Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்வுரிமைக்கு பேரிடி

Featured Replies

வாழ்வுரிமைக்கு பேரிடி

 

இந்­நாடு எல்­லோ­ருக்கும் சொந்தம் என்ற மனப்­பாங்கு எல்­லோ­ரி­ட­மு­மில்லை. இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யாக பௌத்த –சிங்­கள மக்­களே வாழ்­கின்­றனர் என்­பது புள்­ளி­வி­ப­ரங்­களின் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உண்மை. அதற்­காக ஏனைய இனத்­த­வர்கள் வந்­தேறு குடி­க­ளல்லர். அந்நி­யர்­­க­ளி­ட­மி­ருந்து இந்­நாட்டை மீட்­ப­தற்­காக சிங்­களத் தலை­வர்­க­ளுடன் இணைந்து தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கங்­களின் தலை­வர்­களும் போரா­டி­யி­ருக்­கி­றார்கள்.

அதனால், இந்­நாட்டுப் பிர­ஜைகள் என எவ­ரெ­வ­ரெல்லாம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­களோ அவர்கள் எல்­லோரும் இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் அத்­தனை உரி­மை­க­ளையும் பெற்று சுதந்­தி­ர­மா­கவும் நிம்­ம­தி­யா­கவும் ஏனைய சமூ­கங்­க­ளுடன் சமூக ஒரு­மைப்­பாட்­டு­டனும் நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ்­வ­தற்கு வழி­வி­டப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இருப்­பினும் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­வ­தற்கும் சக­வாழ்வு நிலை­பெ­று­வ­தற்கும் இந்­நாட்டில் புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் இன­வாதம் தடைக்­கல்­லாக இருந்து வரு­கி­றது. இலங்கைச் சமூ­கங்­களின் சமூக ஒற்­று­மையைச் சீர்­கு­லைத்து இந்நாட்டினை இன­வாத சக­திக்குள் புதைக்க எத்­த­னிக்கும் சக்­திகள் அடை­யாளம் காணப்­பட்டு அ­வற்றுக்கு எதி­ராக உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்டியது அர­சாங்­கத்தின் தார்­மீக பொறுப்பு என பல கோணங்­க­ளிலும் வலி­யு­றுத்­தப்­பட்­டுக் ­கொண்­டி­ருப்­பதைக் காணமுடி­கி­றது.

தெற்கில் ஆண்­டாண்டு காலம் நல்­லி­ணக்­கத்­துடனும் சக­வாழ்­வு­டனும் வாழும் சிங்­கள–முஸ்லிம் மக்­களின் சக­வாழ்வை சீர்­கு­லைத்து இன­மு­று­கலை ஏற்­ப­டுத்தும் கைங்­க­ரி­யங்­களை பௌத்த–சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள வங்­கு­ரோத்து அர­சி­யல்­வா­தி­களும் பௌத்த–சிங்­கள கடும்­போக்­கா­ளர்­களும் இவர்­க­ளுக்கு மறை­மு­க­மா­கவும் நேர­டி­யா­கவும் துணை­நிற்கும் சில ஊட­கங்­களும் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுத்­தி­ருப்­பதை வர­லாறு முழுவதும் காணமுடியும்.

இவ்­வாறே வடக்­கிலும் கிழக்­கிலும் தொன்­று­தொட்டு ஒற்­று­மை­யாக வாழ்ந்த தமிழ்–முஸ்­லிம்­களை ஒரு­வரையொருவர் சந்­தேகக் கண்­கொண்டு நோக்கச் செய்­தும் விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளையும் புரிந்­து­ணர்­வு­க­ளையும் இல்­லா­ம­லாக்­கியும் தமி­ழனா முஸ்­லிமா என்று சிந்­திக்கச் செய்­ததும் தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கெதி­ராகச் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்ற இம் முக்­கூட்டு சக்­தி­கள்தான் என்­பது ெவள்ளி­டை­மலையாகும்.

