Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய இலங்கை அரசியல் செய்திகள் ஒரே பார்வையில்....27.04.2018

Featured Replies

ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுமில்லை மஹிந்த தரப்பில் இணையப்போவதுமில்லை

01-9-411e1ad2949053c19f5e301cc94cea5e05fc00e5.jpg

 

(ஆர்.யசி)
ஐ.ம.சு.மு. பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு
 

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற மையினால் ஐக்கிய தேசியக் கட்சியை பலப் படுத்துவதாக அர்த்தம் கொள்ளத் தேவை யில்லை. நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தியே அரசாங்கத்தை முன்னெடுத்து செல்கின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப்போவ தில்லை, மஹிந்த தரப்பில் இணையப்போவது மில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்

அவர் மேலும் கூறுகையில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலவீனப்படுத்தும் வகையிலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் வகையிலோ இப்போதுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர்கள் எவரும் செயற்படவில்லை. நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கையுடன் தேசிய அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் செயற்பட்டு வருகின்றோம். ஒரு சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கொண்டுள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களை கொண்டு முரண்பட முடியும். எனினும் நாம் எடுத்த பணியினை செய்து முடிக்கும் வரையில் தேசிய அரசாங்கமாக பயணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கம் வகிப்பதை ஐக்கிய தேசியக் கட்சிக்காகவென அர்த்தப்படுத்தக்கூடாது. நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்காரார்கள் அல்ல. நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர்கள்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆறு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில் அந்த அமைச்சுக்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கும் தீர்மானமே உள்ளது. வெற்றிடமான அமைச்சுப்பதவிகளுக்கும் எமது கட்சி உறுப்பினர்களே நியமிக்கப்படுவார்கள். அதேபோல் நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வேண்டிய அவசியமும் இல்லை. எமது அரசியல் சகாப்தம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தான் முடிவிற்கு வரும். நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவும் மாட்டோம், மஹிந்த தரப்புடன் இணையவும் மாட்டோம். எனினும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் நாம் முரண்படவும் அவசியம் இல்லை. தொடர்ந்தும் இரண்டு கட்சியினரும் இணைந்து தேசிய அரசாங்கத்தில் ஒன்றாக பயணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம் : பதவிகளுக்கு வாக்கெடுப்பின்றி ஏகமனதாகத் தெரிவு

01-1-515376592344c8d1166dae4c88b9a60ded26f8d0.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவராக சஜித் பிரேமதாஸவும் உப தலைவராக ரவி கருணாநாயக்கவும் பொதுச்செயலாளராக அகிலவிராஜ் காரியவசமும் தவிசாளராக கபீர் ஹாஷிமும் பொருளாளராக ஹர்ஷ டி சில்வாவும் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்காக கட்சியின் செயற்குழுவில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டனர்.  

அத்துடன் நேற்றைய செயற்குழுக் கூட்டத்தின் போது புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டன. இதன்படி பிரசார மற்றும் ஊடக தொடர்பாடல்  செயலாளராக ஹரின் பெர்ணான்டோவும், 

 தொழிற்சங்க செயலாளராக அஜித் பீ.பெரேராவும் நேற்றைய தினம் செயற்குழுவினால் அனைவரினதும் உடன்பாட்டுக்கு அமைய நியமிக்கப்பட்டனர்.

எனினும் நேற்றைய செயற்குழுக் கூட்டத்தின் போது உப தலைவராக ரவி கருணாநாயக்கவை நியமிப்பதற்கு பலரும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் ரவி கருணாநாயக்கவை உப தலைவராக நியமிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்போது ஜோசப் மைக்கல் பெரேரா செயற்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தார். என்றாலும் பலரது எதிர்ப்புக்கு மத்தியில் உப தலைவராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு செயற்குழுக் கூட்டம் ஆரம்பமானது. இந்த செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயற்குழுவில் அங்கம் வகிக்கும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக்காக கட்சியின் பாராளுமன்ற குழுவின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு மறுசீரமைப்புக்கான அரசியல் சபை நியமிக்கப்பட்டது. இந்த சபையில் சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம், ரன்ஜித் மத்தும பண்டார, நளின் பண்டார உட்பட 12 பேர் உள்ளனர். இதன்படி மறுசீரமைப்பு அரசியல் சபை பல தடவை கூடி ஆராய்ந்து இறுதியாக நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை அலரி மாளிகையில் கூடி கட்சியின் பிரதான பதவிகளுக்கான புதியவர்களை பெயரிட்டது.

