Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயிலிட்டியில் அழிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியம்

Featured Replies

மயிலிட்டியில் அழிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியம்

 

Myliddy-armory-1-300x200.jpgசிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்று இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.

வலி.வடக்கில் 28 ஆண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மயிலிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள 680 ஏக்கர் காணிகள் கடந்தவாரம் விடுவிக்கப்பட்டன.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணிவந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

ஆயுதக் களஞ்சியமாகப் பயன்படுத்தப்பட்ட இடங்களை சிறிலங்கா படையினர் அழித்துள்ள போதிலும், அதற்கான தடயங்கள் பல விட்டுச் செல்லப்பட்டுள்ளன.

Myliddy-armory-1.jpgMyliddy-armory-2.jpgMyliddy-armory-3.jpgMyliddy-armory-4.jpg

இங்கிருந்த ஆயுதக் களஞ்சியம் தற்போதும் சிறிலங்கா படையினர் வசமுள்ள வலி.வடக்கின் ஏனைய பகுதி ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

http://www.puthinappalakai.net/2018/04/17/news/30433

  • தொடங்கியவர்

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுதக் கிடங்கு இடித்தழிப்பு

vali-north.jpg?resize=615%2C427
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி.வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அமைந்திருந்த பகுதி என சந்தேகிக்கப்படும் பகுதியில் இருந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. வலி.வடக்கில் கடந்த 28 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13 அதன் உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது.

அந்நிலையில் மயிலிட்டி வடக்கில் கட்டம் ஒன்றினை சுற்றி பாரிய மண் அணைகள் கட்டப்பட்டு காணப்பட்டன. குறித்த கட்டடத்தினை இராணுவத்தினர் இடித்தழித்து விட்டு கட்டடத்தின் இரும்பு கூரைகளை தமது வாகனங்களில் ஏற்றி சென்றுள்ளனர்.

 

குறித்த கட்டம் பலத்த பாதுகாப்பான மண் அணைகளுக்கு நடுவில் காணப்பட்டமையால் , அக் கட்டடத்தினுள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு அந்த கட்டடம் ஆயுத களஞ்சியமாக பாவிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அதேவேளை குறித்த கட்டடத்தை அண்டிய பகுதிகளில் வெடிபொருட்களின் வெற்று கோதுகள் பெருமளவில் உரைபைகளில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

மயிலிட்டி வடக்கில் பாரிய ஆயுத கிடங்குகள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் அப்பகுதிகளை மீள கையளிக்க கூடாது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனாவிடம் கோரியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

vali-north-6.jpg?resize=613%2C411vali-north-8.jpg?resize=612%2C402

http://globaltamilnews.net/2018/75373/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.