Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்த படுகொலை விவ­காரம்: நாண­யக்­கார, ஜயந்த விக்­ர­ம­ரத்ன கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு தொடர்பு

Featured Replies

லசந்த படுகொலை விவ­காரம்: நாண­யக்­கார, ஜயந்த விக்­ர­ம­ரத்ன கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு தொடர்பு

10-4d5e952d3a87975ecfc459f702b227bf13517dd0.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)
நாண­யக்­கா­ர­வுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு தெரி­வித்து சி.ஐ.டி. மன்றில் வாதம்
சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படுகொலை தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார,  

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்ன, முன்னாள் பாது­காப்பு செய லர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ

ஆகியோர் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாக குற்றப் புல­ன­யவுப் பிரிவு சந்­தே­கிப்­ப­தா­கவும், அதனால் அது குறித்த விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் குற்றப் புல­ன­யவுப் பிரிவு நேற்று கல்­கிசை நீதி­வா­னுக்கு அறி­வித்­தது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கா­ர­வுக்கு பிணை கோரி நேற்று அவ­ரது சட்­டத்­த­ரணி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­த­கொ­ட­வினால் கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்­னி­லையில் ஒன்­றரை மணி நேர வாதம் முன்­வைக்­கப்­பட்ட நிலையில், பிணை கோரிக்­கைக்கு எதிர்ப்பு வெளி­யிட்டு பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா நீதி­வா­னுக்கு பதி­ல­ளிக்கும் போதே மேற்­படி விடயம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

  விளக்­க­ம­றி­யலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கா­ர­வுக்கு பிணை வழங்­கு­வதா இல்­லையா என்­பது குறித்து எதிர்­வரும் மே முதலாம் திகதி அறி­விப்­ப­தாக கூறிய நீதிவான் மொஹம்மட் மிஹால், அது­வரை அவ­ரையும் இவ்­வ­ழக்கின் இரண்­டா­வது சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­தகர் திஸ்ஸ சுகந்­த­பா­ல­வையும் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

நேற்­றைய தினம் இது குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, குற்றப் புல­னாய்வுப் பிரிவு சார்பில் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசேரா, விசா­ரணைப் பொறுப்­ப­தி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா ஆகியோர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யொன்­றினை மன்றில் சமர்­பித்த நிலையில் கொலை­யா­ளி­களைத் தேடிய பல்­முனை விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர்.

 இதன்­போது மன்றில் கருத்து தெரி­வித்த உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பீ.ஏ. திசேரா,

 இரா­ணு­வத்தின் 112 ஆவது பிரிகேட் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தற்­ச­ம­யமும் தொடர்­கி­றது. மேல­தி­க­மாக மூன்று இரா­ணுவ வீரர்­களின் வககு மூலம் பதிவு செய்­யப்­பட்­டது.

 இத­னை­விட லசந்த விக்­ர­ம­துங்­க­வுடன் சேவை­யாற்­றிய நிர்­மலா கண்­ணங்­கர எனும் ஊட­க­வி­ய­லா­ளரின் வாக்கு மூலத்தை நாம் பதிவு செய்தோம். அதன் போது அவர், லசந்த கொலை செய்­யப்­பட்ட போது ஸ்தலத்­துக்கு தான் சென்­ற­தா­கவும் அப்­போது அங்­கி­ருந்த லசந்­தவின் காருக்குள் அவ­ரது குறிப்புப் புத்­த­கத்தை அவ­தா­னித்­த­தா­கவும், பின்னர் அது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கா­ர­விடம் வின­விய போது ஒரு செவி­ம­டுக்கும் கருவி மட்­டுமே இருந்­த­தாக கூறி­ய­தா­கவும் குறிப்புப் புத்­தகம் இருக்­க­வில்லை என பதி­ல­ளித்­த­தா­கவும் தெரி­வித்தார். இதனால் அப்­போதில் இருந்தே சந்­தேக நபர் குறிப்புப் புத்­தகம் தொடர்­பி­லான தக­வல்­களை ஏதோ கார­ணத்­துக்­காக மறைக்­கின்றார். இந் நிலையில் பிணை சட்­டத்தின் விதி­வி­தாங்­க­ளுக்கு அமை­வாக சந்­தேக நபரின் விளக்­க­ம­றி­யலை நீடிக்­கவும். என கோரினார்.

  இத­னை­ய­டுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தெ­கொட விஷேட பிணை கோரிக்­கையை முன்­வைத்தார்.

' எனது சேவை பெறுநர் கடந்த பெப்­ர­வரி 13 ஆம் திகதி முழு நாளும் விசா­ரிக்­கப்ப்ட்டு அன்ரு இரவு 10.45 மனிக்கு கைது செய்­யப்ப்ட்டார். மறு நாள் மன்ரில் ஆஜர் செய்­யப்ப்ட்­டமை முதல் இன்று வரை விளக்­க­ம­ரி­யலில் இருந்து வரு­கின்றார். சுமார் இரண்­டரை மாதம் அவர் விளக்­க­ம­ரி­யலில் இவ்­வாறு காலம் கழிக்­கின்றார்.