இதன்பிரகாரம் பிரதி தலைவராக சஜித் பிரேமதாஸவையும், உப தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவையும், பரிந்துரை செய்தனர். அத்துடன் பொதுச்செயலாளராக அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க, பொருளாளராக ஹர்ஷ டி சில்வா தவிசாளர் பதவிக்கு கபீர் ஹாஷிம் ஆகியவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

மறுசீரமைப்பு சபையின் பரிந்துரை

செயற்குழுவில் முன்வைப்பு

இதனையடுத்து மறுசீரமைப்புக்கான சபையினால் பெயரிடப்பட்ட பெயர்கள் நேற்று காலை கூடிய செயற்குழுவில் முன்வைக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் மறுசீரமைப்பு சபையினால் முன்வைக்கப்பட்ட பட்டியலுக்கு எந்தவொரு எதிர்ப்பும் வெளியிடப்படவில்லை. இதன்படி கட்சி யாப்பில் செயற்குழுவில் மூன்றில் ஒரு பங்கினர் எதிர்ப்பு வெளியிடாத பட்சத்தில் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கும் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கமைவாக நேற்றைய செயற்குழுவில் முன்வைக்கப்பட்ட புதியவர்களுக்கான பெயர் பட்டியலுக்கு செயற்குழுவில் எதிர்ப்பு வெளியிடப்படாமையினால் பதவிகளுக்கு வாக்கெடுப்பின்றி புதியவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

ரவிக்கு கடும் எதிர்ப்பு

என்றாலும் உப தலைவராக ரவி கருணாநாயக்க பெயர் பரிந்துரை செய்யப்பட்டமைக்கு கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக உள்ளக மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் ரவி கருணாநாயக்கவின் நியமனத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுப்பட்ட பின்னரே ரவி கருணாநாயக்க உப தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரஞ்ஜன் ராமநாயக்க செயற்குழுவில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் வசந்த சேனாநாயக்கவும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

ஜோசப் மைக்கல் பெரேரா வெளிநடப்பு

அத்துடன் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்ப்பு வெளியிட்டு செயற்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தார். செயற்குழுவின் உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்து விட்டு ஜோசப் மைக்கல் பெரேரா வெளியேறி சென்றார்.

எதிர்ப்புகளுக்கு மத்தியில் உப தலைவரானார் ரவி 

என்றாலும் உப தலைவராக ரவி கருணாநாயக்கவை செயற்குழு ஏகமனதாக அங்கீகரித்தது. எனினும் ஏனைய பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களுக்கு எந்தவொரு எதிர்ப்பு வெளியிடப்படவில்லை

பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் மூவருக்கு 

அதேபோன்று நேற்றைய செயற்குழுவின் போது புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளரும் தெரிவு செய்யப்பட்டனர். இதன்பிரகாரம் பிரசார மற்றும் ஊடக, தொடர்பாடல் செயலாளராக ஹரின் பெர்ணான்டோவும் தொழிற்சங்க செயலாளராக அஜித் பீ பெரேராவும் தெரிவு செய்யப்பட்டனர். கட்சிக்கான் அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடுகளுக்கான அதிகாரங்கள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டன. இதன்படி பொதுச்செயலாளருக்கு ஆரம்பத்தி்ல வழங்கப்பட்டிருந்த பல்வேறு அதிகாரங்கள் மேலதிகமாக மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

