Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது

Featured Replies

தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது

 

தமிழரின் இனப்பிரச்சினைக்கு இன்னமும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.தமிழ் அரசு இன்னமும் உருவாக்கம் பெறவில்லை. எனினும், எத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான முன்னெடுப்புக்களைத் தொடர்ந்தும் மேற்கொள்ள தற்போதைய அரசாங்கத்தைப் பல்வேறு வழிகளிலும் நாம் நிர்ப்பந்திக்க  வேண்டியுள்ளது என நவசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு  வியாழக்கிழமை (26) யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வா அரசியல் ரீதியாக இருதடவைகள் தோல்வியைத் தழுவினாலும் அவர் மனம் தளரவில்லை. அவர் தன்னுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இடைநடுவில் கைவிடவில்லை. 1977 ஆம் ஆண்டு நோய் காரணமாகத் தந்தை செல்வா காலமான போதும் இன்றுவரை அவரது புகழ் நிலைத்திருப்பதற்கு அவரது பொறுமையான அணுகுமுறையே காரணம்.

தந்தை செல்வாவின் போராட்டங்கள் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான போராட்டங்கள் எனச் சிலர் கூற முற்பட்டாலும் மகாத்மாகாந்தி எவ்வாறு அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்தாரோ அதேவகையான போராட்டங்களையே தன்னுடைய கொள்கைகளுக்காகவும், கோட்பாடுகளுக்காகவும், மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் தந்தை செல்வா முன்னெடுத்துச் சென்றார் என்பதை நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றோம்.

மகாத்மா காந்தி நடாத்திய போராட்டங்களின் போது இலட்சக்கணக்கான, ஆயிரக்காண மக்கள் அணிதிரண்டு கோரிக்கைகள் முன்வைத்த போது புகையிரதப் பயணங்கள், வீதிப் பயணங்கள் என்பன தடைப்பட்டன. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கையில் கூடப் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக மகாத்மா காந்தி முன்னெடுத்த போராட்டங்களை மக்கள் விரோதப் போராட்டங்களாகக் கருத முடியாது.

தற்போதைய காலப் பகுதியில் அமெரிக்காவின் அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் தனது நாட்டு மக்களுக்கெதிராக விதித்த பல்வேறு சட்டதிட்டங்கள் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி நீண்டகாலமாகப் போராடினார்கள். ஜனநாயக வழியில் மக்களால் நடாத்தப்பட்ட மக்கள் போராட்டம் வலுவானதாகக் காணப்பட்டமையால் இறுதியில் ரொனால்ட் ட்ரம்ப் பின்வாங்க வேண்டியேற்பட்டது.

எங்களுடைய சமூகத்தில் வாகனங்களில் பொறிக்கப்படும் ஸ்ரீ எழுத்துக்கள் தொடர்பாக முரண்பாடு எழுந்த போது தந்தை செல்வா அதனை ஜனநாயக வழியில் எதிர்கொண்டார்.

சிங்கள மொழியில் வாகனங்களில் ஸ்ரீ எழுத்துக்களைப் பொறிக்க முடியுமானால் தமிழ்மொழியிலும் ஸ்ரீ எழுத்துக்களைப் பொறிக்க முடியுமென்பதை எடுத்துக் காட்டுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கிப் புறப்பட்டு நிரூபித்துக் காட்டினார்.

சிங்கள ஆட்சியாளர்கள் எமது செயற்பாடுகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்?, எப்போதும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் மற்றவர்கள் அடிபணிந்து செயற்பட வேண்டும் என்பது தான் எப்போதும் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்தியாவில் இன ரீதியான பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு எட்டப்பட்டதோ அதேபோன்று இலங்கையிலும் அரசியல் அதிகாரப் பகிர்வை நிலைநாட்டுவதற்காக நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் திடசங்கற்பம் பூணுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.newsuthanthiran.com/2018/04/27/தமிழர்களின்-அபிலாஷைகளை-வ/

  • தொடங்கியவர்
  • சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் தற்­போ­தும் பிறரை அடி­மைப்­ப­டுத்­தும் எண்­ணமே!!
 

சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் தற்­போ­தும் பிறரை அடி­மைப்­ப­டுத்­தும் எண்­ணமே!!

