Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய நாளில் நிகழ்ந்தவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜூன் 12 ஆண்டின் 163ஆவது நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன

பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள்

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் (World Day Against Child Labor )

ரஷ்யா - ரஷ்ய நாள்

  • 1830 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
  • 1898 - பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1899 - ஐக்கிய அமெரிக்கா நியூ றிச்மண்டில் இடம்பெற்ற சூறாவளியில் 117 பேர் கொல்லப்பட்டனர்..
  • 1964 - தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
  • 1987 - மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் மன்னர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.
  • 1991 - போரிஸ் எல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
  • 1991 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 2003 - தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.
  • 2005 - அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில் உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.
  • 2006 - கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.
  • 2006 - மட்டக்களப்பில் புலிகளின் அரசியற்துறை அலுவலர்களில் ஒருவரான ரமணிதரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 2006 - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவித் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

Edited by வானவில்

  • Replies 107
  • Views 19.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜூன் 13 ஆண்டின் 164ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன.

  • 1900 - சீனாவில் வெளிநாட்டவருக்கு எதிரான Boxer இயக்கம் தொடங்கியது.
  • 1912 - மிஸ்ஸிசிப்பியில் கேப்டன் ஆல்பர்ட் பெர்ரி (captain Albert Berry ) வெற்றிகரமாக ஒரு விமானத்திலிருந்து வான்குடை மூலம் குதித்தார்.
  • 1993 - இந்தியா பிரித்திவி ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • கி.மு - 323மாவீரன் மகா அலெக்சாண்டர் ஆம் ஆண்டு பாபிலோனில் காலமானார்
  • 1934 - ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
  • 1948 - ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1948 - மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
  • 1983 - பயனியர் 10 புளூட்டோவைத் தாண்டிய முதலாவது விண்கப்பல்

.

Edited by வானவில்

  • தொடங்கியவர்

ஜூன்14 ஆண்டின் 165ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.

போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்

ஐக்கிய அமெரிக்கா - கொடி நாள்

ஆப்கானிஸ்தான் - அன்னையர் நாள்

உலக இரத்த வழங்கல் நாள்

உலக வலைப்பதிவர் நாள்

  • 1800 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவம் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
  • 1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.
  • 1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியின் வசமாகியது.
  • 1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1967 -சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.
  • 1982 - போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது. ஆர்ஜென்டீனா நிபந்தனை இன்றி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
  • 1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.
  • 1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ ம்பெக்கி பதவியேற்றார்.
  • 2002 - கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
  • 2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்

Edited by வானவில்

  • 1 month later...
  • தொடங்கியவர்

மன்னிக்கவும் சில தவிர்க்கமுடியாதகாரணங்களால் த்டரமுடியவில்லை, இனிமேல் தொடர்ந்து தருகிறேன் :lol: B) :lol::lol: ;)

  • தொடங்கியவர்

ஜூன் 15 கிரிகோரியன் ஆண்டின் 166ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 167ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 199 நாட்கள் உள்ளன.

டென்மார்க் - கொடி நாள் மாலாவி - விடுதலை நாள்

1752 - மின்னல் ஒரு வகை மின்னோட்டம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார். 1846 - Royal Asiatic Society of Ceylon என்ற அமைப்பின் முதலாவது சஞ்சிகை வெளிவந்தது. 1904 - நியூ யோர்க்கில் ஜெனரல் ஸ்லோகம் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1000 பேர் கொல்லப்பட்டனர். 1996 - ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200 பேர் காயமடைந்தனர். 1984 - யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கையின் கடல் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 2006 - முல்லைத்தீவில் இலங்கை விமானம் குண்டுவீசியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.1838 - ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர் இறப்பு 1849 - ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அதிபர் இறப்பு

180px-Umartahmbi.jpg

உமர் தம்பி பிறந்த நாள்

இவர் தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார்ஜூன் 15 2007 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது. (பிபிசி) ஜூன் 15 2007 - தெற்கு தாய்லாந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)

Edited by வானவில்

  • தொடங்கியவர்

ஜூன் 16 கிரிகோரியன் ஆண்டின் 167ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 168ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன

தென்னாபிரிக்கா - இளைஞர் நாள்

  • 1819 - குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.
  • 1940 - லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.
  • 1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.
  • 1964 - லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.
  • 1976 - தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1983 - யூரி அந்திரோபொவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார்.
  • 1994 - சீன விமானம் TU-154 புறப்பட்டுப் 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் மாண்டனர்.

  • தொடங்கியவர்

ஜூன் 17

கிரிகோரியன் ஆண்டின் 168ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 169ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 197 நாட்கள் உள்ளன

ஐஸ்லாந்து - தேசிய நாள்

  • 1631 - முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தனது 14வது மகப்பேறின் போது காலமானார்.
  • 1911 - செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு மரணம் அடைந்தார்.
  • 1944 - ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்தது.
  • 1954 - குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  • 2006 - மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1703 - ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தமதத்தை ஆரம்பித்தவர் பிறப்பு
  • 1942 - மொகம்மது எல்பரதேய், பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர். நோபல் பரிசு பெற்றவர் புறப்பு
  • 1973 - லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸ் வீரர் பிறப்பு
  • 1858 - ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1828)
  • 1911 - வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1886)

  • தொடங்கியவர்

ஜூன் 18

கிரிகோரியன் ஆண்டின் 169ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 170ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன

சிஷெல்ஸ் - தேசிய நாள்

  • 1429 - ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன (Battle of Patay).
  • 1812 - பிரித்தானியா மற்றும் அயர்லாந்து மீது அமெரிக்கக் காங்கிரஸ் போரை அறிவித்தது.
  • 1815 - நெப்போலியன் பிரான்சைக் கைப்பற்றும் வாட்டர்லூ (Battle of Waterloo) இறுதிப் போரில் தோல்வியடைந்தான்.
  • 1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
  • 1953 - எகிப்து குடியரசாகியது.
  • 1981 - அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 1983 - சல்லி றைட் (Sally Ride) விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.
  • 1985 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டது.
  • 2001 - நாகா கிளர்ச்சிக்காரருக்கும் இந்திய அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
  • 2004 - ஜெனீவாவின் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.