Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய இலங்கை அரசியல் செய்திகள் ஒரே பார்வையில்....26.04.2018

Featured Replies

23 பேரும் அரசில் தொடர்ந்து நீடிப்போம் : 16 பேர் எதிரணியில் இருக்கலாம் என்கிறார் சுதந்திரக் கட்சியின் மஹிந்த சமரசிங்க

09-4cf9a0114bc72bfc66b3a07ad4b4791a1fc0de8b.jpg

 

  (ஆர்.யசி)

தேசிய அரசாங்கத்தை குழப்பாது தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானமாகும். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிக்காது நிராகரித்த 23 உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தை பலப்படுத்துவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணிலை எதிர்க்கும் 16 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமரலாம் எனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி

 தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடும் நோக்கமும் தேசிய அரசாங்கத்தை பலப்படுத்துவது என்பதேயாகும். இதுவரை அமைச்சரவையில் நாம் எவ்வாறு செயற்பட்டுள்ளோம் என்பதை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கையினை மேலும் உறுதியாக்கி அதே நிலையில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்பதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானம்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக பாராளுமன்றத்தில் செயற்படும் 39 உறுப்பினர்களும் எந்த நேரத்திலும் கட்சியை பலப்படுத்துவார்கள் என்ற தீர்மானமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தை விரும்பாத 16 உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தீர்மானம் எடுத்தாலும் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறப்போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியை பலப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களாக செயற்படவே தீர்மானம் எடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின் பெரும்பான்மை நிலைப்பாடு தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதாகும். ஆகவே பிரதமருக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் போது வாக்களிக்காது செயற்பட்ட 23 உறுப்பினர்களும் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவுள்ளோம். ஏனைய 16 உறுப்பினர்களும் எதிரணியில் அமரலாம். அல்லது அவர்கள் மீண்டும் அரசாங்கத்தில் இணைய விரும்பினால் அவர்களை இணைத்துக்கொள்வது குறித்து நாமே கூடிய அக்கறை கொண்டு செயற்படுவோம்.

அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கவும் பிரதமரிடம் நாமே கோரிக்கைகளை முன்வைப்போம். ஆனால் அவர்கள் இன்றுவரை அரசாங்கத்தில் இணைவதாக கூறவில்லை. அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். எனவே அவர்களை நாம் கட்டாயப்படுத்தி அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள முடியாது. அவர்கள் எதிரணியில் அமர விரும்பினால் அதற்கு நாம் தடையாக செயற்பட மாட்டோம். அதேபோல் அவர்கள் எதிர் தரப்பில் அமரும் காரணத்தினால் அவர்களுக்கு கட்சியில் வழங்கப்பட்டுள்ள பதவிகள் எவையும் பறிக்கப்பட போவதில்லை.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னரே நாம் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கவுள்ளோம். இடைப்பட்ட காலத்தில் நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சகல தரப்புடனும் கலந்துரையாடி பொதுவான நிலைப்பாடு ஒன்றினை எட்டவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்­திரக் கட்­சியின் மேலும் 10 பேர் எதி­ர­ணியில் இணைவர் : கூட்டு எதி­ரணி முக்­கி­யஸ்தர் தெரி­விப்பு

 

(ரொபட் அன்­டனி)

தேசிய அர­சாங்­கத்தில் எஞ்­சி­யி­ருக்­கின்ற சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த 23 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் மேலும் 10 பேர் எதிர்க்­கட்­சியில் அமர்­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றனர் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

சற்று முன்னர் எனக்கு இந்த தகவல் கிடைத்­தது. எனவே சில தினங்­களில் அர­சி­யலில் பாரிய மாற்­றங்­களை எதிர்­பார்க்­கலாம் என்று நேற்று கேச­ரிக்கு கருத்து வெளி­யிட்ட  குறித்த முக்­கி­யஸ்தர் குறிப்­பிட்டார். கூட்டு எதி­ர­ணியின் பிர­பல பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்; 

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் 23 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்­ப­தற்கும் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்­சியில் அமர்­வ­தற்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனு­மதி வழங்­கி­யி­ருக்­கிறார். அந்த வகையில் அண்­மையில் அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து 16 பேர் கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து கொள்­வார்கள். அப்­போது கூட்டு எதி­ர­ணியின் பலம் அதி­க­ரிக்கும்.