சிங்­கள ஆட்­சி­யா­ளர்­கள் எப்­போ­தும் தமது ஆதிக்­கத்­தின் கீழே­தான் மற்­ற­வர்­கள் அடி­ப­ணிந்து செயற்­ப­ட­வேண்­டும் என்ற நோக்­கிலே இயங்குகிறார்கள். தமிழர்களின் பிரச்சினை இன்­றும் முடிந்­தபா­டில்லை. தமிழ் அர­சும் உரு­வா­க­வில்லை. இன்­றைய சூழ­லி­லும் அந்த அபி­லா­சை­களை விட்­டுக் கொடுக்க முடி­யாது. அதைத் தொடர்ச்­சி­யாக எடுத்­துச் செல்­ல­வேண்­டும்.

இவ்­வாறு கலா­நிதி விக்­கி­ர­ம­ பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்­தார்.
தந்தை செல்­வா­வின் 41 ஆவது நினைவு தினம் யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தந்தை செல்வா நினை­வுச் சதுக்­கத்­தில் நேற்று இடம்­பெற்­றது.இந்த நிகழ்­வில் சிறப்­பு­ரை ­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­சுக்கு அழுத்­தம்
கொடுக்­க ­வேண்­டும்

தமி­ழர் தாய­கத்தை நாம் மறந்து விட­மு­டி­யாது. தற்­போ­தைய அரசை நாம் பல்­வேறு வகை­யி­லும் நிர்ப்­பந்­திக்­க­ வேண்­டி­யி­ருக்­கின்­றது.நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் பின்­னால் இன­வா­தி­கள, மத­வா­தி­கள் எல்­லோ­ரும் வெறி­யர்­கள் போல் நடந்­து­கொண்­டார்­கள். ஆனால் அதனை எல்­லோ­ரும் இணைந்து தோல்­வி­யு­றச் செய்­தோம். அதே­போல் எதிர்­கா­லத்­தி­லும் எங்­கள் பய­ணம் ஒன்­றி­ணைந்து அமை­ய­வேண்­டும்.

இந்­தி­யா­வைப்­போன்று
தீர்வு காண­ வேண்­டும்

இந்­தி­யா­வில் அதி­கா­ரப் பகிர்­வுப் பிரச்­சி­னைக்கு எவ்­வாறு தீர்வு காணப்­பட்­டதே அதே­போன்று இலங்­கை­யி­லும் அதி­கா­ரப் பகிர்வை நிலை­நாட்ட நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட திட­சங்­கற்­பம் பூண­வேண்­டும்.

இடது சாரி­க­ளும் தவ­றி­ழைப்பு
இலங்­கை­யில் சிங்­கள மொழி மாத்­தி­ரமே அரச கரும மொழி­யாக இருக்­க­வேண்­டும் என்று எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா செயற்­பட்­ட­போ­தி­லும் தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரப் பகிர்வு முக்­கி­யம் என்ற கொள்­கையை அங்­கீ­க­ரித்து பண்டா செல்வா ஒப்­பந்­தத்­தில் கைச்­சாத்­திட்­டி­ருந்­தார்.

ஆனால் இடது சாரி­கள் அந்த ஒப்­பந்­தத்­தைப் பாது­காக்க முன்­வ­ரா­மல், அவர்­கள் மேற்­கொண்ட பெரும் தவ­று­கள்­தான் இன்­றி­ருக்­கும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­விட்­டி­ருக்­கி­றது. இட­து­சா­ரி­கள் இந்­தத் தவ­று­க­ளைச் செய்­யாது அன்று அந்த ஒப்­பந்­தத்­தைப் பாது­காக்க முன்­வந்­தி­ருந்­தால் இலங்­கை­யின் வர­லாறு வித்­தி­யா­ச­மா­ன­தாக அமைந்­தி­ருக்­கும்.

தமிழ் மக்­க­ளின் தந்தை, தமிழ்த் தேசிய இனத்­தின் தந்தை என்று தந்தை செல்வா அழைக்­கப்­பட்­டி­ருந்­தார். அவ­ரது அர­சி­யல் வாழ்க்கை ஆரம்­பிக்­கப்­பட்­ட­போ­து­தான் தமிழ் மக்­க­ளின் தேசிய இனம் என்­பது ஆரம்­பிக்­கப்­பட்­டதா என்ற கேள்வி எழு­கின்­றது.

