Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர்

Featured Replies

விசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர்

 

ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி தவிர்ந்த கல்வி அமைச்சின் பொறுப்புக்கள் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

thumb_fafafsf.jpg

இதனையடுத்து முதலமைச்சர் மாகாண கல்வி அமைச்சின் பொறுப்புக்களை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையக விசாரணைகள் மற்றும் ஊவா மாகாண ஆளுனரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை, ஆசிரிய தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், பதுளைப் பொலிசாரின் விசாரணைகள் ஆகியன நிறைவடையும் முன்பு மீளவும் கல்வி அமைச்சின் பொறுப்புக்கள் மாகாண முதலமைச்சரிடம் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவ் விசாரணைகள் பக்கச் சார்பின்றி நடாத்தப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு நியாயமான தீர்வு வழங்கப்படல் வேண்டுமென்பதில் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து வந்த கல்வி அமைச்சு ஜனாதிபதியினால் பறிக்கப்பட்டது. 

ஆனால் விசாரணை அறிக்கைகள் வெளியிடப்படும் முன்பே மாகாண கல்வி அமைச்சு மீண்டும் முதலமைச்சரிடமே வழங்கப்பட்டிருக்கின்றது.

மாகாண கல்வி அமைச்சு பறிக்கப்பட்ட பின்னர் முஸ்லீம் தவிர்ந்த  தமிழ்க்கல்வி அமைச்சின் பொறுப்பு மாகாண ஆளுனர் ஊடாக ஜனாதிபதியினால் செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண கல்வி அமைச்சு மாகாண முதலமைச்சர் பொறுப்பில் மீண்டும் வழங்கப்பட்டதானது கவலையைத் தருகின்றதென்றும் மீண்டும் தான் பலிவாங்கப்படலாமென்றும் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானி ஊடகங்களுக்கு அச்சம் தெரிவித்துள்ளார்.

badulla-2.jpg

இது குறித்து ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் வினவிய போது,

“ஊவா மாகாணத்தில் தமிழ்க்கல்விக்கென்று பொறுப்பாக நான் மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக இருந்து வருகின்றேன். எனது இவ் அமைச்சு விடயத்தில் வேறு எவரும் தலையிட முடியாது. மாகாண முதலமைச்சரும் தலையிட முடியாது.

எனது ஒப்புதலுக்கேற்ப ஜனாதிபதி, ஆளுனர், இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மட்டுமே எனது பொறுப்பிலுள்ள அமைச்சுக்களில் தலையிட முடியும்.

ஊவா மாகாணத்தில் தமிழ் மற்றும் சிங்களம் என்ற வகையில் இரு கல்வி அமைச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆகையினால் பலிவாங்கப்படும் நிலை ஏற்படுமோவென்று எவரும் அஞ்சத் தேவையில்லை.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரைப் பொறுத்தவரையில் அவர் 1000 குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டேயிருப்பார். இவைகள் எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

முதலமைச்சருக்கும், அதிபருக்குமிடையிலான விவகாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

இது விடயமாக அதிபர் கருத்துத் தெரிவித்து வருவது நீதமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும். தொடர்ந்தும் அவர் அதனையே செய்து வருகின்றார்.

வழக்குத் தீர்ப்பு எவ்வகையில் அமையுமோ எனக்குத் தெரியாது. தீர்ப்பு வெளிவந்ததும் பாரபட்சமின்றி நான் நடவடிக்கைகளை எடுப்பேன்.

பண்டாரவளை பிரதேச சபை தலைவர், செயலாளர் தெரிவில் எனக்கும் முதலமைச்சருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது. எமது சமூகத்திற்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எச்சந்தர்ப்பத்திலும் தயங்கமாட்டேன். 

அது போன்ற விடயங்களில் தான் முதலமைச்சருக்கும், எனக்கும் அடிக்கடி முறுகல் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. பதுளை எம்.பி. வடிவேல் சுரேஸ் மேற்படி வித்தியாலய விவகாரம் குறித்து குரல் கொடுத்து முதலமைச்சரை எதிர்த்து தேர்தலை எதிர்கொண்டார். ஆனால். தேர்தல் முடிவில் முதலமைச்சரை முன்னிலைப்படுத்திய கட்சியினருடன் ஐ.தே.க. இணைந்து பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றில் ஆட்சி அமைத்துள்ளது. 

வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு முதலமைச்சரை எதிர்க்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முதலமைச்சரின் உதவி தேவையென்ற நிலையிலேயே வடிவேல் சுரேஸ்  உள்ளார். இத்தகைய கேவலமான அரசியலே மேற்கொள்ளப்படுகின்றது” என்றார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிடம் வினவியபோது, 

“ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு பகடைக்காயாகவே மாறியுள்ளது. ஊவா மாகாண சபையின் ஆரம்பக்கட்டத்தில் தற்போதைய மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் இருந்தார். அதையடுத்து தமிழ்க் கல்வி அமைச்சின் கண்காணிப்பு அமைச்சராக கே. வேலாயுதம் இருந்தார். பின்னர் முதலமைச்சர் வசம் தமிழ்க்கல்வி அமைச்சு இருந்து வந்தது.

மாகாண சபையின் இறுதிக் கட்டத்தில் தற்போதைய எம்.பி.யான வடிவேல் சுரேஸ் இருந்து வந்தார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் விவகாரத்தையடுத்து கல்வி அமைச்சு மாகாண முதலமைச்சரிடமிருந்து பறிக்கப்பட்டது. இவ் விவகாரம் நீதிமன்றம் மட்டும் சென்றுள்ளதால் மாகாண முதலமைச்சரின் பொறுப்பிலிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்பட்டது. அத்துடன்  ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு செந்தில் தொண்டமானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற வழக்கு விசாரணைகள் மற்றும் ஏனைய தரப்பு விசாரணைகள் நிறைவுறும் முன்பே மீளவும் மாகாண முதலமைச்சரிடம் தமிழ்க்கல்வி உட்பட கல்வி அமைச்சு ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வழக்குகள் மற்றும் விசாரணைகள் முடியுமுன்பு கல்வி அமைச்சு முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டமையானது திருப்தியற்ற செயற்பாடாகும். எது எப்படியிருந்த போதிலும் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய விவகாரத்தில் முதலமைச்சர் தலையீடு செய்வது கூடாது” என்றார்.

எமது செய்தியாளர் மேற்படி விடயம் குறித்து அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் ஆகியோருடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் பயன்கிடைக்கவில்லை.

http://www.virakesari.lk/article/32596

  • தொடங்கியவர்

ஊவா மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு மீளவும் கல்வி அமைச்சு வழங்­கப்­பட்­டமை அநீதி

05-45cc2d86864bab495a53fc85cb0d847ff933427f.jpg

 

(எம்.சி.நஜி­முதீன், இரா­ஜ­துரை ஹஷான், பதுளை நிருபர்)
மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும்; அமைச்­சர்கள், எம்.பி.க்கள் கோரிக்கை
ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தஸ­நா­யக்­க­விடம் கல்வி அமைச்சு மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளமை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நட­வ­டிக்­கை­யா கும். எனவே இந்த முடி­வினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீள் பரி­சீ­லனை செய்­ய­வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.   

அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், வே.இரா­தா­கி­ருஷ்ணன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ. அர­விந்த குமார், மற்றும் கல்வி சமூ­கத்தை சேர்ந்த அமைப்­பினர் இக்­கோ­ரிக்­கை­யினை முன்­வைத்­துள்­ள­துடன் கடும் கண்­ட­னத்­தையும் தெரி­வித்­துள்­ளனர்.  

ஊவா­மா­கா­ணத்தின் தமிழ்க்­கல்வி தவிர்ந்த கல்வி அமைச்சின் பொறுப்­புக்கள் ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­விற்­க­மைய,மாகாண முத­ல­மைச்சர் சாம­ர­சம்பத் தச­நா­யக்­க­விடம் மீண்டும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து,முத­ல­மைச்சர் மாகா­ண­கல்வி அமைச்சின் பொறுப்­புக்­களை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக ஏற்­றுள்ளார்.

பது­ளை­தமிழ் மகளிர் மகா­வித்­தி­யா­லய அதிபர் ஆர். பவா­னிக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்­ட­வி­வ­காரம் குறித்து, மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை மற்றும் ஊவா மாகாண ஆளு­ன­ரினால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ர­ணைக்­கு­ழுவின் விசா­ரணை ஆசி­ரிய தொழிற்­சங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­வி­சா­ர­ணைகள், பதுளைப் பொலி­சாரின் விசா­ர­ணைகள் ஆகி­யன நிறை­வ­டையும் முன்பே மீளவும் கல்வி அமைச்சின் பொறுப்­புக்கள் மாகாண முத­ல­மைச்­ச­ரிடம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவ் விசா­ர­ணைகள் பக்கச் சார்­பின்றி நடாத்­தப்­பட்டு,பாதிக்­கப்­பட்ட வருக்­கு­நி­யா­ய­மான தீர்­வு­வ­ழங்­கப்­படல் வேண்டும் என்­ப­தற்­காக , முத­ல­மைச்சர் பொறுப்­பி­லி­ருந்து வந்­த­கல்­வி­அ­மைச்சு, ஜனா­தி­ப­தி­யினால் மீளப்­பெ­றப்­பட்­டி­ருந்­தது. ஆனால்,விசா­ரணை அறிக்­கைகள் வெளி­யி­டப்­படும் முன்பே,மாகா­ண­கல்வி அமைச்­சு­மீண்டும் முத­ல­மைச்­ச­ரி­டமே வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

