Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்?

Featured Replies

விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்?

 

Suresh-Premachandran-300x200.jpgவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவருடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான, பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இது தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கருத்து கேட்டிருந்தது.

அதற்கு அவர்,  “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளதால், ஒன்றுபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கும் விருப்பத்தை முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும், அவருடன் ஈபிஆர்எல்எவ் இணைந்து கொள்ளுமா என்பது, முதலமைச்சர் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதிலேயே, தங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/04/17/news/30453

  • தொடங்கியவர்

வடக்கு முதல்வரின் புதிய கட்சிக்கு ஆதரவளிக்கத் தயார்: சுரேஸ்

Suresh-Premachandran-720x450.jpg

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்கு தீர்வுதரும் கட்சியொன்றை உருவாக்கினால் தாம் அவருடன் இணைந்து செயற்படத் தயார் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், வடக்கு முதல்வர் புதியதோர் கட்சியை தொடங்க இருக்கிறாரா அல்லது கொள்கையை ஏற்றுக் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க இருக்கிறாரா என்பது தெளிவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”வடக்கு மாகாண முதலமைச்சர் தனது கேள்வி பதிலில் தமிழ் மக்கள் விரும்பும் பட்சத்தில், தான் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார். அதுவொரு கட்சியினூடாக வருவதனையும் விட ஒரு ஐக்கிய முன்னணியினூடாகவோ வருவதென்ற அடிப்படையில் அவரது கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது.

அவ்வாறானதொரு சூழலில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை, உரிமைகளை வெற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் எமக்கு ஒரு இறுக்கமான, கொள்கை மேல் பற்றுக்கொண்ட அமைப்பு தேவை. ஏற்கனவே தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பும் மக்கள் கொடுத்த ஆணையிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றன. அதன் காரணமாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர்கள் பலத்த அடி வாங்கியிருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான வாக்குகளை அவர்கள் இழந்தும் இருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்கள் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவர்களது உரிமைகளையும், அபிலாசைகளையும் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த கட்சியொன்று முக்கியம்.

அவ்வாறானதொரு கட்சியை முதல்வர் உருவாக்கும் பட்சத்தில் அதற்கு நாம் ஆதரவளிப்போம்” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/?p=658177-வடக்கு-முதல்வரின்-புதிய-கட்சிக்கு-ஆதரவளிக்கத்-தயார்:-சுரேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.