Jump to content

இன்றைய நாளில் நிகழ்ந்தவை


Recommended Posts

ஆஹா சூப்பர் தரவுகள். இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் "குட்மோர்னிங் சிறீலங்கா" என்ற நிகழ்ச்சியில் "இதே நாளில்" என்ற பகுதியில் இப்படியான தரவுகள் சொல்லுறவர்கள். அவர்கள் விளங்காத மாதிரி டக்கென வாசித்துடுவார்கள். கேட்க கடினமாக இருக்கும். ஆனால் இங்கு எப்போதும் வாசிக்கத்தக்கவாறு மிக விளக்கமாக பதிந்திருக்கிறீங்க, நன்றிகள் வானவில்.

வெண்ணிலா மெட்றோ நியூசில் சக்தியை விட சூப்பராக போடுவார்கள் :P

எனக்கல்லா ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற படுர பாடு தெரியும் <_<

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

ஏப்ரல் 9 ஆண்டின் 99ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 266 நாட்கள் உள்ளன.

1770 - கப்டன் ஜேம்ஸ் கூக் என்பவரால் பொட்னி பேய் (அவுஸ்திரேலியா) கண்டுபிடிக்கப் பட்டது

1912 - டைட்டானிக் குயீன்ஸ்டவுனில் இருந்து நியூர்க் நோக்கி கிளம்பியது

1914 - முதன் முதலாக லண்டனில் பலவண்ண திரைபடம் காட்டப்பட்டது(The World, The Flesh & the Devil)

1940 - ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனியப்படைகளால் நோர்வே மற்றும் டென்மார்க் தாக்கப்பட்டது.

1953 - வார்னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" (House of Wax) இனை வெளியிட்டது

1967 - முதல் போயிங் 737 பறப்பு.

1984 - யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் றொக்கட் தாக்குதலுக்கு உள்ளானது.

1984 - ஸ்ரீ லங்கா கஜபா றெஜிமென்ட் இராண்வ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.

1991 - ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது.

2003 - ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

Link to comment
Share on other sites

தினமும் தமிழீழத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை இங்கே பார்த்துக் கொள்ளலாம், இதையும் இங்கு பதிந்தால் நன்றாக இருக்கும்..

http://www.eelamweb.com/cgi-bin/history/to_day.cgi

Today's Highlight in Tamil Eelam History:

April 09 in Tamil Eelam's history

1958 Agreement was signed between the Sinhala Prime Minister SWRD Bandaranayake and

1958 Agreement was signed between the Sinhala Prime Minister SWRD Bandaranayake and

1958 Agreement was signed between the Sinhala Prime Minister SWRD Bandaranayake and

Link to comment
Share on other sites

ஏப்ரல் 10 ஆண்டின் 100ஆவது நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 265 நாட்கள் உள்ளன.

1658 - ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.

1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.

1919 - மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1938 - அஸ்ரியா யேர்மனியின் ஒரு மாகாணம் ஆக்கப் பட்டது

1946 2ம் உலகமகா யுத்த அழிவி பின்னர் ஜப்பானில் முதல் தேர்தல்

1972 - ஈரானில் ஏற்பட்ட 7.0ரிச்டர் பூமியதிர்ச்சியில் பெரியா மாநிலமனா பார்ஸில் 1/5 மக்கள் இறந்த்தனர்

1984 - பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1985 - யாழ்ப்பாணம் காவல் நிலையம் தாக்கப்பட்டது.

2002 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.

Link to comment
Share on other sites

ஏப்ரல் 11 ஆண்டின் 101ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 264 நாட்கள் உள்ளன.

1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.

1900 - அமரிக்கா கடற்படையில் முதன் முதலாக நீர்மூழ்கி அறிமுகப்படித்தப் பட்டது

1905 - ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.

1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.

1957 - பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.

1960 வானிலையை அறிய முதல் செயற்கைகோள் அறிவிக்கப் பட்டது(Tiros 1)

1970 - அப்போலோ 13 ஏவப்பட்டது.

1979 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.

1987 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.

1988 - Bernardo Bertolucci இயக்கிய த லாஸ்ற் எம்பரர் (The Last Emperor) திரைப்படம் 9 ஒஸ்கார் விருதுகளை வென்றது.

Link to comment
Share on other sites

ஏப்ரல் 12 ஆண்டின் 102ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 263 நாட்கள் உள்ளன.