மாகா­ண­கல்­வி­அ­மைச்சு பறிக்­கப்­பட்­ட­பின்னர், தமிழ்க் கல்வி அமைச்சின் பொறுப்­பு­மா­காண ஆளுனர் ஊடாக, ஜனா­தி­ப­தி­யினால் செந்தில் தொண்­ட­மா­னுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

மாகாண கல்வி அமைச்சு மாகாண முத­ல­மைச்சர் பொறுப்பில் மீண்டும் வழங்­கப்­பட்­ட­மை­யா­னது கவ­லையைத் தரு­கின்­ற­தென்றும், மீண்டும் தான் பழி­வாங்­கப்­ப­ட­லா­மென்றும் பதுளை தமிழ் மகளிர் மகா­வித்­தி­யா­லய அதிபர் ஆர். பவானி அச்சம் தெரி­வித்­துள்ளார்.

முத­ல­மைச்சர் மீளவும் கல்வி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டமை குறித்து தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணே­ச­னிடம் கேட்­ட­போது,

ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்­க­வுக்கு மீண்டும் ஊவா மாகாண கல்­வி­ய­மைச்சர் பதவி வழங்­கப்­பட்­டமை தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்டும். ஆகவே ஜனா­தி­பதி நாடு திரும்­பி­ய­வுடன் அது தொடர்பில் அவரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதிபர் ஆர்.பவா­னியை கடந்த ஜன­வரி மாதம் ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தஸ­நா­யக்க முழந்­தா­ளிடச் செய்தார். அதனைத் தொடர்ந்து பாட­சாலைச் சமூகம் உட்­பட நாடு தழு­விய ரீதியில் எதிர்ப்­ப­லைகள் ஓங்கி நின்­றன. அதை­ய­டுத்து முத­ல­மைச்­ச­ரி­ட­மி­ருந்து மாகாண கல்­வி­ய­மைச்சு பறிக்­கப்­பட்­டது.

மேலும் குறித்த சம்­பவம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட அதிபர் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­துள்ளார். அவ்­வி­சா­ரணை இன்னும் நிறை­வுக்கு வர­வில்லை. அத்­துடன் நீதி­மன்­றத்­திலும் விசா­ரணை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. இவ்­வா­றான நிலையில் ஊவா மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு மீண்டும் கல்­வி­ய­மைச்சர் பதவி வழங்­கப்­பட்­ட­மையை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஆகவே குறித்த நிய­ம­னத்­தினால் கல்விப் புலத்தில் மீண்டும் எதிர்ப்­ப­லைகள் மேலெ­ழுந்­துள்­ளன. எனவே சாமர சம்பத் தச­நா­யக்­க­வுக்கு மீண்டும் மாகாண கல்­வி­ய­மைச்சு வழங்­கப்­பட்­டமை குறித்து மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்டும் என ஜனா­தி­ப­தியைக் கேட்­டுக்­கொள்­கிறேன். அத்­துடன் பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்பின் அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக லண்­ட­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­ய­வுடன் அவரைச் சந்­தித்து இவ்­வி­வ­காரம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­துவேன் என்று கூறினார்.

இரா­ஜாங்க அமைச்சர்

 இரா­தா­கி­ருஷ்ணன்

ஊவா மாகாண தமிழ் மகளிர் பாட­சாலை அதி­பரை மண்­டி­யிட வைத்த முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்­க­விற்கு மீண்டும் மாகாண கல்­வி­ய­மைச்சு பத­வியை வழங்­கி­யுள்­ள­மை­யா­னது மிகவும் வன்­மை­யாக கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும் இவ்­வி­டயம் குறித்து ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்டு வருவேன் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

பதுளை தமிழ் மகளிர் பாட­சா­லையின் அதி­பரை முழந்­தா­ளிட வைத்து அவ­ம­தித்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அம்­மா­கா­ணத்தின் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான விசா­ரணை மனித உரிமை ஆணைக்­கு­ழு­விலும் பதுளை நீதி­மன்­றத்­திலும் இடம் பெற்று வரு­கின்­றன. இக்­குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து இவர் முழு­மை­யா­க­வி­டு­தலை பெற­வில்லை.