சிறு­பான்­மை­யி­ன­ரான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஆண்­டாண்டு கால­மாக இம்­மண்ணை நேசித்து வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­வர்கள். இத்­தே­சத்தைக் கௌர­வப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றார்கள். இந்­நாட்­டுக்­காக உயிர்­த்தியாகம் செய்­தி­ருக்­கி­றார்கள். அவர்­களால் இத்­தேசம் மாண்பு பெற்­றி­ருக்­கி­றது என்­பதை பெரும்­பான்மை சமூ­கத்­தி­லுள்ள பலர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தாலும் பௌத்த–சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள சிறு­பான்­மை­யி­ன­ருக்­கெ­தி­ரான சக்­திகள் இவ்­ உண்­மை­களை மறைத்து இந்­நாட்டில் வாழும் சிறு­பான்­மை­யினர், குறிப்­பாக முஸ்­லிம்கள் இந்­நாட்டின் பெரும்­பான்மை சமூ­கத்­திற்ெகதி­ராகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற போலிப் பிர­சா­ரங்­களைத் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இம்­முக்­கூட்டு சக்­தி­களின் போலிப் பிர­சா­ரங்­களின் மூலம் பௌத்த–சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள அப்­பாவி இளை­ஞர்கள் மூளைச்சலவை செய்­யப்­பட்டு முஸ்­லிம்­க­ளுக்ெகதி­ரான வன்­மு­றை­களில் ஈடு­பட தூண்­டப்­பட்­டுக் ­கொண்­டி­ருக்­கின்­றனர். இவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்ெகதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தாக்­குதல் சம்­ப­வங்கள் முஸ்லிம் தேசி­யத்தின் பாது­காப்பை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருப்ப­தோடு மக்­களின் வாழ்­வு­ரி­மை­யிலும் பேரி­டியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றன.

தொடர் சம்­ப­வங்­களும் வாழ்வுரிமை

மீதான பேரி­டியும்

முஸ்­லிம்­களின் வளர்ச்சி பேரி­ன­வா­தத்தின் கழு­குக்­கண்­களை சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலந்தொட்டு குத்­திக்­கொண்டுதான் இருக்­கி­றது. குறிப்­பாக முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார வளர்ச்­சியை அழிப்­பதே இப்­பே­ரி­ன­வா­தத்தின் இலக்கு என்­பதை 1915ஆம் ஆண்டு இடம்­பெற்ற கம்­பளைக் கல­வரம் முதல் அம்­பா­றை­யிலும் கண்டி மாவட்­டத்தின் பல பிர­தே­சங்­க­ளிலும் நாட்டின் இதர பிர­தே­சங்­க­ளிலும் அரங்­கேற்­றப்­பட்­டுள்ள இன­வெ­றி­யாட்டம் நன்கு புலப்­ப­டுத்­தி­யுள்­ளது. தொடர்ச்­சி­யான தாக்­கு­தல் சம்­ப­வங்கள் ''முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்கு இலங்கை பாது­காப்­பற்ற நாடு'' என்ற சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் அறிக்­கையை மீண்டும் நிரூ­பித்­துள்ளதோடு முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­ட­தா­கவும் வாழ்­வு­ரிமை மீதான பேரி­டி­யா­கவும் நோக்­கப்­ப­டு­கி­றது.

தமிழ் சமூகம் கல்­வியில் முன்­னேறிக் காணப்­பட்­ட­தொரு கால­கட்­டத்தில் இச்­ச­மூ­கத்தின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­கு­றி­யாக்கி உரி­மை­களை மறுத்து அப்­பாவி இளை­ஞர்­களை ஆயு­தப்­போ­ராட்­டத்­துக்கு இழுத்துச் சென்­றது பேரி­ன­வா­தி­களின் இருண்ட மனப்­பாங்­குதான். வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களை 30 வருடகாலம் அழி­வு­களைச் சந்­திக்கச் செய்த பௌத்த –சிங்கள மக்கள் மத்­தி­யி­லுள்ள வங்­கு­ரோத்து அர­சி­யல்­வா­தி­களும் கடும்­போக்­கா­ளர்­களும் இவர்­களை ஊக்­கப்­ப­டுத்தும் சில ஊடக ஊது­கு­ழல்­களும் முஸ்­லிம்­களின் கலை, கலா­சார, மதப் பண்­பாட்டு விழு­மிய வாழ்க்கை முறை­யிலும் ஏனைய கல்வி, வர்த்­தகம் உள்­ளிட்ட விட­யங்­க­ளிலும் வேண்­டு­மென்றே மூக்­கை­ நு­ைழத்­துள்­ளனர்.

