Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது­மக்­களின் காணி­ வி­டு­விப்பு தொடர்­பாக விரை­வான அவ­தானம் தேவை

Featured Replies

பொது­மக்­களின் காணி­ வி­டு­விப்பு தொடர்­பாக விரை­வான அவ­தானம் தேவை

 

கடந்த மோதல் கால சூழலில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விடு­வித்து அவற்றை மீண்டும் மக்­க­ளி­டமே பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு பல்­வேறு வழி­க­ளிலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலையில் காணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்டு வரு­வதை காண­மு­டி­கின்­றது. மக்கள் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி வடக்கு, கிழக்கில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்ற நிலையில் அந்த மக்கள் விரக்­த­ியின் விளிம்­பிற்கே சென்­று­விட்­டனர்.

இந்த சூழலில் தற்­போது வலி­. வ­டக்கு, கட்­டுவன், மயி­லிட்டி மேற்குப் பகு­தியில் 683 ஏக்கர் பொது­மக்­களின் காணிகள் அர­சாங்­கத்­தினால் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. மயி­லிட்டி மேற்­குப்­ப­கு­தியில் 240 , 246, 247 ஆகிய கிரா­ம­சே­வகர் பிரி­வு­க­ளி­லேயே இவ்­வாறு 683 ஏக்கர் பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மன்றி கடந்த காலம் முழு­வதும் பொது போக்­கு­வ­ரத்து நேரத்­திற்கு மட்­டுமே திறக்­கப்­பட்­டி­ருந்த பொன்­னாலை, பருத்­தித்­துறை வீதி கடந்த 13 ஆம்­தி­கதி முதல் காலை 6 மணி­யி­லி­ருந்து மாலை 6 மணி­வரை திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் இந்த மக்­களின் பல்­வேறு போராட்­டங்கள், நீண்­டநாள் கோரிக்­கைகள் மற்றும் தொடர்ச்­சி­யான விரக்தி நிலைக்கு அப்பால் தற்­போது வடக்கில் 683 ஏக்கர் காணி கள் மீண்டும் பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளமை மிக முக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது.

இன்னும் வடக்கு, கிழக்கில் பல்­வேறு பகு­தி­களில் யுத்­த ­காலத்தில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் விடு­விக்­கப்­பட­வேண்­டி­யுள்­ளன. முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மற்றும் யாழ். மாவட்­டத்தின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் பூந­கரி, இர­ணை­மடு பகு­தி­க­ளிலும் இன்னும் பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட­வேண்­டி­யுள்­ளன. அத்­துடன் வலி. வடக்­குப்­ப­கு­தி­யிலும் மேலும் பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை உள்­ளது. அது­மட்­டு­மன்றி கேப்­பாப்­பு­லவு பகு­தி­யிலும் இதற்கு முன்னர் பல ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்ள போதிலும் இன்னும் அங்கு காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன.

அதே­போன்று, வட­மா­கா­ணத்தின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் பொது­மக்­களின் பல ஏக்கர் காணிகள் பாது­காப்பு தரப்பு வசம் உள்­ளன. இவற்றை விரைந்து விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் தனது அமைச்சு அதி­கா­ரத்­திற்­குட்­பட்டு இவ்­வாறு காணி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறார். எனினும் இன்னும் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டிய நிலைமை நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதே­போன்று புதி­தாக காணி அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற கயந்த கரு­ணா­தி­லக்­கவும் வடக்கு, கிழக்கில் பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­வித்­தி­ருந்தார்.

அந்­த­வ­கையில் யுத்­த­கா­லத்­தின்­போது பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் விரை­வாக விடு­விக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்த விட­யத்தில் தொடர்ந்து தாம­தித்­துக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டாது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் பொது­மக்­களின் காணிகள் விரை­வாக விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் அவ்­வப்­போது சில இடங்­களில் ஒரு­சில குறிப்­பி­டத்­தக்க அளவில் காணிகள் விடு­விக்­கப்­பட்ட போதிலும் மக்­களின் முழு­மை­யான காணிகள் விடு­விக்­கப்­ப­டாத சூழல் இன்னும் தொட­ரு­கின்­றமை துர­திர்ஷ்­டவ­ச­மா­ன­தாகும். வடக்கு, கிழக்கு மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமது காணி என்­பது அவர்­களின் கலா­சா­ரத்­துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்­டது. விவ­சா­யத்தை விரும்பி முன்­னெ­டுக்கும் வடக்கு, கிழக்கு மக்கள் தமது காணிகள் விட­யத்தில் மிகவும் உணர்­வு­பூர்­வ­மான நிலை­யி­லேயே இருக்கின்­றனர். இந்த நிலையில் இவ்­வாறு தமது காணிகள் தொடர்பில் மிகவும் உணர்­வான நிலையில் இருக்கும் அந்த மக்­களின் சொந்த காணி­களை விடு­விக்­காமல் இருப்­பது மிகவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மான நிலை­மை­யாகும்.

