Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்?

Featured Replies

  • வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்?
 
 

வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்?

வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நில­வு­கின்­றது. இரண்டு கட்­சி­க­ளும் ஏனைய கட்­சி­களை வளைத்­துப்­போட்டு ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தில் மும்­மு­ர­மாக உள்­ளன.

தொங்கு நிலை­க­ளில் உள்ள சபை­க­ளின் தவி­சா­ளர், உப தவி­சா­ளர் தெரி­வு­கள் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் இடம்­பெற்று வரு­கின்­றது.

வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு இன்று காலை 10 மணிக்கு வவு­னியா நகர சபை­யின் மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வவு­னியா நகர சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 8 ஆச­னங்­க­ளை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்சி 4 ஆச­னங்­க­ளை­யும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன தலா 3 ஆச­னங்­க­ளை­யும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈ.பி.டி.பி., சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­பன தலா ஒவ்­வொரு ஆச­னங்­க­ளை­யும் கொண்­டுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஈ.பி.டி.பி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­ப­வற்­றின் ஆத­ர­வைத் திரட்­டி­யுள்­ளன. கூட்­ட­மைப்­பி­டம் 8 ஆச­னங்­கள் மாத்­தி­ரமே உள்­ளன. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி ஆத­ர­வ­ளித்­தா­லும் ஒன்­பது ஆச­னங்­களை மாத்­தி­ரமே கூட்­ட­மைப்­பால் பெற்­றுக் கொள்ள முடி­யும்.

இந்த நிலை­யில் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் ஆத­ர­வைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கான பேச்­சுக்­கள், வவு­னியா மாவட்ட தமிழ் அர­சுக் கட்சி தலை­மை­யால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் சார்­பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பி­னரே வவு­னி­யா­வில் வெற்றி பெற்­றி­ருந்­த­னர். அவர்­க­ளது ஆத­ர­வைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கான பேச்­சுக்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

வவு­னியா நகர சபை­யில் உப­த­வி­சா­ளர் பதவி, வவு­னியா தெற்­கில் தவி­சா­ளர் பதவி தமது கட்­சிக்கு வழங்­கப்­பட்­டால், கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­க­லாம் என்று இந்­தப் பேச்­சுக்­க­ளில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­கள், வவு­னியா மாவட்­டத்­தின் தமிழ் அரசு தலை­மை­யி­டம் எடுத்­து­ரைத்­த­னர். இதற்கு மாவட்ட தமிழ் அர­சு­வின் தலை­மை­யும் இணங்­கிய நிலை­யில், நேற்­றைய தினம் திடீ­ரென கூட்­ட­ணி­யி­னர் அதி­லி­ருந்து பின்­வாங்­கி­யுள்­ள­னர்.

தாம் நடு­நி­லமை வகிக்­கப் போவ­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். இருப்­பி­னும் உறுப்­பி­னர்­களை அலை­பே­சி­க­ளு­டன் இருக்­கு­மா­றும் முடி­வில் மாற்­றம் என்­றால் அறி­விப்­போம் என்­றும் கூட்­ட­ணி­யின் நகர சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நில­மையை உணர்ந்து தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, கூட்­ட­மைப்பை ஆத­ரிக்­கா­விட்­டால் வவு­னியா நகர சபை பெரும்­பான்­மைக் கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­டம் தாரை வார்க்­கப்­பட்டு விடும் என்று வவு­னியா பொது அமைப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இதே­வேளை, வவு­னியா வெண்கலச் செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை­யின் அமர்வு இன்று மாலை 2.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சபை­யி­லும், தமிழ்க் கட்­சி­கள் ஓர­ணி­யில் திர­ளா­விட்­டால், சபை பெரும்­பான்­மைக் கட்­சி­க­ளி­டம் செல்­லும் நில­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்­தச் சபை­யில், கூட்­ட­மைப்பு 5 ஆச­னங்­க­ளை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன தலா 4 ஆச­னங்­க­ளை­யும், கூட்­ட­ணி­யி­னர் 3 ஆச­னங்­க­ளை­யும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் என்­பன தலா ஓர் ஆச­னங்­க­ளை­யும் கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/84851.html

  • தொடங்கியவர்
  • தமிழர் விடுதலைக்கூட்டணி, சு.க. இணைந்து வவுனியா நகரசபையை ஆட்சி!!
 
 

தமிழர் விடுதலைக்கூட்டணி, சு.க. இணைந்து வவுனியா நகரசபையை ஆட்சி!!

வவு­னியா நகர சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ராசலிங்கம் கௌதமன் வவுனியா நகரசபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைக்கப்பபெற்றன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு
ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார்.