இதே­வேளை சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்­கின்ற 23 பேரில் மேலும் 10 பேர் கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து கொள்­வார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த தகவல் தற்­போது எனக்கு கிடைத்­தது. எனவே விரைவில் அர­சி­யலில் பாரிய மாற்­றங்­களை எதிர்­பார்க்­கலாம்.

இதே­வேளை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வர கூட்டு எதி­ரணி தீர்­மா­னிக்­க­வில்லை. சிலர் சில கருத்­துக்­களை முன்­வைத்­த­னரே ஒழிய தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு பிரச்­சி­னை­களை மட்டும் பேசிக்­கொண்­டி­ருக்கும் இரா. சம்­பந்தன் தொடர்ந்தும் இந்தப் பத­வியில் இருக்­க­வேண்­டுமா என்­பது குறித்து சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அர­சாங்­கத்­திற்கு சம்­பந்தன் போன்­றொரு எதிர்க்­கட்சி தலைவர் தேவைப்­ப­டலாம். ஆனால் நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­களை பேசு­வ­தற்கு பொருத்­த­மான ஒரு எதிர்க்­கட்சித் தலைவர் தேவைப்­ப­டு­கிறார். உல­கி­லேயே பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்த எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மட்­டுமே இருப்பார் என நாங்கள் எண்­ணு­கிறோம் என்றார்.

தேசிய அர­சாங்­கத்தில் சுதந்­தி­ரக்­கட்சி நீடிப்­பதா இல்லை என்­பது குறித்து ஆராயும் சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கிய கூட்டம் நேற்று முன்­தினம் இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பிரதமரை எதிர்த்து வாக்களித்த 16 பேரும்எதிர்க்கட்சியில் அமர்வதற்கும் நடுநிலை வகித்த 23 பேரும் தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கும் ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுச் செயலாளராக அகில, பிரதித் தலைவராக சஜித் தேசிய அமைப்பாளர் நவீன், தவிசாளர் கபீர் ஹாஷிம்

17-f4e6a8078f9a6ac2cbc6251c19d6620785a90055.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு பெயர்கள் பரிந்துரை; இன்றைய செயற்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும்
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களின் கீழ் பல்வேறு முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் நேற்று நடைபெற்ற கட்சியின் மறுசீரமைப்பு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம், பிரதிதித் தலைவராக சஜித் பிரேமதாஸ, தேசிய அமைப்பளராக நவீன் திஸாநாயக்க, பொருளாளராக ஹர்ஷ டிசில்வா, உப தலைவராக ரவி கருணாநாயக்க மற்றும் தவிசாளரக கபீர் ஹசிம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 

அந்த வகையில் நேற்றைய மறுசீரமைப்பு சபைக் கூட்டத்தில் இவ்வாறு பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட் நிலையில் இன்று நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமணங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலேயே நேற்றைய மறுசீரமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது பல்வேறு வாதப் பிரதிவாதங்களின் பின்னர் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.

ஒரே நாளில் நான்கு கூட்­டங்கள் நள்­ளி­ரவை தாண்­டி­யது கூட்டம்

 

(ஆர்.யசி)

தேசிய அர­சாங்­கத்தில் இணை­வது குறித்து நீண்ட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் பொது நிலைப்­பாட்­டினை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எட்­டி­யுள்ள நிலை­யிலும் கட்­சிக்குள் பாரிய முரண்­பா­டுகள் உரு­வா­கி­யுள்­ளன. கட்­சியின் ஏக­ம­ன­தான நிலைப்­பாட்­டினை எட்ட ஒரே நாளில் நான்கு தடை­வைகள் ஜனா­தி­ப­திக்கும் கட்சி உறுப்­பி­னர்­களும் இடையில் பேச்­சு­வார்த்­தை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  

தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்­பதா அல்­லது எதிர்க்­கட்­சியில் அமர்­வதா என்­பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி நீண்ட ஆய்­வினை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்­தினம் இரவு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் தீர்­மானம் எடுப்­ப­தாக குறிப்­பிட்­டனர்.

எனினும் நேற்று முன்­தினம் காலையில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடையில் நான்கு பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த கலந்­து­ரை­யா­டலின் பின்னர் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது. எனினும் ரணில் எதிர்ப்பு அணி­யினர் தாம் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி எதிர்க்­கட்­சியில் அமர்வோம் என்ற இறுக்­க­மான நிலைப்­பாட்­டினை முன்­வைத்­துள்­ளனர். இதனால் நீண்­ட­நேரம் இழு­ப­றியில் கூட்டம் நீடித்­தது.