முஸ்­லிம்கள் குறித்­த தவறான அபி­ப்பிரா­யங்­களை பௌத்த–சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்பி போலிக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து இனவன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விட்­டுள்­ளனர். இவர்­களின் இத்­த­கைய பிர­சா­ரங்­களும் போலிக்­குற்­றச்­சாட்­டுக்­களும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஆத­ார­மற்­றவை என நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அம்­பாறை நகர் முஸ்லிம் ஹோட்­டலில் தயா­ரிக்­கப்­பட்ட கொத்துரொட்­டியில் இன­வி­ருத்­தித் ­தடை மாத்­திரை கலக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்­ட­தற்­க­மைய அக்­கொத்­து­ரொட்­டியின் மாதிரி அரச இர­சா­யன பகுப்­பாய்வுத் திணைக்­க­ளத்­தினால் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு அதில் எவ்­வித மாத்­தி­ரை­களும் கலக்­கப்­ப­ட­வில்லையெனவும் அதில் மாவுக்கட்­டியே இருந்­துள்­ள­தா­கவும் அது வேறொரு உணவின் பகு­தி­யெ­னவும் அரச இர­சா­ய­ன ­ப­குப்­பாய்வுத் திணைக்­களம் அறி­வித்­துள்­ள­தாக ெவளிவந்­துள்ள செய்தி இன­வா­தி­க­ளிதும் அவர்­களின் ஊது குழ­லாகச் செயற்­பட்ட ஊட­கங்­க­ளி­னதும் முகத்­தி­ரையைக் கிழித்­தி­ருக்­கி­றது.

பெரும்­பான்மை பௌத்­த–-­சிங்­கள மக்கள் மத்­தியிலுள்ள சிறு­தொ­கை­யி­ன­ரான இன­வாதக் கடும்­போக்­கா­ளர்கள் இந்­நாட்டின் சொந்­தக்­கா­ரர்­களும் முன்­னு­ரி­மைக்­கு­ரி­ய­வர்­களும் உரி­மை­களை அனு­ப­விக்கக் கூடி­ய­வர்­களும் தாங்­கள்தான் என்ற மனப்­பாங்­கிலும் ஏனைய இனத்­தவர் இந்­நாட்டில் மேலெ­ழந்து விடக்­கூ­டாது என்ற மனோநிலையிலும் தங்­க­ளது இன­வி­ரோத நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுத்து இந்­நாட்டை அமை­தி­யற்ற அசா­தா­ரண சூழ்­நி­லைக்குத் தற்­போது தள்­ளி­யி­ருக்­கி­றார்கள்.

சட்­டத்­தையும் நீதி­யையும் நிலை­நாட்டி வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­தால் அவ­ச­ர­காலச்சட்டம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டும் ஊர­டங்குச் சட்டம் அமுலிலிருந்தும் பேஸ்புக், வட்ஸ் அப், வைபர் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்கள் முடக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் இச்­சக்­தி­க­ளினால் தூண்­டப்­பட்­டுள்ள இன­வெறி பிடித்த வன்­மு­றை­யா­ளர்­க­ளால் முஸ்­லிம்­களின் வீடுகள், கடைகள், பள்­ளி­வா­சல்கள், வாக­னங்கள், சொத்துக்கள் என சமூக, பொரு­ளா­தார கட்­ட­மைப்புக் கூறுகள் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளன. பாரிய அழி­வு­களை முஸ்­லிம்கள் சந்­தித்­துள்­ளனர்.

முஸ்­லிம்கள் எதிர்­ கொண்டுள்ள அழி­வுகள்

முஸ்­லிம்­க­ளுக்கெதி­ரான சக்­தி­களின் தூண்­டு­தல்­க­ளினால் சுதந்­தி­ர­த்­திற்கு முன்­பி­ருந்து தொடங்­கப்­பட்ட அழிப்பு நட­வ­டிக்­கைகள் 2012 ஆம் ஆண்டின் பின்னர் வீரியம் பெற்­றி­ருக்­கி­ன்றன. பொது­பலசேனா உரு­வான காலந்தொட்டு முஸ்­லிம்­க­ளுக்ெகதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களின் பட்­டி­யல் தொடர்ந்து நீண்­டு­கொண்­டுதான் செல்­கி­றது. 2013 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதலாம் திகதி அனு­ரா­த­புரம், மல்­வத்து ஓயா பள்­ளி­வா­ச­லையும் அங்கு வாழ்ந்த முஸ்­லிம்­களின் குடி­யி­ருப்­புக்­க­ளையும் அகற்றக் கோரி பிக்­குகள் மேற்­கொண்ட போராட்­டத்­துடன் தொடங்­கிய முஸ்­லிம்­க­ளுக்ெக தி­ரான சம­கால நட­வ­டிக்­கைகள் இன்னும் ஓய­வில்லை.