இவ­ருக்கு எதி­ராக விசா­ர­ணைகள் இடம் பெற்றுக் கொண்டு இருக்கும் போது மீண்டும் ஊவா மாகா­ணத்தின் கல்­வி­ய­மைச்சின் பொறுப்­புக்­களை இவ­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ள­மை­யா­னது விசா­ர­ணை­களை திசை­தி­ருப்­பு­வ­தோடு, பாதிக்­கப்­பட்ட அதி­பரின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூ­றுணை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் அமையும்.

பாதிக்­கப்­பட்ட அதி­ப­ருக்கு இன்­று­வரை சரி­யான நியாயம் கிடைக்­க­வில்லை. சம்­பவம் இடம் பெற்ற போது மாத்­திரம் இவ்­வி­டயம் தொடர்பில் அர­சாங்கம் பாரிய அக்­கறை செலுத்­தி­யது. ஆனால் தற்­போது இவ்­வி­டயம் தொடர்பில் அர­சாங்கம் உரிய அக்­க­றையை காண்­பிக்­க­வில்லை.ஊவா மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு சார்­பா­கவே அர­சாங்கம் செயற்­பட்டு வந்­துள்­ள­மை­யா­னது பாதிக்­கப்­பட்ட சிறு­பான்மை இன அதி­ப­ருக்கு மேலும் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இந்த நிய­ம­னத்தின் கார­ண­மாக நிச்­சயம் அதி­ப­ருக்கு பாதிப்­புக்கள் ஏற்­படும். எனவே இவ்­வி­டயம் தொடர்பில் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்­ச­ரிடம் கலந்­து­ரை­யா­டிய பின்னர் இவ்­வி­டயம் தொடர்பில் நிரந்­தர தீர்­வினை பெறும் முக­மாக ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்டு செல்வேன் என்று தெரி­வித்தார்.

செந்தில் தொண்­டமான் கருத்து,

இது குறித்து,ஊவா­மா­காண தமிழ்க்­கல்வி அமைச்சர் செந்தில் தொண்­ட­மா­னிடம் வின­வி­ய­போது, ஊவா­மா­கா­ணத்தில் தமிழ்க்­கல்­விக்­கென்று பொறுப்­பாக நான் மாகாண தமிழ்க் கல்வி அமைச்­ச­ராக இருந்­து­வ­ரு­கின்றேன். எனது இவ் அமைச்­சு­வி­ட­யத்தில் வேறு எவரும் தலை­யி­டு­வதை நான் விரும்­ப­வில்லை. மாகாண முத­ல­மைச்சர் என்ற வகையில் அவர் தலை­யி­டு­வ­தையும் நான் விரும்­ப­வில்லை.

ஜனா­தி­பதி,ஆளுனர், இ.தொ.கா. பொதுச்­செ­ய­லாளர் ஆறு­முகன் தொண்­டமான் ஆகியோர் மட்­டுமே,என­து­பொ­றுப்­பி­லுள்ள அமைச்­சுக்­களில் தலை­யி­ட­மு­டியும்.

ஊவா மாகா­ணத்தில் தமிழ் மற்றும் சிங்­களம் என்ற வகையில் இரு கல்வி அமைச்­சுக்கள் இருந்­து­வ­ரு­கின்­றன. பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதி­பரைப் பொறுத்­த­வ­ரையில், அவர் ஆயிரம் குற்­றச்­சாட்­டுக்­களை முத­ல­மைச்சர் மீது சுமத்திக் கொண்­டே­யி­ருப்பார். இவைகள் எல்­லா­வற்­றுக்கும் பதில் அளிக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை. முத­ல­மைச்­ச­ருக்கும், அதி­ப­ருக்­கு­மி­டை­யி­லான விவ­காரம் நீதி­மன்­றத்தில் உள்­ளது. இதனால் இவ்­வி­ட­யத்தில் பதி­ல­ளிக்கத் தேவை­யில்லை.

அவ்­வாறு செயற்­பட்டால் அது நீத­மன்­றத்­தையே அவ­ம­திக்கும் செய­லாகும். எனினும் மேற்­படி அதிபர் தொடர்ந்தும், அத­னையே செய்து வரு­கின்றார். வழக்குத் தீர்ப்பு எவ்­வ­கையில் அமை­யுமோ அதன்­பி­ர­காரம் பார­பட்­ச­மின்­றிநான் நட­வ­டிக்­கை­களை எடுப்பேன்.

