Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் பதவி விலகாவிடின் சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை

Featured Replies

சம்பந்தன் பதவி விலகாவிடின் சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை

4-00033c9a5ea926ed03f602f30a74dbaba4ea5da7.jpg

 

என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்கிறார் தினேஷ்

(ரொபட் அன்டனி)

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதில் அர்த்தமில்லை. மாறாக அவராகவே  பதவி விலகுவதே சிறந்ததாக அமையும் ஆனால், சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராக செயற்படுவதற்கும் கூட்டு எதிரணி நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அதன் பாராளுமன்றக் குழுத்தலைவரும் எம்.பி.யு மான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.  

எதிர்க்கட்சித் தலைவர்

இரா. சம்பந்தன் பதவி விலகுவதற்கான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதகதியில் முன்னெடுப்பதற்கு கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் வினவியபோதே தினேஷ் குணவர்த்தன இதனைக் குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்; எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டது. ஆனால் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது அர்த்தமற்றது என்பதை நாங்கள் உணர்கின்றோம்.   

எனவே தற்போதைய நிலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக அவர் பதவி விலகுவதற்கான அழுத்தங்களை பிரயோகிப்பதே பொருத்தமானதாக அமையும். அதற்காக நாங்கள் எதிர்க்கட்சித்தலைவருக்கு எதிராக பல்வேறு வழிகளிலும் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம். அவர் பதவிவிலகும் வரை நாங்கள் அழுத்தங்களை பிரயோகிப்போம்.

எனவே அவர் தானாக பதவி விலகிக்கொள்வது பொருத்தமாக இருக்கும். இதேவேளை பாராளுமன்றத்தில் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரே நியமித்திருக்கின்றார். எனவே பெரும்பான்மை பலம் எம்மிடம் இருக்கும்போது சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டியது சபாநாயகரின் கடமையாகும் ஆனால் சபாநாயகர் அந்த கடமையை செய்யாமல் இருக்கின்றார்.

சபாநாயகர் இதுவரை இவ்வாறே எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்காமல் செயற்படுவாரானால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க கூட்டு எதிரணி தயங்காது என்பதை தெரிவிக்கின்றோம்.

பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்களின் அடிப்படையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படுகிறார். எனவே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பக்கம் பெரும்பான்மையை நிரூபிக்கின்ற தரப்பினருக்கு அந்தப் பதவியைப் பெற்றுக்கொடுக்கவேண்டியது சபாநாயகரின் கடமையாகும். அதனை சபாநாயகர் உரிய முறையில் செய்யாவிடின் அவருக்கு எதிராக செயற்படவும் நாங்கள் தயங்கமாட்டோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.