Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனை பாதுகாப்போம் ஐக்கிய தேசியக் கட்சி திட்டவட்டமாக அறிவிப்பு

Featured Replies

சம்பந்தனை பாதுகாப்போம் ஐக்கிய தேசியக் கட்சி திட்டவட்டமாக அறிவிப்பு

02-bd2b4b752659e7cf34ae37686d1d4f0e111f1a20.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்) 

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக் கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் அந்த சந்தர்ப்பத் தில் இரா.சம்பந்தனை ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக பாதுகாக்கும். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டதாகும். சுதந்திரக் கட்சி தொடர்ந்து  

அரசாங்கத்தில் உள்ள நிலையில் ஒரு தரப்பினரை எதிர்க்கட்சியில் இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

இதன்படி எக்காரணம் கொண்டும் அரசியல் ரீதியான சூழ்ச்சிகளுக்கும் நகைச்சுவை பாங்கான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க மாட்டோம். மேலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சியனால் கோர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் கேசரிக்கு மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இரா.சம்பந்தனை முழுமையாக பாதுகாக்கும். அதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. இந்த சந்தர்ப்பத்தில் அவரை பாதுகாப்பதில் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

அரசியல் நோக்கங்களுக்காகவே எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். ஆகவே இவ்வாறான அரசியல் சூழ்ச்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

ஆரம்பத்தில் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. எனினும் அதனை நாம் தவிடுபோடியாக்கினோம்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியின் மீது கூட்டு எதிர்க்கட்சியின் அவதானம் திரும்பியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலேயே அங்கம் வகிக்கின்றது. இதன்படி சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஒரு தரப்பினர் அரசாங்கத்திலும் இன்னும் ஒரு தரப்பு எதிர்க்கட்சியிலும் உள்ளனர். இது மிகவும் நகைச்சுவை பாங்கானது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒன்று அரசாங்கத்தில் இருக்க வேண்டும். இல்லையேல் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும். இது பாதி அரசாங்கத்தில் பாதி எதிர்க்கட்சியிலாகும். இந்த சந்தர்ப்பத்தில் எப்படி எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க முடியும். அது நியாயமற்ற செயற்பாடாகும்.

மேலும் கூட்டு எதிர்க்கட்சியினால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோர முடியாது. இந்நிலையில் சம்பந்தனை நீக்குவதற்கு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரபார்க்கின்றனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை புஸ்வானமாக மாறும்.

ஆகவே தொடர்ந்தும் எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனே இருப்பார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு அரசாங்கமும் ஐக்கிய தேசியக் கட்சியும் சம்பந்தனை முழுமையாக பாதுகாக்கும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.