கிறது. அந்த செல்போன் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால் இந்த நேரம் அவர் என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கியிருப்பார்’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/12081058/1150337/mohammed-shami-is-ready-to-compromise-with-his-wife.vpf

  • தொடங்கியவர்

துபாய் சென்று பாகிஸ்தான் பெண்ணைச் சந்தித்தாரா ஷமி?: பிசிசிஐ-யை அணுகிய கொல்கத்தா போலீஸ்

 

 
shami

மொகமது ஷமி.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

மொகமது ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்புள்ளது, அவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப் படுத்துகின்றனர் உள்ளிட்ட பல்வேறு புகார்களை மனைவி ஜஹான் அளிக்க போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள மொகமது ஷமி மேலும் ஒரு சிக்கலில் தற்போது மாட்டியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா முடிந்தவுடன் மொகமது ஷமி எங்கு சென்றார் என்பதைக் கண்டறிய விசாரணை செய்து வரும் கொல்கத்தா போலீஸ் குழு தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியுள்ளது.

ஷமி மனைவி அளித்த புகாரின்படி தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு துபாய் சென்ற ஷமி அங்கு பாகிஸ்தான் பெண் ஒருவரை சந்தித்தார் என்று கூறியுள்ளார், மேலும் ஷமி துபாயில் தங்கியிருந்தார் என்கிறார் மனைவி ஜஹான்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஷமி எந்த வழியாக இந்தியா திரும்பினார், அவரது பயண விவரம் என்ன என்பதை கொல்கத்தா போலீஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் எழுதிக் கேட்டுள்ளது.

மொகமது ஷமி அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு, தன் சொந்த வாழ்க்கை மட்டுமல்லாது கிரிக்கெட் வாழ்க்கையிலும் யாரொ விளையாடி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23101848.ece?homepage=true

  • தொடங்கியவர்

மகளின் அன்புக்காக ஏங்கும் ஷமி!- மனைவியின் அடுத்தடுத்த புகாரால் கேள்விக்குறியான கிரிக்கெட் எதிர்காலம்

 
 

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ட்விட்டரில் தன் மகள் புகைப்படத்தைப் பகிர்ந்து உருக்கமாகக் கேப்ஷன் கொடுத்துள்ளது அவரின் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஷமி

 


முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரின் மனைவி ஹாசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஷமி பல பெண்களுடன் சாட் செய்ததை ஆதாரங்களுடன் ஷமியின் மனைவி அண்மையில் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் ஷமி மற்றும் அவரின் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஹாசின், பகிரங்கமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் ஷமிமீது ஹாசின் புகார் அளித்தார். ஹாசின் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, குடும்ப வன்முறை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதன் காரணமாகப் பி.சி.சி.ஐ ஷமியின் பெயரை ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கியது.

shami

தன் மனைவி முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ள ஷமி, `எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக வெளியாகும் அனைத்து புகார்களையும் மறுக்கிறேன். இது எனது விளையாட்டு திறமையைக் குறைக்க நடக்கும் சதி. இந்தப் பிரச்னையைப் பேசிதான் தீர்க்க முடியும். நாங்கள் மீண்டும் சேர்வது எங்கள் குழந்தைக்கு நல்லது’ என்று தன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். இதனிடையே தன் மகளை மிஸ் செய்வதாக ட்விட்டரில் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். ஷமியின் பதிவுக்கு அவரின் ரசிகர்கள் அனுதாபங்களைப் பகிர்ந்துள்ளனர். ஷமி அனுதாபம் இவ்வாறு பதிவிடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஷமி
 

இந்த விவகாரத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தோனி, ‘ஷமி மிகவும் நல்ல மனிதர். ஷமியால் அவரின் மனைவியையும் இந்த நாட்டையும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது. இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை’ என்று குறிப்பிட்டார்

https://www.vikatan.com/news/india/119047-mohammed-shami-post-for-her-daughter.html

  • தொடங்கியவர்

முதல் திருமணத்தை மறைத்து ஹசின் என்னை மணந்துகொண்டார் - முகமது ஷமி குற்றச்சாட்டு

 

 
 

ஹசின் ஜகான் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக முகமது ஷமி குற்றம் சாட்டியுள்ளார். #MohammedShami #HasinJahan

 
 
 
 
முதல் திருமணத்தை மறைத்து ஹசின் என்னை மணந்துகொண்டார் - முகமது ஷமி குற்றச்சாட்டு
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி (27). இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில், சமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட் செய்துள்ள விவரங்களை ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார்.

