Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்றைய ஜே.ஆர்.- ராஜிவ் ஒப்பந்தமும் இன்றைய ரணில்- சம்பந்தன் ஒப்பந்தமும்!!


Recommended Posts

 
 

அன்றைய ஜே.ஆர்.- ராஜிவ் ஒப்பந்தமும் இன்றைய ரணில்- சம்பந்தன் ஒப்பந்தமும்!!

கர­லி­யத்தை கிரா­மத்­தைச் சேர்ந்த சாலிஸ் முத­லாளி அந்­தக் கிரா­மத்­துக்கே தலை­வர் போன்­ற­வர். பாதிக் கிரா­மத்­துக் குச் சொந்­தக்­கா­ரர். இறப்பர், தேயிலை, தேக்கு, தென்­னந்­தோட்­டங்களுக்­கும், பல ஏக்­கர் வயல்­நி­லத்­துக்­கும் சொந்­தக்­கா­ரர். இவை­கள் அனைத்­தை­யும் தனித்து பாது­காப்­பது சிர­ம­மென உணர்ந்த சாலிஸ் முத­லாளி, அண்­டைக் கிரா­மங்­கள் சில­வற்­றி­லி­ருந்து தொழி­லா­ளர்­க­ளைக் குறைந்த சம்­ப­ளத்­துக்கு வேலைக்­க­மர்த்தி தமது தோட்­டங்­க­ளைப் பரா­ம­ரிப்­பித்து வந்­தார்.

தமது தோட்­டங்­க­ளி­லேயே அந்தத் தொழிலாளர்கள் தங்கி வாழ்­வ­தற்கு வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார். அவர்­க­ளது வாழ்க்கை மகிழ்ச்­சி­யாக அமைந்­தது. சாலிஸ் முத­லாளி முது­மை­ய­டைந்த வேளை, அந்­தத் தொழி­லா­ளர்­க­ளது பிள்­ளை­களே அவ­ரது தோட்­டங்க­ளில் வேலை செய்து வந்­த­னர்.

அது மட்­டு­மன்றி, சாலிஸ் முத­லா­ளி­யால் ஆரம்­பத்­தில் வேலைக்கு அமர்த்­தப்­பட்ட தொழி­லா­ளர்­க­ளது பேரப்­பிள்­ளை­க­ளும் கூட அந்த வேளை­யில் தோட்­டங் க­ளில் வேலை­க­ளில் ஈடு­பட்டு வந்­த­னர். அதிக காலம் கழி­வ­தற்கு முன்­னர் அந்­தத் தொழி­லா­ளர்­கள் வாழ்ந்த இடங்­கள், வீடு­கள், அவர்­கள் வேலை­செய்த முத­லா­ளி­யின் தோட்­டங்­கள் அந்­தத் தொழி­லா­ளர்­க­ளுக்­குச் சொந்­த­மா­கின.

அவற்­றுக்­கான உறு­தி­க­ளை­யும் அந்­தந்­தத் தொழி­லா­ளர்­க­ளால் பெற முடிந்­தது. அந்­தத் தொழி­லா­ளர்­க­ளது பூர்­வீக கிரா­மங்­க­ளது உற­வி­னர்­கள், குறித்த தொழி­லா­ளர் தரப்­புக்­காக உரிமை கோரி சாலிஸ் முத­லா­ளி­யு­டன் மோதல்­க­ளில் ஈடு­பட்­ட­னர். சாலிஸ் முத­லா­ளி­ யின் பிள்­ளை­கள், பேரப்­பிள்­ளை­கள்கூட அந்த இடங்­க­ளுக்கு உரிமை கோர இய­லாது போயிற்று.

சாலிஸ் முத­லா­ளி­ யால் மெள­னம் காப்­ப­தை­விட வேறெ­த­னை­யும் செய்ய இய­லாது போயிற்று. மிகப் பெறு­மதி வாய்ந்த தமது பெரும் சொத்­துக்­களை இழக்க நேர்ந்த கர­லி­யத்த கிரா­மத்து சாலிஸ் முத­லா­ளி­யின் கதை­யின் ஆரம்ப,மத்திய, முடிவுகள் இவை!.

கீழே குறிப்­பி­டப்­ப­ட­வுள்ள கதை­யின் ஆரம்­பத்தை இலங்கையின் பழைய அர­சி­யல் வர­லாற்றை அறிந்­தோர் நன்கறி­வர். நடுப்­ப­குதி குறித்து விளக்­கிக் கூறக் கூடி­ய­தா­யி­ருக் கும். முடிவு எவ்­வா­றி­ருக்­கும் என்­பது குறித்து இப்­போது எது­வும் உறு­தி­யா­கக் கூற இய­லாது.

ஜே.ஆரின் கடை­சிக் கால அர­சி­யல் வாழ்க்கை
பரி­தா­ப­க­ர­மா­னது

1980துகள், அவ்வேளையில் 80 வய­தைத் தாண்­டிய ஜே. ஆரது அரச தலை­வர் பத­வி­யின் முடி­வுக்­கா­லம். 1987ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் ஜே. ஆர் அர­சி­ய­லில் கழுத்தில் கயிறு இறு­கிய நிலை­யில் செயற்­பட நேர்ந்­தது. இலங்­கைத் தமிழ் மக்­கள் தொடர்­பில் இந்­தியா பார­தூ­ர­மான விதத்­தில் தலை­யீட்டை ஆரம்­பித்­தி­ருந்­தது. பிர­பா­க­ரன் உட்­பட விடு­த­லைப் புலிப் போரா­ளி­கள் தமிழ் நாட்­டைக் கைவிட்டு இலங்­கைக்­குத் திரும்­பி­வி­டத் தீர்­மா­னித்­தி­ருந்­த ­னர்.

ஜே. ஆர், யாழ்ப்­பா­ணத்­துக்கு இரா­ணு­வத்தை அனுப்பி விடு­த­லைப் புலி­களை நலி­வு­ப­டுத்­து­வதை தமிழ் நாட்டு மக்­கள் பொறுத்­துக் கொள்ள மாட்­டார்­க­ளெ­னக் கரு­திய இந்­திய அரசு, யாழ் குடா­நாட்­டில் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை நிறுத்­திக் கொள்­ளு­மாறு இலங்கை அரசை வற்­பு­றுத்தி வந்­தது. இதற்­காக இந்­திய மத்­திய அர­சின் அமைச்­ச­ரான தினேஸ் சிங் இலங்­கைக்கு நேரில் வந்து ஜே. ஆரைச் சந்­தித்­தி­ருந்­தார்.

