Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிர­தமர் தன்­னைத்­தானே சுய விசா­ரணை செய்ய வேண்டும்

Featured Replies

பிர­தமர் தன்­னைத்­தானே சுய விசா­ரணை செய்ய வேண்டும்

01-75a4bc514a8072a573827a7cf7f8b6834e1bc6aa.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் மாத்­திரம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெற்றி பெற் றால் போதாது. நாட்டில் வாழும் 2 கோடி மக்­களின் ஆத­ரவை பெற்று வெற்றி பெற வேண்டும். மேலும் தான் மக்­களின் ஆத­ரவை பெற்­ற­வரா என பிர­தமர் தன்­னை­த் தானே சுய விசா­ரணை செய்ய வேண்டும் என இரா­ஜாங்க அமைச்சர்  ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார். 

அத்­துடன் பிர­பா­க­ரனும் கருணா அம்­மானும் முட்டி மோதிக்­கொண்­ட­மை­யினால் விடு­தலை புலிகள் இயக்­கத்தின் மோச­டி­களும் கொலை­களும் வெளிப்­பட்­டன. அது­போன்று நாட்டை கொள்­ளை­ய­டிக்கும் திரு­டர்­களும் மோதிக்­கொள்ளும் போது பல திருட்­டுகள் வெளி­யாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக அர்­ஜூன மகேந்­தி­ரனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மித்­தது பெரும் தவ­றாகும். எனினும் பிர­தமர் ஒரு­போதும் ஊழல் மோச­டி­க­ளுக்கு உடைந்­தை­யாக மாட்டார். அர்­ஜூன மகேந்­திரன் செய்த தவ­றுக்கு பிர­தமர் குற்­ற­வா­ளி­யாக முடி­யாது.  

எனினும் மத்­திய வங்கி மோசடி தொடர்பில் உரிய விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. தற்­போது முக்­கிய குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும் மத்­திய வங்கி மோசடி விட­யத்தில் பிர­தமர் மீது குற்றம் சுமத்­து­வ­தற்கு சுதந்­திரக் கட்­சி­யினர் 16 பேருக்கு எந்­த­வொரு தகு­தியும் கிடை­யாது.

இந்த 16 பேரும் பாரிய மோச­டிக்­கார்­க­ளாகும். மத்­திய வங்கி மோச­டிக்கு நானும் எதிர்ப்பு தெரி­வித்தேன். எனினும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்தேன். என்­றாலும் தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளினால் எதி­ராக வாக்­க­ளித்தேன். இதற்கு பிர­தமர் குற்­ற­வா­ளி­யாக கருத முடி­யாது.

 நான் எப்­போதும் மக்­களின் குர­லா­கவே இருக்க வேண்டும் என விரும்­பு­கின்றேன். இதன்­படி நான் ஒரு­போதும் ஊழல் மோச­டிக்­கார்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­பட மாட்டேன்.

அத்­துடன் பிர­பா­க­ரனும் கருணா அம்­மானும் முட்டி மோதிக்­கொண்­ட­மை­யினால் விடு­தலை புலிகள் இயக்­கத்தின் மோச­டி­களும் கொலை­களும் வெளிப்­பட்­டன. அது போன்று நாட்டை கொள்­ளை­ய­டிக்கும் திரு­டர்­களும் மோதிக்­கொள்ளும் போது பல திருட்­டுகள் வெளி­யாகும்.

 தற்­போது திரு­டர்கள் திரு­டர்கள் மோதிக்­கொள்­கின்­றனர். இதன்­பி­ர­கா­ரமே மத்­திய வங்கி மோசடி வெளியே வந்­தது. அது­போன்று திரு­டர்கள் மோதிக்­கொள்ளும் போதுதான் இன்னும் பல மோச­டிகள் வெளி­யாகி ஊழல் மோசடி இல்­லாத நாடு தோற்றம் பெறும்.

பிர­தமர் எப்­போதும் தேர்­தலில் தோற்­றது கிடை­யாது. அதிக விருப்பு வாக்­கு­களை பெற்று பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கி­யுள்ளார். எனினும் நாட்டு மக்கள் மத்­தியில் பிர­தமர் மீது ஆத­ரவு குறை­வாகும். ஆகவே கட்­சியின் தலை­மைத்­து­வத்தை பிர­தமர் இளைய தலை­மு­றைக்கு வழங்க வேண்டும்.

ஏனெனில் நம்­பிக்­கை­யில்லா பிரேரணையில் மாத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால் போதாது. நாட்டில் வாழும் 2 கோடி மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற வேண்டும். இதன்படி நான் மக்களின் ஆதரவை பெற்றவனா என பிரதமர் தன்னைதானே சுய விசாரணை செய்ய வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.