பண்­டா­ர­வளை பிர­தேச சபை தலைவர், செய­லாளர் தெரிவில் எனக்கும் முத­ல­மைச்­ச­ருக்­கு­மி­டையில் முறுகல் நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. எமது சமூ­கத்­திற்­கான உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு, எச்­சந்­தர்ப்­பத்­திலும், தயங்­க­மாட்டேன். அது­போன்ற விட­யங்­களில் தான் முத­ல­மைச்­ச­ருக்கும், எனக்கும் அடிக்­க­டி­மு­றுகல் நிலை­உ­ரு­வாகிக் கொண்­டி­ருக்­கின்­றது.

பதுளை எம்.பி. வடிவேல் சுரேஸ் மேற்­படி வித்­தி­யா­லய விவ­காரம் குறித்து குரல் கொடுத்து, முத­ல­மைச்­சரை எதிர்த்து தேர்­தலை எதிர்­கொண்டார். ஆனால். தேர்தல் முடிவில், முத­ல­மைச்­சரை முன்­னி­லைப்­ப­டுத்­திய கட்­சி­யி­ன­ருடன் ஐ.தே.க. இணைந்து பதுளை மாவட்­டத்தில் வெலி­மடை, எல்ல, சொர்­ணா­தொட்ட போன்ற உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் சில­வற்றில் ஆட்சி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­மு­த­ல­மைச்­ச­ரை­எ­திர்க்­க­வேண்டும். உள்­ளு­ராட்­சி­மன்­றங்­களில் ஆட்­சி­அ­மைக்க முத­ல­மைச்­சரின் உத­வி­தே­வை­யென்ற நிலை­யி­லேயே,வடிவேல் சுரேஸ் எம்.பி. உள்ளார் என்றார்.

அர­விந்­த­குமார்

அதிபர் விவ­காரம் குறித்து பது­ளை­மா­வட்­ட­பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் அ. அர­விந்­த­கு­மா­ரிடம் வின­வி­ய­போது, ஊவா­மா­காண தமிழ்க்­கல்வி அமைச்சு பக­டைக்­கா­யா­கவே மாறி­யுள்­ளது. ஊவா மாகாண சபையின் ஆரம்­பக்­கட்­டத்தில், கல்வி அமைச்­ச­ராக தற்­போ­தைய மாகாண சபை உறுப்­பினர் எம். சச்­சி­தா­னந்தன் இருந்­து­வந்­துள்ளார். அதை­ய­டுத்து தமிழ்க் கல்­வி­அ­மைச்சின் கண்­கா­ணிப்பு அமைச்­ச­ராக கே. வேலா­யுதம் பதவி வகித்தார். பின்னர் முத­ல­மைச்சர் வசம் தமிழ்க்­கல்வி அமைச்சு இருந்­து­வந்­தது.

மாகாண சபையின் இறுதிக் கட்­டத்தில் தற்­போ­தைய எம்.பி.யான வடிவேல் சுரேஸ் கல்வி அமைச்சராக இருந்து வந்தார்.

பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலய அதிபர் விவகாரத்தையடுத்துகல்வி அமைச்சு,மாகாண முதலமைச்சரிடமிருந்து பறிக்கப்பட்டது. இவ் அதிபர் விவகாரம்,நீதிமன்றம் வரை சென்றுள்ளதால்,மாகாணமுதலமைச்சரின் பொறுப்பிலிருந்துகல்விஅமைச்சு பறிக்கப்பட்டது. அத்துடன்,இவ் விவகாரத்துடன் ஊவாமாகாணதமிழ்க் கல்வி அமைச்சு செந்தில் தொண்டமானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற வழக்கு விசாரணைகள் மற்றும் ஏனைய தரப்புவிசாரணைகள் நிறைவுறும் முன்பே மீளவும் மாகாண முதலமைச்சரிடம் தமிழ்க்கல்வி உட்படகல்வி அமைச்சு ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊவாமாகாண தமிழ் கல்வி அமைச்சிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வழக்குகள் மற்றும் விசாரணைகள் முடியுமுன்பு, கல்வி அமைச்சு முதலமைச்சரி்டம் ஒப்படைக்கப்பட்டமையானது திருப்தியற்ற செயற்பாடாகும். எது எப்படியிருந்தபோதிலும், பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலய விவகாரத்தில் முதலமைச்சர் தலையீடு செய்வது கூடாது என்றார்.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கமும் முதலமைச்சருக்கு மீளவும் கல்வி அமைச்சு வழங்கப்பட்டமைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.