நல்­லெண்­ணத்தை இந்­தி­யா­வுக்கு வௌிப்­ப­டுத்­தும் விதத்­தில் பிரி­வி­னை­வா­தப் போரா­ளி­க­ளு­டன் எட்டு நாள்­க­ளுக்­குப் போர் நிறுத்­த­மொன்றை ஜே. ஆர் அறி­வித்­தார். அந்­தப் போர் நிறுத்­தம் நடை­மு­றை­யி­லி­ருந்த நாள்­க­ளில், திரு­கோ­ண­ம­லை­யி­லி­ ருந்து கொழும்­புக்கு பஸ்­ஸில் பய­ணித்த 130 பய­ணி­களை விடு­த­லைப்­பு­லி­கள் சுட்­டுப் படு­கொலை செய்­தி­ருந்­த­னர்.

கொழும்பு மத்­திய பஸ் நிலை­யத்­தில் விடு­த­லைப் புலி­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட வெடிகுண்­டுத் தாக்­கு­த­லில் 150 பொது­மக்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

ஜே.ஆரின் வட­ம­ராட்சி இரா­ணுவ நட­வ­டிக்கை
இந்­தி­யா­வின் தலை­யீட்­டுக்கு வழி­வ­குத்­தது

தாம் கடும் அர­சி­யல் அநா­தை நிலைக்கு உட்­ப­டு­வ­தாக உணர்ந்த ஜே. ஆர், விடு­த­லைப் புலி­க­ளுக்கு எதி­ராக வட­ம­ராட்சி இரா­ணுவ நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தார். 1987ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட அந்த இரா­ணுவ நட­வ­டிக்கை, 10 நாள்­க­ளா­கத் தொடர்ந்து இடம் பெற்­றது.

இரா­ணு­வத்­தி­ன­ரில் 29 பேரும், விடு­த­லைப் புலி­க­ளில் நூறு பேர் வரை­யா­ன­வர்­க­ளும் அந்த நட­வ­டிக்­கை­யில் உயி­ரி­ழக்க நேர்ந்­தது. விடு­த­லைப் புலிப் போரா­ளி­கள் பின்­வாங்­கிச் சென்­ற­து­டன், தமிழ் நாட்­டி­லி­ருந்து போரா­ளி­கள் மற்­றும் பேரா­யு­தங்­களை வட­ப­கு­திக்­குக் கொண்­டு­வர விடு­த­லைப்­பு­லி­கள் பயன்­ப­டுத்­திய வட­கி­ழக்கு கடற்­பி­ராந்­தி­யத்தை இலங்கை இரா­ணு­வத் தரப்பு தனது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தது.

‘‘அந்த வேளை­ யில் இந்­திய அரசு தலை­யிட்­டி­ருக்­காதுவிட்­டால், விடு­த­லைப் பு­லி­களை எம்­மால் முற்­றா­கத் தோற்­க­டித்­தி­ருக்க முடிந்­தி­ருக் கும்.’’ என வட­ம­ராட்சி இரா­ணுவ நட­வ­டிக்­கைக்­குத் தலைமை தாங்­கிய பிரி­கே­டி­யர் விஜய விம­ல­வர்­தன பின்ன ரொரு சமயம் தெரி­வித்­தி­ருந்­தார்.

‘‘யாழ்ப்­பா­ணத்­தைக் கைப்­பற்ற இலங்கை இரா­ணு­வம் முய­லு­மா­னால், அதை இந்­திய அரசு பார்த்­துக் கொண்டு சும்மா இருக்­காது’’ என அந்த வேளை­யில் இந்­தி­யத் தூது­வ­ராக இங்கு கட­மை­யாற்­றிய ஜே. என். டிக்­சிற், அந்த வேளைய இலங்கை பாது­காப்பு அமைச்­சர் லலித் அது­லத்­மு­த­லிக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார்.

உண­வுப் பொருள்­கள் தட்­டுப்­பாட்­டால் வாடிய பொது­மக்­க­ளுக்கு உத­வ­வென தமிழ்­நாடு அர­சின் அழுத்­தம் கார­ண­மாக இந்­திய அரசு 20 மீன்பிடி வள்­ளங்­க­ளில் உண­வுப் பொருள்­கள் மற்­றும் எரி­பொ­ருள்­களை வட­ப­கு­தித் தமி­ழர்­க­ளுக்­கென அனுப்பி வைத்­தது.

ஆயி­னும் இலங்­கைக் கடற்­ப­டை­யி­னர் அந்­தப் பட­கு­கள் வட­ப­கு­திக்­குச் செல்­லத் தடை­வி­தித்து, அவற்றை மீண்­டும் இந்­தி­யா­வுக்கே திருப்பி அனுப்பி வைத்­தி­ருந்­த­னர். இத­னால் ஆத்­தி­ர­முற்ற இந்­திய மத்­திய அரசு, பன்­னாட்டு சட்­ட­ந­டை­மு­றை­களை மீறும் வகை­யில், ஆகாய மார்க்­க­மாக உணவு மற்­றும் மருந்து வகை­கள் அடங்­கிய 22 தொன் பொருள்­களை வட­ப­குதி மக்­க­ளுக்கு விநி­யோ­கித்­தது. அது இந்­திய மத்­திய அரசு தமிழ்ப் பிரி­வி­னை­ வா­தி­க­ளுக்­குப் பகி­ரங்­க­மாக உத­விய நிகழ்­வாக அமைந்­தது.

இத்­த­கைய பின்­ன­ணி­யில் அர­சி­யல் ரீதி­யி­லான பிறநாடுகளது உத­வி­கள் ஜே. ஆரை­விட்­டுத் தூர வில­கத் தொடங்கின. நாடு அர­சி­யல் ரீதி­யில் அரா­ஜக நிலைக்­குத் தள்­ளப்­பட்டு வந்­தது. இந்­திய தலைமை அமைச்­சர் ராஜீவ் காந்­தி­யு­டன் இலங்கை அரசு ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொள்­வது குறித்து பல்­வேறு தரப்­புக்­க­ளி­னின்­றும் விமர்­ச­னங்­கள் தலை­தூக்­கின.