2013ஆம் ஆண்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 250 தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இதில் 15க்கு மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு 2014ஆம் ஆண்­டிலும் பல்­வேறு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. கடந்த ஆட்­சியின் இறு­திக் ­காலகட்­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்ெகதி­ராக பல தாக்­குதல் சம்­ப­வங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

2014இல் தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அகற்ற எடுத்த முயற்சி, வீதி அபி­வி­ருத்தி என்ற பெயரில் பள்­ளி­வா­சலை அண்டி வாழ்ந்த மக்­களை ெவளியேற்­றி­யமை, 300 வருட பூர்­வீக வர­லாற்றைக் கொண்ட மாவ­னல்லை–தெவ­ன­கல பிர­தே­சத்தைச் ேசர்ந்த முஸ்­லிம்­களை ெவளியேற்ற மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி எனத் தொடர்ந்த கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள், 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி அளுத்­க­மவில் நேரடி இன­வெ­றி­யாட்­ட­மாக அரங்­கேற்­றப்­பட்­டது. ''கறுப்பு ஜூன்'' ஆக அத் ­தி­னத்தை இந்­நாட்டு முஸ்­லிம்­களின் வர­லாற்­றுப் ­பக்­கங்­களில் எழுதச் செய்­தது. சட்­டமும் நீதியும் புதைக்­கப்­பட்டு அரா­ஜகம் சில மணித்­தி­யா­லங்கள் அளு­த்­கமையில் தாண்­டவமாடி­யது. ஜன­நா­யகம் கண்ணீர் சிந்தச் செய்­யப்­பட்டு பேரி­ன­வாதம் அகோரம் பெற்­றது. இத்­தாக்­குதல் சம்­ப­வங்­களை விட கடந்த திங்கட்கிழமை முதல் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களி னால் 25 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 200 வீடுகள், 150க்கு மேற்­பட்ட வர்த்தக நிறு­வ­னங்கள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­ற­ போ­திலும் சேத விப­ரங்கள் இன்னும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை என்­பது சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் சமூக, பொரு­ளா­தார ரீதி­யாக பின்­ன­டைவை எதிர்­நோக்­கி­யுள்­ள­துடன் அக­தி­க­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். வாழ்­வா­தா­ரத்தை முற்­றாக இழந்­துள்ள நிலையில் ஒரு­வேளை உண­வுக்கு பிறரின் தயவை நாட வேண்டியநிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில், இவர்­க­ளுக்­கு­ரிய நஷ்­ட­ஈ­டு­களை வழங்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்தின் மீது சுமத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இவற்றை உடன் வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்­கு­மாறு அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. அளுத்­கம முதல் அம்­பாறை வரை மேற்­கொள்­ளப்­பட்ட அத் ­தாக்­கு­தல்­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பான வழக்­குகள் பதி­யப்­பட்­டுள்­ள­போ­திலும் அவர்­க­ளுக்ெகதி­ராக முறை­யான சட்டநட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என முஸ்­லிம்கள் குற்­றஞ்­சாட்டி வந்த நிலை­யில், கடந்த திங்கட்கிழமை முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல பிர­தே­சங்­க­ளிலும் வன்­மு­றையில் ஈடு­பட்­ட­வர்கள் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இவர்­க­ளுக்­கான சட்டநட­வ­டிக்கைள் எவ்­வாறு அமை­ய­வுள்­ளன என்­பதை காலம் கடந்­துதான் அறிந்­து­கொள்ள முடியும்.

அளு­த்கம, கிந்­தோட்டை பிர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு­களும் இன்னும் முழு­மை­யாக வழங்­கப்­ப­டாத நிலை­யில், அம்­பா­றை­யிலும் திகன உட்­பட்ட கண்டி மாவட்­டத்­திலும் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு எப்­போது, எவ்­வாறு வழங்­கப்­படும் போன்ற கேள்­விகளுக்கு மத்­தியில், கடந்த காலங்­களில் வடக்கு, கிழக்கில் இடம்­பெற்ற யுத்­த­கா­லத்தில் விபத்­துக்­களை சந்­தித்த மக்கள், மக்கள் எழுச்­சி­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்கள், மக்­களின் உரி­மைகள் மீறப்­படல், காணாமலாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளிட்ட தரப்­பி­ன­ருக்கு நஷ்­ட­ஈடு வழங்கும் அலு­வ­ல­கத்தை அமைக்க அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருக்கும் தக­வல்­களும் ெவளிவந்­துள்­ளன.