 ஏற்­க­னவே நான் முன் வைத்த இரு பிணை கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. காரணம் குற்றப் புல­ன­யவுப் பிரிவு விசா­ர­ணைகள் நிறை­வ­டைய வில்லை எனவும், சாட்­சி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம் எனவும் கூறிய விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே பிணை நிரா­க­ரிக்­கப்ப்ட்­டன. எனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக முன்­வைக்­க­பப்டும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் எவ்­வித சாட்­சி­யங்­களும் இல்லை. அக்­குற்­றச்­சாட்­டுக்கள் அடிப்­ப­டை­யற்­றவை.

 லசந்த கொலை உட்­பட அக்­கா­லப்­ப­கு­தியில் இடம்­பெற்ற பல்­வேறு கொலை­களை யார் செய்­தார்கள் என்­பது முழு நட­டுக்கும் தெரியும். அது இர­க­சி­ய­மல்ல. இது தொடர்பில் அப்­போ­தி­ருந்த முன்­னணி இரா­ணுவ தலை­வர்கள் செய்த சதி, நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஊட­கங்கள் எழு­தி­யுள்­ளன. எனவே அது குறித்து யாருக்கும் ஊகித்­துக்­கொள்ள முடியும்.

 எனது சேவை பெறுநர் லசந்த கொலை தொடர்பில் விசா­ரணை செய்ய சி.ஐ.டி. யிடம் கைய­ளிக்­கு­மாறு பொலிஸ் மா அதி­ப­ருக்கு பரிந்­து­ரைத்து அதன்­படி 2009.11.25 அன்ரு அதனை சி.ஐ.டி.க்கு பொறுப்­ப­ளித்­தவர். இந் நிலையில் எனது சேவை பெறு­னரை இக்­குற்­றத்­துடன் தொடர்­பு­ப­டுத்­தி­யுள்ள சி.ஐ.டி. அவ­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 174,190,193,198,201,209,454,162,163 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழ் குற்றம் சுமத்­து­கி­றது.

 லசந்­தவின் குறிப்புப் புத்­தகம் தொடர்­பிலும், பொலிஸ் புத்­தக பதி­வுகள் மாற்­றப்­பட்­ட­மையும் எனது சேவை பெறு­நரின் ஆலோ­ச­னைக்கு அமைய செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்­றப்­பு­ல­ன­யவுப் பிரிவு கூறு­கின்­றது. எனினும் அது தொடர்பில் பெறப்­பட்ட சாட்­சி­யங்­களில் ஒன்றில் கூட எனது சேவை பெறு­நரின் பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

 அத்­துடன் லசந்­தவின் பிரேத பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்த வைத்­தியர் சுனில் குமா­ரவும் எனது சேவை பெறு­நரும் உற­வி­னர்கள் என்­பதை மைய­பப்­டுத்தி சாட்­சி­ய­க­ளுக்கு அச்­சு­ருத்தல் ஏர்­ப­டலாம் என்­கி­றது சி.ஐ.டி. ஆம், சுனில் குமார், எனது சேவை பெறு­நரின் மனை­வியின் உற­வினர். அவ­ருடன் எனது சேவை பெறுநர் தொடர்பில் உள்ளார். உற­வி­னர்­க­ளு­ட­னான உறவு பிணை வழங்க தடை­யில்லை.

 அத்­துடன் தற்­போது சுனில் குமார வழங்­கிய பிரேத பரி­சோ­தனை அரிக்கை பொய் என நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. விஷேட வைத்­திய நிபுணர் மொஹான் டி சில்­வாவின் அரிக்கை ஊடா­கவும், சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் தலை­மை­யி­லான மூவர் கொண்ட குழுவின் அறிக்கை ஊடா­கவும் அது உறு­தி­யா­கி­யுள்­ளது. எனவே சுனில் குமா­ர­வு­ட­னான தொடர்­பாடல் விசா­ர­ணை­க­ளுக்கு பாதிப்­பாக அமை­யப்­போ­வ­தில்லை.

 எனவே அடிப்­ப­டை­யற்ற விட­யங்­களை நிரா­க­ரித்து 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்­டத்தின் 14 ஆம் அத்­தி­யா­யத்தை அடிப்­ப­டை­யாக கொன்டு சந்­தேக நப­ருக்கு பிணை வழங்­கு­மாறு கோரி­கின்றேன். என்றார்.

 இத­னை­ய­டுத்து பிணை கோரிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து பிர­தான விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்வா கருத்­துக்­களை முன்­வைத்தார்.