ஜே.ஆர் அத்­த­கைய அழுத்­தங்­க­ளால் குழுப்­ப­முற்ற போதி­லும், கடை­சி­யில் ராஜீவ்­காந்­தி­யு­டன் ஒப்­பந்த மொன்றை மேற் கொள்ள இணங்கினார். வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை தற்­கா­லி­க­மாக ஒன்­றி­ணைத்து, நடை­மு­றை­யில் இருந்­து­வந்த அவ­ச­ர­கா­லச் சட்­டத்தை நீக்கி, பொது­சன அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­தும் இந்­தி­யத் தரப்­பின் யோச­னைக்கு ஜே.ஆர் இணங்க வேண்­டி­ய­தா­யிற்று.

நாடு பெரும் பர­ப­ரப்­பான நிலை­யில் இருந்த வேளை, 1987 ஆம் ஆண்­டின் ஜீலை மாதம் 29 ஆம் திகதியன்று இந்­திய இலங்கை ஒப்­பந்­தம் இந்­திய த ைலமை அமைச்­சர் ராஜீவ் காந்தி மற்­றும் இலங்கை அரச தலை­வர் ஜே. ஆர் ஆகி­யோ­ரால் கொழும்­பில் வைத்­துக் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

ஜே.ஆர்.ராஜீவ் இடையேயான
இலங்கை –இந்திய ஒப்பந்தம்

குறித்த இலங்கை இந்திய ஒப்­பந்­தத்­தில் பல முக்­கி­ய­மான அம்­சங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. இலங்­கை­யின் இறைமை, சுயா­தீ­ னம், மற்­றும் ஒருமைப்பாட்டைப் பேணும் வகை­யி­லும், நாட்­டில் பல்­லின,மற்­றும் பல்­வேறு மொழி­கள் பேசும் இனக்­கு­ழுமங்க­ளைப் பேணும் வகை­யி­லும், வெவ்­வேறு கலாசார மற்­றும் மொழி தனித்­து­வங்களைக் கொண்ட இனக் குழு­மங்­க­ளுக்கான பகு­தி­கள் நாட்­டில் உள்­ளன என்­பதை ஏற்­கும் வகை­யி­லும் நிர்­வா­கம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டிருந் தது.

தமிழ் பேசும் மக்­கள் ஏனைய இனக் குழு­மங்­க­ளு­டன் இணைந்து வாழ்ந்து வந்த நாட்­டின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­கள், தமிழ் மக்­க­ளது பாரம்­ப­ரிய வாழ்­வி­டங்­க­ளென எற்­றுக் கொள்­ளும் வகை­யி­லும், தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­ப­டும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும், மற்­றும் ஏனைய மாகா­ணங்­க­ளிலும் தேர்­தல் மூலம் மாகா­ண­ ச­பை­களை உரு­வாக்­க­வும் ஒப்­பந்­தம் வழி வகுத்­தி­ருந்­தது.

அவை மட்­டு­மன்றி மாகா­ண­ச­பை­களை எவ்­வி­தம் உரு­வாக்கி, செயற்­பட வைப்­பிப்­பது என்­பவை தொடர்­பா­க­வும், இலங்கை அர­சுக்­கு­ எ­தி­ரான தமிழ்ப் போரா­ளி­கள் தரப்­புக்­களை எவ்­வி­தம் கட்­டுப்­ப­டுத்­து­வ­தெ­ன­வும், இந்­தி­யா­வி­லுள்ள இலங்­கைத் தமிழ் அக­தி­களை இலங்­கைக்­குக் கூட்­டி­வ­ரு­வது தொடர்­பா­க­வும், இலங்­கை­யி­லுள்ள குடி­யுரிமைக்­குத் தகு­தி­யற்ற இந்­தி­யத் தமி­ழர்­களை இந்­தி­யா­வுக்­குத் திருப்பி அழைப்­ப­து­பற்­றி­யும் இரு நாடு­க­ளும் குறித்த ஒப்­பந்­தத்­தின் மூலம் இணங்­கிக் கொண்­டன.

சிங்­க­ளம் இலங்­கை­யின் அர­ச­ க­ரும மொழி என்­ப­து­டன் தமி­ழும் ஆங்­கி­ல­மும் அரச மொழி­க­ளா­கப் பேணப்­ப­டு­மெ­ன­வும் இணக்­கம் காணப்­பட்­டி­ருந்­தது.

அர­சி­யல் சிக்­கல் முடிச்சை அவிழ்க்க வழி தெரி­யாது
தடு­மா­றிய ரணில்

ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறவு முறை­யில் ஜே. ஆரின் மரு­ம­கன். கடை­சி­யாக நாட்­டின் தலைமை அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்ற கொஞ்­சக் காலத்­துக்­குள்­ளேயே, ரணில் கடும் அர­சி­யல் சிக்­கல் க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. கழுத்­துக்­கு அண்மையாக கத்தி வந்த நிலை. அர­சி­யல் ரீதி­யில் குழப்­பத்­துக்கு உள்­ளாக வேண்டி ஏற்­பட்­டது. ஒரே­யொரு ஆபத்­பாந்­தவ தரப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­பது, இந்­தி­யா­வின் கைப்­பொம்­மையே. இந்­திய அர­சின் வழி­காட்­ட­லின் படியே அவர்­கள் செயற்­ப­டு­கின்­ற­னர். முக்­கிய பிரச்­சி­னை­கள் தலை­ தூக்­கும்போது கூட்­ட­மைப்­பின் தலை­வர் இந்­தி­யா­வுக்கு ஓடு­வ­தற்­கான இர­க­சி­யம் இதுவே.

கடந்த ஏப்­ரல் 4ஆம் நாள் ரணி­லின் தலை­விதி நிர்­ண­யிக்­கப்­ப­டும் நாளாக அமைந்­தது. தம்­மீ­தான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத் தைத் தோற்­க­டிக்க வேண்­டு­மா­னால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு ரணி­லுக்கு அவ­சி­ய­மா­கி­யி­ருந்­தது. வழக்­கம்­போன்று பல்­வேறு நிபந்­த­னை­கள் ரணி­லின் முன்­னி­லை­யில் முன்­வைக்­கப்­பட்­டன.