சிங்­கள மக்­கள் தங்­கள் தேசிய இனம் சிங்க பாபு­வில் இருந்து ஆரம்­பிக்­கப்­பட்­டது என்று கூறு­கின்­றார்­கள்.தேசிய இனம் என்­பது அண்­மைக்­கால வர­லாற்­றில் தோற்­றம் பெற்ற எண்­ணக்­க­ரு­வும் செயற்­பா­டும் ஆகும். முத­லா­ளித்­து­வம் என்­பது வளர்ச்சி அடைந்த பின்­னரே தேசிய இனம் என்­பது வலுப்­பெ­றத் தொடங்­கு­கின்­றது.
இலங்­கை­யில் 1900 ஆண்­டு­க­ளின் பின்­னரே தமி­ழர்­கள் தேசிய இன­மாக உரு­வாக்­கம் பெறு­கின்­றார்­கள்.

ஆனால் இந்­தி­யா­வில் அதற்கு முன்­னரே உரு­வாக்­கம் இடம்­பெற்­றுள்­ளது. இதன் கார­ண­மா­கவே அதனை வலி­யு­றுத்தி ஈ.வி.ரே, பெரி­யார் போன்­றோர் தலைமை தாங்­கிப் போராட்­டங்­களை நடத்­தி­னார்­கள். அந்­தக் காலத்­தில் இந்­தி­யா­வில் நேரு போன்ற புத்­தி­சா­லி­கள் இருந்­த­மை­யால் அந்­தப் போராட்­டங்­களை ஏற்று அங்­கீ­க­ரித்து ஓர் சம­நி­லையை ஏற்­ப­டுத்­தி­னார்­கள்.

இலங்கை கால­னித்­துவ நாடாக இருந்­த­தால் தமிழ், சிங்­கள, முஸ்­லிம் தலை­வர்­கள் ஆங்­கில மொழி­யின் மீது மதிப்­புக் கொண்­டி­ருந்­தார்­கள். அவர்­கள் இங்­கி­லாந்­து­போல எல்­லோ­ரும் ஆங்­கில மொழி­யி­லேயே பேசக்­கூ­டிய நிலையை முன்­னெ­டுக்­க­மு­டி­யும் எனக் கரு­தி­னார்­கள். இதன் கார­ண­மா­கவே அனைத்­துத் தலை­வர்­க­ளும் ஓர­ணி­யில் இருந்து செயற்­ப­ட­மு­டி­யு­மாக இருந்­தது.

ஆனால் பொது­மக்­கள் மத்­தி­யில் தமிழ் மக்­கள் தமது மொழி­யி­லும் சிங்­கள மக்­கள் தமது மொழி­யி­லும் கற்று முன்­னே­றிக்­கொண்ட காலத்­தில் வாணி­பப் பொரு­ளா­தா­ரம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது தமிழ் சிங்­கள சமூ­கத்­தின் ஆசா­பா­சங்­க­ளைப் பூர்த்தி செய்­ய­வேண்­டிய நிலைமை அன்­றைய தலை­மைக்கு ஏற்­பட்­டது.

செல்­வ­நா­ய­க­மும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க இரு­வ­ரும் ஒரே கல்­லூ­ரி­யில் ஒன்­றா­கப் படித்­த­வர்­கள். அவர்­க­ளது சிந்­த­னை­யில் மாற்­றம் ஏற்­பட்­டி­ருந்­தது. 1926 ஆம் ஆண்டு பண்டா சமஸ்டி ஆட்சி முறை­யைக் கொண்­டி­ருந்­த­து­டன் பின்­னர் சிங்­கள மகா சபை­யில் பத­வி­வ­கித்­த­போது அந்­தக் கொள்­கையை முற்­றி­லும் மாற்­றி­ய­மைத்து வேறு வகை­யான கொள்­கையை ஆத­ரிக்­கத் தொடங்­கி­னார்.