நேற்று முன்­தினம் காலையில் அமைச்­ச­ரவை கூட்டம் முடி­வ­டைந்த பினனர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் 8 பேரையும் ஜனா­தி­பதி சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். தேசிய அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அங்கம் வகிக்க எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது என்­பது குறித்து இதன் போது கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன் வெற்­றி­ட­மா­கி­யுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அமைச்­சுப்­ப­த­வி­க­ளுக்கு யாரை நிய­மிப்­பது என்­பது குறித்தும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

அதன் பின்னர் பிற்­பகல் ஐந்து மணி­ய­ளவில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர் 16 பேருடன் ஜனா­தி­பதி முக்­கிய சந்­திப்­பொன்­றினை முன்­னெ­டுத்­துள்ளார். தாம் எதிர் தரப்பில் அம­ர­வுள்­ள­தாக 16 உறுப்­பி­னர்­களும் தமது நிலைப்­பாட்­டினை முன்­வைத்­து­ள­துடன் தமது நிலைப்­பாட்டில் எந்த மாற்­றமும் இல்­லை­யென கூறி­யுள்­ளனர்.

அவர்­களின் நிலைப்­பாட்­டினை ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­வித்­துள்­ளதை அடுத்து அவர்கள் சுயா­தீ­ன­மாக தமது தீர்­மா­னத்தை முன்­னெ­டுக்க முடியும் என்­பதை ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். அதேபோல் தாம் சுயா­தீ­ன­மாக செயற்­பட்ட போதிலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யையும் ஜனா­தி­ப­தி­யையும் ஒரு­போதும் பல­வீ­னப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தில்லை எனவும் நெருக்­க­டிகள் ஏற்­படும் நிலையில் ஜனா­தி­ப­தியை பாது­காக்க சகல நட­வ­டிக்­கை­க­ளையும் தாம் முன்­னெ­டுப்­ப­தா­கவும் அவர்கள் இந்த சந்­திப்பில் தெரி­வித்­துள்­ளனர்.

பின்னர் இரவு ஏழு மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்டம் ஜனா­தி­பதி தலை­மையில் இடம்­பெற்­றது. இதில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக பார­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 39 உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­டனர். இதன்­போது தேசிய அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அங்கம் வகிப்­பது குறித்த தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது. பிர­த­மரை எதிர்க்கும் 16 உறுப்­பி­னர்­களும் எதி­ர­ணியில் அமர்­வ­துடன் ஏனைய 23 உறுப்­பி­னர்­களும் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது,.

 அடுத்த பார­ளு­மன்ற அமர்­வுகள் குறித்தும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் குறித்தும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. அதன் பின்­னரே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் இரவு 8 மணிக்கு கூடி­யது. இதில் சகல உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­ட­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மே தின­கூட்டம் மற்றும் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களின் போது எடுக்கும் தீர்மானங்கள் குறித்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவையும் தாண்டிய நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய முறைமையிலேயே நடத்துவோம்: பாராளுமன்றம் அனுமதித்தால் செப்டெம்பரில் தேர்தல் என்கிறார் பைஸர் முஸ்தபா

06-8a05c4000e111a5e9cf26d8907ee13b540f0037d.jpg

 

 (இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கே உத்தேசித்துள் ளோம்.இதுதொடர்பில்,பாராளுமன்றத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் செப் டெம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் என்று மாகாண சபை மற்றும் உள்ளூ ராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.  

  
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   

அவர் மேலும் குறிப்பிடுகையில்  இடம்பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகின்றது. உறுப்பினர்களின் தொகையினை அதிகரிப்பதால் மாத்திரம் மக்களுக்கு முறையான சேவையினை வழங்கி விட முடியாது. எனவே எதிர்வரும் காலங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 

தேசிய அரசாங்கத்தில் காணப்படும் ஒவ்வொரு துறைகளிலும் காணப்படும் குறை பாடுகள் தொடர்பில் குற்றம் சுமத்துவது ஒரு சிலரின் அரசியல் கொள்கையாக காணப்படுகின்றது . தற்போது மாகாண சபைகள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றங்களை சுமத்தி வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேர்தலுக்கு பயம் என்ற காரணத்தினால் தேர்தலை தொடர்ந்து பிற்போட்டு வருகின்றது என குற்றம் சுமத்துகின்றனர்.

இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலானது இலங்கை அரசியல் வரலாற்றில் நீதியானதும் , சுயாதீனமானதுமாகவே இடம் பெற்றது. புதிய தேர்தல் முறைமையினை பயன்படுத்தி பல விடயங்கள் நீக்கப்பட்டு தேர்தல் இடம் பெற்றது. மாகாண சபை தேர்தலும் தற்போது பலரின் எதிர்பார்ப்பினை பெற்றதாக காணப்படுகின்றது. சிலர் பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலினை நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர்.

மாகாண சபை தேர்தல் எக்காரணத்திற்காகவும் பழைய முறைமையில் இடம் பெறமாட்டாது. தேசிய அரசாங்கம் ஒருபோதும் அதற்கு அனுமதி வழங்காது. இந்த தேர்தல் முறையில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன என்று கூறுபவர்கள் தேர்தலில் எதிர்பார்த்த பெறுபேகள கிடைக்கப்பெறாதவர்களாகவே காணப்படுகின்றனர். புதிய தேர்தல் முறையின் காரணமாக உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பல விடயங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பெண் பிரதிநிதித்துவத்தின் காரணமாக தற்போது 1919 பெண் பிரதிநிதிகள் உள்ளுராட்சி மன்றங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறான வாய்ப்புக்கள் பழைய தேர்தல் முறைமையில் காணப்படவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் சில் குறை பாடுகள் காணப்படும் பட்சத்தில் அவற்றிறகான தீர்வினை மாத்திரமே காணவேண்டும். அதற்காக இந்த தேர்தல் முறைமையினை இரத்து செய்து பழைய தேர்தல் முறைமையினை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமற்ற விடயம். புதிய தேர்தல முறைமையானது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை உறுப்பினர்களின் ஆதரவுடனே நிறைவேற்றப்பட்டது.

மாகாண சபை தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் குறை பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு உத்தேசிக்கப்பட்ட மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். நாட்டு மக்களும் புதிய தேர்தல் முறைமையினையே விரும்பியுள்ளனர். மக்களின் தேவைகளை உணர்ந்தே அரசாங்கம் செயற்பட வேண்டும் . பழைய தேர்தல் முறைமையினை ஆதரிப்பவர்கள் தமது சுய நல விடயங்களை மாத்திரம் கருத்திற் கொண்டு அரசாங்கத்தில் தாக்கம் செலுத்துகின்றனர் என்பது மாத்திரம் உண்மையாக காணப்படுகின்றது.

ஒரு நாடு என்ற ரீதியில் நாங்கள் நீண்ட காலமாக சாதாரண தீர்வற்ற பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். நாட்டின் மக்களின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதி என்ற வகையில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் . அதே வேளை நாட்டின் சாதாரண பொதுவான சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மிரிஸ்ஸ கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குடியிறுப்புக்களை அமைத்து வாழும் மக்களின் குடியிறுப்புக்களை அகற்ற நான் தடையாக உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

பல காலமாக அதே இடத்தில் வாழ்ந்த மக்களை திடீரென வெளியேற சொன்னால் அங்கு சமுக பிரச்சினைகள் தோற'றம் பெறும்.ஆகவே பலவந்தமாக இம்மக்களை வெறியேற்ற முடியாது பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். வெளிநாட்டவர்களிடம் அநாகரிகமாக செயற்பட்டவர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தேசிய அர­சாங்கம் தொடர்பில் விரைவில் புதிய உடன்­ப­டிக்கை : ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயார் என்­கி­றது ஐ.தே.க.

07-bfb31196ea40acfa1f300e1216417ea06add8773.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

அடுத்த வருடம் நடத்­தப்­ப­ட­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு ஐக்­கிய தேசியக் கட்சி முழு­மை­யாக தயா­ரா­கி­யுள்­ளது. அதே­போன்று தற்­போ­தைக்கு சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்கும் நல் லாட்சி அர­சாங்­கத்தை யாராலும் இல­குவில் கவி ழ்த்து விட முடி­யாது  என பாரா­ளு­மன்ற சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல தெரி­வித்தார். 

தேசிய அர­சாங்­கத்தின் இரு பிர­தான கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் வெகு விரைவில் கைச்­சாத்­தி­டப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கண்­டியில் நேற்று நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்த அர­சாங்­கத்தை யார் முயற்சி செய்­தாலும் இல­குவில் கவிழ்க்க முடி­யாது. இந்த அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம். ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றாக தொடர்ந்து பய­ணிக்கும். அதில் எந்­த­வொரு சந்­தே­கமும் கிடை­யாது.

தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் நிறைவு பெற்­றுள்­ளது. இந்­நி­லையில் வெகு விரைவில் தேசிய அர­சாங்­கத்தின் இரு பிர­தான கட்­சி­க­ளுக்கு இடையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும். அத்­துடன் புதிய அமைச்­ச­ர­வையும் விரைவில் பொறுப்­பேற்கும். அதற்­கான ஏற்­பா­டுகள் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

நல்­லாட்சி அர­சாங்கம் என்ற வகையில் நாட்­டுக்கு மூன்று வருட காலப்­ப­கு­தியில் பல்­வேறு சேவை­களை நாம் செய்­துள்ளோம். ஆகவே அந்த சேவை­களை நாட்டு மக்கள் மறந்து விட கூடாது. குறிப்­பாக இந்த நாட்டு மக்­க­ளுக்கு சுதந்­தி­ரத்தை பெற்று தந்­துள்ளோம். ஊடக சுதந்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்ளோம். ஊடக சுதந்­தி­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்த எமது அர­சாங்­கத்தை ஊட­கங்கள் தாரு­மா­றாக திட்டி தீர்க்­கின்­றன. அது எமக்கு பிரச்­சி­னை­யில்லை. எனினும் ஊடக சுதந்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.

அத்­துடன் சுயா­தீ­ன­மான நீதித்­து­றையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். ஆகவே இதனை நாட்டு மக்கள் மறந்து விடாது. எவ்­வா­றா­யினும் இந்த அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது.

அதேபோன்று அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண தயார் என்றார்.

மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த அர­சுக்­கு­ அ­ழுத்தம் கொடுக்க கூட்டு எதி­ரணி தீர்­மானம்

08-0da2acf3cc37bcdbdf4e3808c527c2ad56b17cec.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி இன்னும் இறுதி முடி­விற்கு வர­வில்லை. இதே­வேளை அர­சாங்கம் எதிர்­வரும் எட்டாம் திகதி பாரா­ளு­மன்றில் முன்­வைக்­க­வுள்ள கொள்கை விளக்­க­வுரை மீது இரு நாள் விவாதம் நடத்­து­மாறு கோரு­வ­தற்கும் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­மாறு அர­சாங்­கத்­திற்கு  அழுத்தம் கொடுப்­ப­தற்கும் கூட்டு எதிர்க்­கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.  

கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நேற்­று­முன்­தினம் மாலை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கொழும்பு விஜே­ரா­மயில் அமைந்­துள்ள உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே இத்­தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

 குறித்த கூட்­டத்தில், மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வ­ர­வுள்ள நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் யோசனை குறித்து இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் நேற்று முன்­தினம் மாலை நடை­பெற்ற கூட்­டத்­தின்­போது அவ்­வி­டயம் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. கட்சித் தலை­வர்கள் நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­யமை குறித்து தமது கட்­சியின் நிலை­பா­டு­க­ளையும் கொள்­கை­க­ளையும் விப­ரித்­தனர். நீண்ட நேர பேச்­சு­வார்த்­தையின் பின்­னரும் அவ்­வி­டயம் தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்சி இறுதித் தீர்­மா­னத்­திற்கு வர­வில்லை.

இதே­வேளை நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா திபதி முறை­மையை நீக்­கு­வ­தற்­கான சட்­ட­மூலம், நிறை­வேற்­றப்­படும் தினத்தில் பாரா­ளு­மன்றம் கலைய வேண்டும் என்­கின்ற சரத்தும் உள்­ள­டக்­கப்­ப­டு­மாயின் நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு வழங்கும் என ஏற்­க­னவே அக்­கட்சி தெரி­வித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்­தின்­போது பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் குறித்தும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய மாகாண சபை­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ள­துடன் அதன் நிர்­வாகம் தற்­போது மாகாண ஆளு­ந­ரின்கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. எனவே அம்­மா­காண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­மாறு அழுத்தம் கொடுப்­ப­தற்கும் அது தொடர்பில் பேர­ணி­களை நடத்து குறித்தும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

 எதிர்­வரும் ஏழாம் திகதி காலியில் நடத்­து­வற்கு திட்­ட­மிட்­டுள்ள மே தினக் கூட்டம் சம்­பந்­த­மா­கவும் கவனம் செலுத்­தப்­பட்­டது. அத்துடன் எதிர்வரும் எட்டாம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வில் அரசாங்கம் முன்வைக்கவுள்ள கொள்கை விளக்கவுரை மீது இரு நாள் விவாதம் நடத்துமாறு கோருவதற்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.