இதையடுத்து, சமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கணவரின் குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயற்சித்ததாகவும் கடந்த 8-ம் தேதி கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று சமி மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹசின் மீது முகமது ஷமி புதிய குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். ஹசின் ஜகான், ஏற்கனவே திருமணமானதை மறைத்து அவர் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக ஷமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

2014ம் ஆண்டில் ஹசின் ஜகானுக்கும், எனக்கும் திருமணமாகும் முன்னரே, அவருக்கு முதல் திருமணம் நடந்து 2 மகள்கள் உள்ளனர். ஆனால் அதை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். ஹசின் தன்னுடைய 2 மகள்களையும் தனது சகோதரியின் மகள்கள் என்றே எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால் எங்களுக்கு திருமணமான சில நாட்களுக்குப் பிறகே எனக்கு ஹசின் ஏற்கனவே திருமணமானவர் என்றும் 2 பெண் குழந்தைகளின் தாய் என்பதும் தெரிய வந்தது. நான் ஹசினுடன் சாமாதானமாக செல்லவே விரும்புகிறேன். நான் இந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன், ஆனால் ஹசின் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். என்னுடைய மகளின் எதிர்காலத்தை நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என்றும் ஷமி தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக ஹசின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஷமி மறுப்பு தெரிவித்தார். ஹசின் ஜகானை யாரோ தவறாக வழிநடத்துவதாகவும் ஷமி கூறியுள்ளார். #MohammedShami #HasinJahan

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/16054754/1151222/Mohammed-Shami-says-Hasin-Jahan-lied-about-1st-marriage.vpf

  • தொடங்கியவர்

முகமது சமி துபாயில் தங்கி இருந்தது உண்மை தான்- இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்

 

 
 

முகமது சமி துபாயில் கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் தங்கி இருந்தது உண்மை தான் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

 
 
 
 
முகமது சமி துபாயில் தங்கி இருந்தது உண்மை தான்- இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்
 
கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பான புகார் கூறினார். இது குறித்து கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

“முகமது சமி தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்ததும் மற்ற வீரர்களை போல் உடனடியாக தாயகம் திரும்பவில்லை, அவர் அங்கிருந்து துபாய்க்கு சென்றார். அங்கு இங்கிலாந்து தொழிலதிபர் கொடுத்த பணத்தை பாகிஸ்தான் மாடல் அழகி அலிஷ்பா மூலம் வாங்கி வந்தார். அலிஷ்பாவுடன் முகமது சமிக்கு நீண்ட காலமாக தொடர்பு உண்டு. அவர் முகமது சமியின் ரசிகை அல்ல. காதலி. அலிஷ்பா எனது குடும்ப வாழ்க்கையை நாசமாக்க முயற்சித்தார். சமி கிரிக்கெட் முறைகேட்டிலும் ஈடுபட்டார்’ என்ற திடுக்கிடும் தகவலையும் ஹசின் ஜஹன் வெளியிட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் முகமது சமி துபாயில் கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் தங்கி இருந்தது உண்மை தான் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரது பயண விவரங்களை கொல்கத்தா போலீசுக்கு கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ளது. இதையடுத்து கொல்கத்தா போலீசின் விசாரணை தீவிரமாகியுள்ளது.

இதற்கிடையே முகமது சமியின் மனைவி குற்றம் சாட்டிய பாகிஸ்தான் மாடல் அழகி அலிஷ்பா, ‘முகமது சமியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவள். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு.எனது சகோதரியை பார்ப்பதற்காக நான் அடிக்கடி துபாய்க்கு செல்வேன். வழக்கம் போல் எனது சகோதரியை பார்க்க துபாய்க்கு சென்ற போது, யதார்த்தமாக முகமது சமியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள ஓட்டலில் அவருடன் காலை உணவு சாப்பிட்டேன். ரசிகையாக நான் அவருக்கு வாழ்த்து தகவல்கள் அனுப்புவேன். மற்றபடி அவருக்கு பணம் எதுவும் நான் வழங்கவில்லை.’ என்று கூறியுள்ளார். #tamilnews

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/21092404/1152179/BCCI-confirms-Mohammed-Shami-stayed-in-Dubai-hotel.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.