அதேவேளை உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சு.குமாரசாமி  11 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

unnamed-1-2-300x225.jpg

http://newuthayan.com/story/84893.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வவுனியா நகரசபையில் ஆட்சியைப் பிடித்தது ஈபிஆர்எல்எவ் – ஏமாந்தது கூட்டமைப்பு

 

vavuniya-UC-300x200.jpgவவுனியா நகர சபையை, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து-  தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்ட ஈபிஆர்எல்எவ் கைப்பற்றியுள்ளது.

வவுனியா நகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. இங்கு ஆட்சியைப் பிடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐதேகவுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில், திடீரென, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈபிஆர்எல்எவ் தமது தரப்பில் முதல்வர் வேட்பாளராக கௌதமனை நிறுத்தியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சேனாதிராசா போட்டியில் நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கௌதமன் 11 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சேனாதிராசா 9 வாக்குகளை மாத்திரம் பெற்றார்.

vavuniya-UC.jpg

வவுனியா நகரசபையில் 3 ஆசனங்களை மாத்திரம் கொண்டுள்ள ஈபிஆர்எல்எவ்வுக்கு, ஐதேகவின் நான்கு உறுப்பினர்களில் மூவரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஈபிடிபி, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் தலா 1 உறுப்பினரும் ஆதரவு அளித்தனர்.

சேனாதிராஜாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஐதேகவின் 1 உறுப்பினரும் ஆதரவு அளித்தனர்.

நகரசபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர் கௌதமன், வட்டார முறையில் வேட்பாளராக நின்று தோல்வியடைந்து  பின்னர் விகிதாசாரப் பட்டியல் மூலம், நகரசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டவராவார்.

இதையடுத்து நடந்த, பிரதி தவிசாளர் தெரிவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சு குமாரசாமி 11 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

வடக்கு, கிழக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் மற்றும், ஈபிடிபியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்ததை ஈபிஆர்எல்எவ் கடுமையாக விமர்சித்திருந்தது. தற்போது  வவுனியா நகரசபையில், இந்தக் கட்சிகளுடன் இணைந்து ஈபிஆர்எல்எவ் ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/04/16/news/30428

  • தொடங்கியவர்

வவுனியா நகரசபை ஆட்சியதிகாரம் அதிக ஆசனங்களைப் பெற்றகட்சிக்கு கிடைக்காமை வெளிப்படுத்தும் செய்தி என்ன?

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=

தொகுதிவாரி தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி வசமானமை மிகச் சிறந்த உதாரணம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

21 ஆசனங்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் அதிகப்படியாக 8 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆட்சியமைக்க முடியாது போயிருக்கின்ற நிலையில், மொத்தமாக 3 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ,பொதுஜன பெரமுண மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் கூட்டு அமைத்து இன்றையதினம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.

இதுதொடர்பாக கருத்துவெளியிடும்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்ற திடசற்கற்பத்துடன் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு ஒன்றுசேர்ந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. உள்ளூராட்சி சபைத்தேர்தலில் கடந்த பெப்ரவரி 10;திகதி போட்டியிட்ட வட்டாரங்களிலே தோல்வியைத் தழுவிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் விகிதாசார முறைமையால் ஆசனங்களைப் பெற்று நகரசபைக்குத் தெரிவாகினர் . தற்போது ஏனைய கட்சிகளுடன் கூட்டுவைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடித்துள்ளமை குறிப்பிடடத்தக்கது எனவும் அவர் மேலும் கூறினார்.

http://www.newsuthanthiran.com/2018/04/16/வவுனியா-நகரசபை-ஆட்சியதிக/

  • தொடங்கியவர்
  • துரோ­கத்­தைத் தன் கண்­க­ளால் நேரில் கண்ட சுமந்­தி­ரன் எம்.பி.!!
 
 

துரோ­கத்­தைத் தன் கண்­க­ளால் நேரில் கண்ட சுமந்­தி­ரன் எம்.பி.!!

துரோ­கங்­க­ளைப் பார்க்­கத்­தான் வந்­தோம் என்று, வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு முடிந்து வெளி­யே­றும் போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

அதே­வேளை, “தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி எமக்கு துரோ­கம் செய்து விட்­டது. நடு­நி­லமை வகிக்­கும் என்று நேற்று (நேற்­று­முன்­தி­னம்) 40 நிமி­டங்கள் நடந்த சந்­திப்­பில் எமக்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.”- என்று வடக்கு மாகாண சபை  உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் குறிப்­பிட்­டார்.

http://newuthayan.com/story/85229.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.