Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம்

Featured Replies

பரீட்சை பெறுபேறுகளில் மாணவிகள் ஆதிக்கம் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம்

 

 
 

கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

EXAM.jpg

அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும்.

இவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப்பெற்றோர் விபரம் வருமாறு, 

1. குஷானி செனவிரத்ன - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

1.சாமுடி சுபசிங்க - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

1. நவோதயா ரணசிங்க - பெண்கள் உயர் பாடசாலை, கண்டி

1. லிமாஷா அமந்தி விமலவீர - மஹாமய பெண்கள் கல்லூரி கண்டி

1.ரந்தி லக்பிரியா - சுஜாத்தா பாலிகா மகா வித்தியாலயம், மாத்தறை

1.கவீஷ பிரதீபத் - சீவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி

2.நிபுனி ஹேரத் - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு

2.அனீஷா பெர்னாண்டோ - சி.எம்.எஸ். மகளிர் கல்லூரி, கொழும்பு

2.ரிஷினி குமாரசிங்க - சமுத்ரதேவி பாலிகா வித்தியாலயம், நுகோகொட

2. கவீன் சிறிவர்தன - புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்பு

இதேவேளை இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/32028

 

 

 

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம் 

 

 
 

 

வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார்.

thumb_large_exam.jpg

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம்பெற்றுள்ளார்.

 

கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும்.

 

இவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப்பெற்றோர் விபரம் வருமாறு, 

1. குஷானி செனவிரத்ன - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

1.சாமுடி சுபசிங்க - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

1. நவோதயா ரணசிங்க - பெண்கள் உயர் பாடசாலை, கண்டி

1. லிமாஷா அமந்தி விமலவீர - மஹாமய பெண்கள் கல்லூரி கண்டி

1.ரந்தி லக்பிரியா - சுஜாத்தா பாலிகா மகா வித்தியாலயம், மாத்தறை

1.கவீஷ பிரதீபத் - சீவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி

2.நிபுனி ஹேரத் - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு

2.அனீஷா பெர்னாண்டோ - சி.எம்.எஸ். மகளிர் கல்லூரி, கொழும்பு

2.ரிஷினி குமாரசிங்க - சமுத்ரதேவி பாலிகா வித்தியாலயம், நுகோகொட

2. கவீன் சிறிவர்தன - புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்பு

இதேவேளை இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/32029

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்ற மாணவி!

 

 

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 வீத மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சகைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆறு இடங்களில் முதன்மை நிலைகள் பதிவாகி உள்ளன.

தமிழ் மொழிமூலத்தில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷகுமார் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

https://news.ibctamil.com/ta/world-affairs/g-c-e-ordinary-level-tamil-srilankan-first

  • தொடங்கியவர்

சுட்டுக்கொல்லப்பட்ட மெய்பாதுகாவலரின் மகள் கா.பொ.த பரீட்சையில் சிறந்த பெறுபேறு!!!

 

 
 

யாழ்ப்பாணத்தில் நல்லூர் வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின்  மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜனது மகள் கா.பொ.த சாதாரன தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

New_Layout__3_.jpg

நேற்று நள்ளிரவு வெளியான பெறுகளில் சமாதி ஆமந்தா ஹேமசந்திர என்ற பொலிஸ் சார்ஜனது மகள் 6 "ஏ" தர சித்தியினையும், 2 "பி" சித்தியுனையும், 1 "சி" சித்தியுமாக ஒன்பது பாடங்களிலும் குறித்த மாணவி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜீலை மாதம் நல்லூர் பகுதியில் வைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதி மயிரிளையில் தப்பித்துக்கொள்ள அவரது நீண்ட நாள் மெய் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன் ஹேமசந்திர துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் சார்ஜனது பிள்ளைகள் கல்வி கற்று முடிக்கும் வரை எல்லா கல்வி செலவுகளையும்  தாம் பொறுப்பேற்பதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த அம் மாணவி இச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

http://www.virakesari.lk/article/32037

  • தொடங்கியவர்

தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்ற மாணவி இவர்தான்!

தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்ற மாணவி இவர்தான்!

தமிழ் மொழிமூலத்தில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 வீத மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சகைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆறு இடங்களில் முதன்மை நிலைகள் பதிவாகி உள்ளன.

தமிழ் மொழிமூலத்தில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷ்குமார் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்ற மாணவி இவர்தான்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/This-is-the-only-student-in-Tamil-language

  • தொடங்கியவர்
‘வைத்தியராக வேண்டும் என்பதே எனது இலக்கு’
 
 

-எஸ்.நிதர்ஷன்

image_6931578794.jpg

“விடா முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் கல்வியைத் தொடர்ந்ததே தன்னுடைய வெற்றிக்கு காரணமென” அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்.வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி மிருதி சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இரவு வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் மொழி மூலமாக முதலாமிடத்தைப் பெற்றிருந்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் கல்வியைத் தொடர்வதுக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களது உதவியுடன் விடா முயற்சியுடன் நான் கல்வியைத் தொடர்ந்தேன். அதனூடாக சிறந்த பெறுபேற்றையும் பெற்றிருக்கின்றேன். நான் இந்தப் பெறுபேறுகளைப் பெறுவதுக்கு உதவிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் கல்வியுடன் இணைப்பாட விதானங்களிலும் ஈடுபட்டிருக்கின்றேன். அவ்வாறு செயற்படுவதுடன் விடா முயற்சியுடன் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் மாணவர்கள் கல்வியில் சாதிக்கலாம்” என்றார்.

இதேவேளை “எதிர்காலத்தில் சிறந்ததொரு வைத்தியராக வந்து இந்த மக்களுக்கு என்னாலான அனைத்துச் சேவைகளையும் செய்யவேண்டும் என்பதே என்னுடைய இலட்சியம்” என்றும் மாணவி சுருதி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வைத்தியராக-வேண்டும்-என்பதே-எனது-இலக்கு/71-213541

  • தொடங்கியவர்
விபத்தில் உயிரிழந்த யாழ். மாணவன் 9 பாடங்களில் ’A’ சித்தி
 

சாவகச்சேரி - மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன்,நேற்று வெயளியான க.பொ.த.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 9 'A' சித்திகளைப் பெற்றுள்ளார்.

image_40fe830145.jpg

image_56e62273a3.jpg

http://www.tamilmirror.lk/செய்திகள்/விபத்தில்-உயிரிழந்த-யாழ்-மாணவன்-9-பாடங்களில்-A-சித்தி/175-213572

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

நன்றி  முகநூல் யாழ் மத்திய கல்லூரி

  • தொடங்கியவர்

26 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்த பாடசாலை!

 

 

 

  • 26 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்த பாடசாலை!vision.svg 549

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப்பொது தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நள்ளிரவில் இருந்து இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலையில் இருந்து 9ஏ சித்திகளை 26 மாணவர்களும், 8ஏ சித்திகளை 20 மாணவர்களும் பெற்றதுடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இது தொடர்பில் கல்லூரி முதல்வர் கருத்து தெரிவிக்கையில் :- எமது கல்லூரியில் சென்ற வருடம் கால்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கல்லூரியின் வரலாற்றில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்று சாதனைகளை பெற்று எமது கல்லூரிக்கு பெருமை தேடித்தந்திருக்கின்றார்கள்.

