Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை பிரதேச சபை கூட்டமைப்பிடம்!!

Featured Replies

  •  
  • வாகரை பிரதேச சபை கூட்டமைப்பிடம்!!
 

வாகரை பிரதேச சபை கூட்டமைப்பிடம்!!

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையைின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் இன்று நடைபெற்றது.

அதில் தவிசாளர் போட்டிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சிவஞானம் கோணலிங்கம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் கண்ணப்பன் கணேஷன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கதிரவெளி வட்டாரத்தைச் சேர்ந்த சிவஞானம் கோணலிங்கம் 10 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட கண்ணப்பன் கணேஷன் 8 வாக்குகளைப் பெற்றார்.

உபதவிசாளர் தெரிவிற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து புணாணை கிழக்கு வட்டாரத்தைச் (இரட்டை அங்கத்தவர் வட்டாரம்) சேர்ந்த தி.மு.சந்திரபாலன் மற்றும் ச.முகமட் தாஹிர் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

பகிரங்க வாக்கெடுப்பில் தி.மு.சந்திரபாலன் 10 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கண்ணப்பன் கணேஷன் 8 வாக்குகளைப் பெற்றார்.

Vaharai-2-300x225.jpgVaharai-1-300x225.jpgVaharai-5-264x300.jpg

http://newuthayan.com/story/83515.html

  • தொடங்கியவர்
வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது
 

image_498119a8fe.jpg

ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.எம்.எம்.முர்ஷித், ஆர்.ஜெயஸ்ரீராம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய சற்று நேரத்தில், அதன் தலைவரும் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வாகரைப் பிரதேச சபையின் தலைவர் சிவஞானம் கோணலிங்கமும் உறுப்பினரான தெய்வேந்திரன் சத்தியநாதன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், வாழைச்சேனை நீதிமன்றில் உடனடியாக ஆஜர் செய்யப்பட்டபோது, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கதிரவெளி கிராம சேவகர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

image_7f9546ef8b.jpgimage_5ce3231cb6.jpg

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/வாகரை-பிரதேச-சபையின்-தலைவராகத்-தெரிவானவர்-சற்று-நேரத்தில்-கைது/73-214153

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.