Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதை­யில் வாக­னம் ஓடிய 27 பேரின் லைசன்ஸ்­களை பறித்­தது யாழ். நீதி­மன்று

Featured Replies

  •  
  • போதை­யில் வாக­னம் ஓடிய 27 பேரின் லைசன்ஸ்­களை பறித்­தது யாழ். நீதி­மன்று
 
 

போதை­யில் வாக­னம் ஓடிய 27 பேரின் லைசன்ஸ்­களை பறித்­தது யாழ். நீதி­மன்று

 

மது­போ­தை­யில் வாக­னம் செலுத்­திய 27 பேர் மாட்­டி­னர். அவர்­க­ளுக்­குத் தண்­டம் விதித்த யாழ்ப்­பாண நீதி­வான் மன்று, 27 பேரி­ன­தும் சார­திப் பத்­தி­ரங்­களை 9 மாதங்­க­ளுக்­குத் தடுத்து வைக்­கு­மா­றும் உத்­த­ர­விட்­டது.

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் மது­போ­தை­யில் வாக­னங்­களைச் செலுத்­திய குற்­றச்­சாட்­டில் 27 பேர் வெவ்­வேறு நாள்­க­ளில் கைது செய்­யப்­பட்­ட­னர்.
யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் நேற்று 37 பேருக்கு எதி­ராக கோப்­பாய் பொலி­ஸார் வழக்­குத் தாக்­கல் செய்­த­னர். வழக்­கு­கள் யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற நீதி­வான் சின்­னத்­துரை சதீஸ்­த­ரன் முன்­னி­லை­யில் நேற்று விசா­ர­ணைக்கு வந்­தன.
மது­போ­தை­யில் சாரத்­தி­யம் செய்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 27 பேர் மீது குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

அவர்­க­ளில் 3 பேர் அரச உத்­தி­யோ­கத்­தர்­கள் என்று பொலி­ஸார் மன்­றில் தெரி­வித்­த­னர். அவர்­க­ளின் மூவ­ருக்­கும் 7 ஆயி­ரத்து 500 ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது. ஆயி­ரத்து 500 ரூபா அரச செல­வா­கச் செலுத்­த­வும் நீதி­மன்று உத்­த­ர­விட்­டது. அவர்­கள் மூவ­ரின் சாரதி அனு­ம­திப் பத்­தி­ரங்­க­ளை­யும் 9 மாதங்­க­ளுக்கு இடை­நி­றுத்தி வைக்­க­வும் நீதி­மன்று கட்­ட­ளை­யிட்­டது.
இதே குற்­றச்­சாட்­டில் முற்­ப­டுத்­தப்­பட்ட ஏனைய 24 பேருக்­கும் 7 ஆயி­ரத்து 500 ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது. அவர்­கள் 50 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு குறை­யாது சமூ­கப் பணி­யில் ஈடு­ப­ட­வேண்­டும், 24 பேரின் சாரதி அனு­ம­திப் பத்­தி­ரங்­களை 9 மாதங்­க­ளுக்கு தடுத்­த­வைத்­தி­ருக்­க­வும் மன்று கட்­ட­ளை­யிட்­டது.

இது­த­விர, புது­வ­ருட தினத்­தன்று சட்­ட­வி­ரோ­த­மாக அரச சாரா­யத்தை விற்­பனை செய்­த­வ­ருக்கு 10 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது. அவ­ரி­டம் மீட்­கப்­பட்ட 175 மில்லி லீற்­றர் கொள்­ளவு கொண்ட 54 போத்­தல்­கள் சாரா­யத்­தை­யும் பொலி­ஸார் சான்­றுப் பொரு­ளாக இணைத்­த­னர். அவை பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­யில் டெங்கு நுளம்பு பெருக்­கத்­துக்கு ஏது­வாக குடி­யி­ருப்பை வைத்­தி­ருந்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 9 பேர் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் தலா ஆயி­ரத்து 500 தண்­டம் அற­வி­டு­மாறு மன்று கட்­டளை வழங்­கி­யது.

http://newuthayan.com/story/88125.html

குளிர்மைக்காகவே ஆசிரியர் மது அருந்தினார் :

drink.jpg?resize=225%2C225
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

‘வெப்பம் அதிகமாக உள்ளதால் குளிர்மைக்காக ஆசிரியர் மது அருந்தினார். ஆனால் அவர் முடாக் குடிகாரர் இல்லை’ என யாழ். நீதிவான் நீதிமன்றில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்ற சாட்டில் முற்படுத்தப்பட்ட ஆசிரியர் சார்பில் மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மன்றிடம் உரைத்தார்.

 

கோப்பாய் காவல்துறைப் பிரிவில் வீதிப் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து செய்யப்பட்டார். காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவர், இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன் போதே மூத்த சட்டத்தரணி இந்த விடயத்தை மன்றில் தெரிவித்தார்.

‘ஆசிரியர் குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார். அவர் தீவகத்தில் பணியாற்றுகிறார். அன்றைய தினம் அதிக வெப்பநிலை காரணமாக குளிர்மைக்கு மது அருந்துவிட்டார். ஆனால் அவர் தினமும் மதுப்பழக்கமுள்ள குடிகாரர் இல்லை’ என மூத்த சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

ஆசிரியர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அவருக்கு 7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்ததுடன் ஆயிரத்து 500 ரூபா அரச செலவும் அறவிடுமாறும் மன்று உத்தரவிட்டது. அத்துடன், ஆசிரியரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை 9 மாதங்களுக்கு தடுத்துவைக்குமாறு நீதிமன்ற காவல்துறையினருக்கு மன்று கட்டளையிட்டது.

http://globaltamilnews.net/2018/76616/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.