Jump to content

ஒரு நிமிடக் கதைகள்


Recommended Posts

பதியப்பட்டது

ஒரு நிமிடக் கதைகள்

 

white_spacer.jpg

ஒரு நிமிடக் கதைகள் white_spacer.jpg
title_horline.jpg
 
white_spacer.jpg
 

p113.jpg தாய்+அம்மா

தாயம்மா செத்துட்டா. ஊரே திரண்டு அவ வீட்டு முன்னாடி கூடிருச்சு. ஊர்சனங்களுக்கு எத்தனை உபகாரம் பண்ணியிருப்பா! யாருக்கு என்ன கஷ்டம்னாலும் ஓடி ஓடி உதவி பண்றவளாச்சே..!

“யேம்ப்பு! நேரம் போயிட்டே இருக்குதே! அதான் எல்லாரும் வந்தாச்சுல்ல... இன்னும் எதுக்காகக் காத்திருக்கணும்? சட்டுபுட்டுனு எடுத்துர வேண்டியதுதானே?” என்றார் ஒரு பெரியவர்.

தாயம்மாவின் மகன் குறுக்கிட்டான்... “இல்லீங்கய்யா! எங்க ஆத்தா சாகுற வரைக் கும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுத் தது இல்லை. இந்த வெந்து எடுக்குற வெயில்ல பொணத்தை எடுத்தா, சுடுகாடு போற வரைக்கும் அம்புட்டுப் பேரும் கஷ்டப்படணும். அதை எங்க ஆத்தாவோட ஆத்மா ஒப்புக்காது. கொஞ்சம் பொறுங்க, வெயில் தாழட்டும். பொழுதுக்க எடுத்துரலாம்!”

- எஸ்.எஸ்.பூங்கதிர்

 

 

 

 

 
p113a.jpg காலிப் பெட்டி?!

விடிந்தால் புத்தாண்டு. வீட்டை அலங்கரிப்பதற்காக வாங்கி வைத்திருந்த தங்க நிறப் பேப்பர்களைத் தன் எட்டு வயதுப் பெண் குழந்தை கத்தரித்து நாசம் செய்துவிட்டாள் என்று எரிச்சலோடு, அதன் முதுகில் ஒரு அடி வைத்துவிட்டுக் கடுப்போடு தூங்கப் போனான் ரமேஷ். மறுநாள், அவன் தலைமாட்டில் ஒரு சின்ன தங்க நிற அட்டைப் பெட்டி இருந்தது. மேலே, ‘அன்புள்ளடாடிக்கு, என் புத்தாண்டுப் பரிசு! - சுசி’ என்று எழுதியிருந்தது.

முதல் நாள் குழந்தையை அடித்துவிட்டதை நினைத்து வருத்தப்பட்டான் ரமேஷ். பாவம் குழந்தை, தனக்குப் பரிசு கொடுப்பதற்காகத்தான் இந்த பேப்பரை எடுத்திருக்கிறது! பெட்டியைத் திறந்து பார்த்தான். உள்ளே ஒன்றுமில்லை.

“என்ன சுசி, காலிப் பெட்டியையா பரிசா கொடுப்பே?” என்றான் ஏமாற்றமாக.

“அது காலிப் பெட்டி இல்ல டாடி! உனக்காக நான் அதுக்குள்ளே நூறு முத்தம் வெச்சிருந்தேனே!” என்றது குழந்தை பாவமாக!

- ஆர்.ஷைலஜா

 

 

 

 

p115g.jpg என்னடி பண்ணுவே?

 

‘‘ராத்திரி நேரத்துல இப்படியா!’’

‘‘நீ என்ன பெரிய பத்தினியா?’’

‘‘ச்சீ... வாயை மூடு!’’

‘‘என்னடி பண்ணுவே?’’

‘‘பல்லை உடைப்பேன்!’’

‘‘என்ன, திமிரா?’’

‘‘சரிதான் போடா!’’

‘‘அட! தோ, பார்றா!’’

‘‘தோடா... யார்கிட்ட..?’’

‘‘உனக்கென்னடா மரியாதை?’’

‘‘போடா பொறம்போக்கு!’’

‘‘போடி பொடிமாசு!’’

இதையெல்லாம் வரிசையாக எழுதி எடுத்துக்கொண்டு, தனது டைரக்டரைப் பார்க்கக் கிளம்பினான் உதவியாளர் ஜெகன், இவற்றில் எதைத் தனது அடுத்த படத்துக்குத் தலைப்பாக ஓ.கே. செய்யப் போகிறாரோ என்கிற யோசனையோடு!

-மை.பாரதிராஜா

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.