1911 - முதல் தடவையாக தொடர்ச்சியாக லண்டனில் இருந்து பாரிஸுக்கு விமானம் பறந்தது(Pierre Prier in 3 hours 56 minutes)

1934 - அதிவேகமான காற்று வாசிங்டனில் வீசியது 231 மைல் வேகத்தில்

1945 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் (Fரன்க்லின் D. றோசெவெல்ட்), ஐக்கிய அமெரிக்காவின் 32 ஆவது அதிபர் இறந்தார்

1956 - இனவத அரசான பண்டாரநாயாக்கா அரசு ஆட்சிக்கு வந்ட்தது

1961 - யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்.

1983 - பிரித்தானியத் திரைப்படமான காந்தி (Gandhi) எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.

1996 - யாஹூ! இனது முதற் பொதுப் பங்கு வழங்கல்

Link to comment
Share on other sites

இன்றுதான் பார்த்தேன். பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன.

பாராட்டுக்கள். தொடருங்கள்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 13 ஆண்டின் 103ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.

1796 - முதன் முதலாக அமரிக்காவுக்கு யானை கொண்டு செல்லப்பட்டது. இந்தியாவிலிருந்து

1849 - ஹங்கேரி நாடு குடியரசானது.

1919 - அம்ரித்சரில் ஜூலியன் வாலாபாக் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியத் துருப்புக்கள் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.

1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.

1954 - காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.

1979 - இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1997 - டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.

2006 - கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது

Link to comment
Share on other sites

ஏப்ரல் 14 ஆண்டின் 104ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 261 நாட்கள் உள்ளன.

இன்று தமிழ் புத்தாண்டு

இன் யாழ் உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1849 - ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து சுதந்திரமுடைய நாடாகப் பிரகடனம் செய்தது.

1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார்.

1912 - டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது

1944 - மும்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலியாயினர்.

1999- யுக்கோஸ்லாவியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்த அல்பேனிய அகதிகள் மீது நேட்டோ தாக்கியது. சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் இறந்தனர்

2003 சதாம் குசைனின் சொந்த ஊரான டைகிரிட் அமரிக்கா வசமானது

இன்று யாழ் களத்தில் அணிதா தனு பிறந்த நாளை கொண்டாடுகிறார் அணிதவிற்க்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 15 ஆண்டின் 105ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 260 நாட்கள் உள்ளன.

1452 - தலை சிறந்த ஓவியர், சிற்பி, மற்றும் பொறியாளருமான லியானார்டோ டா வின்சி பிறந்த தினம்.

1793 - இங்கிலாந்தில் முதல் 5பவுண்ட்ஸ் தாள் வெளியிடப்பட்டது

1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் காலமானார்.

1892 - ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1896 - எதன்சில் நடைபெற்ர முதலாவது ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது

1912 - பிரித்தானியாவின் டைட்டானிக் கப்பல் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.

1923 - முதல் ஒலியுள்ள திரைபடம் வெளியானது

1941 - ஹெலிகாப்டர் அறிமுகமான தினம்

1955 - முதல் மக் டொனால்ட்ஸ் உணவகம் அமெரிக்காவில் திறக்கப்பட்டது.

1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

ஏப்ரல் 16 ஆண்டின் 106ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.

1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.

1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.

1917 - விளாடிமிர் லெனின் தனது அஞ்ஞாதவாசத்தின் பின்னர் பின்லாந்தில் இருந்து ரஷ்யா திரும்பினார்.

1946 - சிரியா சுதந்திரம் பெற்றது.

1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.

1972 - அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.

பிறப்புகள்

1851 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)

1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977)

1927 - பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது பாப்பரசர்

1935- சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)

1957 - பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி

Link to comment
Share on other sites

ஏப்ரல் 17 ஆண்டின் 107ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 258 நாட்கள் உள்ளன

1970 - அப்போலோ 13 விண்கப்பல் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.