திங்களன்று உப பதவிகள் நியமனம் 

மேலும் எதிர்வரும் 30 ஆம் திகதியளவில் கட்சியின் பிரதி பொதுச்செயலாளராக ருவன் விஜேயவர்தன நியமிக்கப்படவுள்ளார். அதேபோன்று இன்னும் பல உப பதவிகள் நியமிக்கப்படவுள்ளன. தேசிய இளைஞர் முன்னணி தலைவர், லக்வனிதா அமைப்பின் தலைவர் ஆகிய பதவிகளுக்கும் உறுப்பினர்களை நியமிக்க செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் தமக்கு பிரதி பொதுச்செயலாளர் பதவி தேவையில்லை. வேறு நபருக்கு அந்த பதவியை வழங்குமாறு செயற்குழு கூட்டத்தின் போது இராஜாங்க அமைச்சர ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழர் எவரும் இல்லை

 ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பதவி நியமனத்தின் போது தமிழர் எவரும் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை. குறிப்பாக அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட உறுப்பினர்களான இருந்தும் எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை.

பதவியிழந்த மூவர்
அத்துடன் இதற்கும் முன்பு பதவியில் இருந்தவர்களில் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, தயா கமகே, எரான் விக்கிரமரத்ன ஆகியோருக்கு எவ்வித பதவியும் வழங்கப்படவில்லை.    

 செயற்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்ட கட்சியின் பதவிகள் மே 6 ஆம் திகதி சுகததாஸ உள்ளக அரங்கில் நடக்கவுள்ள மே தின கூட்டத்தின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்போது ஏகமனதான அங்கீகாரத்தின் பின்னர் அதிகாரமிக்கவர்களாக புதியவர்கள் செயற்படுவர் என்பது குறிப்பிடதக்கது.

செய­லாளர் பத­வி­களில் மாற்றம் வேண்டும் என்­ப­தில் ஜனா­தி­பதி உறுதி: ரணில் எதிர்ப்பு அணியின் முக்­கி­யஸ்தர் தயா­சிறி தெரி­விப்பு

01-6a2cd8ee77bc3272aeb849e73a1cf92aa524693a.jpg

 

(ரொபட் அன்­டனி)

ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னதும் ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணி­யி­னதும் செய­லாளர் பத­வி­களை ரணில் எதிர்ப்­புக்­கு­ழு­வான நாம் கோரு­கின்றோம். அந்தப் பத­வி­களில் மாற்றம் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதில் ஜனா­தி­ப­தியும் உறு­தி­யாக இருக்­கின்றார் என்று ரணில்  எதிர்ப்­புக்­கு­ழுவின் முக்­கி­யஸ்­த­ரான முன்னாள் அமைச்­ச­ரான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.  

மே 8ஆம்­தி­கதி முதல் எதிர்க்­கட்­சியில் அமர்வோம். சுதந்­தி­ரக்­கட்சி என்ற அடிப்­ப­டையில் நாங்கள் செயற்­ப­டுவோம். ஆனால் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கோர­மாட்டோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

சுதந்­தி­ரக்­கட்­சியின் 23 பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர­சாங்­கத்தில் நீடிக்­கவும் 16 பேர் எதி­ர­ணியில் அம­ரவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழுவும் அனு­மதி வழங்­கி­யுள்­ளமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்பில் தயா­சிறி ஜய­சே­கர மேலும் குறிப்­பி­டு­கையில்;

 தேசிய அர­சாங்­கத்தில் விரைவில் மாற்றம் ஏற்­படும். அதில் யாரும் சந்­தேகம் கொள்­ள­வேண்­டி­ய­தில்லை. த ற்போது தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்­கின்ற 23 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் விரைவில் எம்­முடன் இணைந்து கொள்­வார்கள். ஒரு­சிலர் வேண்­டு­மானால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பக்கம் போகலாம். ஆனால் பெரும்­பா­லானோர் எம்­மு­ட­னேயே இணைந்து எதிர்­கால அர­சி­யலை முன்­னெ­டுப்பர். அத்­துடன் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்றின் செய­லாளர் பத­வி­களை எமது குழு­விற்கு வழங்­கு­மாறு நாம் கோரு­கின்றோம். இந்த செய­லாளர் பத­வி­களில் மாற்றம் ஏற்­பட வேண்­டு­மென கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் விரும்­பு­கிறார்.

