Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - கிழக்கு தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால் இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து

Featured Replies

  •  
  • தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால்  இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து
 
 

வடக்கு - கிழக்கு

தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால்  இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து

 

தமி­ழ­ரின் தாயக பூமி­யான, வடக்கு– – கிழக்கு மாகா­ணம் தமி­ழ­ரின் கையை விட்­டுச் சென்­றால் இந்­தி­யா­வின் பாது­காப்பு கேள்­விக் குறி­யா­கும். இந்­தப் பேரா­பத்தைக் கருத்­திற் கொண்டு – கரி­ச­னை­யில் எடுத்து இந்­திய அரசு தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றங்­களை உட­ன­டி­யா­கக் கொண்டு வர­வேண்­டும் என்று ஈபி­ஆர்­எல்­எப் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஸ்­ணன் எழு­திய ‘ஓர் இனப்­பி­ரச்­சி­னை­யும் ஓர் ஒப்­பந்­த­மும்’ என்ற நூல் அறி­முக விழா நல்­லூ­ரில் உள்ள முகா­மை­யா­ளர் சங்­கத்­தில் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தின் ஊடா­கவே வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள் இணைக்­கப்­பட்­டது. பின்­னர் காலப்­போக்­கில் அர­சின் மாற்­றங்­க­ளால் அவை நீதி­மன்­றத்­தின் ஊடா­கப் பிரிக்­கப்­பட்­டது. இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யிலே செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தம் மாற்­ற­ம­டை­யும் போது அதில் சம்­பந்­தப்­பட்ட நாடான இந்­தி­யா­வும் அக்­கறை காட்­ட­வில்லை. வடக்கு – கிழக்கு மாகா­ணம் ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் இல்­லாது பிரிந்­தது.

வடக்கு – கிழக்கு மாகா­ணம் பிரிக்­க­பட்­ட­தன் விளை­வாக தற்­போது கிழக்கு மாகா­ணம் பெரும்­பான்மை சமூ­கத்­தின் பிடிக்­குள் சிக்கி விட்­டது. இப்­போது வடக்கு மாகா­ணத்­தை­யும் குறி­வைத்து திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் மேற்­கொள்­ள­பட்டு வரு­கின்­றன. சிங்­கள அரசு தனது நிகழ்ச்சி நிரலை அன்­றைய காலத்­தில் இருந்து இன்று வரை மாற்­ற­வில்லை.அவர்­க­ளின் திட்­டங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது.

நாம் ஆரம்ப காலத்­தில் இருந்து இறு­தி­யாக முள்­ளி­வாய்க்­கா­லில் இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் கொல்­லப்­ப­டும் வரை இந்­தி­யா­வையே நம்­பி­னோம்.
7 கோடி தமிழ் மக்­களை கொண்ட தமிழ் நாட்­டுக்கு தனி­யான அரசு அமைக்­கப்­பட்டு அதி­கார பர­வ­லாக்­கம் வழங்­க­பட்­டுள்­ளது. ஆனால் இங்­குள்ள எமக்கு என்ன வழங்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை இந்­திய ஒப்­பந்­தம் இரண்டு கார­ணி­க­ளுக்­காக செய்­து­கொள்­ளப்­பட்­டது. அதில் ஒன்று எமது இனத்­தின் பிரச்­ச­னைக்­குத் ஒரு தீர்­வினை கொடுக்க வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும் இந்­தி­யா­வின் பாது­காப்­புக்­கா­க­வுமே இந்த ஒப்­பந்­தம் செய்து கொள்­ளப்­பட்­டது.

ஆனால் இன்றோ தென்­னி­லங்­கை­யில் சீனா­வின் ஆதிக்­கம் மேலோங்­கி­யுள்­ளது. இதே ஆதிக்­கம் தமிழ் தரப்­பி­டம் இருந்து வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள் பறி­போ­னால் இங்­கும் ஏற்­ப­டும். எனவே எமது மாகா­ணங்­கள் பறி­போ­னால் எமக்கு மட்­டும் பாதிப்­பல்ல. அது இந்­தி­யா­வின் பாது­காப்­புக்­கும் அச்­சு­றுத்­த­லாக அமை­யும் என்­பதை இந்­திய அரசு புரிந்து கொள்ள வேண்­டும். அவர்­கள் தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றத்தை கொண்டு வர­வேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/86980.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.