இன­வெறி வன்­மு­றை­யா­ளர்­க­ளால் ஏற்­பட்­டுள்ள அழி­வுகள் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் மீதான நம்­பிக்­கையை இழக்கச் செய்­ததைப் போன்றே இந்­நல்­லாட்­சி­யிலும் கடந்த வருடம் கிந்­தோட்­டையில் முஸ்­லிம்­க­ளுக்ெகதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களும் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி அம்­பா­றை­யிலும் கடந்த திங்கட்கிழமை திகன, தெல்­தெ­னிய, கட்­டு­கஸ்­தோட்டை, அக்­கு­றணை, பூ­கொடை என பல பிர­தே­சங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தாக்­குதல் சம்­ப­வங்­களும் அதன் அழி­வு­களும் இந் ­நல்­லாட்சி அசாங்­கத்­தால் வழங்­கப்­படும் உத்­த­ர­வா­தங்­க­ளிலும் பாது­காப்­பிலும் நம்­பிக்­கை­யீ­னத்தை முஸ்­லிம்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. இவ்­ அ­ர­சாங்­கத்தின் மீதான முஸ்­லிம்­களின் நம்­பிக்கை இழப்பை முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் அர­சாங்­கத்­திடம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன.

கண்டி மற்றும் அம்­பா­றையில் முஸ்­லிம்­க­ளுக்ெகதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாதத் தாக்­கு­தல்­களின் போது பாது­காப்­புத்­துறை அச­மந்­தப்­போக்­குடன் நடந்­துகொண்டுள்­ளது. இதனால் பாது­காப்­புத்­துறை மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை மக்கள் இழந்து விட்­ட­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்ட செய­ல­கத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற அசா­தா­ரண நிலைமை குறித்த விசேட கலந்­து­ரை­யா­டலில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள்

வன்­முறைச் சம்­ப­வங்கள் அர­சாங்­கத்தை மாத்­தி­ர­மின்றி முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளையும் முஸ்லிம் மதத் தலை­வர்­க­ளையும் பெரும் விமர்­சனத்­திற்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது. நேர­டி­யா­கவும் அறிக்­கைகள் வாயி­லா­கவும் சமூகவலைத்­த­ளங்­க­ளி­னூ­டா­கவும் கடும் விமர்­ச­னத்­திற்குட்­பட்­டி­ருந்­தாலும் முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­தி­களும் மதத் தலைவர்­களும் அவர்­க­ளது சக்­திக்­குட்­பட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­க­ளது எதிர்ப்­புக்­களை பாரா­ளு­மன்­றத்­திற்­குள்­ளும் ெவளியிலும் ெவளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள் என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

முஸ்­லிம்­க­ளுக்ெகதி­ரான இன­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வதைத் தடுக்­கவும் மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான உட­னடி நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் சிலர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது சபை நடுவே அமர்ந்து போராட்டம் நடத்­தி­யுள்­ளனர். இவ்­வ­மர்வின் போது அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், ''இலங்­கையின் இறை­மையைப் பாது­காக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு இன­வா­திகள் தரும் பரிசா இத் ­தாக்­கு­தல்கள்---?'' என்ற கேள்­வி­யையும் அர­சாங்­கத்­திடம் எழுப்­பி­யுள்ளர்.

அம்­பாறை சம்­ப­வத்தின் உண்­மைத்­தன்­மையை மறைத்துள்ள பொலிஸார் அம்­பாறை மற்றும் திகன சம்­ப­வங்­களில் பக்­கச்­சார்­பாக செயற்­பட்­டுள்­ளனர். இதற்கு முன்னர் நாட்டில் சில சம்­ப­வங்கள் இடம்­பெற்று கல­வ­ரங்கள் ஆரம்­பித்த நிலையில் விரை­வாகச் செயற்­பட்டு கலகங்­களைக் கட்­டுப்­ப­டுத்­திய பொலிஸார் இவ்­விரு பிர­தே­சங்­க­ளிலும் இடம்­பெற்ற சம்­ப­வங்­களில் தலை­கீ­ழாகச் செயற்­பட்­டமை ஏன் என்ற கேள்­வி­யையும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் அவர் எழுப்­பி­யுள்ளார்.