கூட்­ட­மைப்­பால் முன்­வைக்­கப்­பட்ட பத்து நிபந்­த­னை­களை ஏற்­ற­தன் மூலமே ரணில் தமது தலைமை அமைச்­சர் பத­வி­யைத் தக்க வைத்­துக் கொள்ள முடி­யும் என்ற இக்­கட்டு நிலை. ரணி­லுக்கு வேறு வழி­யே­தும் இருக்­கி­வில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பத்து நிபந்­த­னை­க­ளும் ரணி­லால் ஏற்­கப்­ப­டு­கின்­றன. தலைக்கு வந்­தது தலைப்­பா­கை­யோடு போயிற்று என்ற விதத்­தில் ரணி­லுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட நம்்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தோற்­க­டிக்­கப்­பட்­டது.

ரணில் – சம்­பந்­தன் உடன்­பாடு

வடக்கு– கிழக்­குப் பிரச்­சி­னைக்கு உட­னடி அர­சி­யல் தீர்வு, அடுத்த தேர்­த­லுக்கு முன்­னர் புதிய அர­ச­மைப்பை நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­று­தல், படை­யி­னர் வச­முள்ள தமிழ் மக்­க­ளது காணி­களை விடு­வித்­தல், விசா­ர­ணை­ க­ளின்­றித் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­தல், காணா­மல் போனோர் தொடர்­பாக நட­ வ­டிக்கை மேற்­கொள்­ளல், வடக்­குக் கிழக்கு பகுதி மக்­க­ளது உரி­மை­க­ளைப் பாது­காத்­தல், தமிழ்ப் பகு­தி­க­ளின் இளை­ஞர் யுவ­தி­க­ளது வேலை­யில்­லாப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு, வேறு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு வடக்கு– கிழக்கு பகு­தி­க­ளில் நிய­ம­னங்­கள் வழங்­கா­தி­ருத்­தல், வடக்கு –கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள எட்டு மாவட்­டங்­க­ளுக்கு மாவட்­டச் செய­லா­ளர்­களை நிய­மிக்­கும்போது, தமி­ழர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளித்­தல். வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளது அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­க­ளில் அந்­தந்த மாகாண சபை நிர்­வா­கங்­க­ளது கருத்­துக்­களை உள்­வாங்­கிச் செயற்­ப­டு­தல் என்­ப­வையே அந்த பத்து நிபந்­த­னை­ க­ளு­மா­கும்.

மேற்­கண்ட நிபந்­த­னை­கள் செயல்­வ­டி­வம் பெறுமா? என்­பது குறித்து எது­வும் சொல்­வ­தற்­கில்லை. 1987ஆம் ஆண்­டில் ரணி­லின் மாம­னா­ரான ஜே. ஆர் விடு­த­லைப் புலி­க­ளுக்கு போர் நிறுத்த வாய்ப்பை வழங்­கிய போதி­லும், அவர்­கள் அதற்கு எது­வித மதிப்­பும் கொடுக்­க­வில்லை. 2002ஆம் ஆண்­டில் ஜே. ஆரின் மரு­ம­கன் ரணில் விடு­த­லைப் புலி­க­ளுக்கு போர் நிறுத்த வாய்ப்பை வழங்கி­ய­வே­ளை­யி­லும் அவர்­கள் அதற்­கும் கூட எது­வித மதிப்­பும் கொடுக்­காது போரை முன்­னெ­டுத்­த­னர்.

அந்த வகை­யில் பார்க்­கும்­போது, பாம்­பென்று நினைத்­து பிடித்திருந்த கைப்பிடி யைக் கைவிடவோ, இல்லை யேல் அது பழு­தை­தான் ( வைக்­கோல்­புரி ) என்று நம்பி கைப்­பி­டியை இறுகப் பற்றிக்கொள்­ளவோ இய­லாத நிலை­யில் ரணில் குழும்­பிப் போக நேர்ந்­துள்­ளது.

