Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது பெரிய வி‌டயமல்ல ; இந்தியாவில் சி.வி.

Featured Replies

இலங்கைத் தமிழர்களை வைத்து இந்தியாவில்  அரசியல் செய்வது பெரிய வி‌டயமல்ல ; இந்தியாவில் சி.வி.

 

இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌டயம் அல்ல. இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

cv.jpg

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் நெல்லை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர், இன்று காலை நெல்லை மாவட்டத்திற்கு சென்றார். அங்கு நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் உள்ள அரச சித்த மருத்துவ கல்லூரிக்குச் சென்ற விக்கினேஸ்வரனுக்கு மாணவிகள் வரவேற்பளித்தனர். பின்பு சித்தமருத்துவ கல்லூரியில் உள்ள அகத்தியர் கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்துகொண்டார்.

இதையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே வடக்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌ஷயம் அல்ல. 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு மேம்பட இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும் இன்னும் கூடுதல் உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பு இந்திய அரசுக்குள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

இலங்கை தமிழர் உரிமைகளை மீட்க இந்தியா உதவ வேண்டும்: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

18tilansrilanka%20cmsidha%20college%202

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி. விக்னேஸ்வரனுக்கு, பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.   -  படம்: மு.லெட்சுமி அருண்.

18tiarlvigneshwaran

பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு நேற்று வந்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அங்குள்ள அகத்திய முனிவர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார்.   -  படம்: மு.லெட்சுமி அருண்

18tilansrilanka%20cmsidha%20college%201

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை வரவேற்கும் மருத்துவர்கள்.   -  படம்: மு.லெட்சுமி அருண்

18tilansrilanka%20cmsidha%20college%202

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி. விக்னேஸ்வரனுக்கு, பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.   -  படம்: மு.லெட்சுமி அருண்.

18tiarlvigneshwaran

பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு நேற்று வந்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அங்குள்ள அகத்திய முனிவர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார்.   -  படம்: மு.லெட்சுமி அருண்

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த 14-ம் தேதி வந்திருந்த அவர், ஆழ்வார்குறிச்சி சிவசைலத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்து, திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் வழியில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு நேற்று அவர் வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள அகத்திய முனிவர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இந்திய அரசு உதவ வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கு இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்துள்ளது. இன்னும் கூடுதல் உதவிகள் செய்யும் வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்..

இலங்கை தமிழர்களை வைத்து இந்தியாவில் நடைபெறும் அரசியல் குறித்த கேள்விக்கு அவர், ‘இது பெரிய விஷயமல்ல’ என்று பதிலளித்தார்.

 

வருகைக்கான காரணம் என்ன?

இலங்கை வடக்கு மாகாண முதல்வரின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த பிப்ரவரியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பிரிவு சார்பில், முதலாவது சர்வதேச சித்த மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இக்ருத்தரங்கத்தில் பங்கேற்ற விக்னேஸ்வரன் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களை சந்தித்து பேசியிருந்தார்.

இக்கல்லூரியில், இலங்கையில் இருந்து ஆண்டுக்கு 6 மாணவர்கள் முதுகலை சித்த மருத்துவ பட்டப்படிப்பில் சேர்க்கப்படும் நிலையில் அவர்களது கல்வி மற்றும் நிலை குறித்தும் அப்போது கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி வந்திருந்த அவர், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு வந்து பார்வையிட்டுச் சென்றார் என்று கூறின.

http://tamil.thehindu.com/tamilnadu/article23580854.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.