 எனவே விரைவில் அந்தப் பதவி எமக்கு கிடைக்கும் என நம்­பு­கிறோம். எதிர்­வரும் மே 8ஆம் திகதி நாங்கள் 16 பேரும் எதிர்க்கட்சியில் அமர்வோம். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக கூட்டு எதிரணியில் இணைவோம் எனக் கூறவில்லை. மாறாக அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்றார்.

கட்சியை வெற்றிப்பாதையில் முன்கொண்டு செல்வோம் : புதிதாக பதவி பெற்றவர்கள் சூளுரை

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

கட்சிக்குள் எனக்கு கும்பல் எதுவும் இல்லை. ஆகவே நான் அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிக்க தயாராக உள் ளேன். ஆகவே தற்போது கட்சி மறு சீர மைப்பு செய்யப்பட்டு விட்டது. இனிமேல் கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வோம் என ஐக்கிய தேசியக் கட்சி  யின் புதிய பொதுச்செயலாளரும் அமைச்ச ருமான அகிலவிராஜ் காரியவசம் தெரி வித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிடுகையில்,

கட்சிக்குள் எனக்கு கும்பல் எதுவும் இல்லை. ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க தயாராக உள்ளோம். ஆகவே தற்போது கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட்டு விட்டது. இனிமேல் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வோம்.

நான் கல்வி பயிலும் காலத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியில் இருந்து செயற்பட்டுள்ளேன். கட்சிக்காக பல்வேறு சேவைகளை முன்னெடுத்துள்ளேன். எனவே தற்போது உரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு கட்சியை முன்னேற்றும் வழி வகைகளை செய்வேன்.

ஆகவே தற்போது நியமிக்கப்பட்டவர்கள் ஒரு சிலருக்கு கடுமையான எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. எனினும் கருத்து வேறுபாடுகளை மறுந்து கட்சியின் வெற்றிக்காக அனைவரும் பாடுப்பட வேண்டும். ஆகவே எதிர்வரும் காலங்களில் கடுமையான பிரசாரங்களை நாம் முன்னெடுப்போம். சிறிகொத்தாவை கிராமத்திற்கும் கொண்டு செல்வோம். கட்சியினருக்கு பல்வேறு சேவைகளை பெற்றுக்கொடுப்போம். இதன்படி கட்சியை வெற்றி பாதை கொண்டு செல்வோம்.

ஊழல்மிகு ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு செயற்பட்டு வருகின்றது. அதனை நாம் தவிடுபோடியாக்கி விடுவோம் என்றார்.

கயந்த கருணாதிலக்க

 அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் கோரிய ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பினை செய்து விட்டோம். இனிமேல் சரியான வழிநடத்தலுடன் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வோம் என்றார். 

ஹர்ஷ டி சில்வா

 கட்சியின் புதிய பொருளாளராக பதவியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகையில், 

எனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி மிகவும் சிரமமானதாகும். ஆகவே நாட்டின் பிரபலமான ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராக ஹிக்கடுவையில் பிறந்த எனக்கு வாய்ப்பு வழங்கியமைக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். நான் குடும்ப அரசியலின் ஊடாக வந்தவன் அல்ல. சொந்த முயற்சியினால் கட்சியின் உயர் நிலையை அடைந்தேன். எவ்வாறாயினும் எனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியை கொண்டு நாட்டுக்கும் கட்சிக்கும் நல்லது செய்வேன்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பினை கொண்டு நூறு வீதம் திருப்திக்கொள்ள முடியாது என்றாலும் மாற்றம் ஒன்று நடந்துள்ளது . அத்துடன் எதிர்வரும் காலங்களில் வாக்கெடுப்பு முறைமையுடன் கூடிய ஜனநாயக முறைமையை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். இது சிறந்ததாக அமையும். என்றாலும் தற்போது முன்னெடு்க்கப்பட்டுள்ள மறுசீரமைப்பினை கொண்டு கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வோம் என்றார்.