http://newuthayan.com/story/86780.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாட்டு இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று ஒரு குழு போராட்டம் நடத்துகின்றனர். பசு வதை செய்பவர்களை தலை கீழாக கட்டித் தொங்க விடுவோம் என்று அமித்ஷா அந்தப் பக்கம் முந்தாநாள் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கின்றார். வேள்வி அன்று கோயிலுக்கு போய் பார்த்தேன். சின்ன சின்ன கிடாய் ஆடுகளே ஒரு இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலே. இந்த நிலையில், கொத்துக் கடைக்காரர்களிடம் 'என்ன, கொத்தில இறைச்சியையே காணல்ல...' என்று முறைத்தால், அவர்களும் தான் என்ன செய்யிறது? அதிகமாக கண்ணில் படுவதை பிடித்து அடிக்கின்றார்கள் போல. ஒவ்வொரு ஒழுங்கையிலும் எவ்வளவு என்கிறீர்கள்.......கூட்டம் கூட்டமாக நிற்கின்றன........எங்களைப் பார்த்து முறைத்த படியே.
    • கட்டுரை தகவல் எழுதியவர், கோர்டன் கோரேரா பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மேற்குலகத்தைச் சேர்ந்த நாடுகள் நீண்ட காலமாகவே பேசி வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம், பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையக(GCHQ) உளவு முகமையின் தலைவர், “இது ஒரு சகாப்தத்தின் சவால்” என்று விவரித்துள்ளார். மேற்குலக நாடுகளில் சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்த்தல் மற்றும் ஹேக்கிங் செய்வதாக பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஹாங்காங் உளவு முகமைகளுக்கு உதவி வருவதாக பிரிட்டனில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமையன்று சீன தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது பிரிட்டன் வெளியுறவுத்துறை. அதிகாரம் மற்றும் செல்வாக்கு விஷயத்தில் சீனா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவி வரும் நிலையில், அது பொதுவெளிக்கு வந்துள்ளதற்கான அறிகுறியே இந்த கைதுகள். அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சீனாவை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், மூத்த அதிகாரிகள் மேற்கு நாடுகள் சீனாவின் சவாலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், உளவுத்துறை சார்ந்து பின்தங்கிவிட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இது மேற்கு நாடுகளில் சீன உளவு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாகவும், இரு தரப்பிலும் தீவிரமான தவறுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்குநாடுகள் போராடின வருகின்றன. ஒரு புதிய சர்வதேச ஒழுங்கை உருவாக்க முயற்சித்துவரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உறுதியே மேற்கத்திய அதிகாரிகளை கவலை கொள்ள செய்துள்ளது. பிபிசியின் புதிய சீனா - மேற்கு நாடுகள் என்ற தொடருக்காக பிரிட்டனின் வெளிநாட்டு உளவு முகமையான எம்ஐ6 அமைப்பின் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் அளித்த அரிதான பேட்டி ஒன்றில், “ சீனா உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்காவின் இடத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறது” என்றார். என்னதான் சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்கு நாடுகள் போராடி வருகின்றன. மேற்குலக நாடுகளின் கவனம் இதர பிரச்னைகளில் இருந்த வேளையில், உலகின் முக்கிய சக்தியாக சீனா உருவெடுத்தது என்று கூறுகிறார் எம்ஐ6 அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த நைகல் இன்க்ஸ்டர். இவர் 2006ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார். 2000களில் பெய்ஜிங் உலக அரங்கில் தன்னை உயர்த்துவதில் மும்முரமாக இருந்த வேளையில், மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் சிந்தனையும், உளவுத்துறைகளின் கவனமும், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் இராணுவ தலையீடுகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா சைபர் உளவு மூலமாகவும், அல்லது நிறுவனங்களில் நேரடியாக ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் உளவு பார்ப்பதாக மேற்குலக உளவு அமைப்புகள் கூறுகின்றன. சமீபத்தில், மீண்டும் எழுச்சி பெற்றுள்ள ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-காஸா போர் உலகிற்கு கூடுதல் அவசர சவால்களாக தோன்றியுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், சீனா ஏற்படுத்தும் பாதுகாப்பு அபாயத்தை விட, அதன் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்தும் வாய்ப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து அழுத்தம் உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தங்கள் உளவுத்துறை தலைவர்கள் அடிக்கடி சீனாவை பற்றி குறிப்பிட வேண்டாம் என்று விரும்புகின்றனர். வணிக நிறுவனங்களும் கூட தங்கள் ரகசியங்கள் குறிவைக்கப்படுவதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. "பொருளாதாரம் மற்றும் வணிக நலன்களின் திசையில்தான் காற்று வீசும்" என்கிறார் நைகல் இன்க்ஸ்டர். ஏற்கனவே 2000 களில் தொழில்துறை சார்ந்த உளவுப்பணியில் சீன உளவுத்துறை ஈடுபட்டிருந்தது என்று கூறும் அவர், அப்போதும் மேற்கத்திய நிறுவனங்கள் அமைதியாகவே இருந்தன என்கிறார். "அதை எதிர்ப்பது அல்லது வெளிப்படுத்துவது சீனாவின் சந்தைகளில் தங்கள் நிலையை பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். மேற்குலகின் பாணியில் இருந்து சீனா வேறு மாதிரியான பாணியில் உளவு பார்ப்பது மற்றொரு பெரிய சவாலாக உள்ளது. இது அதன் செயல்பாட்டை அடையாளம் காண்பதையும், எதிர்கொள்வதையும் கடினமாக்கியுள்ளது. முன்னாள் மேற்குலக உளவாளி ஒருவர், ஒருமுறை சீனா "தவறான வகையில்" உளவு பார்ப்பதாக சீனப் பிரதிநிதி ஒருவரிடம் கூறியதாகக் தெரிவித்தார். அதாவது, மேற்கத்திய நாடுகள் தங்கள் எதிரிகளைப் புரிந்துகொள்ள உதவும் வகையான உளவுத்தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்த விரும்புகின்றன. ஆனால் சீன உளவாளிகளுக்கு அதில் வெவ்வேறு முன்னுரிமைகள் உள்ளன. எஃப்.பி.ஐ.-இன் எதிர்உளவு அதிகாரி ரோமன் ரோஜாவ்ஸ்கி கூறுகையில், "ஆட்சியின் நிலைத்தன்மையே அவர்களின் முதல் குறிக்கோள்" என்று விளக்கினார். அதற்கு பொருளாதார வளர்ச்சியை தருவது அவசியமாகும். எனவே சீனாவின் உளவாளிகள் மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பெறுவதை ஒரு சிறந்த தேசிய பாதுகாப்புத் தேவையாகக் கருதுகின்றனர். பெய்ஜிங் உளவாளிகள் தாங்கள் சேகரித்த தகவல்களை சீன அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக மேற்கத்திய உளவாளிகள் கூறுகிறார்கள். ஆனால், மேற்குலக உளவுத்துறை முகமைகள் தங்கள் சொந்த உள்நாட்டு நிறுவனங்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்வதில்லை.   பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு,கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் கூட்டம் வெளிப்படையாக நடந்தது. ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பின் (ASIO) தலைவரான மைக் பர்கெஸ், "எங்கள் 74 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை நாங்கள் இருந்ததை விட எங்களது நிறுவனம் தற்போது மிகவும் பிஸியாக உள்ளது" என்று என்னிடம் கூறினார். "நான் இதர நாடுகளை மிகவும் அரிதாகவே குறிப்பிட்டு அவர்கள் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறேன். காரணம் உளவு என்று வரும்போது நாங்களும் அவர்களுக்கு அதையேதான் செய்கிறோம்” என்று கூறுகிறார் பர்கெஸ். "வணிக உளவு பார்ப்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம், அதனால்தான் சீனா இந்த விஷயத்தில் சிறப்பு கவனத்தை பெறுகிறது." மேற்கத்திய நட்பு நாடுகள் இந்த அச்சுறுத்தலைப் புரிந்துகொள்வதில் தாமதம் காட்டியுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "இது நீண்ட காலமாக நடந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன், கூட்டாக நாங்கள் அதை தவறவிட்டு விட்டோம்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார். கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் வெளிப்படையாக நடந்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் என்று அழைக்கப்படும் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் நான் இருந்தேன். ஒரு அசாதாரண நிகழ்வாக, இந்த ஐந்து நாடுகளின் உளவுத்துறை தலைவர்களும் வெளிப்படையாக சீனா மேற்கொண்டு வரும் வணிக உளவு குறித்து எச்சரிக்கை விடுத்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டம், சீனா குறித்த எச்சரிக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கான மிகவும் திட்டமிட்ட முயற்சியாகும். காரணம் இன்னமும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் இந்த எச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்ற அச்சம் உள்ளது. இதற்காக சிலிக்கான் வேலி தேர்வு செய்யப்பட்டதும் கூட காரணத்துடன் முடிவு செய்யப்பட்டதே. டெக் நிறுவனங்கள் நிறைந்த அந்த பகுதியில் , சைபர் உளவு மூலமாகவும், நிறுவனங்களில் ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் தொழில்நுட்பத்தை திருடும் சீனாவின் செயல் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த செயல்களுக்கான சீனாவின் ஆதாரங்கள் வேறு அளவில் உள்ளன. ஒரு மேற்கத்திய உளவுத்துறை அதிகாரியின் தகவலின்படி, சீனாவில் உளவு மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் சுமார் 6,00,000 பேர் பணிபுரிவதாக மதிப்பிட்டுள்ளார். இது உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகம்.   மேற்கத்திய பாதுகாப்பு சேவைகள் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரிக்க முடியாது. பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனமான எம்ஐ6 கூற்றுப்படி, பிரிட்டனில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்டவர்கள், சீன உளவாளிகளால் லிங்க்டு-இன் போன்ற தொழில்முறை நெட்வொர்க்கிங் தளங்கள் வழியாக உறவுகளை வளர்ப்பதற்காக அணுகப்பட்டுள்ளனர். "அவர்கள் உண்மையில் வேறொரு நாட்டைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தின் எதிர்காலத்தையே அழிக்கக் கூடிய தகவல்களைக் அவர்களுக்கு பகிர்ந்துகொண்டிருப்பார்கள்" என்று எம்ஐ5 - இன் தலைவர் கென் மெக்கலம் கலிபோர்னியா கூட்டத்தில் என்னிடம் கூறினார். சீனா உள்நாட்டு கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில், வெளிநாட்டில் அதன் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை மட்டுப்படுத்தவும் அதன் உளவாளிகளை பயன்படுத்துகிறது. சமீபத்தில், மேற்கத்திய அரசியலை குறிவைத்து இயங்கி வந்த சீன உளவாளிகள் பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சீனாவின் "வெளிநாட்டு காவல் நிலையங்கள்" இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேற்கு நாடுகளில் உள்ள சீன அதிருப்தியாளர்களைப் கண்காணிப்பதற்காக, பெய்ஜிங்கின் உளவுத்துறை அதிகாரிகள் பொதுவாக உளவாளிகளை களத்தில் நேரடியாக பயன்படுத்துவதை விட, தனியார் புலனாய்வாளர்களை பணியமர்த்துவது அல்லது அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது போன்று தொலைதூரத்தில் இருந்தே செயல்படுகிறார்கள் என்று கூறுகின்றனர் பாதுகாப்பு அதிகாரிகள். உண்மையில், 2000களின் முற்பகுதியில் பிரிட்டன் அரசாங்க அமைப்புகளை இலக்காகக் கொண்ட முதல் இணைய நிகழ்வுகள் ரஷ்யாவிலிருந்து அல்ல, சீனாவிலிருந்து வந்தவை. அவை திபெத்திய மற்றும் உய்குர் குழுக்கள் போன்ற வெளிநாட்டு எதிர்ப்பாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அரசியல் தலையீடுகள் பற்றி கவலைப்படுவதில் தற்போது ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, தேர்தல்களில் வேட்பாளர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்டறியத் தொடங்கியதாக ASIO அமைப்பு கூறுகிறது. "அவர்கள் இங்கு தங்கள் விருப்பங்களை புகுத்த முயற்சிக்கிறார்கள், அதை செய்வதற்கு திறன் படைத்தவர்களும் கூட. அவர்கள் அதை மறைமுகமான வழிகளில் செய்வதை நாங்கள் விரும்பவில்லை" என்று மைக் பர்கெஸ் பிபிசியிடம் கூறினார். இதை எதிர்கொள்ளும் வகையில், 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா புதிய சட்டங்களை இயற்றியது.   படக்குறிப்பு,பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ ஜனவரி 2022 இல், பெய்ஜிங்கின் விருப்பங்களை முன்னெடுப்பதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ பல பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதாகக் குற்றம் சாட்டி எம்ஐ5 ஒரு அசாதாரண எச்சரிக்கையை வெளியிட்டது. அவர் தற்போது எம்ஐ5க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் தான் பிரிட்டன் ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இது வெளிநாடுகளின் தலையீடு மற்றும் பிற செயல்பாடுகளைச் சமாளிக்க புதிய அதிகாரங்களை வழங்கியது. ஆனாலும் , இவை தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சீனா மேற்குலகை உளவு பார்ப்பது போலவே, மேற்குலகமும் சீனாவை உளவு பார்க்கிறது. ஆனால் எம்ஐ6 மற்றும் சிஐஏ போன்ற மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு சீனாவில் உளவுத்தகவலை சேகரிப்பது தனித்தன்மை வாய்ந்த சவாலாக உள்ளது. நாட்டிற்குள் கண்காணிப்பின் பரவலான