விசே­ட­மாக காணி அமைச்சும் பாது­காப்புத் தரப்பும் இணைந்து பொது­மக்­களின் விடு­விக்­கப்­பட முடி­யு­மான காணி­களை விடு­விப்­ப­தற்­கான ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்டும். அதா­வது பொது­மக்­களின் எத்­தனை ஏக்கர் காணிகள் பாது­காப்பு தரப்­பி­ன­ரிடம் இருக்­கின்­றன என்­பது தொடர்­பான ஒரு வரை­படம் முதலில் தயா­ரிக்­கப்­ப­ட­வேண்டும். அந்த வரை­ப­டத்தின் ஊடாக பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யிலும் வடக்கு, கிழக்கு மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்­பான அழுத்­தங்கள் அடிக்­கடி பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக இது­வரை நிறை­வேற்­றப்­பட்ட அனைத்துப் பிரே­ர­ணை­க­ளிலும் வடக்கு, கிழக்கு மக்­களின் காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஏற்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அது­மட்­டு­மன்றி ஒவ்­வொரு வரு­டமும் நடை­பெறும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரி­மை­பே­ர­வையின் கூட்­டத்­தொ­டர்­களில் இலங்கை தொடர்­பான அமர்­வுகள் நடை­பெ­றும்­போது உரை­யாற்­று­கின்ற சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் வடக்கு, கிழக்கில் காணி­களை விடு­விக்க உட­ன­டி­யாக வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்தி வரு­வதை காண்­கின்றோம்.

அந்­த­வ­கையில் சர்­வ­தேச சமூ­கத்தின் இலங்கை தொடர்­பான பார்­வையின் இந்த காணி விடு­விப்பு விவ­காரம் முக்­கிய இடத்தைப் பிடித்­தி­ருப்­பதை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். எனவே தொடர்ந்து இவ்­வாறு பொது­மக்­களின் காணி­களை தனது பிடிக்குள் அர­சாங்கம் வைத்­தி­ருக்க முனை­வது சாத­க­மான நிலை­மையை தோற்­று­விக்­காது என்­பதை அர­சாங்கம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அண்­மையில் இந்த காணி விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த இலங்­கை­யி­லுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் அலு­வ­ல­கத்தின் முன்னாள் நிரந்­தர வதி­வி­டப்­பி­ர­தி­நி­தி­யொ­ருவர் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் விரைந்து விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்று திட்­ட­வட்­ட­மாக வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அதே­போன்று, பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக விடு­விக்­கப்­ப­டவே முடி­யாது என்ற நிலையில் இருக்­கின்ற காணி­க­ளுக்கு பொருத்­த­மான முறை­யி­லான நட்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் ஐ.நா.வின் குறித்த பிர­தி­நிதி சுட்­டிக்­காட்­ட­ியி­ருந்தார். அதன்­படி அர­சாங்கம் இந்த விட­யங்­களை மிக முக்­கி­ய­மாக கவ­னத்தில் கொண்டு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்­களின் பிர­தி­நி­தி­களும் அப்­பாவி மக்­களின் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் தொடர்ச்­சி­யாக குரல்­கொ­டுத்து வரு­கின்­றனர். விசே­ட­மாக பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கின்ற தமிழ் பேசும் மக்­களின் பிர­தி­நி­திகள் அப்­பாவி மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்பில் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஆனால், அர­சாங்­கத்தின் இது­தொ­டர்­பான அக்­க­றை­யா­னது மிகவும் மந்­த­க­தி­யி­லேயே இருக்­கின்­றது.

வடக்கு, கிழக்கில் இடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள் குடி­யேற்­றத்­திற்கு பொறுப்­பாக செயற்­ப­டு­கின்ற மீள் குடி­யேற்ற மற்றும் புனர்­வாழ்வு, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் டி.எம். சுவா­மிநாதன் எந்த­ளவு தூரம் நட­வ­டிக்­கை­களை எடுத்­தாலும் காணி அமைச்சும் இது தொடர்பில் அக்­கறை செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்­று­வதில் அந்த மக்­களின் சொந்­தக்­கா­ணி­களை மீள வழங்­கு­வதும் மீள வழங்கும் செயற்­பாடும் முக்­கிய பங்கை ஆற்றும் என்­பதை அர­சாங்கம் மனதில் கொள்­ள­ வேண்டும்.

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமது சொந்தக் காணி­களை மீளப்­பெ­று­வதை மிகப்­பெ­ரி­ய­தொரு அடை­வு­ மட்­ட­மாக பார்க்­கின்­றனர். எனவே, பாதிக்­கப்­பட்ட மக்­களின் இந்த உணர்வுசார்ந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் ஆழமான வகையில் புரிந்துகொள்வதற்கு முயற்சிக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அந்த மக்களின் உரிமையை புறக்கணிப்பதற்கு யாரும் முயற்சிக்கக்கூடாது.

தற்போது வலி. வடக்கு பிரதேசத்தில் 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். அதே போன்று இதற்கு முன்னர் மயிலிட்டி மீன்பிடித்துறைமுகமும் விடுவிக்கப்பட்டிருந்தது. எனவே, இதேபோன்று வடக்கு, கிழக்கில் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்புத் தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விரைந்து விடுவிக்கப்படவேண்டும்.

இது தொடர்பில் அரசாங்கம் சர்வதேச அவதானத்தையும் கருத்தில் கொண்டு பொதுமக்களின் உரிமை குறித்து சிந்தித்து அவர்களின் காணிகளை மீள வழங்க வேண்டி­யதன் அவசியத்தை புரிந்து விரைவாக அப்பாவி மக்களின் சொந்தக்காணிகளை மீண்டும் அவர்களிடமே கொடுத்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை மிகவும் திட்டவட்டமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-17#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.