ஆனால் தந்தை செல்வா நாட்­டில் நடப்­ப­வற்றை உன்­னிப்­பாக அவ­தா­னித்­துக் கொண்­டி­ருந்­தார். தமிழ் மக்­க­ளுக்கு நியா­யம் கிடைக்­க­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் அகில இலங்கை தமிழ் காங்­கி­ர­சின் ஜீ.ஜீ பொன்­னம்­ப­லத்­தின் பாதை­யில் தொடர்ந்து செயற்­ப­ட­மு­டி­யா­மல் அதி­லி­ருந்து வெளி­யேறி தமிழ் அர­சுக் கட்சி என்ற அமைப்பை உரு­வாக்­கி­னார்.

செல்வா தொடர்­பில்
தெற்­கில் தவ­றான கருத்து

தமிழ் அர­சுக் கட்­சி­யால் உரு­வாக்­கப்­பட்­ட­போது அது சமஷ்­டிக்­கு­ரிய பல பண்­பு­க­ளைக் கொண்­டி­ருந்­தது. நாட்­டில் நீதி­யான நியா­ய­மான ஜன­நா­யக மதம் சாராத சமத்­துவ சமூ­கத்தை நோக்­கிச் செயற்­ப­ட­வேண்­டும் போன்ற அடிப்­ப­டைக் கொள்­கை­க­ளைக் கொண்­டி­ருந்­தது.ஆனால் தென்­னி­லங்­கை­யில் பெரும்­பான்­மைச் சமூ­க­மா­னது இந்­தப் பண்­பு­களை மறந்து தமிழ் அரசு என்ற பதத்தை மாத்­தி­ரம் வைத்­துக்­கொண்டு இலங்­கை­யில் தமி­ழர் அரசு ஒன்­றைத் தோற்­று­விக்­கப் போகின்­றது என்ற பயத்­தை­யும் பூச்­சாண்­டி­யை­யும் ஏற்­ப­டுத்­தி­னார்­கள். இன்­றும் தென்­னி­லங்­கை­யில் தந்தை செல்­வா­வுக்கு எதி­ராக தவ­றான கருத்­துக்­க­ளும் பரப்­பு­ரை­க­ளும் இடம்­பெ­று­கின்­றன.

1956 ஆம் ஆண்டு தேர்­த­லில் வெற்றி பெற்ற எஸ்.டபிள்யூ.டி.பண்­டா­ர­நா­யக்க சிங்­க­ளம் மாத்­தி­ரம்­தான் அரச கரும மொழி என்று செயற்­பட்­ட­போ­தி­லும் தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரப் பகிர்வு முக்­கி­யத்­து­வம் என்ற கொள்­கையை அங்­கீ­க­ரித்து 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

அந்­தக் காலத்­தில் இட­து­சா­ரி­கள் மொழி­க­ளுக்­கி­டை­யிலே சமத்­து­வம் வேண்­டும் என்று கரு­தி­னார்­களே தவிர அதி­கா­ரப் பகிர்வு தேவை என்­ற­அ­டிப்­ப­டை­யில் அத­னைப் பாது­காக்க அவர்­கள் முன் வர­வில்லை. அதைப் பார­தூ­ர­மான தவ­றா­கவே கரு­து­கின்­றேன்.

பண்டா செல்வா ஒப்­பந்­தத்­தைப் பாது­காக்க முடி­யாது போன­மைக்கு இடது சாரி­க­ளின் பெருந் தவ­று­தான் கார­ணம். அத­னைப் பாது­காத்­தி­ருந்­தால் இன்­றைய நிலை­மையை நாங்­கள் சந்­தித்­தி­ருக்­கத் தேவை­யில்­லாது போயி­ருக்­கும். இதன்­பின்­னர் இந்­தத் தோல்­வி­க­ளைப் பொறு­மை­யா­கத் தாங்­கிக்­கொண்டு செயற்­பட்ட செல்வா 1965 ஆம் ஆண்டு டட்லி செல்வா ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

இத­னை­யும் இடது சாரி­களே கடு­மை­யாக எதிர்த்­தார்­கள். இரண்டு தட­வை­கள் செல்­வ­நா­ய­கம் தோற்ற போதும் அவர் பொறு­மை­யு­டன் இருந்து தன்­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார். ஒரு­போ­தும் அவர் தன் கொள்­கை­கள் கோட்­பா­டு­களை இடை­யில் கைவி­ட­வில்லை.மகாத்­மா­காந்தி போன்று அமை­தி­யான போராட்­டங்­க­ளையே மேற்­கொண்­டார்
– என்­றார்.

http://newuthayan.com/story/88158.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.