தன்மை, டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்டவை மனித நுண்ணறிவின் பாரம்பரிய மாதிரி - உளவாளிகளை நேருக்கு நேர் சந்திப்பதை - கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்குகிறது. சீனா ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சிஐஏ உளவாளிகளின் பெரிய வலையமைப்பு ஒன்றை துடைத்தெடுத்தது. மேலும் தகவல் தொடர்புகளை இடைமறித்து டிஜிட்டல் நுண்ணறிவை சேகரிக்கும் பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமைக்கு தொழில்நுட்ப ரீதியாக இது கடினமான இலக்காகும். ஏனெனில் சீனா மேற்கத்திய தொழில்நுட்பத்தை விட, அதன் சொந்த தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது. "சீனாவின் பொலிட்பீரோ எப்படி சிந்திக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று ஒரு மேற்கத்திய அதிகாரி ஒப்புக்கொண்டார். இது புரிதலுக்கு வழிவகுக்கும் மற்றும் இது கடுமையான அபாயங்களைக் கொண்டுள்ளது. பனிப்போரில், மாஸ்கோ எவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்தது என்பதை மேற்கு நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிய காலங்கள் இருந்தன. இதன் விளைவாக இரு தரப்பும் விரும்பாத ஒரு பேரழிவுப் போரை நெருங்கின. தைவான் மீதான கட்டுப்பாட்டை மீட்பதற்கான சீனாவின் விருப்பத்தின் மீது, இன்றும் இதேபோன்ற தவறான கணக்கீடுகளின் அபாயங்கள் உள்ளன. தென் சீனக் கடலிலும் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது. "நாம் வாழும் மிகவும் ஆபத்தான, போட்டி நிறைந்த இந்த உலகில், எப்போதும் மோதலைப் பற்றி கவலைப்பட வேண்டும், அதைத் தவிர்ப்பதற்கான பாதையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று எம்ஐ6 இன் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் என்னிடம் கூறினார். "குறிப்பாக நீங்கள் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத அதிகாரம் கொண்டிருக்கும்போது, எனது சேவை அங்குதான் வருகிறது." எம்ஐ6-இன் பணியே, சாத்தியமான அபாயங்கள் வழியாக செல்ல தேவையான உளவுத்தகவல்களை வழங்குவது என்று அவர் கூறுகிறார். "வரையறையின்படி தவறான புரிதல்கள் எப்போதுமே ஆபத்தானவை - உங்களிடம் தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதும், நீங்கள் போட்டியிடும் நபர்களின் நோக்கங்களைப் பற்றிய நுண்ணறிவு இருப்பதும் எப்போதும் சிறந்தது" என்கிறார் அவர். இது தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எம்ஐ6 உளவு ஸ்தாபனம், சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சில ராணுவத் தொடர்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்ற உண்மை பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது. உளவு பார்ப்பது பற்றிய அனைத்து வெளிப்பாடுகளும் இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களிடையே அவநம்பிக்கையையும் அச்சத்தையும் தூண்டுகிறது. இது நெருக்கடி நிலையில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பயணிப்பதற்கான வழியைக் கண்டறிவது, இருதரப்பு உறவின் மோதல் போக்கிலிருந்து விலகுவதற்கு இன்றியமையாத ஒன்றாகும். https://www.bbc.com/tamil/articles/c03dllppx7wo
    • தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் : முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்து 18 MAY, 2024 | 04:58 PM   தமிழர்கள் ஒருதேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதோடு அவர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்த இயலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு,-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதீன முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் வாசிக்கப்பட்ட இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது.  ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வுப் பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது.  இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வுப் பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது. ஈழத்தமிழினப் படுகொலை ஒரு வரலாற்று செயன்முறையாக காலணித்துவத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. தமிழினப்படுகொலையின் வழிவரைபடம் பேரரசுக் கட்டமைப்பின் புவிசார் அரசியல் நலன்களைத் தவிர்த்து உருவாக்கப்படவில்லை என்பது ஐயமுற தெரிகின்றது. புவிசார் அரசியல் நலன்களின் பிராந்திய தளங்களில் ஏகாதிபத்தியத்தை தக்கவைப்பதற்காக பேரரசுக் கட்டமைப்பை துணைக் குத்தகைக்கு விட்டுள்ளது. அதனுடைய ஒரு வடிவமாகத்தான் இஸ்ரேலையும் இலங்கையையும் அவதானிக்க வேண்டும். தமிழினப்படுகொலை நடந்து 15ஆவது ஆண்டில் பலஸ்தீனப் படுகொலை அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பலஸ்தீனப் படுகொலையை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு தமிழினப் படுகொலைக்கும்  நடைபெற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப் படுகொலைக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைப் பண்புகள் இருப்பதை அவதானிக்கலாம். ஆசியாவில் இலங்கைத் தீவினதும், குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமும் மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தின் கேந்திர முக்கியத்துவமும் புவிசார் அரசியலில் கோலோச்சுவதற்கு பேரரசுக்கு மிக அவசியமானது. பேரரசைக் கட்டமைப்பதற்கு அதன் நலன் சார்ந்த எந்த விலையையும் கொடுப்பதற்கு பேரரசு தயாராக இருப்பதை இவை கோடிட்டுக் காட்டுகின்றன. பேரரசும் அதன் வலையமைப்பும் உற்பத்தி செய்கின்ற இராணுவத் தளபாடங்களுக்கும் பேரரசின் பொருளாதார இருப்புக்கும் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போர்க்களங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஏக பேரரசை கட்ட முயலும் நாடுகள் தான் மனித உரிமையையும் பொறுப்புக்கூறலையும் போதிக்கின்றன என்பது அபத்தம். இவை இரண்டுமே ஒவ்வாத்தன்மை கொண்டவை. இது பலஸ்தீனப் படுகொலையில் மிகத் தெளிவாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2002 பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு அமெரிக்கா காரணமாய் இருந்தது என்பது ஏற்கனவே ஆய்வுகள் மூலம் வெளிவந்த உண்மையாய் உள்ளது. அதுவே இன்று காசாவில் போர் நிறுத்தத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகின்றது. ஐ.