' லசந்­தவின் கொலை இடம்­பெற்ற 2009.01.8 ஆம் திக­திக்கும் 2015 அம் ஆண்டு வரை­யி­லான காலப்­ப­கு­திக்கும் இடையில் சட்­டத்தின் ஆட்சி எந்­த­ளவில் இருந்­தது என்­பது எலோ­ருக்கும் தெரியும். இக்­கா­லப்­ப­கு­தியில் சி.ஐ.டி.க்கு கைய­ளிக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் சி.ஐ.டி. லசந்­தவை பின் தொடர்ந்த 5 தொலை­பே­சி­களை தொலை­பேசி கோபுர தக­வல்­க­ளுக்கு அமைய கண்­ட­றிந்­தனர். அவை இரா­னுவ புல­ன­யவுப் பிரி­வுக்கு சொந்­த­மா­னது என்­ப­தையும் அவர்கள் வெளிப்­ப­டுத்­தினர்.

 இவ்­வா­றான பின்­ன­ணியில் அந்த விசா­ர­ணைகள் உட­ன­டி­யாக அப்­போ­தைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால­சூ­ரி­ய­வுக்கு ஏற்­பட்ட சி.ஐ.டி. மீதான திடீர் காதலால், சி.ஐ.டி.க்கு வேலை பளு அதிகம் எனக் கூறி, லசந்த, கீத் நொயார், உபாலி தென்­னகோன் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வுக்கு அவரால் மாற்­றப்­பட்­டன.

 அதன் பின்னர் அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் அப்­போ­தைய பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ர வாகிஷ்ட, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ் உள்­ளிட்ட கூழ்­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதன்­போது 11 இரா­ணு­வத்­தினர் அவ­ச­ர­கால சட்­டத்தில் கைது செய்­யப்­பட்டு 6 நாட்­களில் பொலிஸ் பினையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். அது குரித்து நீதி­மன்­றுக்கு கூட அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

 2015 செப்­டம்­பரில் நாம் இந்த விசா­ர­ணையைப் பொருப்­பேற்ற போது முதலில் ஏர்­க­னவே செய்­யப்ப்ட்ட அனைத்து விசா­ர­ணை­க­ளையும் ஆராய்ந்தோம். அதன் பின்­ன­ரேயெ விசா­ர­ணை­களை ஆராய்ந்தோம். அதன்­ப­டியே முதலாம் சந்­தேக நப­ரான பினையில் உள்ள உட­லா­க­மவை கைது செய்தோம். அவர் லசந்­தவின் சார­தியை கடத்திச் சென்று, லசந்­தவை கோத்­தாவே கொன்றார் எனவும் மிக் விமான கொள்­வ­னவு தொடர்­பி­லான விவ­காரம் தொடர்பில் எழு­தி­ய­மையே காரணம் எனவும் கூறு­வதை நிறுத்­து­மாறு அச்­சு­றுத்­தி­யுள்ளார்.

நாம் அர­சியல் தேவைக்­காக விசா­ரணைச் செய்­ய­வில்லை. அவ்­வாறு செய்தால் அர­சாங்கம் மாறினால் நாமும் இந்த சந்­தேக நப­ரான பொலிஸ் அதி­கா­ரி­களைப் போன்று குற்­ற­வாளிக் கூன்டில் நிர்போம் என்­பது எமக்கு தெரியும்.

 லசந்­தவின் குறிப்புப் புத்­த­கத்தை பொலிஸ் பரி­சோ­தகர் வீர­சிங்­கவே மீட்­டுள்ளார். அதனை அவர் அப்­போது கல்­கிசை குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி, தற்­போ­தைய 2 ஆம் சந்­தேக நபர் சுகந்­த­பா­ல­விடம் விசா­ர­ணை­க­ளுக்­காக கொடுத்­துள்ளார்.

 இந் நிலையில் தான் 2009.01.16 விடு­மு­றி­அயில் இருந்து திரும்­பிய 3 ஆவது சந்­தேக நபர் நாண்­யக்­கார அந்த புத்­தகம் உள்­ளிட்ட சாட்­சி­யங்­களை மாற்ற அவ­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

 முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்­ர­ம­ரத்ன கோரியே லசந்­தவின் குறிப்புப் புத்­தகம் கைமா­றி­யுள்­ளது. அப்­போது இது கோத்தாவின் வேலை எனவும் அதனால் விளக்கமறியலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, அதனுடன் தொடர்புடைய சாட்சி அழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகிக்கின்றோம்.

 அதனாலேயே இந்த விடயத்தில் விடயம் அறிந்தவர்களின் வககு மூலங்களை மையபப்டுத்தி விசாரணைகளை முன்னெடுக்கின்ரோம்.

 மூன்ராம் சந்தேக நபர் உயர் பொலிஸ் அதிகாரியாக இருந்தவர் என்ற ரீதியில் அவருக்கு பொலிஸ் தினைக்களத்துக்குள் செல்வாக்கு உள்ளது. எனவே அவர் பினையில் இருப்பின் விசாரணைகளுக்கு படஹிப்பு ஏர்படும். எனவே பிணை வழ்னக்க வேண்டாம். என்றார்.

 வாதங்களை செவிமடுத்த நீதிவான் பினை தொடர்பில் எதிர்வரும் மே 1 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்து அதுவரை சந்தேக நபர்களை விளக்கமரியலில் வைக்க உத்தர்விட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-24#page-1

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.