இதே­வேளை, முஸ்லிம் சமூ­கத்தைப் பாது­காக்கத் தவ­றினால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்ெகதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டும்­போது அதற்கு ஆத­ரவு வழங்கப்­படும் என பிரதியமைச்சர் ஹரீஸ் அர­சாங்­கத்தை எச்­ச­ரித்­துள்ள நிலையில் முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறுதி செய்­யத்­த­வறும் பட்­சத்தில் முஸ்­லிம்­களின் தற்­பா­து­காப்­புக்­காக ஆயு­தங்கள் வழங்க வேண்டுெமன இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்­லா­ஹ் அர­சாங்­கத்­திடம் வேண்­டு­கோள் ­வி­டுத்­துள்ளார். இந்­நி­லையில், ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 37ஆவது கூட்­டத்­தொ­டரில் பங்­கு­கொள்­வ­தற்­காக ஜெனிவா சென்­றுள்ள நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர் பொறி­யி­யலாளர் அப்துர் ரஹ்மான் முஸ்­லிம்­க­ளுக்ெகதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து ஐக்­கிய நாடுகள் சபையின் உயர் அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்­குக் கொண்டு வந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு, அகில இலங்கை ஜம்­இயத்துல் உலமா சபையும் முஸ்லிம் சமூ­கம்சார் சிவில் அமைப்­புக்­களும் ஏனைய தரப்­புக்­களும் இத்­தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து உரிய நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுப்­ப­துடன் முஸ்­லிம்­களின் வாழ்­வு­ரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு பாது­காக்­கப்­பட வேண்டுெமன கோரி­யுள்ள நிலையில் தேசிய அர­சி­ய­லிலும் சர்­வ­தேச அரங்­கிலும் இத் ­தாக்­கு­தல்­க­ளு­க்ெகதி­ரான கண்­டனங்­களும் ஆதங்­கங்­களும் ெவளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் சமூகங்களின் கடப்பாடும்

இதனடிப்படையில், கண்டி மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்கு மாத்திரமின்றி இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களினது இயல்புவாழ்வையும் பாதிக்கச் செய்த சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சூத்திரதாரி உட்பட 9 ேபர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களோடு இத்தாக்குதல் சம்பவங்க ளுடன் தொடர்புபட்ட 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட்டாலும் முஸ்லிம்கள் உளவியல், சமூக, பொருளாதார, வாழ் வுரிமை ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட் டிருக்கிறார்கள். இப்பாதிப்புக்களிலிருந்து அவர்கள் மீள வேண்டுமாயின் அவர்களின் வாழ்வுரிமை அப் பிரதேசங்களில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற் கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து சக்திகளும் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலை எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்திற்கும் ஏற்படாதிருக்க உரிய நடவடிக்கைகளை சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னெடுப்பது அவசிய மாகவுள்ளது.

சிங்கள–முஸ்லிம் மக்களின் சகவாழ்வை சீர்குலைக்க எடுக்கும் முயற்சிகள் போன்று தமிழ்–முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்தையும் சீர்குலைத்து சிறு பான்மை சமூகங்கள் வாழும் பிரதேசங்களில் பதற் றத்தைத் தோற்றுவிக்க இச்சக்திகள் முயற்சித்தால் அவற்றுக்ெகதிராக தமிழ் ேபசும் சமூகங்கள் ஒன்று பட்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும். ''வீணாக விளக்கில் வண்டு விழுந்த நிலைக்கு'' எந்த வொரு சமூகமும் ஆளாகிவிடக் கூடாது.

இனவாதத்துக்கெதிராக அரசாங்கம் எடுக்கும் நட வடிக்கைகளோடு சமகால மற்றும் எதிர்கால முஸ் லிம்களின் வாழ்வுரிமையில் மீண்டும் பேரிடி ஏற்ப டாது சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முஸ் லிம் சமூகத்திலுள்ள அரசியல் தலைமைகள் உட்பட அத்தனை தரப்புக்களும் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவதும் ஒன்றுபட்டு சமூகத்தைப் பாதுகாப் பதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெ டுப்பதும் காலத்தின் அதிமுக்கிய தேவையாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-10#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.