2004 - இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்

1894 - ரஷ்ய அதிபர் நிகிடா க்ருஷ்சேவ் பிறந்த தினம்

1966 நடிகர் விக்ரம் பிறந்த தினம்

1972 இலங்கை க்ரிக்கெட் வீரர் முரளிதரன் பிறந்த தினம்

1975 முன்னாள் இந்திய ஜனாதிபதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் மறைந்த தினம்

2004 - சினிமா நடிகை சௌந்தர்யா மறைந்த தினம்

1983 இந்தியா முதல் முதலாக SLV-3 ராக்கெட்டைச் செலுத்திய நாள்

1790 தலை சிறைந்த விஞ்ஞானி பெஞ்சமின் ப்ராங்க்ளின் மறைந்த தினம்

1704 முதன் முதலாக அகமரிக்காவில் வெற்றிகரமாக செய்தி பத்திரிகை வெளியானது

1972 பங்களாதேஷ் குடியரசு தோன்றியது

Link to comment
Share on other sites

ஏப்ரல் 18 ஆண்டின் 108ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 257 நாட்கள் உள்ளன

ஈரான் - இராணுவ நாள்

சிம்பாப்வே - விடுதலை நாள் .

1853 ஆசியாவில் முதல் புகையிரத ஓட்டம் பம்பாய் எனப்பட்ட மும்பாயிலிருந்து தான்ன வரை 36 கி.மீ

1902 டென்மார்க் உலகத்தில் முதன்முதலாக கைரேகை மூலம் குற்றவாளிகளை கண்டறிந்தது

1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1954 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1958 - பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.

1994 மேற்கிந்திய வீரர் பிரையன் லாரா இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 375 ஓட்டங்களைப் பெற்று கரிசோபர்ஸின் சாதனையை முறியடித்தார்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 19 ஆண்டின் 109ஆவது நாளாகும். . ஆண்டு முடிவிற்கு மேலும் 256 நாட்கள் உள்ளன.

தமிழ் ஈழம் - நாட்டுப்பற்றாளர் நாள்

1971 - சியெரா லியொன் குடியரசானது.

1971 - முதலாவது விண்வெளி ஆய்வுகூடம் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1988 - அன்னை பூபதி மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணாநோன்பிருந்து இறந்தார்.

1995 - சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

1882 - சார்ள்ஸ் டார்வின் இறப்பு, பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 20 வெள்ளிக் கிழமை.ஆண்டின் 110ஆவது நாளாகும் ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன.

570 - முகமது நபி பிறந்த தினம்

1889 - அடொல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்

1920 - 7ஆவ்து ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்தது

1940 electron microscope அறிமுகமான தினம்

1968 - தென்னாபிரிக்க விமான சேவையிம் போஜிங் 707 விமான விபத்தில் 122 பேர் கொல்லப் பட்டனர்

1972 - அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.

1978 - தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1999 - அமெரிக்காவின் கொலம்பியனில் உயர் பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13மாணவர்கள் கொல்லப்பட்டு, 23பேர் படுகாயமடிந்தனர்

Link to comment
Share on other sites

இன்றுதான் பார்த்தேன். பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன.

பாராட்டுக்கள். தொடருங்கள்

நன்றி மணி அத்தா :mellow:

Link to comment
Share on other sites

ஏப்ரல் 21 சனிக்கிழமை ஆண்டின் 111ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 254 நாட்கள் உள்ளன

கி.மு 753 - இந்த நாள் 2760 வருடங்களுக்கு முன்பு ரோம் உருவான நாளாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நாள்

1944 - ஆசியாவை விட முன்னேறியதாகக் கருதப்படும் பிரான்ஸ் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட நாள்

1976 - சோவியத் ஜூனியன் கசகஸ்தானில் அணுகுண்டு சோதனை செய்தது

1651 - யோசப் வாஸ் அடிகள் பிறந்தார், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு

1926 - இரண்டாம் எலிசபெத் பிறப்பு, ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி

1964 - பாரதிதாசன் இறந்தார், புரட்சிக் கவிஞர், பாவேந்தர்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 22 ஞாயிற்றுக்கிழமை ஆண்டின் 112ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 253 நாட்கள் உள்ளன

2000 - ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

1912 - ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்டா செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க் இலிருந்து பிரசுரமாகியது.

1970 - முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது.

1992 - மெக்சிக்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 206 பேர் பலியாகியும் 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்

1959 இலங்கை க்ரிக்கெட் வீரர் ரஞ்சன் மதுகள்ளே பிறந்தநாள்

1916 பிரபல வயலின் மேஸ்ட்ரோ யெகுதி மெனுகின் பிறந்த தினம்

1500 பிரேஸில் போர்த்துகீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டநாள்

1870 லெனின் பிறந்தநாள்

1969 முதல் கண் மாற்று அறுவை சிகிச்சைநடந்தநாள்.