இந்த பெறுபேறுகளுக்கு உழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது கல்லூரி சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் பெறுபேறுகள் கல்வித்திணைக்களத்தில் இருந்து கிடைத்தவுடன் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வினை செய்யவுள்ளதாக பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

மேலும் கல்முனை வலயத்தின் தமிழ்ப்பிரிவிற்கு பொறுப்பான கோட்டக்கல்வி அதிகாரி திரவியராஜா நேரில் வந்து கல்லூரி அதிபரை வாழ்த்தியதோடு மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் வாழ்த்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/26-students-9A-in-carmel-fatima-college-kalmunai

2017 ஆம் ஆண்டு கல்விப் பொது தரா தர சாதாரண தரப் பரீட்சையில், தமிழ் மொழியில், அகில இலங்கை ரீதியில், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

  • தொடங்கியவர்

வரலாற்று சாதனை படைத்த வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதன்முறையாக க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 42 மாணவிகள் 09 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நேற்று வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 21 மாணவிகள் எட்டு ஏ சித்திகளையும் ஐந்து மாணவிகள் ஏழு ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

 

வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரையில் 99.3 வீதமான மாணவிகள் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி சரணியா சுபாகரன் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/178389?ref=home-latest

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலில் மீளாத துயரத்திலும் 9A பெற்ற மாணவனின் எதிர்கால இலட்சியம்

முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்ற இராசேந்திரம் பிரதீபன் என்னும் மாணவன் கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த மாணவன் இன்று கருத்து தெரிவிக்கையில்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

இறுதி யுத்தத்தின் போது(2009) எனது தாயும் மூன்று சகோதரர்களும் படையினரின் எறிகணைத் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

இந்த துயரச் சம்பவம் என் மனதை பெரிதும் பாதித்திருந்த நிலையில் என் தந்தையின் அரவணைப்பினாலும் அதிக ஊக்கத்தினாலும் இன்று 9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளேன்.

தொடர்ந்து கணிதத்துறையில் கல்வியை கற்று ஒரு விமானியாக வருவதே என் எதிர்கால இலட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தோற்றிய 12 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் 9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

அத்துடன் 8 மாணவர்கள் சித்தியடைந்து தொடர்ந்து உயர்தரத்தில் கற்பதற்கு தகுதி பெற்று, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/education/01/178405?ref=home-feed

  • தொடங்கியவர்
  • விமலின் மகள் சாதனை!!
 
 

விமலின் மகள் சாதனை!!

 

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகள் ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சை எழுதிய விமல் வீரவன்சவின் மகள், விமாஷா விஷ்வாதரி வீரவன்ச கொழும்பு விஷாகா கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்.

நேற்று முன்தினம் வெளியான பரீட்சை முடிவுகளுக்கமைய அவர் அனைத்து பாடங்களிலும் ஏ சித்திப் பெற்றுள்ளார்.

தனது தந்தை 3 மாதங்கள் சிறைச்சாலையிலும், தாயார் அந்த காலப்பகுதியில் சிறைச்சாலையில் இருந்த போதிலும் அவர் பரீட்சை தன்னைப்தயார்படுத்தி சிறப்பாக பரீட்சை எழுதியுள்ளார் என்று அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

http://newuthayan.com/story/79693.html

  • தொடங்கியவர்
  • யாழ். இந்து மக­ளிர் கல்­லூ­ரி­ மாணவிகள் சாதனை!!
 
 

யாழ். இந்து மக­ளிர் கல்­லூ­ரி­ மாணவிகள் சாதனை!!

 

யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி பல வரு­டங்­க­ளுக்­குப் பின்­னர் ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சை­யில் உயர் பெறு­பேறு பெற்­றுள்­ளது என்று பாட­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர்.

ஜி.சி.ஈ சாதா­ரண தரப்­ப­ரீட்சை பெறு­பே­று­கள் கடந்த வரு­டங்­களை விட இந்த வரு­டம் அதி­க­ரித்­துள்­ளது. அது மகிழ்ச்­சி­யாக உள்­ளது என்று பாட­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர்.

9 பேர் 9 ‘ஏ‘ பெறு­பேறு பெற்­றுள்­ள­னர். மேலும் 12 பேர் 8‘ஏ‘ பெறு­பேறு பெற்­றுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/79777.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.