அஜித் பீ பெரேரா

 கட்சியின் புதிய தொழிற்சங்க செயலாளராக பதவியேற்ற அஜித் பி .பெரேரா குறிப்பிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் யாப்பில் மாற்றம் செய்ய வேண்டும். வாக்கெடுப்பு முறைமை கொண்டு வரும் வகையில் யாப்பு திருத்தப்பட வேண்டும். தற்போதைய யாப்பு சர்வாதிகார தன்மை கொண்டதாக உள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும். கட்சி பதவிகள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும். அதுவே உண்மையான ஜனநாயக முறையாகும் என்றார். 

சுதந்­திரக் கட்சி குறு­கிய காலமே தேசிய அர­சாங்­கத்தில் இருக்கும்: ஸ்ரீல.சு.க. ரணில் எதிர்ப்பு அணி தெரி­விப்பு

01-8-7ce2b1a3eaa7bcea8e2c9a7b2761f4d697700666.jpg

 

(ஆர்.யசி)

குறு­கிய காலத்­திற்கே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்தில் இணைந்து செயற்­படும். அதன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அர­சாங்­கமே உரு­வாகும். ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் இவ்­வாறே இணக்கம் காணப்­பட்­டது என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர் தெரி­வித்­தனர்.  

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் எவரும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைய விரும்­பினால் அவ்­வாறு இணைந்­தேனும் அர­சாங்­கத்தை கொண்டு செல்ல முடியும் எனவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர் 16 பேருடன் ஜனா­தி­பதி தனிப்­பட்ட கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுத்­தி­ருந்த நிலையில் இந்த சந்­திப்பின் தீர்­மா­னங்கள் குறித்து வின­விய போதே அவர்கள் இதனைக் குறிப்­பிட்­டனர்.

இது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன கூறு­கையில்.

தேசிய அர­சாங்­கத்தில் இன்னும் எத்­தனை காலம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அங்கம் வகிக்கும் என்­பது குறித்து ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் போது கலந்­து­ரை­யா­டினோம். சில காலமே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் எனவும் அதன் பின்னர் தனித்த பயணம் ஒன்­றுக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும் எனவும் ஜனா­தி­பதி தெரி­வித்தார். அதேபோல் கட்­சியின் சகல பத­வி­க­ளிலும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் விரி­வான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த பார­ளு­மன்ற அமர்­வு­களின் பின்னர் 8 ஆம் திக­தியில் இருந்து 15ஆம் திக­திக்குள் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி குறு­கிய காலம் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் வரையில் நாம் தேசிய அர­சாங்­கத்தை குழப்­பப்­போ­வ­தில்லை. நாம் எதிர்க்­கட்­சியில் அமர்ந்­தாலும் கூட அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நல்ல நகர்­வு­களை நாம் ஆத­ரிப்போம். அதேபோல் முரண்­பா­டு­களை தவ­று­களை நாம் சுட்­டிக்­காட்­டவும் தயங்க மாட்டோம். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் எவரும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை உரு­வாக்க விரும்­பினால் அத­னையும் நாம் தடுக்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

சந்­திப்பு குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.பி.திசா­நா­யக கூறு­கையில்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக எமக்குள் எந்த முரண்­பா­டு­களும் இல்லை. தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதா அல்­லது வெளி­யே­று­வதா என்­ப­தி­லேயே எம்­மத்­தியில் குழப்­பங்கள் உள்­ளன. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக எப்­போதும் நாம் இணைந்து செயற்­ப­டுவோம். அடுத்த பொதுத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக நாம் அனை­வ­ருமே இணைந்து கள­மி­றங்கி எமது தனி அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்­கிக்­கொள்ள சகல முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுப்போம்.

இதில் எந்த சிக்­கல்­களும் உரு­வாகப் போவ­தில்லை. அதேபோல் நடை­பெ­ற­வுள்ள மே தினக் கூட்­டத்­திலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் நாம் 16 உறுப்­பி­னர்­களும் இணைந்து செயற்­ப­டுவோம். பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்கட்சியில் அமருவதற்கான தீர்மானத்தை நாம் எடுத்துவிட்டோம். அதில் மாற்றம் இல்லை. எதிர்வரும் 8 ஆம் திகதி கூடும் பாரளுமன்ற அமர்வில் நாம் எதிர்க்கட்சியில் அமர்வோம். இது குறித்து இனியும் கலந்துரையாட வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.