Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரு­வது நாக­ரி­க­மல்ல!!

Featured Replies

  •  
  • நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரு­வது நாக­ரி­க­மல்ல!!
 
 

நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரு­வது நாக­ரி­க­மல்ல!!

எதிர்­கட்­சித் தலை­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரு­வது நாக­ரிக­மான செயல் இல்லை என்று தெரி­வித்­துள்­ளார் எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

திரு­கோ­ண­ம­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார். அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது-:

எதிர்க்கட்­சித் தலை­வர் ஒரு­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரு­வது உலக நாடு­க­ளில் நடக்­காத செயல். அவ்­வாறு கொண்டு வரு­வது நாக­ரிக­மா­னது அல்ல.

நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை யார் வேண்­டு­மா­னா­லும் கொண்டு வர­லாம். அது அவர்­க­ளின் உரித்து. அதை நாம் எதிர்­கொள்­ளத் தயா­ராக இருக்­கின்­றோம் -– என்­றார்.

http://newuthayan.com/story/85209.html

  • தொடங்கியவர்

நம்பிக்கையில்லா பிரேரணை; அமிர்தலிங்கம், சம்பந்தன்- அன்றும் இன்றும்

 

எதிர்க்கட்சித் தலைவர் இர.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க, மஹிந்த ரஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி, ஏற்பாடு செய்து வருகின்றது என கட்சித் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

 

சம்பந்தன், நல்லாட்சி அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரியவராகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் மாத்திரமே செயற்படுகின்றார். ஆனால், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளில் அவர் கவனம் செலுத்துவதில்லை என்று கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சாபாநாயகரிடம் கையளிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் 1977 ஆம் ஆண்டு பதவிவகித்தார். அவருக்கு எதிராக, அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை 1981ஆம் ஆண்டு யூலை மாதம் சமர்ப்பித்திருந்தது.

அப்போது 168 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 144 ஆசனங்களை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, அமிர்தலிங்கம் இனவாதி என்றும் பயங்கரவாதத்தை துாண்டுவதாகவும் அன்று குற்றம் சுமத்தியது. 

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் அமிர்தலிங்கம், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து உரையாற்ற முற்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், அன்று இனவாத நோக்கில் கூச்சல் எழுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த அமர்தலிங்கம் வெளிநடப்புச் செய்தார். எட்டு ஆசனங்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சிகள் பிரேரரணையை கைவிடுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரேரணை ஏகமனதாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கு மாத்திரமே பெறப்பட்டது. அதன் பின்னர், அமிர்தலிங்கத்தை கொலை செய்ய வேண்டும் என்று சிங்கள இனவாதிகள் அன்று கோசம் எழுப்பியிருந்தனர். மிலேச்சத்தனமான வார்த்தைகளை பிரயோகித்தனர்.

அமிர்தலிங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்த செல்டன் ரனராஜா, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களினால் அவமானப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தாலும் புதிய தலைவர் 1983ஆம் ஆண்டு வரை நியமிக்கப்படவில்லை.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற, யூலை கலவரத்தின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 18பேரும் நாடாளுமன்றத்திற்குச் செல்வதை தவிர்த்துக் கொண்டனர். அதனையடுத்து அனுரா பண்டாரநாயக்கா எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

ஆகவே அமிர்தலிங்கத்துக்கு எதிராக, அன்று நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து, சிங்கள இனவாத நோக்கில் விமர்சித்த ஐக்கிய தேசியக் கட்சி, இன்று சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கி அழகுபார்க்கின்றது.

ஆனால், அன்று அமிர்தலிங்கத்தை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இன்று கூட்டு எதிரணியாக ஒன்றினைந்து சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இனவாதம் அன்றும், இன்றும் ஒரே நோக்கில், தொடர்ச்சியாகவும் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவும் புதிய வியூகங்களில் முன்னோக்கிச் செல்வதாக விமர்சகர்கள் கூறுகின்றனர் என்று ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார். 

https://news.ibctamil.com/ta/politics/Sampanthan-No-confidence-motion

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.