1940 - க. சட்டநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர் பிறந்த நாள்

1994 - ரிச்சார்ட் நிக்சன், ஐக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் இறப்பு

Link to comment
Share on other sites

ஏப்ரல் 23 ஆண்டின் 113ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 252 நாட்கள் உள்ளன.

1966 - முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.

1993 - இந்திய தேசிய லீக் இந்திய அரசியல் கட்சி உருவானது.

1938 - தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பிறந்தார்

1997 - டைட்டானிக் திரைப்படம் திரையிடப்பட்டது

1616 - வில்லியம் ஷேக்ஸ்பியர் இறப்பு

1992 -சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மறைந்த தினம்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 24 ஆண்டின் 114ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன.

தமிழீழ வான் படையின் இரண்டாவது வெற்றிகரமான வான் தாக்குதல்

  • 1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கமாரொவ் அவரது பாரசூட் திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
  • 1970 - முதல் சீனச் செய்மதி ஏவப்பட்டது.
  • 1981 - முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமானது.
  • 1820 - ஜி. யு. போப் பிறந்தார் இவர் தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர்
  • 1934 - ஜெயகாந்தன் பிறந்தார், தமிழக எழுத்தாளர்.
  • 1951 - தம்பிஐயா தேவதாஸ் பிறந்தார், ஈழத்து எழுத்தாளர்
  • 1981 IBM கணனி அறிமுகமான தினம்
  • 1929 - நிறுத்தப் படாமல் தொடர்ச்சியாக இங்கிலாந்து - இந்தியா வுக்கிடையில் முதல் விமான ஓட்டம்
  • 1970 ஆப்பிரிக்கா கண்டத்திலேயே சிறியநாடான காம்பியா (Gambia) குடியரசானநாள்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 25 ஆண்டின் 115ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 250 நாட்கள் உள்ளன.

  • 1916 - அன்சாக் நாள் முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது.
  • 1983 - பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
  • 2006 - கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சரத் பொன்சேக படு காயமடைந்தது
  • 1874 - வானொலியைக் கண்டு பிடித்த மார்க்கோனி பிறந்த தினம்
  • 1906 -புதுமைப்பித்தன், நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடி பிறந்த நாள்
  • 1916 - அன்சாக் நாள் முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது.

யாழ் களத்தில் இன்று

  • சிவராஜா(34)
  • கவிரூபன்(28)
  • புளூவேர்ட்(44)

ஆகிய உறவுகள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றனர்

உறவுகளிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 26 ஆண்டின் 116ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 249 நாட்கள் உள்ளன.

  • 1964 - தங்கானிக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என்ற பெயரிடப்பட்டது.
  • 1981 - மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1986 - உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது.
  • 1920-சீனிவாச இராமனுசம், கணித மேதை மறைந்த தினம்
  • 1762 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் பிறந்த தினம்
  • 1977 - எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மறைந்த தினம்
  • 1755 - ரஷ்யாவில் முதல் பல்கழைகலகம் ஆரம்பிக்கப் பட்டது (மொஸ்கோ)
  • 1929 - இந்திய - இங்கிலாந்துக்கிடையிலான முதல் நீண்ட தூர பயணத்தை மேற்கொண்ட விமானம் தரையிறக்கப் பட்டது
  • 1990 - சீனாவில் இடம் பெற்ற 6.9 ரிச்டர் பூமியதிர்வில் 129 பேர் இறந்தனர்
  • 1993 -அருங்காபாத்தில் இடம் பெற்ற போஜிங் 737விமான விபத்தில் 56பேர் கொல்லப் பட்டனர்
  • 1994 - ஜப்பானின் நாகோயாவில் இடம் பெற்ற தாய்வானின் A-300 விமானம் விபத்துக்குள்ளாகி 262 பேர் இறந்தனர்

Link to comment
Share on other sites

ஏப்ரல் 27 ஆண்டின் 117ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன.

  • 1904 - அவுஸ்திரேலியாவில் அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி ஆட்சியமைத்தது.
  • 1981 - Xerox PARC முதன் முறையாக கணனி mouse ஐ அறிமுகப்படுத்தியது..
  • 2001 - தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை(ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.

  • 1937 அமெரிக்காவின் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது
  • 1791 சாமுவேல் மோர்ஸ் (samuel morse) (மோர்ஸ் கோட் உருவாக்கியவர் பிறந்ததினம்
  • 1880 காது கேளாதவருக்கான hearing aid அறிமுகமான தினம்
  • 1521 Ferdinand Magellan மறைந்த தினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.