நா. சபையும் அதன் ஏனைய அலகுகளும் சர்வதேச சமூகமும் அதன் கட்டமைப்பும் எவ்வாறு முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய மனித பேரவலத்தை தடுக்கமுடியாமல் போனதோ அதேபோல் இன்று அவர்களால் பலஸ்தீனப் படுகொலையையும் தடுக்கமுடியாமல் போனது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை. தமிழினத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி, புதுப்புது வடிவங்களை எடுத்துள்ளன. அது தமிழினத்தின் தன்னிறைவுப் பொருளாதாரத்தின் மீது, பண்பாட்டின் மீது, கல்வியின் மீது, ஈழத்தமிழினத்தின் மரபுகள் மீது, சைவத்தலங்கள் மீது, தொல்லியல் வரலாறு மீது, ஈழத்தமிழினத்தின் வரலாறு மீதானதாக இருக்கலாம். ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள உளவியல் போரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமாகவே கருத வேண்டியுள்ளது.  உளவியல் போரின் நோக்கம், ஈழத்தமிழினம் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையைச் சிதைத்தலாகும்.  தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்கள் தான் ஈழத்தமிழினத்தின் கூட்டுப் பிரக்ஞையை விழிநிலையில் வைத்துக்கொண்டுள்ளது. தமிழ்த் தேச நிலத்தின் மீதான போரின் பரிமாணங்களின் வடிவங்கள் எல்லாரும் அறிந்ததே. முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழினம் தனது இருப்பின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. தமிழினத்தின் இருப்பை சவாலுக்குட்படுத்தும் அலகுகளை எதிர்த்து போராடவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்குள் தமிழினம் வலிந்து நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுக் கடமை ஒட்டுமொத்த தமிழினத்துக்கானது. யாரும் இப்பாரிய பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாத வரலாற்றுத் தேவைக்குள் நாம் இருக்கின்றோம். முள்ளிவாய்க்கால், பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அடக்குமுறை எதிர்ப்பின் குறியீடும் கூட. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளில் கொத்துகொத்தாக கொல்லப்பட்ட உறவுகளை நினைக்கையில் அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும் இலக்குகளையும் நினைத்து, குருதி உறைந்து சிவந்துபோன மண்ணிலிருந்து சபதம் எடுக்கின்றோம். எத்தடை வரினும் எமது இலக்கை அடைவோம் என்று எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம். அதன் அடிப்படையில், * நினைவுகூரல் கூட்டுரிமை சார்ந்தது மட்டுமல்ல பண்பாட்டு உரிமையும் கூட. ஆகவே இலங்கை அரசு தமிழினப் படுகொலை நினைவுகூரலைத் தடுக்க முடியாது. * தமிழினம் தமிழினப் படுகொலைக்கான நீதியை சர்வதேச விசாரணைக்கூடாகவே கோரி வருகின்றது. அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். * தமிழினம் ஒரு தனித்துவமான தேசத்திற்குரிய அலகுகளை தன்னகத்தே கொண்ட இனம். * கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கூடாக தமிழின இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. இதுவும் இன அழிப்புப் போரின் ஓர் அங்கமென நாம் கருதுகின்றோம். * தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும். எம் பாசமிகு உறவுகளே, தமிழ் தேசிய விடுதலை தரும் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது என்று வாசித்து முடித்தார். https://www.virakesari.lk/article/183888
    • அது 1983 ஆம் ஆண்டு காலப்பகுதி. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு பூராகவும் வெடித்த இனவாதக் கிளர்ச்சியானது, இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானித்த தருணமாகும். தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தினால் தவறான நோக்கங்கள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இனவாதக் கிளர்ச்சியின் முடிவே, பிரிவினைவாதப் போரை நோக்கி கொண்டு சென்றதன் ஆரம்பமாக அமைந்தது.   வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களின் இளம் இரத்தமானது, தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் ஏற்பட்ட வெறுப்பாக மாற, அதிக காலம் செல்லவில்லை. தங்கள் சகோதர-சகோதரிகளுக்கு, எதிராக தெற்கில் நடந்த அநீதியை எதிர்கொண்ட அவர்களை, தங்களுக்கிடையே ஒன்றிணைந்து, தங்கள் சமூகத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தை நோக்கி நகர்த்தியது. இறுதியில், அது 30 ஆண்டு கால யுத்தமாக மாறியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.   நமக்கு நாமே துப்பாக்கிகளை நீட்டிய நிலையை ஏற்படுத்துகின்ற இத்தகைய ஒரு தலைவிதியை உருவாக்க அந்த வரலாறே காரணமாகும்.   முப்பது வருடகால போரினால் வடக்கிலும் தெற்கிலும் உள்ள பெண்கள் தங்கள் அன்பான கணவன்களை இழந்தனர். பிள்ளைகள் தங்கள் பெற்றோரை இழந்தனர். பலர் தங்கள் கண்கள், கால்கள் கைகளை இழந்தனர்.   யுத்தத்தினால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என இன்றும், குறிப்பிட்டுக் கூற முடியாத நிலை காணப்படுகின்றது.   பலர் இன்னும் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். இன்றும், வடக்கில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்படும் எலும்புக்கூடுகள் கொண்ட புதைகுழிகள், கடந்த காலத்தின் இருண்ட மற்றும் கொடூரமான பயங்கரத்தை எமக்குக் காண்பிக்கின்றன.   போரில் வெற்றி என்பது இல்லை. யுத்தத்தினால் கிடைப்பது ஒன்றும் இல்லை. போரில் இழப்புகள் மட்டுமே கிடைக்கும். போரின் முடிவு வெற்றி அல்ல. சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுதான் மிகவும் கடினமான விடயமாகும். வடக்கிலும் தெற்கிலும் எமக்கிடையில் எழுந்த சந்தேகமும் பயமும் இப்போதும் அவ்வப்போது ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. அந்த அளவிற்கு எமது உள்ளங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.   அப்படியாயின், எமது காயங்களை நாம் ஆற்ற வேண்டாமா? வடக்கிற்கு ரயிலில் செல்வது நல்லிணக்கம் அல்ல, தெற்கின் தென்னை மரங்களை வடக்கில் நடுவதும், வடக்கின் பனை மரத்தை தெற்கில் நடுவதும் நல்லிணக்கமல்ல. நல்லிணக்கம் என்பது எம்மை நாமே அறிந்து கொள்வதாகும். கலாசார பன்முகத்தன்மையை நாம் மதிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். எமது உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு அவசியம் நட்பின் கரங்களாகும். நம்பிக்கையுடனான அன்பே அதற்கு அவசியம். மற்றவரை மதிப்பதே அதற்கு தேவையாகிறது. அது அரசியலாக இருக்க வேண்டியதில்லை. அது மனிதாபிமானமாக மட்டும் இருந்தால் போதும். வாருங்கள் இணையுங்கள் உங்கள் நட்பின் கரங்களை நீட்டுங்கள்... அது வேறு யாரோ அல்ல அது எமது சகோதரரே... இனி போதும் இறந்தகாலத்தைப் புரிந்து நிகழ்காலத்தை உருவாக்க ஒன்றிணைவோம்... கட்டியணைப்போம்... #TurningPoint #maheelbandara https://www.facebook.com/story.php?story_fbid=997802095039406&id=100044288731301&mibextid=xfxF2i&rdid=OSMeEXOJfsyopIp6
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.